அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என அறிவித்தார்கள்:
புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் (சஹாபாக்கள் (ரழி)) கூறினார்கள்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கறிவார்கள். அப்போது அவர்கள் (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: புறம் பேசுதல் என்பது, உமது சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத விதத்தில் நீர் பேசுவதாகும். அவர்களிடம் கேட்கப்பட்டது: நான் குறிப்பிடும் அந்தக் குறை என் சகோதரனிடம் உண்மையாகவே இருந்தால், அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அவர்கள் கூறினார்கள்: நீர் குறிப்பிடும் அந்தக் குறை அவரிடம் உண்மையாகவே இருந்தால், நீர் உண்மையில் அவரைப் புறம் பேசிவிட்டீர். அது அவரிடம் இல்லையென்றால், அது அவதூறு ஆகும்.