அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அல்லாஹ் கூறியதாக): "நேர்ச்சை, ஆதமின் மகனுக்கு நான் விதியாக்காத எதையும் கொண்டு வருவதில்லை. மாறாக, விதியே அதை அவனிடம் கொண்டு வந்து சேர்க்கிறது; அதையும் நானே அவனுக்கு விதியாக்கியுள்ளேன். இதன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வத்தை) நான் வெளிக்கொணர்கிறேன்."
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நேர்ச்சையானது, ஆதமின் மகனுக்கு அவனுக்கு விதிக்கப்படாத எதையும் கொண்டு வருவதில்லை. மாறாக, அவனுக்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விதியின் பக்கமே அந்த நேர்ச்சை அவனைக் கொண்டு செல்கிறது. இதன் வாயிலாக அல்லாஹ் கஞ்சனிடமிருந்து (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான். (இதற்கு) முன்பு அவன் எதை வழங்காமல் இருந்தானோ, அதை (இப்போது) வழங்குகிறான்."