இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6250ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ يَقُولُ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي دَيْنٍ كَانَ عَلَى أَبِي فَدَقَقْتُ الْبَابَ فَقَالَ ‏"‏ مَنْ ذَا ‏"‏‏.‏ فَقُلْتُ أَنَا‏.‏ فَقَالَ ‏"‏ أَنَا أَنَا ‏"‏‏.‏ كَأَنَّهُ كَرِهَهَا‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
என் தந்தையின் கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களுடன் கலந்தாலோசிப்பதற்காக நான் அவர்களிடம் வந்தேன். நான் கதவைத் தட்டியபோது, "யார் அது?" என்று அவர்கள் கேட்டார்கள். நான், "நான்" என்று பதிலளித்தேன். அவர்கள், "நான், நான்?" என்று கூறினார்கள். அதை அவர்கள் விரும்பாதது போல மீண்டும் கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح