அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நான் மறுமை நாளில் ஆதம் (அலை) அவர்களின் சந்ததியினரின் தலைவன் (மற்றும் அவர்களில் மிகவும் கண்ணியமானவர்) ஆவேன். மேலும், மண்ணறை எவருக்காக முதலில் பிளக்கப்படுமோ (மறுமை நாளில் உயிர்ப்பிக்கப்படுவோரில்) அவரும் நானே. மேலும், நானே முதல் பரிந்துரையாளராகவும், (அவரது) பரிந்துரை முதலில் ஏற்கப்படுபவராகவும் இருப்பேன்.”
அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நான் ஆதமுடைய சந்ததிகளின் தலைவர், இது பெருமையடிப்பதற்காக அல்ல. மறுமை நாளில் பூமி பிளக்கப்பட்டு அதிலிருந்து வெளிவரும் முதல் நபர் நானாக இருப்பேன், இது பெருமையடிப்பதற்காக அல்ல. நான் தான் முதலில் பரிந்துரைப்பேன், என்னுடைய பரிந்துரைதான் முதலில் ஏற்றுக்கொள்ளப்படும், இது பெருமையடிப்பதற்காக அல்ல. மறுமை நாளில் புகழின் கொடி என் கையில் இருக்கும், இது பெருமையடிப்பதற்காக அல்ல.”