இப்ராஹீம் அபூ இஸ்மாயீல் அஸ்ஸக்ஸகீ அவர்கள் கூறினார்கள்:
அபூபுர்தா அவர்களும் யஸீத் பின் அபீ கஃப்ஷா அவர்களும் ஒரு பயணத்தில் ஒன்றாகச் சென்றிருந்தபோது (அபூபுர்தா கூறுவதை) நான் கேட்டேன். அப்பயணத்தில் யஸீத் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் அபூபுர்தா அவர்கள் கூறினார்கள்: "அபூமூஸா (ரழி) அவர்கள் பலமுறை கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஓர் அடியார் நோய்வாய்ப்படும்போது அல்லது பயணம் செய்யும்போது, அவர் (ஊரில்) தங்கியிருப்பவராகவும் ஆரோக்கியமானவராகவும் இருந்தபோது செய்து வந்ததைப் போன்றே அவருக்குப் (பயணத்திலும் நோயிலும்) பதிவு செய்யப்படும்.'"