உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அதாஃ அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரழி) அவர்களின் போர்வை திருடப்பட்டது. அவர்கள் அதைத் திருடியவரை சபிக்கத் தொடங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கூறத் தொடங்கினார்கள்: அவருக்கு (பாவத்தை) இலேசாக்கி விடாதீர்கள்.
அபூ தாவூத் அவர்கள் கூறினார்கள்: லா தஸ்பிகீ அன்ஹு என்ற அரபி வார்த்தைகளின் பொருள் "அவருடைய (பாவச் சுமையை) குறைக்காதீர்கள் அல்லது இலேசாக்காதீர்கள்" என்பதாகும்.