"நான் அல்பகீஃயில் ஒட்டகங்களை விற்பனை செய்பவராக இருந்தேன். நான் (அவற்றைத்) தீனார்களுக்கு விற்றுவிட்டு (அதற்குப் பகரமாகத்) திர்ஹம்களைப் பெற்றுக்கொள்வேன். நான் ஹஃப்ஸா (ரழி) அவர்களின் வீட்டில் இருந்த நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்: நான் அல்பகீஃயில் ஒட்டகங்களை விற்கிறேன்; (அவற்றைத்) தீனார்களுக்கு விற்றுவிட்டு (அதற்குப் பகரமாகத்) திர்ஹம்களைப் பெற்றுக்கொள்கிறேன்' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'அன்றைய விலையில் அதை நீர் எடுத்துக்கொள்வதில் தவறில்லை; உங்கள் இருவருக்கும் இடையே (பாக்கி) ஏதும் இருக்கும் நிலையில் நீங்கள் இருவரும் பிரிந்து சென்றால் தவிர' என்று கூறினார்கள்."
"ரிபா (வட்டி) தொடர்பான வசனங்கள் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மின்பரின் மீது நின்று, அவற்றை மக்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடை செய்தார்கள்."