அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் (ரழி) சிலர் அவரிடம் (ஸல்) வந்து கூறினார்கள்:
நிச்சயமாக எங்கள் உள்ளங்களில் சில எண்ணங்கள் எழுகின்றன; அவற்றை வெளிப்படுத்துவதை எங்களில் ஒவ்வொருவரும் மிகவும் பாரதூரமானதாகக் கருதுகிறோம். அவர் (ஸல்) கேட்டார்கள்: நீங்கள் உண்மையிலேயே அதை உணர்கிறீர்களா? அவர்கள் கூறினார்கள்: ஆம். அதற்கு அவர் (ஸல்) கூறினார்கள்: அதுவே தெளிவான ஈமான்.