حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَخْبَرَهُ ابْنُ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَلَقَ فِي حَجَّةِ الْوَدَاعِ وَأُنَاسٌ مِنْ أَصْحَابِهِ وَقَصَّرَ بَعْضُهُمْ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஹஜ்ஜத்துல் வதாவின் போது, நபி (ஸல்) அவர்கள் (தமது) தலையை மழித்தார்கள். மேலும், அவர்களின் தோழர்களில் சிலரும் (தமது தலைகளை) மழித்துக்கொண்டார்கள். அவர்களிலோ வேறு சிலரோ (தமது தலைமுடியைக்) குறைத்துக்கொண்டார்கள்.