ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்-கந்தக் அன்று, குறைஷி மனிதன் ஒருவன் ஸஅத் (ரழி) அவர்களின் புஜத்திலுள்ள அகல் நரம்பில் (முக்கிய இரத்த நாளத்தில்) அம்பெய்தியதால் அவர்கள் காயமடைந்தார்கள். (இதன் காரணமாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை அருகிலிருந்து நலம் விசாரிக்க வசதியாக மஸ்ஜிதில் அவருக்காக ஒரு கூடாரத்தை அமைத்தார்கள்.