இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3289ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ التَّثَاؤُبُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا قَالَ هَا‏.‏ ضَحِكَ الشَّيْطَانُ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருகிறது, உங்களில் எவருக்கேனும் கொட்டாவி வந்தால், முடிந்தவரை அதை அவர் அடக்கிக் கொள்ளட்டும், ஏனெனில், உங்களில் எவரேனும் (கொட்டாவி விடும்போது) 'ஹா' என்று கூறினால், ஷைத்தான் அவரைப் பார்த்து சிரிப்பான்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح