இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3409சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ صَدَقَةَ أَبِي مُعَاوِيَةَ، عَنْ زَيْدِ بْنِ وَاقِدٍ، عَنْ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أُتِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِنَبِيذِ جَرٍّ يَنِشُّ فَقَالَ ‏ ‏ اضْرِبْ بِهَذَا الْحَائِطَ فَإِنَّ هَذَا شَرَابُ مَنْ لاَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ ‏ ‏ ‏.‏
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு (மட்பாண்ட) பாத்திரத்தில் இருந்த நபீத் (பேரீச்சம்பழம் அல்லது திராட்சை ஊறவைத்து தயாரிக்கப்படும் பானம்) கொண்டு வரப்பட்டது. அது நுரைத்துப் பொங்கிக்கொண்டிருந்தது (மதமாறி இருந்தது). அவர்கள் கூறினார்கள்: ‘இதை சுவற்றில் எறிந்து விடுங்கள், ஏனெனில் இது அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதவனின் பானமாகும்.’
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)