உங்களுடன் எடுத்தச் செல்ல வேண்டிய சில முக்கியமான பொருள்கள்

1. கறுப்புக் கண்ணாடி (Sun Glass) மற்றும் குடை - வெயிலை சமாளிக்க
2. கெட்டில் (Electric Kettle) - டீ, பால் மற்றும் வெந்நீர் போடுவதற்கு தேவைப்படும். Stainless Steel Kettle மிகவும் உகந்தது.
3. உதட்டிற்க்கு போடும் தைலம் (Lip Balm, Vaseline) - வெயில் மற்றும் பனியினால் ஏற்படும் உதடு வெடிப்பு மற்றும் உதடு காய்ந்து போவதிலிருந்து காக்கும். Vaseline காலில் எற்படும் வெடிப்புகளுக்கும் மற்றும் உதட்டிற்க்கும் மிகவும் பயனுள்ளாதாக இருக்கும்..
4. தேவையான மாத்திரை மருந்துகள் - காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றோட்டம்.
5. சக்கர வண்டி (Wheel Chair) - நடக்க முடியாதவர்கள் சக்கர வண்டி எடுத்துச் செல்லலாம். சக்கர வண்டி “ஸயி” மற்றும் “தவாஃப்” செய்யும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சக்கர வண்டி மற்றும் Electric Wheel Chair யை இலவசமாகவும் ஹரத்தில் பெற்றுக் கொள்ளலாம். Electric Wheel Chair யை சொந்தமாக யாருடைய உதவியின்றி நீங்களே இயக்கி கொள்ளலாம்.
6. கைத் தொலைபேசி (Cell Phone) - வழி தவறிவிட்டால் உதவியாக இருக்கும். SIM Cardஐ ஜித்தா அல்லது மக்காவில் வாங்கி கொள்ளலாம். தயவுசெய்து திரைப்பட பாடல்களை RingTone வைத்து இருந்தால் மாற்றிக்கொள்ளவும். ஒவ்வொரு முறையும் ஹரத்தில் நுழையும் முன்பு ஞாபகத்துடன்  Ring Tone Silent Mode அல்லது Vibratator Modeக்கு மாற்றிகொள்ளவும்.
7. Sweater, Sox, Monkey Cap, Ear Cap போன்றவை குளிரை சமாளிக்க உதவும்.
8. Scissiors, Nail Cutter, Shaving set - இஹ்ராம் கட்டுவதற்க்கு முன் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை, நகங்களை நீக்க.

குறிப்புகள்
1. ஹரத்தில் உள்ளே எல்லா இடங்களிலும் ஸம்ஸம் தண்ணீர் கேன்கள் இருக்கும். சில கேன்கள் குளிரூட்டப்பட்டதாகவும் மற்றும் குளிரூட்டப்படாததாகவும் (NOT COLD) என்று எழுதி) இருக்கும்.
2. ஹரத்தில் நிறைய வாயில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாயிலுக்கும் வாயில் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த வாயில் வழியாக உள்ளே நுழைந்தோம் என்று ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். வழி தவறிவிட்டால் உதவியாக இருக்கும்.


ஹரத்திற்க்கு உள்ளே இருந்து வெளியே செல்வதற்கு வாயில்களின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

← முந்திய பக்கம் அடுத்த பக்கம் →