சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இறந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்கள், "நான் அவர் மீது (ஜனாஸா) தொழுகை நடத்துவதற்காக அவரைப் பள்ளிவாசலுக்குள் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். ஆனால், அவர்களுடைய இச்செயல் ஆட்சேபிக்கப்பட்டது.
அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைளாஉவின் இரு மகன்களான சுஹைல் மற்றும் அவருடைய சகோதரர் ஆகிய இருவர் மீதும் பள்ளிவாசலில்தான் (ஜனாஸா) தொழுதார்கள்" என்று கூறினார்கள்.
(இமாம்) முஸ்லிம் கூறுகின்றார்: சுஹைல் பின் தஅத் என்பவரே 'இப்னுல் பைளா' ஆவார்; பைளா என்பது இவருடைய தாயார் பெயராகும்.