وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَتِ امْرَأَةٌ مَخْزُومِيَّةٌ تَسْتَعِيرُ الْمَتَاعَ وَتَجْحَدُهُ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُقْطَعَ يَدُهَا فَأَتَى أَهْلُهَا أُسَامَةَ بْنَ زَيْدٍ فَكَلَّمُوهُ فَكَلَّمَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِيهَا . ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ اللَّيْثِ وَيُونُسَ .
ஒரு மக்ஜூம் கோத்திரத்துப் பெண்மணி பொருட்களைக் கடனாகப் பெற்று, (அவற்றைத் திருப்பித் தராமல்) மறுத்து வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அவளது கையைத் துண்டிக்கும்படி கட்டளையிட்டார்கள். அவளது குடும்பத்தினர் உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம் வந்து பேசினார்கள். அவர் (உஸாமா), அவளுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேசினார் (பரிந்துரைத்தார்). பின்னர், லைஸ் மற்றும் யூனுஸ் (அறிவித்த) ஹதீஸைப் போன்றே (மீதி நிகழ்வுகளை) அவர் குறிப்பிட்டார்.