இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2017 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ،
عَنْ خَيْثَمَةَ، عَنْ أَبِي حُذَيْفَةَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كُنَّا إِذَا حَضَرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم
طَعَامًا لَمْ نَضَعْ أَيْدِيَنَا حَتَّى يَبْدَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَيَضَعَ يَدَهُ وَإِنَّا حَضَرْنَا
مَعَهُ مَرَّةً طَعَامًا فَجَاءَتْ جَارِيَةٌ كَأَنَّهَا تُدْفَعُ فَذَهَبَتْ لِتَضَعَ يَدَهَا فِي الطَّعَامِ فَأَخَذَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهَا ثُمَّ جَاءَ أَعْرَابِيٌّ كَأَنَّمَا يُدْفَعُ فَأَخَذَ بِيَدِهِ فَقَالَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ إِنَّ الشَّيْطَانَ يَسْتَحِلُّ الطَّعَامَ أَنْ لاَ يُذْكَرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ
جَاءَ بِهَذِهِ الْجَارِيَةِ لِيَسْتَحِلَّ بِهَا فَأَخَذْتُ بِيَدِهَا فَجَاءَ بِهَذَا الأَعْرَابِيِّ لِيَسْتَحِلَّ بِهِ فَأَخَذْتُ
بِيَدِهِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ يَدَهُ فِي يَدِي مَعَ يَدِهَا ‏ ‏ ‏.‏
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் உணவில் கலந்துகொண்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பித்து, தமது கையை (உணவில்) வைக்கும் வரை நாங்கள் எங்கள் கைகளை வைக்கமாட்டோம். ஒருமுறை நாங்கள் அவர்களுடன் உணவில் கலந்துகொண்டோம். அப்போது ஒரு சிறுமி, (முதுகில்) தள்ளிவிடப்பட்டவளைப் போன்று (வேகமாக) வந்தாள். அவள் உணவில் தன் கையை வைக்கச் சென்றாள்; உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக் கொண்டார்கள். பிறகு ஒரு கிராமத்து அரபி, (முதுகில்) தள்ளிவிடப்பட்டவரைப் போன்று (வேகமாக) வந்தார்; அவரது கையையும் அவர்கள் பிடித்துக் கொண்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஷைத்தான், எந்த உணவின் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அந்த உணவை (தனக்கு) ஆகுமாக்கிக்கொள்கிறான். அவன் இந்தச் சிறுமியின் மூலம் (உணவைத் தனக்கு) ஆகுமாக்கிக் கொள்ளவே இவளைக் கொண்டுவந்தான்; ஆகவே நான் அவளது கையைப் பிடித்துக்கொண்டேன். பிறகு இந்த அரபியின் மூலம் (உணவைத் தனக்கு) ஆகுமாக்கிக் கொள்ளவே இவரைக் கொண்டுவந்தான்; ஆகவே நான் இவரது கையைப் பிடித்துக்கொண்டேன். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! அவனது (ஷைத்தானுடைய) கை, இவளுடைய கையோடு என் கையில் இருக்கிறது.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح