இந்த ஹதீஸ் அபூஹுரைரா (ரழி) அவர்கள் வாயிலாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. (இது சுஹைல் வழியாக காலித் அறிவித்த ஹதீஸின் பொருள்படி உள்ளது. எனினும், ஜரீர் மட்டும் தனது அறிவிப்பில் குறிப்பிட்டதாவது): முதல் அடியிலேயே பல்லியைக் கொல்பவருக்கு நூறு நன்மைகளும், இரண்டாவது அடியினால் (கொன்றால்) அதைவிடக் குறைவான நன்மைகளும், மூன்றாவது அடியினால் (கொன்றால்) அதைவிடக் குறைவான நன்மைகளும் எழுதப்படுகின்றன.