நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்லும் போதெல்லாம், சூரத்துல் இக்லாஸ், சூரத்துல் ஃபலக் மற்றும் சூரத்துன் நாஸ் ஆகியவற்றை ஓதிய பிறகு, தமது இரு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் ஊதி, பின்னர் தமது தலை, முகம் மற்றும் உடலின் முன்பகுதியிலிருந்து ஆரம்பித்து, தமது உடலின் தம்மால் இயன்ற பாகங்களைத் தமது கைகளால் தடவிக் கொள்வார்கள்.