70. ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)

மக்கீ, வசனங்கள்: 44

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
سَاَلَ سَآىِٕلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍ ۟ۙ
سَاَلَகேட்டார்سَآىِٕلٌۢகேட்பவர்بِعَذَابٍவேதனையைப் பற்றிوَّاقِعٍۙநிகழக்கூடிய
ஸ'அல ஸா'இலுன் Bபி 'அதாBபி(ன்)வ் வாகி'
(நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.
لِّلْكٰفِرِیْنَ لَیْسَ لَهٗ دَافِعٌ ۟ۙ
لِّلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குلَیْسَஇல்லைلَهٗஅதற்குدَافِعٌۙதடுப்பவர்
லில் காFபிரீன லய்ஸ லஹூ தாFபி'
காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
مِّنَ اللّٰهِ ذِی الْمَعَارِجِ ۟ؕ
مِّنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்ذِیஉடையவன்الْمَعَارِجِؕஉயர்நிலைகள்
மினல் லாஹி தில் ம'ஆரிஜ்
(அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).
تَعْرُجُ الْمَلٰٓىِٕكَةُ وَالرُّوْحُ اِلَیْهِ فِیْ یَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِیْنَ اَلْفَ سَنَةٍ ۟ۚ
تَعْرُجُஏறிச் செல்லும்الْمَلٰٓىِٕكَةُவானவர்கள்وَ الرُّوْحُமற்றும் ரூஹும்اِلَیْهِஅவனிடம்فِیْஒருیَوْمٍநாளில்كَانَஆகும்مِقْدَارُهٗஅதன் அளவுخَمْسِیْنَஐம்பதுاَلْفَஆயிரம்سَنَةٍۚஆண்டுகள்
தஃருஜுல் மலா'இகது வர் ரூஹு இலய்ஹி Fபீ யவ்மின் கான மிக்தாருஹூ கம்ஸீன அல்Fப ஸனஹ்
ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.
فَاصْبِرْ صَبْرًا جَمِیْلًا ۟
فَاصْبِرْஎனவே பொறுப்பீராகصَبْرًاபொறுமையைجَمِیْلًاஅழகிய
Fபஸ்Bபிர் ஸBப்ரன் ஜமீலா
எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
اِنَّهُمْ یَرَوْنَهٗ بَعِیْدًا ۟ۙ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்یَرَوْنَهٗஅதனைக் காண்கிறார்கள்بَعِیْدًاۙவெகு தொலைவானதாக
இனாஹும் யரவ்னஹூ Bப'ஈதா
நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.
وَّنَرٰىهُ قَرِیْبًا ۟ؕ
وَّ نَرٰىهُஆனால் நாம் அதைக் காண்கிறோம்قَرِیْبًاؕமிக அருகில்
வ னராஹு கரீBபா
ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
یَوْمَ تَكُوْنُ السَّمَآءُ كَالْمُهْلِ ۟ۙ
یَوْمَஅந்நாளில்تَكُوْنُஆகும்السَّمَآءُவானம்كَالْمُهْلِۙஉருக்கிய செம்பைப் போல்
யவ்ம தகூனுஸ் ஸமா'உ கல்முஹ்ல்
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ ۟ۙ
وَ تَكُوْنُமேலும் ஆகும்الْجِبَالُமலைகள்كَالْعِهْنِۙபஞ்சைப் போல
வ தகூனுல் ஜிBபாலு கல்'இஹ்ன்
இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-
وَلَا یَسْـَٔلُ حَمِیْمٌ حَمِیْمًا ۟ۚۖ
وَ لَاமேலும் இல்லைیَسْـَٔلُவிசாரிப்பான்حَمِیْمٌஉற்ற நண்பன்حَمِیْمًاۚۖஉற்ற நண்பனை
வ லா யஸ்'அலு ஹமீமுன் ஹமீமா
(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.
یُّبَصَّرُوْنَهُمْ ؕ یَوَدُّ الْمُجْرِمُ لَوْ یَفْتَدِیْ مِنْ عَذَابِ یَوْمِىِٕذٍ بِبَنِیْهِ ۟ۙ
یُّبَصَّرُوْنَهُمْ ؕஅவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள்یَوَدُّவிரும்புவான்الْمُجْرِمُகுற்றவாளிلَوْஎன்றுیَفْتَدِیْஈடாகக் கொடுக்கمِنْஇருந்துعَذَابِவேதனைیَوْمِىِٕذٍۭஅந்நாளின்بِبَنِیْهِۙதன் பிள்ளைகளை
யுBபஸ்ஸரூனஹும்; ய வத்துல் முஜ்ரிமு லவ் யFப்ததீ மின் 'அதாBபி யவ்ம'இதிம் BபிBபனீஹ்
அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்; தன் மக்களையும்-
وَصَاحِبَتِهٖ وَاَخِیْهِ ۟ۙ
وَ صَاحِبَتِهٖதன் மனைவியையும்وَ اَخِیْهِۙதன் சகோதரனையும்
வ ஸாஹிBபதிஹீ வ அகீஹ்
தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
وَفَصِیْلَتِهِ الَّتِیْ تُـْٔوِیْهِ ۟ۙ
وَ فَصِیْلَتِهِஅவனது சுற்றத்தாரையும்الَّتِیْஎவர்கள்تُـْٔوِیْهِۙஅவனுக்கு அடைக்கலம் அளித்தார்களோ
வ Fபஸீலத்ஹில் லதீ து'வீஹ்
அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ۙ ثُمَّ یُنْجِیْهِ ۟ۙ
وَ مَنْமற்றும் எவர்فِیஉள்ளالْاَرْضِபூமியில்جَمِیْعًا ۙஅனைவரையும்ثُمَّபின்னர்یُنْجِیْهِۙஅவரை அது காப்பாற்ற
வ மன் Fபில் அர்ளி ஜமீ'அன் தும்ம யுன்ஜீஹ்
இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).
كَلَّا ؕ اِنَّهَا لَظٰی ۟ۙ
كَلَّا ؕஒருக்காலுமில்லைاِنَّهَاநிச்சயமாக அதுلَظٰیۙகொழுந்து விட்டெரியும் நெருப்பாகும்
கல்லா இன்னஹா லளா
அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
نَزَّاعَةً لِّلشَّوٰی ۟ۚۖ
نَزَّاعَةًஉரித்தெடுக்கக்கூடியلِّلشَّوٰیۚۖஉச்சந்தலையின் தோலை
னZஜ்Zஜா'அதல் லிஷ்ஷவா
அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.
تَدْعُوْا مَنْ اَدْبَرَ وَتَوَلّٰی ۟ۙ
تَدْعُوْاஅது அழைக்கும்مَنْஎவர்اَدْبَرَபுறமுதுகிட்டாரோوَ تَوَلّٰیۙமேலும் புறக்கணித்தாரோ
தத்'ஊ மன் அத்Bபர வ தவல்லா
(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.
وَجَمَعَ فَاَوْعٰی ۟
وَ جَمَعَமேலும் சேகரித்துفَاَوْعٰیபின்னர் பதுக்கி வைத்தானே
வ ஜம'அ Fப அவ்'ஆ
அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)
اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۟ۙ
اِنَّநிச்சயமாகالْاِنْسَانَமனிதன்خُلِقَபடைக்கப்பட்டிருக்கிறான்هَلُوْعًاۙபதற்றமுடையவனாக
இன்னல் இன்ஸான குலிக ஹலூ'ஆ
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۟ۙ
اِذَاபொழுதுمَسَّهُஅவனைத் தீண்டும்الشَّرُّதீங்குجَزُوْعًاۙபதற்றமடைபவனாக
இதா மஸ்ஸஹுஷ் ஷர்ரு ஜZஜூ'ஆ
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்;
وَّاِذَا مَسَّهُ الْخَیْرُ مَنُوْعًا ۟ۙ
وَّ اِذَاமேலும் எப்போதுمَسَّهُஅவனைத் தீண்டினால்الْخَیْرُநன்மைمَنُوْعًاۙதடுத்துக் கொள்பவன்
வ இதா மஸ்ஸஹுல் கய்ரு மனூ'ஆ
ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.
الَّذِیْنَ هُمْ عَلٰی صَلَاتِهِمْ دَآىِٕمُوْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்هُمْஅவர்கள்عَلٰیமீதுصَلَاتِهِمْதங்கள் தொழுகையின்دَآىِٕمُوْنَ۪ۙநிலைத்திருப்பவர்கள்
அல்லதீன ஹும் 'அலா ஸலாதிஹிம் தா'இமூன்
(அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.
وَالَّذِیْنَ فِیْۤ اَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُوْمٌ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்فِیْۤஇல்اَمْوَالِهِمْஅவர்களுடைய செல்வங்கள்حَقٌّஒரு பங்குمَّعْلُوْمٌ۪ۙநிர்ணயிக்கப்பட்ட
வல்லதீன Fபீ அம்வாலிஹிம் ஹக்குன் மஃலூம்
அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.
لِّلسَّآىِٕلِ وَالْمَحْرُوْمِ ۟
لِّلسَّآىِٕلِகேட்பவருக்கும்وَ الْمَحْرُوْمِ۪ۙவறியவருக்கும்
லிஸ்ஸா 'இலி வல்மஹ்ரூம்
யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).
وَالَّذِیْنَ یُصَدِّقُوْنَ بِیَوْمِ الدِّیْنِ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்یُصَدِّقُوْنَஉண்மையென நம்புகிறார்களோبِیَوْمِநாளைالدِّیْنِ۪ۙதீர்ப்பு
வல்லதீன யுஸத்திகூன Bபி யவ்மித் தீன்
அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.
وَالَّذِیْنَ هُمْ مِّنْ عَذَابِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَ ۟ۚ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்هُمْஅவர்கள்مِّنْகண்டுعَذَابِவேதனையைرَبِّهِمْதங்கள் இறைவனின்مُّشْفِقُوْنَۚஅஞ்சுகிறார்களோ
வல்லதீன ஹும் மின் 'அதாBபி ரBப்Bபிஹிம் முஷ்Fபிகூன்
இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.
اِنَّ عَذَابَ رَبِّهِمْ غَیْرُ مَاْمُوْنٍ ۟
اِنَّநிச்சயமாகعَذَابَவேதனையானதுرَبِّهِمْஅவர்களின் இறைவனின்غَیْرُஅல்லாததாகும்مَاْمُوْنٍஅச்சமற்று இருக்கத்தக்கது
இன்ன 'அதாBப ரBப்Bபிஹிம் கய்ரு ம' மூன்
நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.
وَالَّذِیْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَ ۟ۙ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்هُمْஅவர்கள்لِفُرُوْجِهِمْதங்கள் வெட்கத்தலங்களைحٰفِظُوْنَۙபாதுகாத்துக் கொள்கிறார்களோ
வல்லதீன ஹும் லி Fபுரூஜிஹிம் ஹாFபிளூன்
அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-
اِلَّا عَلٰۤی اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُمْ فَاِنَّهُمْ غَیْرُ مَلُوْمِیْنَ ۟ۚ
اِلَّاதவிரعَلٰۤیமீதுاَزْوَاجِهِمْஅவர்களின் மனைவியர்اَوْஅல்லதுمَاஎவர்களைمَلَكَتْஉரிமையாக்கிக் கொண்டனவோاَیْمَانُهُمْஅவர்களின் வலக்கரங்கள்فَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்غَیْرُஅல்லாதவர்கள்مَلُوْمِیْنَۚநிந்திக்கப்பட்டவர்கள்
இல்லா 'அலா அZஜ்வாஜிஹிம் அவ் மா மலகத் அய்மானுஹும் Fப இன்னஹும் கய்ரு மலூமீன்
தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
فَمَنِ ابْتَغٰی وَرَآءَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْعٰدُوْنَ ۟ۚ
فَمَنِஎனவே எவர்ابْتَغٰیதேடுகிறாரோوَرَآءَஅப்பால்ذٰلِكَஅதற்குفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்களேالْعٰدُوْنَۚவரம்பு மீறியவர்கள்
FபமனிBப் தகா வரா'அ தாலிக Fப உலா'இக ஹுமுல் 'ஆதூன்
எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.
وَالَّذِیْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رٰعُوْنَ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்هُمْஅவர்கள்لِاَمٰنٰتِهِمْதங்களின் அமானிதங்களையும்وَ عَهْدِهِمْமேலும் தங்களின் வாக்குறுதியையும்رٰعُوْنَ۪ۙபேணுகிறார்களோ
வல்லதீன ஹும் லி அமானாதிஹிம் வ 'அஹ்திஹிம் ரா'ஊன்
இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
وَالَّذِیْنَ هُمْ بِشَهٰدٰتِهِمْ قَآىِٕمُوْنَ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்هُمْஅவர்கள்بِشَهٰدٰتِهِمْதங்களது சாட்சியங்களில்قَآىِٕمُوْنَ۪ۙஉறுதியாக நிலைநிற்பவர்கள்
வல்லதீன ஹும் Bபி ஷஹாதாதிஹிம் கா'இமூன்
இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.
وَالَّذِیْنَ هُمْ عَلٰی صَلَاتِهِمْ یُحَافِظُوْنَ ۟ؕ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்هُمْஅவர்கள்عَلٰیமீதுصَلَاتِهِمْதங்கள் தொழுகைகளைیُحَافِظُوْنَؕபேணிப் பாதுகாக்கிறார்களோ
வல்லதீன ஹும் 'அலா ஸலாதிஹிம் யுஹாFபிளூன்
எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
اُولٰٓىِٕكَ فِیْ جَنّٰتٍ مُّكْرَمُوْنَ ۟ؕ۠
اُولٰٓىِٕكَஅத்தகையோர்فِیْஇல்جَنّٰتٍசுவனங்கள்مُّكْرَمُوْنَؕ۠கண்ணியப்படுத்தப்பட்டவர்கள்
உலா'இக Fபீ ஜன்னாதிம் முக்ரமூன்
(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.
فَمَالِ الَّذِیْنَ كَفَرُوْا قِبَلَكَ مُهْطِعِیْنَ ۟ۙ
فَمَالِஎனவே என்னالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோقِبَلَكَஉம்மை நோக்கிمُهْطِعِیْنَۙவிரைந்து வருபவர்களாக
Fபமா லில் லதீன கFபரூ கிBபலக முஹ்தி'ஈன்
நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.
عَنِ الْیَمِیْنِ وَعَنِ الشِّمَالِ عِزِیْنَ ۟
عَنِபுறமிருந்துالْیَمِیْنِவலதுوَ عَنِமேலும் புறமிருந்துالشِّمَالِஇடதுعِزِیْنَகூட்டங்களாக
அனில் யமீனி வ 'அனிஷ் ஷிமாலி 'இZஜீன்
வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக.
اَیَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ یُّدْخَلَ جَنَّةَ نَعِیْمٍ ۟ۙ
اَیَطْمَعُஆசைப்படுகிறானாكُلُّஒவ்வொருامْرِئٍமனிதனும்مِّنْهُمْஅவர்களில்اَنْஎன்றுیُّدْخَلَநுழைக்கப்படجَنَّةَசுவனنَعِیْمٍۙஇன்பத்தில்
அயத்ம'உ குல்லும் ரி'இம் மின்ஹும் அ(ன்)ய்யுத்கல ஜன்னத ன'ஈம்
அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா?
كَلَّا ؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّمَّا یَعْلَمُوْنَ ۟
كَلَّا ؕஅவ்வாறல்லاِنَّاநிச்சயமாக நாம்خَلَقْنٰهُمْஅவர்களைப் படைத்தோம்مِّمَّاஎதிலிருந்து என்பதைیَعْلَمُوْنَஅவர்கள் அறிவார்கள்
கல்லா இன்னா கலக் னஹும் மிம்மா யஃலமூன்
அவ்வாறு (ஆகப் போவது) இல்லை. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம்.
فَلَاۤ اُقْسِمُ بِرَبِّ الْمَشٰرِقِ وَالْمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوْنَ ۟ۙ
فَلَاۤஅவ்வாறல்லاُقْسِمُநான் சத்தியம் செய்கிறேன்بِرَبِّஇறைவன் மீதுالْمَشٰرِقِகிழக்குத் திசைகளின்وَ الْمَغٰرِبِமற்றும் மேற்குத் திசைகளின்اِنَّاநிச்சயமாக நாம்لَقٰدِرُوْنَۙநிச்சயமாக ஆற்றலுடையவர்கள்
Fபலா உக்ஸிமு Bபி ரBப்Bபில் மஷாரிகி வல் மகாரிBபி இன்னா லகாதிரூன்
எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
عَلٰۤی اَنْ نُّبَدِّلَ خَیْرًا مِّنْهُمْ ۙ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِیْنَ ۟
عَلٰۤیமீதுاَنْஎன்றுنُّبَدِّلَநாம் பகரமாக்கخَیْرًاசிறந்தவர்களைمِّنْهُمْ ۙஅவர்களை விடوَ مَاமேலும் இல்லைنَحْنُநாம்بِمَسْبُوْقِیْنَமுந்தப்படுபவர்கள்
'அலா அன் னுBபத்தில கய்ரன் மின்ஹும் வமா னஹ்னு Bபி மஸ்Bபூகீன்
(அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்); ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது.
فَذَرْهُمْ یَخُوْضُوْا وَیَلْعَبُوْا حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟ۙ
فَذَرْهُمْஎனவே அவர்களை விட்டுவிடுவீராகیَخُوْضُوْاஅவர்கள் மூழ்கியிருக்கட்டும்وَ یَلْعَبُوْاமேலும் விளையாடட்டும்حَتّٰیவரைیُلٰقُوْاஅவர்கள் சந்திக்கும்یَوْمَهُمُதங்கள் நாளைالَّذِیْஎதனைیُوْعَدُوْنَۙஅவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளதோ
Fபதர்ஹும் யகூளூ வ யல்'அBபூ ஹத்தா யுலாகூ யவ்ம ஹுமுல் லதீ யூ'அதூன்
ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.
یَوْمَ یَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ سِرَاعًا كَاَنَّهُمْ اِلٰی نُصُبٍ یُّوْفِضُوْنَ ۟ۙ
یَوْمَஅந்நாளில்یَخْرُجُوْنَஅவர்கள் வெளியேறுவார்கள்مِنَஇருந்துالْاَجْدَاثِகல்லறைகள்سِرَاعًاவிரைவாகكَاَنَّهُمْஅவர்கள் என்பது போல்اِلٰیநோக்கிنُصُبٍநடுகற்களைیُّوْفِضُوْنَۙவிரைகிறார்கள்
யவ்ம யக்ருஜூன மினல் அஜ்தாதி ஸிரா'அன் க அன்ன ஹும் இலா னுஸுBபி(ன்)ய் யூFபிளூன்
நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) மண்ணறைகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.
خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ ذٰلِكَ الْیَوْمُ الَّذِیْ كَانُوْا یُوْعَدُوْنَ ۟۠
خَاشِعَةًதாழ்ந்தவையாகاَبْصَارُهُمْஅவர்களுடைய பார்வைகள்تَرْهَقُهُمْஅவர்களைச் சூழ்ந்துகொள்ளும்ذِلَّةٌ ؕஇழிவுذٰلِكَஅதுதான்الْیَوْمُஅந்த நாள்الَّذِیْஎதுكَانُوْاஅவர்கள்یُوْعَدُوْنَ۠வாக்களிக்கப்பட்டு வந்தார்களோ
காஷி'அதன் அBப்ஸாருஹும் தர்ஹகுஹும் தில்லஹ்; தாலிகல் யவ்முல் லதீ கானூ யூ'அதூன்
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும்; இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும்; அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான்.