حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا مُعَرِّفُ بْنُ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّ فِي زِيَارَتِهَا تَذْكِرَةً .
புரைதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கப்ருகளை (மண்ணறைகளை) சென்று பார்ப்பதை விட்டும் நான் உங்களைத் தடுத்திருந்தேன். எனவே, அவற்றைச் சென்று பாருங்கள். ஏனெனில், அவற்றைச் சென்று பார்ப்பதில் (மரணத்தையும் மறுமையையும் பற்றிய) ஒரு நினைவூட்டல் இருக்கிறது."