அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவருடைய பணியாளர் அவருக்காக உணவைத் தயாரித்து, பின்னர் அதன் வெப்பத்தையும் புகையையும் எதிர்கொண்டு அவரிடம் அதைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளரைத் தம்முடன் அமரச் செய்து உண்ணச் செய்யட்டும். உணவு குறைவாக இருந்தால், அதிலிருந்து ஒரு கவளம் அல்லது இரு கவளங்களை அவர் கையில் வைக்கட்டும்."
தாவூத் அவர்கள் கூறினார்கள்: அதாவது, ஒரு வாய் அல்லது இரண்டு வாய் (உணவு).