அபூ இப்ராஹீம் அல்-அன்சாரி (ரழி) அவர்கள், தமது தந்தை (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்:
இறந்த ஒருவருக்காக ஜனாஸா தொழுகை தொழும் போது நபி (ஸல்) அவர்கள் கூற அவர்கள் கேட்டார்கள்: அல்லாஹும்மஃபிர் லிஹய்யினா வமய்யிதினா வஷாஹிதினா வஃகாஇபினா வதகரினா வஉன்ஸானா வஸஃகீரினா வகபீஸினா (யா அல்லாஹ், எங்களில் உயிருடன் இருப்பவர்களையும், இறந்தவர்களையும், எங்களோடு இருப்பவர்களையும், இல்லாதவர்களையும், எங்கள் ஆண்களையும், பெண்களையும், எங்கள் சிறியவர்களையும், பெரியவர்களையும் மன்னிப்பாயாக).
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ: { كَانَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -إِذَا صَلَّى عَلَى جَنَازَةٍ يَقُولُ: "اَللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا, وَمَيِّتِنَا, وَشَاهِدِنَا, وَغَائِبِنَا, وَصَغِيرِنَا, وَكَبِيرِنَا, وَذَكَرِنَا, وَأُنْثَانَا, اَللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى اَلْإِسْلَامِ, وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى اَلْإِيمَانِ, اَللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ, وَلَا تُضِلَّنَا بَعْدَهُ } رَوَاهُ مُسْلِمٌ, وَالْأَرْبَعَةُ [1] .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை தொழுதால், அவர்கள் கூறுவார்கள், "யா அல்லாஹ்! எங்களில் உயிருடன் இருப்பவர்களையும், மரணித்தவர்களையும், இங்கு இருப்பவர்களையும், இங்கு இல்லாதவர்களையும், எங்களில் சிறியவர்களையும், எங்களில் ஆண்களையும், எங்களில் பெண்களையும் மன்னிப்பாயாக. யா அல்லாஹ்! எங்களில் நீ எவரை வாழச் செய்கிறாயோ, அவரை இஸ்லாத்தில் வாழச் செய்வாயாக, எங்களில் நீ எவரை மரணிக்கச் செய்கிறாயோ அவரை ஈமானுடைய நிலையில் மரணிக்கச் செய்வாயாக. யா அல்லாஹ்! இவருக்கான (பிரார்த்தனை செய்வதற்கான) நற்கூலியை எங்களுக்குத் தடுத்துவிடாதே, இவருக்குப் பின் எங்களை வழிகேட்டில் ஆக்கிவிடாதே."
இதை முஸ்லிம் மற்றும் நான்கு இமாம்களும் அறிவித்தார்கள்.