قَالَ قَالَ اللَّيْثُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ الأَرْوَاحُ جُنُودٌ مُجَنَّدَةٌ، فَمَا تَعَارَفَ مِنْهَا ائْتَلَفَ، وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ . وَقَالَ يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ بِهَذَا.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "ஆன்மாக்கள் ஒன்றுதிரட்டப்பட்ட படைகளைப் போன்றவை: அவற்றில் அறிமுகமானவை ஒன்றிணைகின்றன; அறிமுகம் இல்லாதவையோ வேறுபடுகின்றன."
அபு ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அறிவித்தார்கள்:
ஆன்மாக்கள் ஒன்று திரட்டப்பட்ட படைகளாகும்; மேலும், (அவை எங்கிருந்து வருகின்றனவோ அந்த சுவர்க்கத்தில்) எவை தங்களுக்குள் பழகிக்கொண்டனவோ, அவை (இவ்வுலகில்) ஒன்றுக்கொன்று இணக்கமாகவும், அவற்றுள் எவை (சுவர்க்கத்தில்) தங்களுக்குள் முரண்பட்டனவோ, அவை (இவ்வுலகிலும்) மாறுபட்டும் இருக்கும்.