حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ مِنَ الشِّعْرِ حُكْمًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக, கவிதைகளில் ஞானம் (நற்போதனை மற்றும் நல்லுபதேசம்) உண்டு."
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ كَانَ عَلَى الطَّرِيقِ غُصْنُ شَجَرَةٍ يُؤْذِي النَّاسَ فَأَمَاطَهَا رَجُلٌ فَأُدْخِلَ الْجَنَّةَ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பாதையில் ஒரு மரத்தின் கிளை மக்களுக்குத் தொல்லை தந்து கொண்டிருந்தது. ஒரு மனிதர் அதனை அப்புறப்படுத்தினார். (அதன் காரணமாக) அவர் சொர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டார்."