அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: எவர் ஒரு இறைநம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்கிறாரோ, அல்லாஹ், அந்த அடிமையின் ஒவ்வொரு உறுப்புக்கு ஈடாக, அவரின் (விடுதலை செய்தவரின்) ஒவ்வொரு உறுப்பையும், அந்த அடிமையின் அந்தரங்க உறுப்புக்கு ஈடாக, அவரின் (விடுதலை செய்தவரின்) அந்தரங்க உறுப்பைக்கூட நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்வான்.