இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2151ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا الْمَكِّيُّ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي زِيَادٌ، أَنَّ ثَابِتًا، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنِ اشْتَرَى غَنَمًا مُصَرَّاةً فَاحْتَلَبَهَا، فَإِنْ رَضِيَهَا أَمْسَكَهَا، وَإِنْ سَخِطَهَا فَفِي حَلْبَتِهَا صَاعٌ مِنْ تَمْرٍ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் மடியில் பால் தேக்கி வைக்கப்பட்ட ஓர் ஆட்டை வாங்கி, அதனைக் கறக்கிறாரோ, அவர் அதில் திருப்தி அடைந்தால் அதை வைத்துக்கொள்ளலாம். அவர் அதை வெறுத்தால் (அதைத் திருப்பிக் கொடுக்கலாம்; அவ்வாறு திருப்பிக் கொடுக்கும்போது), அவர் கறந்த பாலுக்குப் பகரமாக ஒரு ஸா பேரீச்சம் பழத்தைக் கொடுக்க வேண்டும்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح