அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! கொலை செய்தவன் தான் எதற்காகக் கொலை செய்தான் என்பதையும், கொல்லப்பட்டவன் தான் எதற்காகக் கொல்லப்பட்டான் என்பதையும் அறியாத ஒரு காலம் மக்கள் மீது வரும் வரை உலகம் அழியாது."
"அது எவ்வாறு நிகழும்?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், "(அதுதான்) ஹர்ஜ் (அதாவது, பெருமளவிலான குழப்பமும், காரணமற்ற கொலையும்). கொலை செய்தவனும் கொல்லப்பட்டவனும் நரகத்தில் இருப்பார்கள்" என்று பதிலளித்தார்கள்.