அவ்ஃப் இப்னு மாலிக் அஷ்ஜஈ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப்பார்த்தல் செய்து வந்தோம். நாங்கள் கேட்டோம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! அதைப் பற்றி தங்களின் கருத்து என்ன? அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: “உங்களின் ஓதிப்பார்த்தலை எனக்குத் தெரிவியுங்கள்.” மேலும் கூறினார்கள்: “இணைவைப்பு கலவாத ஓதிப்பார்த்தலில் எந்தத் தீங்கும் இல்லை.”