அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் இதை மர்ஃபூஃவான ஹதீஸாக அறிவித்தார்கள் (அதன் வாசகங்களாவன):
ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும், உயர்வும் மகிமையும் மிக்க அல்லாஹ், அல்லாஹ்விற்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு வழங்குகிறான்; ஆனால், எவருடைய (உள்ளத்தில்) தன் சகோதரனுக்கு எதிராக பகைமை இருக்கிறதோ அவரைத் தவிர. அவர்கள் இருவரும் சமரசம் செய்துகொள்ளும் வரை அவர்களைப் பிற்படுத்துங்கள் என்று கூறப்படும்.