அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஈமான் கொள்ள வேண்டிய அனைத்து விடயங்களிலும்) நீங்கள் ஈமான் கொள்ளாத வரை சொர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள்; மேலும், நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்காத வரை ஈமான் கொள்ள மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு காரியத்தை அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செய்தால், அது உங்களிடையே அன்பை வளர்க்கும்: (அதாவது) ஒருவருக்கொருவர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறி ஸலாம் சொல்லும் வழக்கத்தைப் பரப்புங்கள்.