இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5495ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي يَعْفُورٍ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ قَالَ غَزَوْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ أَوْ سِتًّا، كُنَّا نَأْكُلُ مَعَهُ الْجَرَادَ‏.‏ قَالَ سُفْيَانُ وَأَبُو عَوَانَةَ وَإِسْرَائِيلُ عَنْ أَبِي يَعْفُورٍ عَنِ ابْنِ أَبِي أَوْفَى سَبْعَ غَزَوَاتٍ‏.‏
இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு அல்லது ஆறு கஸ்வாக்களில் (நபி (ஸல்) அவர்கள் நேரடியாகத் தலைமை தாங்கிய போர்களில்) கலந்துகொண்டோம். நாங்கள் அவர்களுடன் வெட்டுக்கிளிகளைச் சாப்பிட்டு வந்தோம்.
சுஃப்யான், அபூஅவானா மற்றும் இஸ்ராயீல் ஆகியோர் அபூயஃப்பூரிடமிருந்து இப்னு அபீ அவ்ஃபா (ரலி) வழியாக “ஏழு கஸ்வாக்கள்” என்று அறிவித்தனர்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1952 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ،
أَبِي أَوْفَى قَالَ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ نَأْكُلُ الْجَرَادَ
‏.‏
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு படையெடுப்புகளில் (பங்குபெற்று) சென்றோம்; (அப்பொழுது உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால்) நாங்கள் வெட்டுக்கிளிகளை உண்டோம்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح