அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கிய உம்ரா என்னவென்றால், ஒருவர், "இந்த (சொத்து) உனக்கும் உனது சந்ததியினருக்கும் உரியது" என்று கூறுவதாகும்.
மேலும் அவர், "அது நீ வாழும் காலம் வரை உனக்குரியது" என்று கூறினால், பின்னர் அது (கொடை பெற்றவரின் மரணத்திற்குப் பிறகு) அதன் உரிமையாளரிடமே திரும்பிவிடும்.
மஅமர் கூறினார்கள்: ஜுஹ்ரி இதன்படி மார்க்கத் தீர்ப்பு வழங்கி வந்தார்கள்.