حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، قَالَ ذُكِرَ تَزْوِيجُ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ عِنْدَ أَنَسٍ فَقَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَوْلَمَ عَلَى أَحَدٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَيْهَا أَوْلَمَ بِشَاةٍ.
தாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களின் திருமணம் அனஸ் (ரழி) அவர்கள் முன்னிலையில் குறிப்பிடப்பட்டது. அப்போது அனஸ் (ரழி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரழி) அவர்களுக்கு அளித்ததைப் போன்று (அதாவது, அந்த அளவுக்குச் சிறப்பான), தமது மனைவியரில் வேறெவருக்கும் திருமண விருந்து அளித்ததை நான் கண்டதில்லை. (அவருக்கு) அவர்கள் ஓர் ஆட்டைக் கொண்டு விருந்தளித்தார்கள்" என்று கூறினார்கள்.