9. ஸூரத்துத் தவ்பா(மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)

மதனீ, வசனங்கள்: 129

بَرَآءَةٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۤ اِلَی الَّذِیْنَ عٰهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِیْنَ ۟ؕ
بَرَآءَةٌநீங்குதல், விலகுதல்مِّنَ اللّٰهِஅல்லாஹ்வின் புறத்திலிருந்துوَرَسُوْلِهٖۤஇன்னும் அவனுடைய தூதர்اِلَى الَّذِيْنَஎவர்களுக்குعَاهَدْتُّمْஉடன்படிக்கை செய்தீர்கள்مِّنَ الْمُشْرِكِيْنَ ؕ‏இணைவைப்பவர்களில்
Bபரா'அதும் மினல் லாஹி வ ரஸூலிஹீ இலல் லதீன 'ஆஹத்தும் மினல் முஷ்ரிகீன்
(முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.
فَسِیْحُوْا فِی الْاَرْضِ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّاعْلَمُوْۤا اَنَّكُمْ غَیْرُ مُعْجِزِی اللّٰهِ ۙ وَاَنَّ اللّٰهَ مُخْزِی الْكٰفِرِیْنَ ۟
فَسِيْحُوْاஆகவே நீங்கள் சுற்றலாம்فِى الْاَرْضِபூமியில்اَرْبَعَةَநான்குاَشْهُرٍமாதங்கள்وَّاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّكُمْநிச்சயம் நீங்கள்غَيْرُ مُعْجِزِىபலவீனப்படுத்துபவர்கள் அல்லர்اللّٰهِ‌ۙஅல்லாஹ்வைوَاَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்مُخْزِىஇழிவுபடுத்துபவன்الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களை
Fபஸீஹூ Fபில் அர்ளி அர்Bப'அத அஷ்ஹுரி(ன்)வ் வஃலமூஅன்னகும் கய்ரு முஃஜிZஜில் லாஹி வ அன்னல் லாஹ முக்Zஜில் காFபிரீன்
நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
وَاَذَانٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۤ اِلَی النَّاسِ یَوْمَ الْحَجِّ الْاَكْبَرِ اَنَّ اللّٰهَ بَرِیْٓءٌ مِّنَ الْمُشْرِكِیْنَ ۙ۬ وَرَسُوْلُهٗ ؕ فَاِنْ تُبْتُمْ فَهُوَ خَیْرٌ لَّكُمْ ۚ وَاِنْ تَوَلَّیْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّكُمْ غَیْرُ مُعْجِزِی اللّٰهِ ؕ وَبَشِّرِ الَّذِیْنَ كَفَرُوْا بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ
وَاَذَانٌஅறிவிப்புمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துوَرَسُوْلِهٖۤஇன்னும் அவனுடைய தூதர்اِلَىபக்கம்النَّاسِமக்கள்يَوْمَநாள்الْحَجِّஹஜ்ஜுடையالْاَكْبَرِமாபெரும்اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்بَرِىْۤءٌவிலகியவன் (விலகியவர்கள்)مِّنَஇருந்துالْمُشْرِكِيْنَ ۙ இணைவைப்பவர்கள்وَ رَسُوْلُهٗ‌ ؕஇன்னும் அவனுடைய தூதர்فَاِنْ تُبْتُمْநீங்கள் திருந்தினால்فَهُوَஅதுخَيْرٌ لَّـكُمْ ۚஉங்களுக்கு மிக்க நன்றுوَاِنْ تَوَلَّيْتُمْநீங்கள் விலகினால்فَاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்غَيْرُ مُعْجِزِىபலவீனப்படுத்துபவர்கள் அல்லர்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வைوَبَشِّرِஇன்னும் நற்செய்தி கூறுவீராகالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்بِعَذَابٍ اَ لِيْمٍۙ‏துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு
வ அதானும் மினல் லாஹி வ ரஸூலிஹீ இலன் னாஸி யவ்மல் ஹஜ்ஜில் அக்Bபரி அன்னல் லாஹ Bபரீ'உம் மினல் முஷ்ரிகீன வ ரஸூலுஹ்; Fப-இன் துBப்தும் Fபஹுவ கய்ருல்லகும் வ இன் தவல்லய்தும் Fபஃலமூ அன்னகும் கய்ரு முஃஜிZஜில் லாஹ்; வ Bபஷிரில் லதீன கFபரூ BபிஅதாBபின் அலீம்
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணை வைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.
اِلَّا الَّذِیْنَ عٰهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِیْنَ ثُمَّ لَمْ یَنْقُصُوْكُمْ شَیْـًٔا وَّلَمْ یُظَاهِرُوْا عَلَیْكُمْ اَحَدًا فَاَتِمُّوْۤا اِلَیْهِمْ عَهْدَهُمْ اِلٰی مُدَّتِهِمْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ ۟
اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்عَاهَدْتُّمْநீங்கள் உடன்படிக்கை செய்தீர்கள்مِّنَ الْمُشْرِكِيْنَஇணைவைப்பவர்களில்ثُمَّபிறகுلَمْ يَنْقُصُوْஅவர்கள் குறைக்காமல்كُمْஉங்களுக்குشَيْـٴًـــاஎதையும்وَّلَمْ يُظَاهِرُوْاஅவர்கள் உதவாமல்عَلَيْكُمْஉங்களுக்கு எதிராகاَحَدًاஒருவருக்கும்فَاَتِمُّوْۤاமுழுமைப்படுத்துங்கள்اِلَيْهِمْஅவர்களுக்குعَهْدَهُمْஅவர்களின் உடன்படிக்கையைاِلٰى مُدَّتِهِمْ‌ؕஅவர்களுடைய தவணை வரைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُتَّقِيْنَ‏அஞ்சுபவர்களை
இல்லல் லதீன 'ஆஹத்தும் மினல் முஷ்ரிகீன தும்ம லம் யன்குஸூகும் ஷய்'அ(ன்)வ்-வ லம் யுளாஹிரூ 'அலய்கும் அஹதன் Fப அதிம்மூ இலய்ஹிம் 'அஹ்தஹும் இலா முத்ததிஹிம்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முத்தகீன்
ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
فَاِذَا انْسَلَخَ الْاَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِیْنَ حَیْثُ وَجَدْتُّمُوْهُمْ وَخُذُوْهُمْ وَاحْصُرُوْهُمْ وَاقْعُدُوْا لَهُمْ كُلَّ مَرْصَدٍ ۚ فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَخَلُّوْا سَبِیْلَهُمْ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
فَاِذَا انْسَلَخَமுடிந்துவிட்டால்الْاَشْهُرُமாதங்கள்الْحُـرُمُபுனித(மானவை)فَاقْتُلُواகொல்லுங்கள்الْمُشْرِكِيْنَஇணை வைப்பவர்களைحَيْثُஎங்குوَجَدْتُّمُوْகண்டீர்கள்هُمْஅவர்களைوَخُذُوْஇன்னும் பிடியுங்கள்هُمْஅவர்களைوَاحْصُرُوْஇன்னும் முற்றுகையிடுங்கள்هُمْஅவர்களைوَاقْعُدُوْاஇன்னும் அமருங்கள்لَهُمْஅவர்களுக்காகكُلَّஒவ்வொருمَرْصَدٍ‌ ۚபதுங்குமிடத்தில்فَاِنْ تَابُوْاஅவர்கள் திருந்தினால்وَاَقَامُواஇன்னும் நிலைநிறுத்தினால்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتَوُاஇன்னும் கொடுத்தால்الزَّكٰوةَஸகாத்தைفَخَلُّوْاவிட்டுவிடுங்கள்سَبِيْلَهُمْ‌ ؕஅவர்களுடைய வழியைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
Fப இதன்ஸலகல் அஷ்ஹுருல் ஹுருமு Fபக்துலுல் முஷ்ரிகீன ஹய்து வஜத்துமூஹும் வ குதூஹும் வஹ்ஸுரூஹும் வக்'உதூ லஹும் குல்ல மர்ஸத்; Fப-இன் தாBபூ வ அகாமுஸ் ஸலாத வ ஆதவுZஜ் Zஜகாத Fபகல்லூ ஸBபீலஹும்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
وَاِنْ اَحَدٌ مِّنَ الْمُشْرِكِیْنَ اسْتَجَارَكَ فَاَجِرْهُ حَتّٰی یَسْمَعَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ اَبْلِغْهُ مَاْمَنَهٗ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْلَمُوْنَ ۟۠
وَاِنْஆல்اَحَدٌஒருவர்مِّنَ الْمُشْرِكِيْنَஇணைவைப்பவர்களில்اسْتَجَارَكَபாதுகாப்புத் தேடினார்/உம்மிடம்فَاَجِرْهُபாதுகாப்பு அளிப்பீராக/அவருக்குحَتّٰى يَسْمَعَசெவியுறும் வரைكَلَامَபேச்சைاللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّபிறகுاَبْلِغْهُசேர்த்து விடுவீராக/அவரைمَاْمَنَهٗ‌ ؕஅவருடைய பாதுகாப்பான இடத்திற்குذٰ لِكَநிச்சயமாக அவர்கள்بِاَنَّهُمْஅதற்குக் காரணம்قَوْمٌசமுதாயம்لَّا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
வ இன் அஹதும் மினல் முஷ்ரிகீனஸ் தஜாரக Fப அஜிர்ஹு ஹத்தா யஸ்ம'அ கலாமல் லாஹி தும்ம அBப்லிக்ஹு மா மனஹ்; தாலிக Bபி அன்னஹும் கவ்முல் லா யஃலமூன்
(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
كَیْفَ یَكُوْنُ لِلْمُشْرِكِیْنَ عَهْدٌ عِنْدَ اللّٰهِ وَعِنْدَ رَسُوْلِهٖۤ اِلَّا الَّذِیْنَ عٰهَدْتُّمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ فَمَا اسْتَقَامُوْا لَكُمْ فَاسْتَقِیْمُوْا لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ ۟
كَيْفَஎப்படி?يَكُوْنُஇருக்கும்لِلْمُشْرِكِيْنَஇணைவைப்பவர்களுக்குعَهْدٌஒப்பந்தம்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்وَعِنْدَ رَسُوْلِهٖۤஇன்னும் அவனுடைய தூதரிடம்اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்عَاهَدتُّمْநீங்கள் ஒப்பந்தம் செய்தீர்கள்عِنْدَ الْمَسْجِدِமஸ்ஜிதிடம்الْحَـرَامِ‌ ۚபுனித(மானது)فَمَا اسْتَقَامُوْاஅவர்கள் ஒழுங்காக நடந்து கொள்ளும் வரைلَـكُمْஉங்களுடன்فَاسْتَقِيْمُوْاஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்لَهُمْ‌ ؕஅவர்களுடன்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحِبُّநேசிப்பான்الْمُتَّقِيْنَ‏அஞ்சுபவர்களை
கய்Fப யகூனு லில்முஷ் ரிகீன 'அஹ்துன் 'இன்தல்லாஹி வ 'இன்த ரஸூலிஹீ இல்லல் லதீன 'ஆஹத்தும் 'இன்தல் மஸ்ஜிதில் ஹராமி Fபமஸ் தகாமூ லகும் Fபஸ்தகீமூ லஹும்; இன்னல்லாஹ யுஹிBப்Bபுல் முத்தகீன்
அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன்(எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர; அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
كَیْفَ وَاِنْ یَّظْهَرُوْا عَلَیْكُمْ لَا یَرْقُبُوْا فِیْكُمْ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ یُرْضُوْنَكُمْ بِاَفْوَاهِهِمْ وَتَاْبٰی قُلُوْبُهُمْ ۚ وَاَكْثَرُهُمْ فٰسِقُوْنَ ۟ۚ
كَيْفَஎவ்வாறு?وَاِنْ يَّظْهَرُوْاஅவர்கள் வெற்றி கொண்டால்عَلَيْكُمْஉங்களைلَا يَرْقُبُوْاபொருட்படுத்த மாட்டார்கள்فِيْكُمْஉங்களுடன்اِلًّاஉறவைوَّلَا ذِمَّةً‌ ؕஇன்னும் ஒப்பந்தத்தைيُرْضُوْنَـكُمْதிருப்திபடுத்துகின்றனர்/உங்களைبِاَفْوَاهِهِمْதங்கள் வாய்களால்وَتَاْبٰىமறுக்கின்றனقُلُوْبُهُمْ‌ۚஅவர்களுடைய உள்ளங்கள்وَاَكْثَرُهُمْஅவர்களில் அதிகமானோர்فٰسِقُوْنَ‌ۚ‏பாவிகள்
கய்Fப வ இ(ன்)ய்-யள்ஹரூ 'அலய்கும் லா யர்குBபூ Fபீகும் இல்ல(ன்)வ் வலா திம்மஹ்; யுர்ளூ னகும் BபிஅFப்வாஹிஹிம் வ த'Bபா குலூBபுஹும் வ அக்தருஹும் Fபாஸிகூன்
(எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை; அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்.
اِشْتَرَوْا بِاٰیٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِیْلًا فَصَدُّوْا عَنْ سَبِیْلِهٖ ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اِشْتَرَوْاவாங்கினார்கள்بِاٰيٰتِவசனங்களுக்குப் பகரமாகاللّٰهِஅல்லாஹ்வின்ثَمَنًاவிலையைقَلِيْلًاசொற்பமானதுفَصَدُّوْاதடுத்தனர்عَنْ سَبِيْلِهٖ‌ ؕஅவனுடைய பாதையை விட்டுاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்سَآءَகெட்டு விட்டதுمَاஎதுكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்வார்கள்
இஷ்தரவ் Bபி ஆயாதில் லாஹி தமனன் கலீலன் Fபஸத்தூ 'அன் ஸBபீலிஹ்; இன்னஹும் ஸா'அ மா கானூ யஃமலூன்
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.
لَا یَرْقُبُوْنَ فِیْ مُؤْمِنٍ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُعْتَدُوْنَ ۟
لَا يَرْقُبُوْنَபொருட்படுத்த மாட்டார்கள்فِىْ مُؤْمِنٍநம்பிக்கையாளர்(கள்) விஷயத்தில்اِلًّاஉறவைوَّلَا ذِمَّةً‌ ؕஇன்னும் ஒப்பந்தத்தைوَاُولٰۤٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْمُعْتَدُوْنَ‏வரம்பு மீறிகள்
லா யர்குBபூன Fபீ மு'மினின் இல்ல(ன்)வ் வலா திம்மஹ் வ உலா 'இக ஹுமுல்மு 'ததூன்
அவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும் உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள்; மேலும் அவர்களே வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்.”
فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَاِخْوَانُكُمْ فِی الدِّیْنِ ؕ وَنُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
فَاِنْ تَابُوْاஅவர்கள் திருந்தினால்وَاَقَامُواஇன்னும் நிலைநிறுத்தினால்الصَّلٰوةَதொழுகையைوَاٰتَوُاஇன்னும் கொடுத்தால்الزَّكٰوةَஸகாத்தைفَاِخْوَانُكُمْஉங்கள் சகோதரர்கள்فِى الدِّيْنِ‌ؕமார்க்கத்தில்وَنُفَصِّلُவிவரிக்கிறோம்الْاٰيٰتِவசனங்களைلِقَوْمٍமக்களுக்குيَّعْلَمُوْنَ‏அறிகின்றார்கள்
Fப இன் தாBபூ வ அகாமுஸ் ஸலாத வ ஆதவுZஜ் Zஜகாத Fப இக்வானுகும் Fபித் தீன்; வ னுFபஸ்ஸிலுல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யஃலமூன்
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைபிடித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.
وَاِنْ نَّكَثُوْۤا اَیْمَانَهُمْ مِّنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوْا فِیْ دِیْنِكُمْ فَقَاتِلُوْۤا اَىِٕمَّةَ الْكُفْرِ ۙ اِنَّهُمْ لَاۤ اَیْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ یَنْتَهُوْنَ ۟
وَاِنْ نَّكَثُوْۤاஅவர்கள் முறித்தால்اَيْمَانَهُمْதங்கள் சத்தியங்களைمِّنْۢ بَعْدِபின்னர்عَهْدِهِمْதங்கள் ஒப்பந்தம்وَطَعَنُوْاஇன்னும் குறை கூறினர்فِىْ دِيْـنِكُمْஉங்கள் மார்க்கத்தில்فَقَاتِلُوْۤاபோரிடுங்கள்اَٮِٕمَّةَதலைவர்களிடம்الْـكُفْرِ‌ۙநிராகரிப்புاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَاۤ اَيْمَانَஅறவே சத்தியங்களில்லைلَهُمْஅவர்களுக்குلَعَلَّهُمْ يَنْتَهُوْنَ‏அவர்கள் விலகிக் கொள்வதற்காக
வ இன் னகதூ அய்மானஹும் மிம் Bபஃதி 'அஹ்திஹிம் வ த'அனூ Fபீ தீனிகும் Fபகாதிலூ அ'இம்மதல் குFப்ரி இன்னஹும் லா அய்மான லஹும் ல'அல்லஹும் யன்தஹூன்
அவர்களுடைய உடன்படிக்கைக்குப்பின், தம் சத்தியங்களை அவர்கள் முறித்துக் கொண்டு, உங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் இழித்துக் குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள்; ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் (என்று எதுவும்) இல்லை.
اَلَا تُقَاتِلُوْنَ قَوْمًا نَّكَثُوْۤا اَیْمَانَهُمْ وَهَمُّوْا بِاِخْرَاجِ الرَّسُوْلِ وَهُمْ بَدَءُوْكُمْ اَوَّلَ مَرَّةٍ ؕ اَتَخْشَوْنَهُمْ ۚ فَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشَوْهُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
اَلَا تُقَاتِلُوْنَநீங்கள் போர்புரிய மாட்டீர்களா?قَوْمًاமக்களிடம்نَّكَثُوْۤاமுறித்தனர்اَيْمَانَهُمْதங்கள் சத்தியங்களைوَهَمُّوْاஇன்னும் உறுதியாகநாடினர்بِاِخْرَاجِவெளியேற்றுவதற்குالرَّسُوْلِதூதரைوَهُمْஅவர்கள்தான்بَدَءُوْஆரம்பித்தனர்كُمْஉங்களிடம்اَوَّلَ مَرَّةٍ‌ ؕமுதல் முறையாகاَتَخْشَوْنَهُمْ‌ ۚநீங்கள் பயப்படுகிறீர்களா? / அவர்களைفَاللّٰهُஅல்லாஹ்தான்اَحَقُّமிகத் தகுதியானவன்اَنْ تَخْشَوْهُநீங்கள் பயப்படுவதற்கு / அவனைاِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏நீங்கள் இருந்தால்/நம்பிக்கையாளர்களாக
அலா துகாதிலூன கவ்மன் னகதூ அய்மானஹும் வ ஹம்மூ Bபி இக்ராஜிர் ரஸூலி வ ஹும் Bபத'ஊகும் அவ்வல மர்ரஹ்; அதக்-ஷவ்னஹும்; Fபல்லாஹு அஹக்கு அன் தக்-ஷவ்ஹு இன் குன்தும் மு'மினீன்
தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்.
قَاتِلُوْهُمْ یُعَذِّبْهُمُ اللّٰهُ بِاَیْدِیْكُمْ وَیُخْزِهِمْ وَیَنْصُرْكُمْ عَلَیْهِمْ وَیَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِیْنَ ۟ۙ
قَاتِلُوْபோரிடுங்கள்هُمْஅவர்களிடம்يُعَذِّبْهُمُவேதனை செய்வான்/அவர்களைاللّٰهُஅல்லாஹ்بِاَيْدِيْكُمْஉங்கள் கரங்களால்وَيُخْزِهِمْஇன்னும் இழிவுபடுத்துவான்/அவர்களைوَيَنْصُرْكُمْஇன்னும் உதவுவான்/உங்களுக்குعَلَيْهِمْஅவர்களுக்கு எதிராகوَيَشْفِஇன்னும் குணப்படுத்துவான்صُدُوْرَநெஞ்சங்களைقَوْمٍமக்களின்مُّؤْمِنِيْنَۙ‏நம்பிக்கை கொண்டவர்கள்
காதிலூஹும் யு'அத் திBப்ஹுமுல் லாஹு Bபி அய்தீகும் வ யுக்Zஜிஹிம் வ யன்ஸுர்கும் 'அலய்ஹிம் வ யஷ்Fபி ஸுதூர கவ்மிம் மு 'மினீன்
நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.
وَیُذْهِبْ غَیْظَ قُلُوْبِهِمْ ؕ وَیَتُوْبُ اللّٰهُ عَلٰی مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
وَيُذْهِبْஇன்னும் போக்குவான்غَيْظَகோபத்தைقُلُوْبِهِمْ‌ ؕஅவர்களுடைய உள்ளங்களின்وَ يَتُوْبُபிழைபொறுப்பான்اللّٰهُஅல்லாஹ்عَلٰىமீதுمَنْஎவர்يَّشَآءُ ؕநாடுகிறான்وَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
வ யுத்ஹிBப் கய்ள குலூBபிஹிம்; வ யதூBபுல்லாஹு 'அலா மய் யஷா'; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
அவர்களுடைய இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்; தான் நாடியவரின் தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
اَمْ حَسِبْتُمْ اَنْ تُتْرَكُوْا وَلَمَّا یَعْلَمِ اللّٰهُ الَّذِیْنَ جٰهَدُوْا مِنْكُمْ وَلَمْ یَتَّخِذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ وَلَا رَسُوْلِهٖ وَلَا الْمُؤْمِنِیْنَ وَلِیْجَةً ؕ وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠
اَمْ حَسِبْتُمْஎண்ணினீர்களா?اَنْ تُتْرَكُوْاநீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்றுوَلَمَّا يَعْلَمِஅறியாமல் இருக்கاللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَஎவர்களைجَاهَدُوْاபோர் புரிந்தனர்مِنْكُمْஉங்களில்وَلَمْ يَتَّخِذُوْاஇன்னும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லைمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிوَلَا رَسُوْلِهٖஇன்னும் அவனுடையதூதர்وَلَا الْمُؤْمِنِيْنَஇன்னும் நம்பிக்கை கொண்டவர்கள்وَلِيْجَةً‌ ؕஅந்தரங்க நண்பர்களாகوَاللّٰهُஅல்லாஹ்خَبِيْرٌۢஆழ்ந்தறிந்தவன்بِمَاஎதைتَعْمَلُوْنَ‏செய்வீர்கள்
அம் ஹஸிBப்தும் அன் துத்ரகூ வ லம்மா யஃலமில் லாஹுல் லதீன ஜாஹதூ மின்கும் வ லம் யத்தகிதூ மின் தூனில் லாஹி வலா ரஸூலிஹீ வ லல்மு'மினீன வலீஜஹ்; வல்லாஹு கBபீரும் Bபிமா தஃமலூன்
(முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஃமின்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாத நிலையில், நீங்கள் விட்டுவிடப் படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாகவே இருக்கின்றான்.
مَا كَانَ لِلْمُشْرِكِیْنَ اَنْ یَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِیْنَ عَلٰۤی اَنْفُسِهِمْ بِالْكُفْرِ ؕ اُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ ۖۚ وَفِی النَّارِ هُمْ خٰلِدُوْنَ ۟
مَا كَانَஇருக்கவில்லைلِلْمُشْرِكِيْنَஇணைவைப்பவர்களுக்கு உரிமைاَنْ يَّعْمُرُوْاஅவர்கள் பரிபாலிப்பதற்குمَسٰجِدَமஸ்ஜிதுகளைاللّٰهِஅல்லாஹ்வுடையشٰهِدِيْنَசாட்சிகூறியவர்களாகعَلٰٓى اَنْفُسِهِمْதங்கள் மீதுبِالْكُفْرِ‌ؕநிராகரிப்பிற்குاُولٰۤٮِٕكَஅவர்கள்حَبِطَتْஅழிந்தனاَعْمَالُهُمْ ۖۚஅவர்களுடைய செயல்கள்وَ فِى النَّارِஇன்னும் நரகத்தில்தான்هُمْஅவர்கள்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
மா கான லில்முஷ்ரிகீன அய் யஃமுரூ மஸாஜிதல் லாஹி ஷாஹிதீன 'அலா அன்Fபுஸிஹிம் Bபில்குFப்ர்; உலா'இக ஹBபிதத் அஃமாலுஹும் வ Fபின் னாரி ஹும் காலிதூன்
“குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
اِنَّمَا یَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَی الزَّكٰوةَ وَلَمْ یَخْشَ اِلَّا اللّٰهَ فَعَسٰۤی اُولٰٓىِٕكَ اَنْ یَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِیْنَ ۟
اِنَّمَا يَعْمُرُபராமரிப்பதெல்லாம்مَسٰجِدَமஸ்ஜிதுகளைاللّٰهِஅல்லாஹ்வின்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِஇன்னும் இறுதி நாளைالْاٰخِرِஇறுதிوَاَ قَامَஇன்னும் நிலைநிறுத்தினார்الصَّلٰوةَதொழுகையைوَاٰتَىஇன்னும் கொடுத்தார்الزَّكٰوةَஸகாத்தைوَلَمْ يَخْشَபயப்படவில்லைاِلَّاதவிரاللّٰهَ‌அல்லாஹ்வைفَعَسٰٓىகூடும்اُولٰۤٮِٕكَஇவர்கள்اَنْ يَّكُوْنُوْا(அவர்கள்) இருக்கمِنَ الْمُهْتَدِيْنَ‏நேர்வழி பெற்றவர்களில்
இன்னமா யஃமுரு மஸா ஜிதல் லாஹி மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ அகாமஸ் ஸலாத வ ஆதZஜ் Zஜகாத வ லம் யக்-ஷா இல்லல் லாஹ Fப'அஸா உலா'இக அய் யகூனூ மினல் முஹ்ததீன்
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.
اَجَعَلْتُمْ سِقَایَةَ الْحَآجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَرَامِ كَمَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَجٰهَدَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ لَا یَسْتَوٗنَ عِنْدَ اللّٰهِ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۘ
اَجَعَلْتُمْஆக்கினீர்களா?سِقَايَةَதண்ணீர் புகட்டுவதைالْحَـآجِّஹாஜிக்குوَعِمَارَةَஇன்னும் பராமரிப்பதைالْمَسْجِدِமஸ்ஜிதுالْحَـرَامِபுனிதமானதுكَمَنْஎவரைப்போன்றுاٰمَنَநம்பிக்கை கொண்டார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِஇன்னும் இறுதி நாளைوَجَاهَدَஇன்னும் போர் புரிந்தார்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்لَا يَسْتَوٗنَசமமாக மாட்டார்கள்عِنْدَ اللّٰهِ ؕஅல்லாஹ்விடம்وَ اللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالظّٰلِمِيْنَ‌ۘ‏அநியாயக்காரர்கள்
அஜ'அல்தும் ஸிகாயதல் ஹாஜ்ஜி வ 'இமாரதல் மஸ்ஜிதில் ஹராமி கம்மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ ஜாஹத Fபீ ஸBபீலில் லாஹ்; லா யஸ்தவூன 'இன்தல் லாஹ்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப்பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் - அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ۙ اَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللّٰهِ ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟
اَلَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَ هَاجَرُوْاஇன்னும் ஹிஜ்ரா சென்றனர்وَجَاهَدُوْاஇன்னும் போர் புரிந்தனர்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்بِاَمْوَالِهِمْதங்கள்செல்வங்களால்وَاَنْفُسِهِمْۙஇன்னும் தங்கள் உயிர்களால்اَعْظَمُமகத்தானவர்(கள்)دَرَجَةًபதவியால்عِنْدَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்விடம்وَاُولٰٓٮِٕكَ هُمُஇவர்கள்தான்الْفَآٮِٕزُوْنَ‏வெற்றியாளர்கள்
அல்லதீன ஆமனூ வ ஹாஜரூ வ ஜாஹதூ Fபீ ஸBபீலில் லாஹி Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் அஃளமு தரஜதன் 'இன்தல் லாஹ்; வ உலா'இக ஹுமுல் Fபா'இZஜூன்
எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
یُبَشِّرُهُمْ رَبُّهُمْ بِرَحْمَةٍ مِّنْهُ وَرِضْوَانٍ وَّجَنّٰتٍ لَّهُمْ فِیْهَا نَعِیْمٌ مُّقِیْمٌ ۟ۙ
يُبَشِّرُهُمْநற்செய்தி கூறுகிறான்/அவர்களுக்குرَبُّهُمْஅவர்களுடைய இறைவன்بِرَحْمَةٍகருணையைக்கொண்டுمِّنْهُதன்னிடமிருந்துوَرِضْوَانٍஇன்னும் பொருத்தம், மகிழ்ச்சிوَّجَنّٰتٍஇன்னும் சொர்க்கங்கள்لَّهُمْஅவர்களுக்குفِيْهَاஅவற்றில்نَعِيْمٌ مُّقِيْمٌ ۙ‏இன்பம்/நிலையானது
யுBபஷ்ஷிருஹும் ரBப்Bபுஹும் Bபிரஹ்மதிம் மின்ஹு வ ரிள்வானி(ன்)வ் வ ஜன்னாதில் லஹும் Fபீஹா ன'ஈமும் முகீம்
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.
خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ اِنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟
خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَاۤஅவற்றில்اَبَدًا‌ ؕஎப்போதும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عِنْدَهٗۤஅவனிடம்اَجْرٌகூலிعَظِيْمٌ‏மகத்தானது
காலிதீன Fபீஹா அBபதா; இன்னல் லாஹ 'இன்தஹூ அஜ்ருன் 'அளீம்
அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அவர்களுக்கு) மகத்தான (நற்) கூலி உண்டு.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْۤا اٰبَآءَكُمْ وَاِخْوَانَكُمْ اَوْلِیَآءَ اِنِ اسْتَحَبُّوا الْكُفْرَ عَلَی الْاِیْمَانِ ؕ وَمَنْ یَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
يٰۤاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَتَّخِذُوْۤاஎடுத்துக் கொள்ளாதீர்கள்اٰبَآءَكُمْஉங்கள் தாய் தந்தைகளைوَاِخْوَانَـكُمْஇன்னும் உங்கள் சகோதரர்களைاَوْلِيَآءَபொறுப்பாளர்களாகاِنِ اسْتَحَبُّواஅவர்கள் விரும்பினால்الْـكُفْرَநிராகரிப்பைعَلَى الْاِيْمَانِ‌ ؕவிட/இறைநம்பிக்கைوَمَنْஎவர்(கள்)يَّتَوَلَّهُمْபொறுப்பாளர்களாக ஆக்கிக்கொள்வார்(கள்)/அவர்களைمِّنْكُمْஉங்களில்فَاُولٰۤٮِٕكَ هُمُஅவர்கள்தான்الظّٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதூ ஆBபா 'அகும் வ இக்வானகும் அவ்லியா'அ இனிஸ் தஹBப்Bபுல் குFப்ர 'அலல் ஈமான்; வ மய் யதவல் லஹும் மின்கும் Fப உலா'இக ஹுமுள் ளாலிமூன்
ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِیْرَتُكُمْ وَاَمْوَالُ قْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَیْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَجِهَادٍ فِیْ سَبِیْلِهٖ فَتَرَبَّصُوْا حَتّٰی یَاْتِیَ اللّٰهُ بِاَمْرِهٖ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠
قُلْகூறுவீராகاِنْ كَانَஇருந்தால்اٰبَآؤُكُمْஉங்கள் பெற்றோர்وَاَبْنَآؤُكُمْஇன்னும் பிள்ளைகள்/உங்கள்وَاِخْوَانُكُمْஇன்னும் உங்கள் சகோதரர்கள்وَاَزْوَاجُكُمْஇன்னும் உங்கள் மனைவிகள்وَعَشِيْرَتُكُمْஇன்னும் உங்கள் குடும்பம்وَ اَمْوَالُஇன்னும் செல்வங்கள்ۨاقْتَرَفْتُمُوْهَاசம்பாதித்தீர்கள்/அவற்றைوَتِجَارَةٌஇன்னும் வர்த்தகம்تَخْشَوْنَபயப்படுகிறீர்கள்كَسَادَهَاஅது மந்தமாகி விடுவதைوَ مَسٰكِنُஇன்னும் வீடுகள்تَرْضَوْنَهَاۤநீங்கள் விரும்புகிறீர்கள்/அவற்றைاَحَبَّமிக விருப்பமாகاِلَيْكُمْஉங்களுக்குمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துوَرَسُوْلِهٖஇன்னும் அவனுடைய தூதர்وَ جِهَادٍஇன்னும் போரிடுவதுفِىْ سَبِيْلِهٖஅவனுடைய பாதையில்فَتَرَ بَّصُوْاஎதிர்பாருங்கள்حَتّٰىவரைيَاْتِىَவருவான்اللّٰهُஅல்லாஹ்بِاَمْرِهٖ‌ ؕதன் கட்டளையைக் கொண்டுوَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالْفٰسِقِيْنَ‏பாவிகள்
குல் இன் கான ஆBபா'உகும் வ அBப்னா'உகும் வ இக்வானுகும் வ அZஜ்வாஜுகும் வ 'அஷீரதுகும் வ அம்வாலுனிக் தரFப்துமூஹா வ திஜாரதுன் தக்-ஷவ்ன கஸாதஹா வ மஸாகினு தர்ளவ்னஹா அஹBப்Bப இலய்கும் மினல் லாஹி வ ரஸூலிஹீ வ ஜிஹாதின் Fபீ ஸBபீலிஹீ FபதரBப்Bபஸூ ஹத்தா ய'தியல்லஹு Bபி அம்ரிஹ்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
لَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ فِیْ مَوَاطِنَ كَثِیْرَةٍ ۙ وَّیَوْمَ حُنَیْنٍ ۙ اِذْ اَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَیْـًٔا وَّضَاقَتْ عَلَیْكُمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّیْتُمْ مُّدْبِرِیْنَ ۟ۚ
لَـقَدْதிட்டவட்டமாகنَصَرَஉதவினான்كُمُஉங்களுக்குاللّٰهُஅல்லாஹ்فِىْ مَوَاطِنَபோர்க்களங்களில்كَثِيْرَةٍ‌ ۙஅதிகமானوَّيَوْمَஇன்னும் அன்றுحُنَيْنٍ‌ ۙஹுனைன்اِذْ اَعْجَبَـتْكُمْபோது/பெருமைப்படுத்தியது/உங்களைكَثْرَتُكُمْநீங்கள் அதிகமாக இருப்பதுفَلَمْ تُغْنِபலன் தரவில்லைعَنْكُمْஉங்களுக்குشَيْـٴًـــاஎதையும்وَّضَاقَتْஇன்னும் நெருக்கடியாகி விட்டதுعَلَيْكُمُஉங்கள் மீதுالْاَرْضُபூமிبِمَا رَحُبَتْஅது விசாலமாக இருந்தும்ثُمَّபிறகுوَلَّـيْتُمْதிரும்பினீர்கள்مُّدْبِرِيْنَ‌ۚ‏புறமுதுகு காட்டியவர்களாக
லகத் னஸரகுமுல் லாஹு Fபீ மவாதின கதீரதி(ன்)வ் வ யவ்ம ஹுனய்னின் இத் அஃஜBபத்கும் கத்ரதுகும் Fபலம் துக்னி 'அன்கும் ஷய்'அ(ன்)வ் வ ளாகத் 'அலய்குமுல் அர்ளு Bபிமா ரஹுBபத் தும்ம வல்லய்தும் முத்Bபிரீன்
நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்:) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள்.
ثُمَّ اَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلٰی رَسُوْلِهٖ وَعَلَی الْمُؤْمِنِیْنَ وَاَنْزَلَ جُنُوْدًا لَّمْ تَرَوْهَا وَعَذَّبَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ وَذٰلِكَ جَزَآءُ الْكٰفِرِیْنَ ۟
ثُمَّபிறகுاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்سَكِيْنَـتَهٗதன் அமைதியைعَلٰى رَسُوْلِهٖதன் தூதர் மீதுوَعَلَىஇன்னும் மீதுالْمُؤْمِنِيْنَநம்பிக்கை கொண்டவர்கள்وَاَنْزَلَஇன்னும் இறக்கினான்جُنُوْدًا(சில) படைகளைلَّمْ تَرَوْهَا‌ ۚநீங்கள் பார்க்கவில்லை/அவற்றைوَعَذَّبَஇன்னும் வேதனை செய்தான்الَّذِيْنَஎவர்களைكَفَرُوْا‌ ؕநிராகரித்தனர்وَذٰ لِكَ جَزَآءُஇன்னும் இதுதான் கூலிالْـكٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களின்
தும்ம அன்Zஜலல் லாஹு ஸகீனதஹூ 'அலா ரஸூலிஹீ வ'அலல் மு'மினீன வ அன்Zஜல ஜுனூதல் லம் தரவ்ஹா வ அத்தBபல் லதீன கFபரூ; வ தாலிக ஜZஜா'உல் காFபிரீன்
பின்னர் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன்னுடைய சாந்தியை இறக்கியருளினான்; நீங்கள் பார்க்க முடியாப் படைகளையும் இறக்கி வைத்தான். (அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக்குள்ளாக்கினான் - இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும்.
ثُمَّ یَتُوْبُ اللّٰهُ مِنْ بَعْدِ ذٰلِكَ عَلٰی مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
ثُمَّபிறகுيَتُوْبُபிழை பொறுப்பான்اللّٰهُஅல்லாஹ்مِنْۢ بَعْدِபின்னர்ذٰ لِكَஅதற்குعَلٰىமீதுمَنْஎவர்يَّشَآءُ ؕநாடுகிறான்وَاللّٰهُஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
தும்ம யதூBபுல் லாஹு மிம் Bபஃதி தாலிக 'அலா மய் யஷா'; வல்லாஹு கFபூருர் ரஹீம்
அல்லாஹ் இதற்குப் பின்னர், தான் நாடியவருக்கு (அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால்) மன்னிப்பளிக்கின்றான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا یَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا ۚ وَاِنْ خِفْتُمْ عَیْلَةً فَسَوْفَ یُغْنِیْكُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۤ اِنْ شَآءَ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اِنَّمَاஎல்லாம்الْمُشْرِكُوْنَஇணைவைப்பவர்கள்نَجَسٌஅசுத்தமானவர்கள்فَلَا يَقْرَبُواநெருங்கக் கூடாதுالْمَسْجِدَமஸ்ஜிதைالْحَـرَامَபுனிதமானதுبَعْدَபின்னர்عَامِهِمْ هٰذَا‌ ۚஅவர்களுடைய ஆண்டு/இந்தوَ اِنْ خِفْتُمْநீங்கள் பயந்தால்عَيْلَةًவறுமையைفَسَوْفَவிரைவில் يُغْنِيْكُمُஉங்களை நிறைவாக்குவான்اللّٰهُஅல்லாஹ்مِنْ فَضْلِهٖۤதனது அருளினால்اِنْ شَآءَ‌ ؕநாடினால்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன்னமல் முஷ்ரிகூன னஜஸுன் Fபலா யக்ரBபுல் மஸ்ஜிதல் ஹராம Bபஃத 'ஆமிஹிம் ஹாத; வ இன் கிFப்தும் 'அய்லதன் Fபஸவ்Fப யுக்னீ குமுல் லாஹு மின் Fபள்லிஹீ இன் ஷா'; இன்னல்லாஹ 'அலீமுன் ஹகீம்
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே; ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது; (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
قَاتِلُوا الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْیَوْمِ الْاٰخِرِ وَلَا یُحَرِّمُوْنَ مَا حَرَّمَ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَلَا یَدِیْنُوْنَ دِیْنَ الْحَقِّ مِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ حَتّٰی یُعْطُوا الْجِزْیَةَ عَنْ یَّدٍ وَّهُمْ صٰغِرُوْنَ ۟۠
قَاتِلُواபோர் புரியுங்கள்الَّذِيْنَஎவர்களிடம்لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَلَاஇன்னும் இல்லைبِالْيَوْمِ الْاٰخِرِமறுமை நாளைوَلَا يُحَرِّمُوْنَஇன்னும் தடை செய்ய மாட்டார்கள்مَاஎதைحَرَّمَதடை செய்தான்اللّٰهُஅல்லாஹ்وَ رَسُوْلُهٗஇன்னும் அவனுடைய தூதர்وَلَا يَدِيْنُوْنَமார்க்கமாக ஏற்க மாட்டார்கள்دِيْنَமார்க்கத்தைالْحَـقِّஉண்மை, சத்தியம்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்கள்الْـكِتٰبَவேதம்حَتّٰىவரைيُعْطُواகொடுப்பார்கள்الْجِزْيَةَவரியை (ஜிஸ்யா)عَنْ يَّدٍஉடனேوَّهُمْஅவர்கள் இருக்கصٰغِرُوْنَ‏பணிந்தவர்கள்
காதிலுல் லதீன லா யு'மினூன Bபில்லாஹி வலா Bபில் யவ்மில் ஆகிரி வலா யுஹர்ரிமூன மா ஹர்ரமல் லாஹு வ ரஸூலுஹூ வலா யதீனூன தீனல் ஹக்கி மினல் லதீன ஊதுல் கிதாBப ஹத்தா யுஃதுல் ஜிZஜ்யத அய் யதி(ன்)வ் வ ஹும் ஸாகிரூன்
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
وَقَالَتِ الْیَهُوْدُ عُزَیْرُ بْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَی الْمَسِیْحُ ابْنُ اللّٰهِ ؕ ذٰلِكَ قَوْلُهُمْ بِاَفْوَاهِهِمْ ۚ یُضَاهِـُٔوْنَ قَوْلَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ؕ قٰتَلَهُمُ اللّٰهُ ؗۚ اَنّٰی یُؤْفَكُوْنَ ۟
وَقَالَتِகூறுகிறா(ர்க)ள்الْيَهُوْدُயூதர்கள்عُزَيْرُஉஜைர்ۨابْنُமகன்اللّٰهِஅல்லாஹ்வுடையوَقَالَتِஇன்னும் கூறுகிறா(ர்க)ள்النَّصٰرَىகிறித்தவர்கள்الْمَسِيْحُமஸீஹ்ابْنُமகன்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடையذٰ لِكَஇதுقَوْلُهُمْஅவர்களின் கூற்றுبِاَ فْوَاهِهِمْ‌ ۚஅவர்களின் வாய்களிலிருந்துيُضَاهِئُونَஒப்பாகின்றனர்قَوْلَகூற்றுக்குالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்مِنْ قَبْلُ‌ ؕமுன்னர்قَاتَلَهُمُஅவர்களை அழிப்பான்اللّٰهُ ۚஅல்லாஹ்اَنّٰىஎப்படிيُؤْفَكُوْنَ‏‏திருப்பப்படுகின்றனர்
வ காலதில் யஹூது 'உZஜய்ருனிBப் னுல் லாஹி வ காலதின் னஸாரல் மஸீஹுBப் னுல் லாஹி தாலிக கவ்லுஹும் Bபி அFப்வாஹிஹிம் யுளாஹி'ஊன கவ்லல் லதீன கFபரூ மின் கBப்ல்; கதலஹுமுல் லாஹ்; அன்னா யு'Fபகூன்
யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?
اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِیْحَ ابْنَ مَرْیَمَ ۚ وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِیَعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ سُبْحٰنَهٗ عَمَّا یُشْرِكُوْنَ ۟
اِتَّخَذُوْۤاஎடுத்துக் கொண்டனர்اَحْبَارَஅறிஞர்களைهُمْதங்கள்وَرُهْبَانَهُمْஇன்னும் துறவிகளை/தங்கள்اَرْبَابًا(வணங்கப்படும்) கடவுள்களாகمِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிوَالْمَسِيْحَஇன்னும் மஸீஹைابْنَமகன்مَرْيَمَ‌ ۚமர்யமுடையوَمَاۤ اُمِرُوْۤاஅவர்கள் ஏவப்படவில்லைاِلَّاதவிரلِيَـعْبُدُوْۤاஅவர்கள் வணங்குவதற்குاِلٰهًاவணக்கத்திற்குரிய ஒரு கடவுளைوَّاحِدًا‌ ۚஒரேلَاۤஅறவே இல்லைاِلٰهَவணங்கப்படும் கடவுள்اِلَّا هُوَ‌ ؕஅவனைத் தவிரسُبْحٰنَهٗஅவன் மிகத் தூயவன்عَمَّاஎதைவிட்டுيُشْرِكُوْنَ‏இணைவைப்பார்கள்
இத்தகதூ அஹ்Bபாரஹும் வ ருஹ்Bபானஹும் அர்BபாBபம்மின் தூனில் லாஹி வல் மஸீஹBப் ன மர்யம வ மா உமிரூ இல்லா லியஃBபுதூ இலாஹ(ன்)வ் வா ஹிதன் லா இலாஹ இல்லா ஹூ; ஸுBப்ஹானஹூ 'அம்மா யுஷ்ரிகூன்
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.
یُرِیْدُوْنَ اَنْ یُّطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَیَاْبَی اللّٰهُ اِلَّاۤ اَنْ یُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟
يُرِيْدُوْنَநாடுகின்றனர்اَنْ يُّطْفِـــٴُـــوْاஅவர்கள் அணைப்பதற்குنُوْرَஒளியைاللّٰهِஅல்லாஹ்வுடையبِاَ فْوَاهِهِمْதங்கள் வாய்களைக் கொண்டுوَيَاْبَىமறுக்கிறான்اللّٰهُஅல்லாஹ்اِلَّاۤதவிரاَنْ يُّتِمَّ(அவன்) முழுமைப்படுத்துவதைنُوْرَهٗதன் ஒளியைوَلَوْ كَرِهَஅவர்(கள்) வெறுத்தாலும்الْـكٰفِرُوْنَ‏நிராகரிப்பவர்கள்
யுரீதூன அய் யுத்Fபி'ஊ னூரல் லாஹி Bபி'அFப்வாஹிஹிம் வ ய'Bபல்லாஹு இல்லா அய் யுதிம்ம னூரஹூ வ லவ் கரிஹல் காFபிரூன்
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
هُوَ الَّذِیْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰی وَدِیْنِ الْحَقِّ لِیُظْهِرَهٗ عَلَی الدِّیْنِ كُلِّهٖ ۙ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ ۟
هُوَஅவன்الَّذِىْۤஎவன்اَرْسَلَஅனுப்பினான்رَسُوْلَهٗதன் தூதரைبِالْهُدٰىநேர்வழியைக் கொண்டுوَدِيْنِஇன்னும் மார்க்கம்الْحَـقِّஉண்மைلِيُظْهِرَهٗஅவன் ஓங்க வைப்பதற்காக/அதைعَلَى الدِّيْنِ كُلِّهٖۙஎல்லா மார்க்கங்களை பார்க்கிலும்وَلَوْ كَرِهَஅவர்(கள்) வெறுத்தாலும்الْمُشْرِكُوْنَ‏இணைவைப்பவர்கள்
ஹுவல் லதீ அர் ஸல ரஸூலஹூ Bபில்ஹுதா வ தீனில் ஹக்கி லியுள்ஹிரஹூ 'அலத் தீனி குல்லிஹீ வ லவ் கரிஹல் முஷ்ரிகூன்
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ كَثِیْرًا مِّنَ الْاَحْبَارِ وَالرُّهْبَانِ لَیَاْكُلُوْنَ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ وَالَّذِیْنَ یَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا یُنْفِقُوْنَهَا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اِنَّநிச்சயமாகكَثِيْرًاஅதிகமானோர்مِّنَஇருந்துالْاَحْبَارِயூத, கிறித்துவ அறிஞர்கள்وَالرُّهْبَانِஇன்னும் துறவிகள்لَيَاْكُلُوْنَபுசிக்கின்றனர், அனுபவிக்கின்றனர்اَمْوَالَசெல்வங்களைالنَّاسِமக்களின்بِالْبَاطِلِதவறாகوَيَصُدُّوْنَஇன்னும் தடுக்கின்றனர்عَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَالَّذِيْنَஎவர்கள்يَكْنِزُوْنَசேமிக்கின்றனர்الذَّهَبَதங்கத்தைوَالْفِضَّةَஇன்னும் வெள்ளியைوَلَاமாட்டார்கள்يُنْفِقُوْنَهَاஅவற்றை தர்மம் செய்யفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِۙஅல்லாஹ்வின்فَبَشِّرْநற்செய்தி கூறுவீராகهُمْஅவர்களுக்குبِعَذَابٍவேதனையைக் கொண்டுاَلِيْمٍۙ‏துன்புறுத்தக் கூடியது
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன்ன கதீரம்மினல் அஹ்Bபாரி வர்ருஹ்Bபானி ல ய'குலூன அம்வாலன் னாஸி Bபில் Bபாதிலி வ யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹ்; வல்லதீன யக்னிZஜூனத் தஹBப வல் Fபிள்ளத வ லாயுன்Fபிகூனஹா Fபீ ஸBபீலில் லாஹி FபBபஷ்ஷிர்ஹும் Bபி'அதாBபின் அலீம்
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
یَّوْمَ یُحْمٰی عَلَیْهَا فِیْ نَارِ جَهَنَّمَ فَتُكْوٰی بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ ؕ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ ۟
يَّوْمَநாளில்يُحْمٰىபழுக்கக்காய்ச்சப்படும்عَلَيْهَاஅவற்றின் மீதுفِىْ نَارِநெருப்பில்جَهَـنَّمَநரகம்فَتُكْوٰىசூடிடப்படும்بِهَاஅவற்றைக் கொண்டுجِبَاهُهُمْநெற்றிகள்/அவர்களுடையوَجُنُوْبُهُمْஇன்னும் விலாக்கள்/அவர்களுடையوَظُهُوْرُهُمْ‌ؕஇன்னும் முதுகுகள்/அவர்களுடையهٰذَاஇவைمَاஎவைكَنَزْتُمْசேமித்தீர்கள்لِاَنْفُسِكُمْஉங்களுக்காகفَذُوْقُوْاஆகவே சுவையுங்கள்مَاஎவற்றைكُنْتُمْஇருந்தீர்கள்تَكْنِزُوْنَ‏சேமிப்பீர்கள்
யவ்ம யுஹ்மா 'அலய்ஹா Fபீ னாரி ஜஹன்னம Fபதுக்வா Bபிஹா ஜிBபாஹுஹும் வ ஜுனூBபுஹும் வ ளுஹூருஹும் ஹாதா மா கனZஜ்தும் லி அன்Fபுஸிகும் Fபதூகூ மா குன்தும் தக்னிZஜூன்
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِیْ كِتٰبِ اللّٰهِ یَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ ؕ ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ ۙ۬ فَلَا تَظْلِمُوْا فِیْهِنَّ اَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِیْنَ كَآفَّةً كَمَا یُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟
اِنَّநிச்சயமாகعِدَّةَஎண்ணிக்கைالشُّهُوْرِமாதங்களின்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்اثْنَا عَشَرَபனிரெண்டுشَهْرًاமாதங்களாகும்فِىْ كِتٰبِபுத்தகத்தில், விதியில்اللّٰهِஅல்லாஹ்வின்يَوْمَநாள்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களைوَالْاَرْضَஇன்னும் பூமியைمِنْهَاۤஅவற்றில்اَرْبَعَةٌநான்குحُرُمٌ‌ ؕபுனிதமானவைذٰ لِكَ الدِّيْنُஇது/மார்க்கம்الْقَيِّمُ ۙநேரானதுفَلَا تَظْلِمُوْاஆகவே அநீதி இழைக்காதீர்கள்فِيْهِنَّஅவற்றில்اَنْفُسَكُمْ‌ ؕஉங்களுக்குوَقَاتِلُواபோர் புரியுங்கள்الْمُشْرِكِيْنَஇணைவைப்பவர்கள்كَآفَّةًஒன்றிணைந்துكَمَاபோன்றுيُقَاتِلُوْنَكُمْபோர் புரிகின்றனர்/உங்களிடம்كَآفَّةً‌  ؕஒன்றிணைந்துوَاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்مَعَ الْمُتَّقِيْنَ‏அஞ்சுபவர்களுடன்
இன்ன 'இத்ததஷ் ஷுஹூரி 'இன்தல் லாஹித் னா 'அஷர ஷஹ்ரன் Fபீ கிதாBபில் லாஹி யவ்ம கலகஸ் ஸமாவாதி வல் அர்ள மின்ஹா அர்Bப'அதுன் ஹுரும்; தாலிகத் தீனுல் கய்யிம்; Fபலா தள்லிமூ Fபீஹின்ன அன்Fபுஸகும்; வ காதிலுல் முஷ்ரிகீன காFப்Fபதன் கமா யுகாதி லூனகும் காFப்Fபஹ்; வஃலமூ அன்னல் லாஹ ம'அல் முத்தகீன்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும், அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
اِنَّمَا النَّسِیْٓءُ زِیَادَةٌ فِی الْكُفْرِ یُضَلُّ بِهِ الَّذِیْنَ كَفَرُوْا یُحِلُّوْنَهٗ عَامًا وَّیُحَرِّمُوْنَهٗ عَامًا لِّیُوَاطِـُٔوْا عِدَّةَ مَا حَرَّمَ اللّٰهُ فَیُحِلُّوْا مَا حَرَّمَ اللّٰهُ ؕ زُیِّنَ لَهُمْ سُوْٓءُ اَعْمَالِهِمْ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟۠
اِنَّمَا النَّسِىْٓءُபிற்படுத்துவதெல்லாம்زِيَادَةٌஅதிகப்படுத்துவதுفِى الْكُفْرِ‌நிராகரிப்பில்يُضَلُّவழி கெடுக்கப்படுகின்றனர்بِهِஇதன் மூலம்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்يُحِلُّوْنَهٗஆகுமாக்குகின்றனர்/அதைعَامًاஓர் ஆண்டில்وَّيُحَرِّمُوْنَهٗஇன்னும் அதைத் தடை செய்கின்றனர்عَامًاஓர் ஆண்டில்لِّيُوَاطِـــٴُـــوْاஅவர்கள் ஒத்து வருவதற்காகعِدَّةَஎண்ணிக்கைக்குمَاஎதைحَرَّمَதடை செய்தான்اللّٰهُஅல்லாஹ்فَيُحِلُّوْاஆகுமாக்குவார்கள்مَاஎதைحَرَّمَதடை செய்தான்اللّٰهُ‌ ؕஅல்லாஹ்زُيِّنَஅலங்கரிக்கப்பட்டனلَهُمْஅவர்களுக்குسُوْۤءُதீய(வை)اَعْمَالِهِمْ‌ ؕஅவர்களுடைய செயல்கள்وَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالْـكٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களான
இன்ன மன் னஸீ'உ Zஜியாததுன் Fபில்குFப்ரி யுளல்லு Bபிஹில் லதீன கFபரூ யுஹில் லூனஹூ 'ஆம(ன்)வ் வ யுஹர் ரிமூனஹூ 'ஆமல் லியுவாதி'ஊ 'இத்தத மா ஹர்ரமல் லாஹு Fபயுஹில்லூ மா ஹர்ரமல்-லாஹ்; Zஜுய்யின லஹும் ஸூ'உ அஃமாலிஹிம்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் காFபிரீன்
(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا مَا لَكُمْ اِذَا قِیْلَ لَكُمُ انْفِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اثَّاقَلْتُمْ اِلَی الْاَرْضِ ؕ اَرَضِیْتُمْ بِالْحَیٰوةِ الدُّنْیَا مِنَ الْاٰخِرَةِ ۚ فَمَا مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا فِی الْاٰخِرَةِ اِلَّا قَلِیْلٌ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேمَاஎன்ன?لَـكُمْஉங்களுக்குاِذَا قِيْلَகூறப்பட்டால்لَـكُمُஉங்களுக்குانْفِرُوْاபுறப்படுங்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்اثَّاقَلْـتُمْசாய்ந்து விட்டீர்கள்اِلَىபக்கம்الْاَرْضِ‌ ؕபூமி, உலகம்اَرَضِيْتُمْதிருப்தியடைந்தீர்களாبِالْحَيٰوةِவாழ்க்கையைக் கொண்டுالدُّنْيَاஉலகمِنَவிடالْاٰخِرَةِ‌ ۚமறுமைفَمَاஇல்லைمَتَاعُஇன்பம்الْحَيٰوةِவாழ்க்கைالدُّنْيَاஉலகம்فِى الْاٰخِرَةِமறுமையில்اِلَّاதவிரقَلِيْلٌ‏அற்பமானதே
யா அய்யுஹல் லதீன ஆமனூ மா லகும் இதா கீல லகுமுன் Fபிரூ Fபீ ஸBபீலில் லாஹித் தாகல்தும் இலல் அர்ள்; அரளீதும் Bபில்ஹயாதித் துன்யா மினல் ஆகிரஹ்; Fபமாமதா'உல் ஹயாதித்துன்யா Fபில் ஆகிரதி இல்லா கலீல்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.
اِلَّا تَنْفِرُوْا یُعَذِّبْكُمْ عَذَابًا اَلِیْمًا ۙ۬ وَّیَسْتَبْدِلْ قَوْمًا غَیْرَكُمْ وَلَا تَضُرُّوْهُ شَیْـًٔا ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اِلَّا تَـنْفِرُوْاநீங்கள் புறப்படாவிட்டால்يُعَذِّبْكُمْவேதனை செய்வான்/உங்களைعَذَابًاவேதனையால்اَلِيْمًا   ۙதுன்புறுத்தக்கூடியதுوَّيَسْتَبْدِلْஇன்னும் மாற்றி விடுவான்قَوْمًاஒரு சமுதாயத்தைغَيْرَكُمْஉங்களை அன்றிوَلَا تَضُرُّوْநீங்கள் தீங்கிழைக்க முடியாதுهُஅவனுக்குشَيْـٴًــــا‌ ؕஎதையும்وَاللّٰهُஅல்லாஹ்عَلٰىமீதும்كُلِّ شَىْءٍஎல்லாவற்றின்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
இல்லா தன்Fபிரூ யு'அத் திBப்கும் 'அதாBபன் அலீம(ன்)வ் வ யஸ்தBப்தில் கவ்மன் கய்ரகும் வலா தளுர்ரூஹு ஷய்'ஆ; வல் லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது - அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்.
اِلَّا تَنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِیْنَ كَفَرُوْا ثَانِیَ اثْنَیْنِ اِذْ هُمَا فِی الْغَارِ اِذْ یَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا ۚ فَاَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلَیْهِ وَاَیَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِیْنَ كَفَرُوا السُّفْلٰی ؕ وَكَلِمَةُ اللّٰهِ هِیَ الْعُلْیَا ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
اِلَّا تَـنْصُرُوْநீங்கள் உதவவில்லையெனில்هُஅவருக்குفَقَدْ نَصَرَஉதவிசெய்துவிட்டான்هُஅவருக்குاللّٰهُஅல்லாஹ்اِذْ اَخْرَجَهُபோது/வெளியேற்றினார்(கள்)/அவரைالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்ثَانِىَஒருவராகاثْنَيْنِஇருவரில்اِذْபோதுهُمَاஅவ்விருவரும்فِى الْغَارِகுகையில்اِذْபோதுيَقُوْلُகூறுகிறார்لِصَاحِبِهٖதன் தோழருக்குلَا تَحْزَنْகவலைப்படாதேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَعَنَا‌ ۚநம்முடன்فَاَنْزَلَஆகவே, இறக்கினான்اللّٰهُஅல்லாஹ்سَكِيْنَـتَهٗதன் அமைதியைعَلَيْهِஅவர் மீதுوَاَ يَّدَهٗஇன்னும் பலப்படுத்தினான் / அவரைبِجُنُوْدٍபடைகளைக்கொண்டுلَّمْ تَرَوْهَاநீங்கள் பார்க்கவில்லை / அவற்றைوَجَعَلَஇன்னும் ஆக்கினான்كَلِمَةَவார்த்தையைالَّذِيْنَஎவர்களின்كَفَرُواநிராகரித்தனர்السُّفْلٰى‌ ؕமிகத் தாழ்ந்ததாகوَكَلِمَةُவார்த்தைاللّٰهِஅல்லாஹ்வின்هِىَஅதுதான்الْعُلْيَا ؕமிக உயர்வானதுوَاللّٰهُஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
இல்லா தன்ஸுரூஹு Fபகத் னஸரஹுல் லாஹு இத் அக்ரஜஹுல் லதீன கFபரூ தானியத்னய்னி இத் ஹுமா Fபில்காரி இத் யகூலு லிஸாஹிBபிஹீ லா தஹ்Zஜன் இன்ன்னல் லாஹ ம'அனா; Fப அன்Zஜலல்லாஹு ஸகீனதஹூ 'அலய்ஹி வ அய்யதஹூ Bபிஜுனூதில் லம் தரவ்ஹா வ ஜ'அல கலிமதல் லதீன கFபருஸ் ஸுFப்லா; வ கலிமதுல் லாஹி ஹியல் 'உல்யா; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
اِنْفِرُوْا خِفَافًا وَّثِقَالًا وَّجَاهِدُوْا بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
اِنْفِرُوْاபுறப்படுங்கள்خِفَافًاஇலகுவானவர்களாகوَّثِقَالًاஇன்னும் கனமானவர்களாகوَّجَاهِدُوْاஇன்னும் போரிடுங்கள்بِاَمْوَالِكُمْஉங்கள் செல்வங்களாலும்وَاَنْفُسِكُمْஉங்கள் உயிர்களாலும்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்ذٰ لِكُمْஇதுவேخَيْرٌமிகச் சிறந்ததுلَّـكُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْلَمُوْنَ‏நீங்கள் அறிபவர்களாக
இன்Fபிரூ கிFபாFப(ன்)வ் வ திகால(ன்)வ் வ ஜாஹிதூ Bபி அம்வாலிகும் வ அன்Fபுஸிகும் Fபீ ஸBபீலில் லாஹ்; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.
لَوْ كَانَ عَرَضًا قَرِیْبًا وَّسَفَرًا قَاصِدًا لَّاتَّبَعُوْكَ وَلٰكِنْ بَعُدَتْ عَلَیْهِمُ الشُّقَّةُ ؕ وَسَیَحْلِفُوْنَ بِاللّٰهِ لَوِ اسْتَطَعْنَا لَخَرَجْنَا مَعَكُمْ ۚ یُهْلِكُوْنَ اَنْفُسَهُمْ ۚ وَاللّٰهُ یَعْلَمُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟۠
لَوْ كَانَஇருந்திருந்தால்عَرَضًاபொருளாகقَرِيْبًاஅருகில் உள்ளதுوَّسَفَرًاஇன்னும் பயணமாகقَاصِدًاசமீபமானதுلَّاتَّبَعُوْكَபின்பற்றியிருப்பார்கள்/உம்மைوَلٰـكِنْۢஎனினும்بَعُدَتْதூரமாகி விட்டதுعَلَيْهِمُஅவர்கள் மீதுالشُّقَّةُ ؕஎல்லைوَسَيَحْلِفُوْنَஇன்னும் சத்தியம் செய்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுلَوِ اسْتَطَعْنَاநாங்கள் ஆற்றல் பெற்றிருந்தால்لَخَـرَجْنَاவெளியேறிஇருப்போம்مَعَكُمْ ۚஉங்களுடன்يُهْلِكُوْنَஅழிக்கின்றனர்اَنْفُسَهُمْ‌ ۚதங்களையேوَاللّٰهُஅல்லாஹ்يَعْلَمُஅறிவான்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَـكٰذِبُوْنَ‏பொய்யர்கள்தான்
லவ் கான 'அரளன் கரீBப(ன்)வ் வ ஸFபரன் காஸிதல் லத்தBப'ஊக வ லாகிம் Bப'உதத் 'அலய்ஹிமுஷ் ஷுக்கஹ்; வ ஸயஹ்லிFபூன Bபில்லாஹி லவிஸ் தத'னா லகரஜ்னா ம'அகும்; யுஹ்லிகூன அன்Fபுஸஹும் வல் லாஹு யஃலமு இன்னஹும் லகா திBபூன்
“(நபியே! போர்ப் பிராயாணம்) நடுத்தரமான பிரயாணமாகவும் (அதில் கிடைக்கும் வெற்றிப் பொருள்கள்) எளிதில் (பெறப்படும் வெற்றிப்) பொருளாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் (போர்க்)களம் தூரமாக இருக்கின்றது. நாங்கள் சக்தி பெற்றிருந்தால் உங்களுடன் புறப்பட்டிருப்போம்” என்று அல்லாஹ்வின் மீது ஆணையிடுகிறார்கள். அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
عَفَا اللّٰهُ عَنْكَ ۚ لِمَ اَذِنْتَ لَهُمْ حَتّٰی یَتَبَیَّنَ لَكَ الَّذِیْنَ صَدَقُوْا وَتَعْلَمَ الْكٰذِبِیْنَ ۟
عَفَاமன்னிப்பான்اللّٰهُஅல்லாஹ்عَنْكَ‌ۚஉம்மைلِمَ اَذِنْتَஏன்அனுமதியளித்தீர்?لَهُمْஅவர்களுக்குحَتّٰىவரைيَتَبَيَّنَதெளிவாகிلَكَஉமக்குالَّذِيْنَ صَدَقُوْاஉண்மை உரைத்தவர்கள்وَتَعْلَمَஇன்னும் நீர் அறிகின்றالْـكٰذِبِيْنَ‏பொய்யர்களை
'அFபல் லாஹு 'அன்க லிம அதின்த லஹும் ஹத்தா யதBபய் யன லகல் லதீன ஸதகூ வ தஃலமல் காதிBபீன்
(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித் தருள்வானாக! அவர்களில் உண்மை சொன்னவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதை நீர் தெளிவாக அறிவதற்குமுன் ஏன் அவர்களுக்கு (போருக்கு புறப்படாதிருக்க) அனுமதியளித்தீர்?
لَا یَسْتَاْذِنُكَ الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ اَنْ یُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالْمُتَّقِیْنَ ۟
لَاமாட்டார்(கள்)يَسْتَـاْذِنُكَஉம்மிடம் அனுமதி கோரالَّذِيْنَஎவர்கள்يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்வார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِஇன்னும் இறுதி நாளைاَنْ يُّجَاهِدُوْاஅவர்கள் போரிடுவதிலிருந்துبِاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களால்وَاَنْفُسِهِمْ‌ؕஇன்னும் தங்கள் உயிர்களால்وَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِالْمُتَّقِيْنَ‏அஞ்சுபவர்களை
லா யஸ்தாதினுகல் லதீன யு'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி அய் யுஜா ஹிதூ Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம்; வல்லாஹு 'அலீமும் Bபில்முத் தகீன்
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள், தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவேமாட்டார்கள் - பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கு அறிவான்.
اِنَّمَا یَسْتَاْذِنُكَ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَارْتَابَتْ قُلُوْبُهُمْ فَهُمْ فِیْ رَیْبِهِمْ یَتَرَدَّدُوْنَ ۟
اِنَّمَاஎல்லாம்يَسْتَاْذِنُكَஅனுமதி கோருவார்(கள்)/உம்மிடம்الَّذِيْنَஎவர்கள்لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِஇன்னும் இறுதி நாளைوَارْتَابَتْஇன்னும் சந்தேகித்தனقُلُوْبُهُمْஉள்ளங்கள்/அவர்களுடையفَهُمْஎனவே, அவர்கள்فِىْ رَيْبِهِمْதங்கள் சந்தேகத்தில்يَتَرَدَّدُوْنَ‏தடுமாறுகின்றனர்
இன்னமா யஸ்தாதினுகல் லதீன லா யு'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வர்தாBபத் குலூBபுஹும் Fபஹும் Fபீ ரய்Bபிஹிம் யதரத்ததூன்
(போரில் கலந்துகொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இருதயங்கள் தங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன; ஆகவே, அவர்கள் தம் சந்தேகங்களினாலே (இங்கு மங்கும்) உழலுகின்றனர்.
وَلَوْ اَرَادُوا الْخُرُوْجَ لَاَعَدُّوْا لَهٗ عُدَّةً وَّلٰكِنْ كَرِهَ اللّٰهُ انْۢبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِیْلَ اقْعُدُوْا مَعَ الْقٰعِدِیْنَ ۟
وَلَوْ اَرَادُوْاஅவர்கள் நாடியிருந்தால்الْخُـرُوْجَவெளியேறுவதைلَاَعَدُّوْاஏற்பாடு செய்திருப்பார்கள்لَهٗஅதற்குعُدَّةًஒரு தயாரிப்பைوَّلٰـكِنْஎனினும்كَرِهَவெறுத்தான்اللّٰهُஅல்லாஹ்انۢبِعَاثَهُمْஅவர்கள் புறப்படுவதைفَثَبَّطَهُمْஆகவே தடுத்து விட்டான்/அவர்களைوَقِيْلَஇன்னும் கூறப்பட்டதுاقْعُدُوْاதங்கி விடுங்கள்مَعَஉடன்الْقٰعِدِيْنَ‏தங்குபவர்கள்
வ லவ் அராதுல் குரூஜ ல-'அத்தூ லஹூ 'உத்தத(ன்)வ் வ லாகின் கரிஹல் லாஹும் Bபி'ஆதஹும் FபதBப்Bபதஹும் வ கீலக் 'உதூ ம'அல் கா'இதீன்
அவர்கள் (போருக்குப்) புறப்பட நாடியிருந்தால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள்; எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்கள் புறப்படாதவாறு தடை செய்துவிட்டான்; (போரில் கலந்து கொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) “தங்குபவர்களுடன், நீங்களும் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது.
لَوْ خَرَجُوْا فِیْكُمْ مَّا زَادُوْكُمْ اِلَّا خَبَالًا وَّلَاۡاَوْضَعُوْا خِلٰلَكُمْ یَبْغُوْنَكُمُ الْفِتْنَةَ ۚ وَفِیْكُمْ سَمّٰعُوْنَ لَهُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
لَوْخَرَجُوْاஅவர்கள் வெளியேறி இருந்தால்فِيْكُمْஉங்களுடன்مَّا زَادُوْஅதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள்كُمْஉங்களுக்குاِلَّاதவிரخَبَالًاதீமையைوَّلَا۟اَوْضَعُوْاஇன்னும் விரைந்திருப்பார்கள்خِلٰلَـكُمْஉங்களுக்கிடையில்يَـبْغُوْنَـكُمُதேடுவார்கள்/உங்களுக்குالْفِتْنَةَ ۚகுழப்பத்தைوَفِيْكُمْஇன்னும் உங்களுடன்سَمّٰعُوْنَஒற்றர்கள்لَهُمْ‌ ؕஅவர்களுக்குوَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களை
லவ் கரஜூ Fபீகும் மா Zஜாதூகும் இல்லா கBபால(ன்)வ் வ ல அவ்ள'ஊ கிலாலகும் யBப்கூன குமுல் Fபித்னத வ Fபீகும் ஸம்மா'ஊன லஹும்; வல்லாஹு 'அலீமும் Bபிள் ளாலிமீன்
உங்களோடு அவர்கள் புறப்பட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள், மேலும் உங்களுக்கிடையே கோள்மூட்டி இருப்பார்கள். குழப்பத்தையும் உங்களுக்கு விரும்பியிருப்பார்கள். அவர்களின் (கூற்றை) செவியேற்பவர்களும் உங்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் அநியாயக்காரர்களை அறிந்தவனாக இருக்கிறான்.
لَقَدِ ابْتَغَوُا الْفِتْنَةَ مِنْ قَبْلُ وَقَلَّبُوْا لَكَ الْاُمُوْرَ حَتّٰی جَآءَ الْحَقُّ وَظَهَرَ اَمْرُ اللّٰهِ وَهُمْ كٰرِهُوْنَ ۟
لَـقَدِ ابْتَغَوُاதேடியுள்ளனர்الْفِتْنَةَகுழப்பத்தைمِنْ قَبْلُமுன்னர்وَقَلَّبُوْاஇன்னும் புரட்டினர்لَكَஉமக்குالْاُمُوْرَகாரியங்களைحَتّٰىஇறுதியாகجَآءَவந்ததுالْحَـقُّசத்தியம்وَظَهَرَஇன்னும் வென்றதுاَمْرُகட்டளைاللّٰهِஅல்லாஹ்வின்وَهُمْஅவர்கள் இருந்தும்كٰرِهُوْنَ‏வெறுப்பவர்களாக
லகதிBப் தகவுல் Fபித்னத மின் கBப்லு வ கல்லBபூ லகல் உமூர ஹத்தா ஜா'அல் ஹக்கு வ ளஹர அம்ருல் லாஹி வ ஹும் காரிஹூன்
நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது.
وَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ ائْذَنْ لِّیْ وَلَا تَفْتِنِّیْ ؕ اَلَا فِی الْفِتْنَةِ سَقَطُوْا ؕ وَاِنَّ جَهَنَّمَ لَمُحِیْطَةٌ بِالْكٰفِرِیْنَ ۟
وَمِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்يَّقُوْلُகூறுகிறார்ائْذَنْஅனுமதி தருவீராகلِّىْஎனக்குوَلَا تَفْتِنِّىْ‌ ؕசோதிக்காதீர்/என்னைاَلَاஅறிந்துகொள்ளுங்கள்!فِى الْفِتْنَةِசோதனையில்سَقَطُوْا‌ ؕவிழுந்தனர்وَاِنَّ جَهَـنَّمَநிச்சயமாக நரகம்لَمُحِيْطَةٌ ۢசூழ்ந்தே உள்ளதுبِالْـكٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களை
வ மின்ஹும் மய் யகூலு' தல் லீ வலா தFப்தின்னீ; அலா Fபில் Fபித்னதி ஸகதூ; வ இன்ன ஜஹன்னம லமுஹீததும் Bபில் காFபிரீன்
“(வீட்டிலேயே தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்; என்னை சோதனைக்கு உள்ளாக்காதீர்கள்” என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள்; அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள். மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை (எல்லாப் பக்கங்களிலிருந்தும்) சுற்றி வளைத்துக் கொள்ளும்.
اِنْ تُصِبْكَ حَسَنَةٌ تَسُؤْهُمْ ۚ وَاِنْ تُصِبْكَ مُصِیْبَةٌ یَّقُوْلُوْا قَدْ اَخَذْنَاۤ اَمْرَنَا مِنْ قَبْلُ وَیَتَوَلَّوْا وَّهُمْ فَرِحُوْنَ ۟
اِنْ تُصِبْكَஅடைந்தால் / உம்மைحَسَنَةٌஒரு நன்மைتَسُؤْهُمْ‌ ۚதுக்கப்படுத்துகிறது / அவர்களைوَاِنْ تُصِبْكَஇன்னும் அடைந்தால் / உம்மைمُصِيْبَةٌஒரு சோதனைيَّقُوْلُوْاகூறுகின்றனர்قَدْ اَخَذْنَاۤஎடுத்துக் கொண்டோம்اَمْرَنَاஎங்கள் காரியத்தைمِنْ قَبْلُமுன்னரேوَيَتَوَلَّوْاதிரும்புகின்றனர்وَّهُمْஅவர்கள்فَرِحُوْنَ‏மகிழ்ச்சியடைந்தவர்களாக
இன் துஸிBப்க ஹஸனதுன் தஸு'ஹும்; வ இன் துஸிBப்க முஸீBபது(ன்)ய் யகூலூ கத் அகத்னா அம்ரனா மின் கBப்லு வ யதவல்லவ் வ ஹும் Fபரிஹூன்
உமக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டால், அது அவர்களுக்குத் துக்கத்தைத் தருகின்றது; உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அவர்கள் “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொண்டோம்” என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் (உம்மை விட்டுச்) சென்று விடுகிறார்கள்.
قُلْ لَّنْ یُّصِیْبَنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَنَا ۚ هُوَ مَوْلٰىنَا ۚ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
قُلْகூறுவீராகلَّنْஅறவேيُّصِيْبَـنَاۤஎங்களை அடையாதுاِلَّاதவிரمَاஎதைكَتَبَவிதித்தான்اللّٰهُஅல்லாஹ்لَـنَا ۚஎங்களுக்குهُوَஅவன்தான்مَوْلٰٮنَا ۚஎங்கள் இறைவன்وَعَلَىஇன்னும் மீதுاللّٰهِஅல்லாஹ்فَلْيَتَوَكَّلِநம்பிக்கை வைக்கவும்الْمُؤْمِنُوْنَ‏நம்பிக்கையாளர்கள்
குல் ல(ன்)ய்-யுஸீBபனா இல்லா மா கதBபல் லாஹு லனா ஹுவ மவ்லானா; வ 'அலல் லாஹி Fபல் யதவக்க லில் மு'மினூன்
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
قُلْ هَلْ تَرَبَّصُوْنَ بِنَاۤ اِلَّاۤ اِحْدَی الْحُسْنَیَیْنِ ؕ وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ اَنْ یُّصِیْبَكُمُ اللّٰهُ بِعَذَابٍ مِّنْ عِنْدِهٖۤ اَوْ بِاَیْدِیْنَا ۖؗ فَتَرَبَّصُوْۤا اِنَّا مَعَكُمْ مُّتَرَبِّصُوْنَ ۟
قُلْகூறுவீராகهَلْ تَرَبَّصُوْنَஎதிர்பார்க்கிறீர்களா?بِنَاۤஎங்களுக்குاِلَّاۤதவிரاِحْدَىஒன்றைالْحُسْنَيَيْنِ‌ؕ(இரு) சிறப்பானவற்றில்وَنَحْنُநாங்கள்نَتَرَبَّصُஎதிர்பார்க்கிறோம்بِكُمْஉங்களுக்குاَنْ يُّصِيْبَكُمُசோதிப்பதை / உங்களைاللّٰهُஅல்லாஹ்بِعَذَابٍ مِّنْ عِنْدِهٖۤஒரு வேதனையைக் கொண்டு/தன்னிடமிருந்துاَوْஅல்லதுبِاَيْدِيْنَا  ۖ எங்கள் கரங்களால்فَتَرَبَّصُوْۤاஆகவே எதிர்பாருங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்مَعَكُمْஉங்களுடன்مُّتَرَبِّصُوْنَ‏எதிர்பார்ப்பவர்கள்
குல் ஹல் தரBப்Bபஸூன Bபினா இல்லா இஹ்தல் ஹுஸ்னயய்னி வ னஹ்னு னத்ரBப்Bபஸு Bபிகும் அய் யுஸ் ஈBபகுமுல் லாஹு Bபி'அதா Bபிம் மின் 'இன்திஹீ அவ் Bபிஅய்தீ னா FபதரBப்Bபஸூ இன்னா ம'அகும் முதரBப்Bபிஸூன்
(நபியே!) நீர் கூறுவீராக: ”(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?” ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் - ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்.
قُلْ اَنْفِقُوْا طَوْعًا اَوْ كَرْهًا لَّنْ یُّتَقَبَّلَ مِنْكُمْ ؕ اِنَّكُمْ كُنْتُمْ قَوْمًا فٰسِقِیْنَ ۟
قُلْகூறுவீராகاَنْفِقُوْاதர்மம் செய்யுங்கள்طَوْعًاவிருப்பமாகاَوْஅல்லதுكَرْهًاவெறுப்பாகلَّنْ يُّتَقَبَّلَஅறவே அங்கீகரிக்கப்படாதுمِنْكُمْ‌ؕஉங்களிடமிருந்துاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்كُنْتُمْஆகிவிட்டீர்கள்قَوْمًاமக்களாகفٰسِقِيْنَ‏பாவிகளான
குல் அன்Fபிகூ தவ்'அன் அவ் கர்ஹல் ல(ன்)ய் யுதகBப்Bபல மின் கும் இன்னகும் குன்தும் கவ்மன் Fபாஸிகீன்
(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் விருப்புடனோ, அல்லது வெறுப்புடனோ (தர்மத்திற்குச்) செலவு செய்தாலும் அது உங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது - ஏனெனில் நிச்சயமாக நீங்கள் பாவம் செய்யும் கூட்டத்தாராகவே இருக்கின்றீர்கள்.
وَمَا مَنَعَهُمْ اَنْ تُقْبَلَ مِنْهُمْ نَفَقٰتُهُمْ اِلَّاۤ اَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَبِرَسُوْلِهٖ وَلَا یَاْتُوْنَ الصَّلٰوةَ اِلَّا وَهُمْ كُسَالٰی وَلَا یُنْفِقُوْنَ اِلَّا وَهُمْ كٰرِهُوْنَ ۟
وَمَاஇல்லைمَنَعَهُمْஅவர்களுக்கு தடையாக இருக்கاَنْ تُقْبَلَஅங்கீகரிக்கப்படுவதற்குمِنْهُمْஅவர்களிடமிருந்துنَفَقٰتُهُمْஅவர்களுடைய தர்மங்கள்اِلَّاۤதவிரاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்بِاللّٰهِஅல்லாஹ்வைوَبِرَسُوْلِهٖஇன்னும் அவனுடைய தூதரைوَلَا يَاْتُوْنَஇன்னும் வரமாட்டார்கள்الصَّلٰوةَதொழுகைக்குاِلَّاதவிரوَهُمْஅவர்கள் இருந்தேكُسَالٰىசோம்பேறிகளாகوَلَا يُنْفِقُوْنَதர்மம் புரிய மாட்டார்கள்اِلَّاதவிரوَهُمْஅவர்கள் இருந்தேكٰرِهُوْنَ‏வெறுத்தவர்களாக
வமா மன'அஹும் 'அன் துக்Bபல மின்ஹும் னFபகாதுஹும் இல்லா அன்னஹும் கFபரூ Bபில்லாஹி வ Bபி ரஸூலிஹீ வலா ய'தூனஸ் ஸலாத இல்லா வ ஹும் குஸாலா வலா யுன்Fபிகூன இல்லா வ ஹும் காரிஹூன்
அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை.
فَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ ؕ اِنَّمَا یُرِیْدُ اللّٰهُ لِیُعَذِّبَهُمْ بِهَا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ ۟
فَلَاவேண்டாம்تُعْجِبْكَஉம்மை ஆச்சரியப்படுத்தاَمْوَالُهُمْசெல்வங்கள்/அவர்களுடையوَلَاۤ اَوْلَادُஇன்னும் பிள்ளைகள்هُمْ‌ؕஅவர்களுடையاِنَّمَاஎல்லாம்يُرِيْدُநாடுவான்اللّٰهُஅல்லாஹ்لِيُعَذِّبَهُمْவேதனை செய்வதை/அவர்களைبِهَاஅவற்றின் மூலம்فِى الْحَيٰوةِவாழ்க்கையில்الدُّنْيَاஉலகம்وَتَزْهَقَஇன்னும் பிரிந்து சென்று விடுவதை, அழிந்து விடுவதைاَنْفُسُهُمْஅவர்களுடைய உயிர்கள்وَهُمْஅவர்கள் இருக்கكٰفِرُوْنَ‏நிராகரிப்பவர்களாக
Fபலா துஃஜிBப்க அம்வாலுஹும் வ லா அவ்லாதுஹும்; இன்னமா யுரீதுல் லாஹு லியு'அத் திBபஹும் Bபிஹா Fபில் ஹயாதித் துன்யா வ தZஜ்ஹக அன்Fபுஸுஹும் வ ஹும் காFபிரூன்
அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான்.
وَیَحْلِفُوْنَ بِاللّٰهِ اِنَّهُمْ لَمِنْكُمْ ؕ وَمَا هُمْ مِّنْكُمْ وَلٰكِنَّهُمْ قَوْمٌ یَّفْرَقُوْنَ ۟
وَيَحْلِفُوْنَசத்தியம்செய்கின்றனர்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَمِنْكُمْؕஉங்களைச் சேர்ந்தவர்கள்தான்وَمَا هُمْ مِّنْكُمْஅவர்கள் இல்லை/உங்களைச் சேர்ந்தவர்கள்وَلٰـكِنَّهُمْஎன்றாலும் அவர்கள்قَوْمٌமக்கள்يَّفْرَقُوْنَ‏பயப்படுகிறார்கள்
வ யஹ்லிFபூன Bபில்லாஹி இன்ன்னஹும் லமின்கும் வமா ஹும் மின்கும் வ லாகின்னஹும் கவ்மு(ன்)ய் யFப்ரகூன்
நிச்சயமாகத் தாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து சொல்கின்றனர்; அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்;என்றாலும் அவர்கள் பயந்த கூட்டத்தினர்தான்.
لَوْ یَجِدُوْنَ مَلْجَاً اَوْ مَغٰرٰتٍ اَوْ مُدَّخَلًا لَّوَلَّوْا اِلَیْهِ وَهُمْ یَجْمَحُوْنَ ۟
لَوْ يَجِدُوْنَஅவர்கள் கண்டால்مَلْجَاًஒரு ஒதுங்குமிடத்தைاَوْஅல்லதுمَغٰرٰتٍகுகைகளைاَوْஅல்லதுمُدَّخَلًاஒரு சுரங்கத்தைلَّوَلَّوْاதிரும்பியிருப்பார்கள்اِلَيْهِஅதன் பக்கம்وَهُمْஅவர்களோيَجْمَحُوْنَ‏விரைந்தவர்களாக
லவ் யஜிதூன மல்ஜ'அன் அவ் மகாராதின் அவ் முத்த கலல் லவல்லவ் இலய்ஹி வ ஹும் யஜ்மஹூன்
ஓர் ஒதுங்கும் இடத்தையோ, அல்லது குகைகளையோ, அல்லது ஒரு சுரங்கத்தையோ அவர்கள் காண்பார்களாயின் (உம்மை விட்டு) அதன் பக்கம் விரைந்து ஓடிவிடுவார்கள்.
وَمِنْهُمْ مَّنْ یَّلْمِزُكَ فِی الصَّدَقٰتِ ۚ فَاِنْ اُعْطُوْا مِنْهَا رَضُوْا وَاِنْ لَّمْ یُعْطَوْا مِنْهَاۤ اِذَا هُمْ یَسْخَطُوْنَ ۟
وَمِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்(கள்)يَّلْمِزُكَகுறை கூறுகிறார்(கள்)/உம்மைفِى الصَّدَقٰتِ‌ ۚதர்மங்களில்فَاِنْ اُعْطُوْاஅவர்கள் கொடுக்கப்பட்டால்مِنْهَاஅவற்றிலிருந்துرَضُوْاதிருப்தியடைவார்கள்وَاِنْ لَّمْ يُعْطَوْاஅவர்கள் கொடுக்கப்பட வில்லையென்றால்مِنْهَاۤஅவற்றிலிருந்துاِذَاஅப்போதுهُمْஅவர்கள்يَسْخَطُوْنَ‏ஆத்திரப்படுகின்றனர்
வ மின்ஹும் மய் யல்மிZஜுக Fபிஸ் ஸதகாதி Fப-இன் உஃதூ மின்ஹா ரளூ வ இல்லம் யுஃதவ் மின்ஹா இதா ஹும் யஸ்கதூன்
(நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் - அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.
وَلَوْ اَنَّهُمْ رَضُوْا مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ ۙ وَقَالُوْا حَسْبُنَا اللّٰهُ سَیُؤْتِیْنَا اللّٰهُ مِنْ فَضْلِهٖ وَرَسُوْلُهٗۤ ۙ اِنَّاۤ اِلَی اللّٰهِ رٰغِبُوْنَ ۟۠
وَلَوْ اَنَّهُمْ رَضُوْاநிச்சயம் அவர்கள் திருப்தியடைந்துمَاۤ اٰتٰٮهُمُஎதை/கொடுத்தான்/அவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்وَرَسُوْلُهٗۙஇன்னும் அவனுடைய தூதர்وَقَالُوْاஇன்னும் கூறவேண்டுமேحَسْبُنَاஎங்களுக்கு போதுமானவன்اللّٰهُஅல்லாஹ்سَيُؤْتِيْنَاகொடுப்பார்கள்/எங்களுக்குاللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துفَضْلِهٖதன் அருள்وَ رَسُوْلُهٗۙஇன்னும் அவனுடைய தூதர்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்தான்رٰغِبُوْنَ‏ஆசை உள்ளவர்கள்
வ லவ் அன்னஹும் ரளூ மா ஆதாஹுமுல் லாஹு வ ரஸூலுஹூ வ காலூ ஹஸ்Bபுனல் லாஹு ஸயு'தீனல்லாஹு மின் Fபள்லிஹீ வ ரஸூலுஹூ இன்னா இலல்லாஹி ராகிBபூன்
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைந்து, “அல்லாஹ் நமக்குப் போதுமானவன்! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவன் அருட்கொடையிலிருந்து நமக்கு மேலும் அளிப்பார்கள்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே விரும்பக்கூடியவர்கள்” என்று கூறியிருப்பார்களானால் (அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்).
اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِیْنِ وَالْعٰمِلِیْنَ عَلَیْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ وَفِی الرِّقَابِ وَالْغٰرِمِیْنَ وَفِیْ سَبِیْلِ اللّٰهِ وَابْنِ السَّبِیْلِ ؕ فَرِیْضَةً مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
اِنَّمَاஎல்லாம்الصَّدَقٰتُஸகாத்துகள்لِلْفُقَرَآءِவரியவர்களுக்குوَالْمَسٰكِيْنِஇன்னும் ஏழைகள்وَالْعٰمِلِيْنَஇன்னும் ஊழியம் செய்பவர்கள்عَلَيْهَاஅவற்றுக்குوَالْمُؤَلَّـفَةِஇன்னும் இணைக்கப்பட்டவர்கள்قُلُوْبُهُمْஅவர்களின் உள்ளங்கள்وَفِى الرِّقَابِஇன்னும் அடிமைகளுக்கும்وَالْغٰرِمِيْنَஇன்னும் கடனாளிகள்وَفِىْ سَبِيْلِஇன்னும் பாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَابْنِ السَّبِيْلِ‌ؕஇன்னும் வழிப்போக்கர்கள்فَرِيْضَةًகடமையாகمِّنَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்விடமிருந்துوَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌநன்கிறந்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
இன்னமஸ் ஸதகாது லில்Fபுகரா'இ வல்மஸாகீனி வல் 'ஆமிலீன 'அலய்ஹா வல் மு'அல் லFபதி குலூBபுஹும் வ Fபிர் ரிகாBபி வல்காரிமீன வ Fபீ ஸBபீலில் லாஹி வBப்னிஸ் ஸBபீலி Fபரீளதம் மினல் லாஹ்; வல் லாஹு 'அலீமுன் ஹகீம்
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
وَمِنْهُمُ الَّذِیْنَ یُؤْذُوْنَ النَّبِیَّ وَیَقُوْلُوْنَ هُوَ اُذُنٌ ؕ قُلْ اُذُنُ خَیْرٍ لَّكُمْ یُؤْمِنُ بِاللّٰهِ وَیُؤْمِنُ لِلْمُؤْمِنِیْنَ وَرَحْمَةٌ لِّلَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ ؕ وَالَّذِیْنَ یُؤْذُوْنَ رَسُوْلَ اللّٰهِ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَمِنْهُمُஅவர்களில்الَّذِيْنَஎவர்கள்يُؤْذُوْنَஇகழ்கிறார்கள், குறை கூறுகிறார்கள்النَّبِىَّநபியைوَيَقُوْلُوْنَகூறுகின்றனர்هُوَஅவர்اُذُنٌ‌ ؕஒரு காதுقُلْகூறுவீராகاُذُنُகாதுخَيْرٍநல்லதுلَّـكُمْஉங்களுக்குيُؤْمِنُநம்பிக்கைகொள்கிறார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَيُؤْمِنُஇன்னும் ஏற்றுக் கொள்கிறார்لِلْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களைوَرَحْمَةٌஇன்னும் கருணைلِّـلَّذِيْنَஎவர்களுக்குاٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்مِنْكُمْ‌ ؕஉங்களில்وَالَّذِيْنَஎவர்கள்يُؤْذُوْنَஇகழ்கின்றனர்رَسُوْلَதூதரைاللّٰهِஅல்லாஹ்வின்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தக்கூடியது
வ மின்ஹுமுல் லதீன யு'தூனன் னBபிய்ய வ யகூலூன ஹுவ உதுன்; குல் உதுனு கய்ரில் லகும் யு'மினு Bபில்லாஹி வ யு'மினு லில் மு'மினீன வ ரஹ்மதுல் லில் லதீன ஆமனூ மின்கும்; வல்லதீன யு'தூன ரஸூலல் லாஹி லஹும் 'அதாBபுன் 'அலீம்
(இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத் துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; முஃமின்களையும் நம்புகிறார்; அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்;” எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
یَحْلِفُوْنَ بِاللّٰهِ لَكُمْ لِیُرْضُوْكُمْ ۚ وَاللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَحَقُّ اَنْ یُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِیْنَ ۟
يَحْلِفُوْنَசத்தியம் செய்கின்றனர்بِاللّٰهِஅல்லாஹ் மீதுلَـكُمْஉங்களுக்காகلِيُرْضُوْஅவர்கள் திருப்தி படுத்துவதற்காகكُمْ‌ۚஉங்களைوَاللّٰهُஅல்லாஹ்وَرَسُوْلُهٗۤஇன்னும் அவனுடைய தூதர்اَحَقُّமிகவும் தகுதியுடையவர்கள்اَنْ يُّرْضُوْهُஅவனை அவர்கள் திருப்தி படுத்துவதற்குاِنْ كَانُوْاஅவர்கள் இருந்தால்مُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
யஹ்லிFபூன Bபில்லாஹி லகும் லியுர்ளூகும் வல்லாஹு வ ரஸூலுஹூ அஹக்கு அய் யுர்ளூஹு இன் கானூ மு'மினீன்
(முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான்.
اَلَمْ یَعْلَمُوْۤا اَنَّهٗ مَنْ یُّحَادِدِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاَنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خَالِدًا فِیْهَا ؕ ذٰلِكَ الْخِزْیُ الْعَظِیْمُ ۟
اَلَمْ يَعْلَمُوْۤاஅவர்கள் அறியவில்லையா?اَنَّهٗநிச்சயமாக செய்திمَنْஎவர்يُّحَادِدِமுரண்படுவார்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَرَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதருக்குفَاَنَّநிச்சயமாகلَهٗஅவருக்குنَارَநெருப்புجَهَـنَّمَநரகத்தின்خَالِدًاநிரந்தரமானவர்فِيْهَا‌ ؕஅதில்ذٰ لِكَஇதுதான்الْخِزْىُஇழிவு, கேவலம்الْعَظِيْمُ‏பெரிய
அலம் யஃலமூ அன்னஹூ மய் யுஹாதிதில்லாஹ வ ரஸூலஹூ Fப'அன்ன லஹூ னார ஜஹன்னம காலிதன் Fபீஹா; தாலிகல் கிZஜ்யுல் 'அளீம்
எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவில்லையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் - இது பெரும் இழிவாகும்.
یَحْذَرُ الْمُنٰفِقُوْنَ اَنْ تُنَزَّلَ عَلَیْهِمْ سُوْرَةٌ تُنَبِّئُهُمْ بِمَا فِیْ قُلُوْبِهِمْ ؕ قُلِ اسْتَهْزِءُوْا ۚ اِنَّ اللّٰهَ مُخْرِجٌ مَّا تَحْذَرُوْنَ ۟
يَحْذَرُபயப்படுகின்றனர்الْمُنٰفِقُوْنَநயவஞ்சகர்கள்اَنْ تُنَزَّلَஇறக்கப்பட்டுعَلَيْهِمْஅவர்கள் மீதுسُوْرَةٌஓர் அத்தியாயம்تُنَبِّئُهُمْஅறிவித்துவிடுவதை/அவர்களுக்குبِمَاஎவற்றைفِىْ قُلُوْبِهِمْ‌ ؕதங்கள் உள்ளங்களில்قُلِகூறுவீராகاسْتَهْزِءُوْا‌ ۚபரிகசித்துக் கொள்ளுங்கள்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்مُخْرِجٌவெளியாக்குபவன்مَّاஎதைتَحْذَرُوْنَ‏பயப்படுகிறீர்கள்
யஹ்தருல் முனாFபிகூன அன் துனZஜ் Zஜல 'அலய்ஹிம் ஸூரதுன் துனBப்Bபி 'உஹும் Bபிமா FபீகுலூBபிஹிம்; குலிஸ்தஹ்Zஜி'ஊ இன்னல் லாஹ முக்ரிஜும் மா தஹ்தரூன்
முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் - (நபியே!) நீர் கூறும்: “ நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்.”
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ لَیَقُوْلُنَّ اِنَّمَا كُنَّا نَخُوْضُ وَنَلْعَبُ ؕ قُلْ اَبِاللّٰهِ وَاٰیٰتِهٖ وَرَسُوْلِهٖ كُنْتُمْ تَسْتَهْزِءُوْنَ ۟
وَلَٮِٕنْநீர் கேட்டால்سَاَلْتَهُمْஅவர்களைلَيَـقُوْلُنَّநிச்சயம் கூறுவார்கள்اِنَّمَاஎல்லாம்كُنَّاநாங்கள் இருந்தோம்نَخُوْضُமூழ்குபவர்களாகوَنَلْعَبُ‌ؕஇன்னும் விளையாடுபவர்களாகقُلْகூறுவீராகاَبِاللّٰهِஅல்லாஹ்வையா?وَاٰيٰتِهٖஇன்னும் அவனுடைய வசனங்களைوَرَسُوْلِهٖஇன்னும் அவனுடயை தூதரைكُنْتُمْஇருந்தீர்கள்تَسْتَهْزِءُوْنَ‏பரிகசிக்கிறீர்கள்
வல'இன் ஸ அல்தஹும் லயகூலுன்ன இன்னமா குன்னா னகூளு வ னல்'அBப்; குல் அBபில்லாஹி வ 'ஆயாதிஹீ வ ரஸூலிஹீ குன்தும் தஸ்தஹ்Zஜி'ஊன்
(இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
لَا تَعْتَذِرُوْا قَدْ كَفَرْتُمْ بَعْدَ اِیْمَانِكُمْ ؕ اِنْ نَّعْفُ عَنْ طَآىِٕفَةٍ مِّنْكُمْ نُعَذِّبْ طَآىِٕفَةًۢ بِاَنَّهُمْ كَانُوْا مُجْرِمِیْنَ ۟۠
لَا تَعْتَذِرُوْاபுகல் கூறாதீர்கள்قَدْ كَفَرْتُمْநிராகரித்து விட்டீர்கள்بَعْدَ اِيْمَانِكُمْ‌ ؕபின்னர்/நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குاِنْ نَّـعْفُநாம் மன்னித்தால்عَنْ طَآٮِٕفَةٍஒரு கூட்டத்தைمِّنْكُمْஉங்களில்نُـعَذِّبْவேதனை செய்வோம்طَآٮِٕفَةً ۢஒரு கூட்டத்தைبِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்مُجْرِمِيْنَ‏குற்றவாளிகளாக
லா தஃததிரூ கத் கFபர்தும் Bபஃத ஈமானிகும்; இன் னஃFபு 'அன் தா'இFபதின் மின்கும் னு'அத் திBப் தா'இFபதன் Bபி அன்னஹும் கானூ முஜ்ரிமீன்
புகல் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.
اَلْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ بَعْضُهُمْ مِّنْ بَعْضٍ ۘ یَاْمُرُوْنَ بِالْمُنْكَرِ وَیَنْهَوْنَ عَنِ الْمَعْرُوْفِ وَیَقْبِضُوْنَ اَیْدِیَهُمْ ؕ نَسُوا اللّٰهَ فَنَسِیَهُمْ ؕ اِنَّ الْمُنٰفِقِیْنَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
اَلْمُنٰفِقُوْنَநயவஞ்சக ஆண்கள்وَالْمُنٰفِقٰتُஇன்னும் நயவஞ்சக பெண்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்مِّنْۢ بَعْضٍ‌ۘசிலரைச் சேர்ந்தவர்கள்يَاْمُرُوْنَஏவுகின்றனர்بِالْمُنْكَرِதீமையைوَيَنْهَوْنَஇன்னும் தடுக்கின்றனர்عَنِ الْمَعْرُوْفِநன்மையை விட்டுوَيَقْبِضُوْنَஇன்னும் மூடிக் கொள்கின்றனர்اَيْدِيَهُمْ‌ؕதங்கள் கரங்களைنَسُواமறந்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வைفَنَسِيَهُمْ‌ؕஆகவே மறந்தான்/அவர்களைاِنَّநிச்சயமாகالْمُنٰفِقِيْنَ هُمُநயவஞ்சகர்கள்தான்الْفٰسِقُوْنَ‏பாவிகள்
அல்முனாFபிகூன வல் முனாFபிகாது Bபஃளுஹும் மிம் Bபஃள்; யாமுரூன Bபில்முன்கரி வ யன்ஹவ்ன 'அனில் மஃரூFபி வ யக்Bபிளூன அய்தியஹும்; னஸுல் லாஹ Fபனஸியஹும்; இன்னல் முனாFபிகீன ஹுமுல் Fபாஸிகூன்
நயவஞ்சகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.
وَعَدَ اللّٰهُ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ؕ هِیَ حَسْبُهُمْ ۚ وَلَعَنَهُمُ اللّٰهُ ۚ وَلَهُمْ عَذَابٌ مُّقِیْمٌ ۟ۙ
وَعَدَவாக்களித்தான்اللّٰهُஅல்லாஹ்الْمُنٰفِقِيْنَநயவஞ்சக ஆண்களுக்குوَالْمُنٰفِقٰتِஇன்னும் நயவஞ்சக பெண்களுக்குوَالْـكُفَّارَஇன்னும் நிராகரிப்பாளர்களுக்குنَارَநெருப்பைجَهَـنَّمَநரகத்தின்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَا‌ ؕஅதில்هِىَஅதுவேحَسْبُهُمْ‌ ۚஅவர்களுக்கு போதும்وَلَـعَنَهُمُஇன்னும் சபித்தான்/அவர்களைاللّٰهُ‌ ۚஅல்லாஹ்وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைمُّقِيْمٌ ۙ‏நிலையானது
வ'அதல் லாஹுல் முனFபிகீன வல் முனாFபிகாதி வல் குFப்Fபார னார ஜஹன்ன்னம்ம காலிதீன Fபீஹா; ஹிய ஹஸ்Bபுஹும்; வ ல'அன்னஹுமுல் லாஹு வ லஹும் 'அதாBபும் முகீம்
நயவஞ்சகர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.
كَالَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ كَانُوْۤا اَشَدَّ مِنْكُمْ قُوَّةً وَّاَكْثَرَ اَمْوَالًا وَّاَوْلَادًا ؕ فَاسْتَمْتَعُوْا بِخَلَاقِهِمْ فَاسْتَمْتَعْتُمْ بِخَلَاقِكُمْ كَمَا اسْتَمْتَعَ الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ بِخَلَاقِهِمْ وَخُضْتُمْ كَالَّذِیْ خَاضُوْا ؕ اُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ وَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
كَالَّذِيْنَஎவர்களைப்போன்றேمِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்كَانُوْۤاஇருந்தனர்اَشَدَّகடுமையானவர்களாகمِنْكُمْஉங்களை விடقُوَّةًபலத்தால்وَّاَكْثَرَஇன்னும் அதிகமானவர்களாகاَمْوَالًاசெல்வங்களால்وَّاَوْلَادًا ؕஇன்னும் சந்ததிகளால்فَاسْتَمْتَعُوْاசுகமடைந்தார்கள்بِخَلَاقِهِمْதங்கள் பங்கைக் கொண்டுفَاسْتَمْتَعْتُمْநீங்கள் சுகமடைந்தீர்கள்بِخَلَاقِكُمْஉங்கள் பங்கைக் கொண்டுكَمَاபோன்றுاسْتَمْتَعَசுகமடைந்தார்(கள்)الَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்بِخَلَاقِهِمْதங்கள் பங்கைக் கொண்டுوَخُضْتُمْமூழ்கினீர்கள்كَالَّذِىْஎது போன்றுخَاضُوْا‌ ؕ اُولٰۤٮِٕكَமூழ்கினர்/அவர்கள்حَبِطَتْஅழிந்தனاَعْمَالُهُمْஅவர்களுடைய செயல்கள்فِى الدُّنْيَاஇம்மையில்وَالْاٰخِرَةِ‌ ۚஇன்னும் மறுமையில்وَاُولٰۤٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகள்
கல்லதீன மின் கBப்லிகும் கானூ அஷத்த மின்கும் குவ்வத(ன்)வ் வ அக்தர அம்வால(ன்)வ் வ அவ்லாதன் Fபஸ்தம்த'ஊ Bபிகலாகிஹிம் Fபஸ்தம்தஃதும் Bபிகலாகிகும் கமஸ் தம்த'அல் லதீன மின் கBப்லிகும் Bபிகலா கிஹிம் வ குள்தும் கல்லதீ காளூ; உலா'இக ஹBபிதத் அஃமாலுஹும் Fபித் துன்யா வல் ஆகிரதி வ உலா'இக ஹுமுல் காஸிரூன்
(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
اَلَمْ یَاْتِهِمْ نَبَاُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۙ۬ وَقَوْمِ اِبْرٰهِیْمَ وَاَصْحٰبِ مَدْیَنَ وَالْمُؤْتَفِكٰتِ ؕ اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ فَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
اَلَمْவரவில்லையாيَاْتِهِمْஅவர்களுக்குنَبَاُசெய்தி, சரித்திரம்الَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னர்قَوْمِசமுதாயம்نُوْحٍநூஹூடையوَّعَادٍஇன்னும் ஆதுوَّثَمُوْدَ  ۙஇன்னும் ஸமூதுوَقَوْمِஇன்னும் சமுதாயம்اِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاَصْحٰبِ مَدْيَنَஇன்னும் மத்யன் வாசிகள்وَالْمُؤْتَفِكٰتِ‌ ؕதலைகீழாக புரட்டப்பட்ட ஊர்கள்اَتَتْهُمْஅவர்கள் வந்தார்கள்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَيِّنٰتِ‌ ۚஅத்தாட்சிகளைக் கொண்டுفَمَا كَانَஇருக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்لِيَظْلِمَهُمْஅவர்களுக்கு அநீதியிழைப்பவனாகوَلٰـكِنْஎனினும்كَانُوْۤاஇருந்தனர்اَنْفُسَهُمْதங்களுக்கேيَظْلِمُوْنَ‏அநீதியிழைப்பவர்களாக
அலம் ய'திஹிம் னBப உல் லதீன மின் கBப்லிஹிம் கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத வ கவ்மி இBப்ராஹீம வ அஸ்ஹாBபி மத்யன வல் மு'தFபிகாத்; அதத்ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபமா கானல் லாஹு லியள்லிமஹும் வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ۘ یَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَیُطِیْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ اُولٰٓىِٕكَ سَیَرْحَمُهُمُ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
وَالْمُؤْمِنُوْنَநம்பிக்கை கொண்ட ஆண்கள்وَالْمُؤْمِنٰتُஇன்னும் நம்பிக்கை கொண்ட பெண்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلِيَآءُபொறுப்பாளர்கள்بَعْضٍ‌ۘசிலருக்குيَاْمُرُوْنَஏவுகின்றனர்بِالْمَعْرُوْفِநன்மையைوَيَنْهَوْنَஇன்னும் தடுக்கின்றனர்عَنِ الْمُنْكَرِதீமையைவிட்டுوَيُقِيْمُوْنَஇன்னும் நிலை நிறுத்துகின்றனர்الصَّلٰوةَதொழுகையைوَيُؤْتُوْنَஇன்னும் கொடுக்கின்றனர்الزَّكٰوةَஸகாத்தைوَيُطِيْعُوْنَஇன்னும் கீழ்ப்படிகின்றனர்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَرَسُوْلَهٗ‌ؕஇன்னும் அவனுடைய தூதருக்குاُولٰۤٮِٕكَஅவர்கள்سَيَرْحَمُهُمُஇவர்களுக்கு கருணை புரிவான்اللّٰهُؕஅல்லாஹ்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
வல் மு'மினூன வல் மு'மினாது Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; ய'முரூன Bபில்மஃரூFபி வ யன்ஹவ்ன 'அனில் முன்கரி வ யுகீமூனஸ் ஸலாத வ யு'தூனZஜ் Zஜகாத வ யுதீ'ஊனல் லாஹ வ ரஸூலஹ்; உலா'இக ஸயர்ஹமு ஹுமுல் லாஹ்; இன்னல்லாஹ 'அZஜீZஜுன் ஹகீம்
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
وَعَدَ اللّٰهُ الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَمَسٰكِنَ طَیِّبَةً فِیْ جَنّٰتِ عَدْنٍ ؕ وَرِضْوَانٌ مِّنَ اللّٰهِ اَكْبَرُ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟۠
وَعَدَவாக்களித்தான்اللّٰهُஅல்லாஹ்الْمُؤْمِنِيْنَநம்பிக்கை கொண்ட ஆண்களுக்குوَالْمُؤْمِنٰتِநம்பிக்கை கொண்ட பெண்களுக்குجَنّٰتٍசொர்க்கங்களைتَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَاஅவற்றில்وَمَسٰكِنَஇன்னும் தங்குமிடங்கள்طَيِّبَةًநல்லதுفِىْ جَنّٰتِசொர்க்கங்களில்عَدْنٍ‌ ؕநிலையானوَرِضْوَانٌஇன்னும் பொருத்தம்مِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்اَكْبَرُ‌ ؕமிகப் பெரியதுذٰ لِكَ هُوَஇதுதான்الْفَوْزُவெற்றிالْعَظِيْمُ‏மகத்தானது
வ'அதல் லாஹுல்மு' மினீன வல்மு'மினாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா வ மஸாகின தய்யிBபதன் Fபீ ஜன்ன்னாதி 'அத்ன்; வ ரிள்வானும் மினல் லாஹி அக்Bபர்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றி.
یٰۤاَیُّهَا النَّبِیُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِیْنَ وَاغْلُظْ عَلَیْهِمْ ؕ وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
يٰۤاَيُّهَا النَّبِىُّநபியே!جَاهِدِபோரிடுவீராகالْـكُفَّارَநிராகரிப்பவர்களிடம்وَالْمُنٰفِقِيْنَஇன்னும் நயவஞ்சகர்களிடம்وَاغْلُظْகண்டிப்பீராகعَلَيْهِمْ‌ؕஅவர்களைوَ مَاْوٰٮهُمْஅவர்களுடைய தங்குமிடம்جَهَـنَّمُ‌ؕநரகம்தான்وَبِئْسَகெட்டுவிட்டதுالْمَصِيْرُ‏மீளுமிடத்தால் அது
யா அய்யுஹன் னBபிய்யு ஜாஹிதில் குFப்Fபார வல்முனாFபிகீன வக்லுள் 'அலய்ஹிம்; வ மாவாஹும் ஜஹன்ன்னமு வ Bபி'ஸல் மஸீர்
நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக; மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக; (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.
یَحْلِفُوْنَ بِاللّٰهِ مَا قَالُوْا ؕ وَلَقَدْ قَالُوْا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوْا بَعْدَ اِسْلَامِهِمْ وَهَمُّوْا بِمَا لَمْ یَنَالُوْا ۚ وَمَا نَقَمُوْۤا اِلَّاۤ اَنْ اَغْنٰىهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ مِنْ فَضْلِهٖ ۚ فَاِنْ یَّتُوْبُوْا یَكُ خَیْرًا لَّهُمْ ۚ وَاِنْ یَّتَوَلَّوْا یُعَذِّبْهُمُ اللّٰهُ عَذَابًا اَلِیْمًا ۙ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ وَمَا لَهُمْ فِی الْاَرْضِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
يَحْلِفُوْنَசத்தியமிடுகின்றனர்بِاللّٰهِஅல்லாஹ் மீதுمَا قَالُوْا ؕஅவர்கள் கூறவில்லைوَلَقَدْ قَالُوْاகூறியிருக்கின்றனர்كَلِمَةَவார்த்தைالْـكُفْرِநிராகரிப்பின்وَكَفَرُوْاஇன்னும் நிராகரித்தனர்بَعْدَபின்னர்اِسْلَامِهِمْஅவர்கள் முஸ்லிமானதற்குوَهَمُّوْاஇன்னும் திட்டமிட்டனர்بِمَاஎதற்குلَمْ يَنَالُوْا‌ ۚஅவர்கள் அடையவில்லைوَمَا نَقَمُوْۤاஅவர்கள் தண்டிக்கவில்லைاِلَّاۤதவிரاَنْ اَغْنٰٮهُمُஎன்பதற்காக/நிறைவாக்கினான்/இவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்وَرَسُوْلُهٗஇன்னும் அவனுடைய தூதர்مِنْ فَضْلِهٖ‌ ۚதன் அருளினால்فَاِنْ يَّتُوْبُوْاஅவர்கள் திருந்தினால்يَكُஇருக்கும்خَيْرًاசிறந்ததாகلَّهُمْ‌ ۚஅவர்களுக்கேوَاِنْ يَّتَوَلَّوْاஅவர்கள் விலகிச்சென்றால்يُعَذِّبْهُمُவேதனை செய்வான்/அவர்களைاللّٰهُஅல்லாஹ்عَذَابًاவேதனையால்اَلِيْمًا ۙதுன்புறுத்தக்கூடியفِى الدُّنْيَاஇம்மையில்وَالْاٰخِرَةِ‌ ۚஇன்னும் மறுமையில்وَمَا لَهُمْஅவர்களுக்கு இல்லைفِى الْاَرْضِபூமியில்مِنْ وَّلِىٍّஒரு பாதுகாவலர்وَّلَا نَصِيْرٍ‏ஓர் உதவியாளர்
யஹ்லிFபூன Bபில்லாஹி ம காலூ வ லகத் காலூ கலிமதல் குFப்ரி வ கFபரூ Bபஃத இஸ்லாமிஹிம் வ ஹம்மூ Bபிமா லம் யனாலூ; வமா னகமூ இல்லா அன் அக்னா ஹுமுல்லாஹு வ ரஸூலுஹூ மின் Fபள்லிஹ்; Fப-இ(ன்)ய் யதூBபூ யகு கய்ரல் லஹும் வ இ(ன்)ய் யதவல் லவ் யு'அத் திBப்ஹுமுல்லாஹு 'அதாBபன் அலீமன் Fபித்துன்யா வல் ஆகிரஹ்; வமா லஹும் Fபில் அர்ளி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
இவர்கள் நிச்சயமாக “குஃப்ருடைய” சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.
وَمِنْهُمْ مَّنْ عٰهَدَ اللّٰهَ لَىِٕنْ اٰتٰىنَا مِنْ فَضْلِهٖ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِیْنَ ۟
وَمِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்கள்عَاهَدَஒப்பந்தம்செய்தார்கள்اللّٰهَஅல்லாஹ்விடம்لَٮِٕنْஅவன் கொடுத்தால்اٰتٰٮنَاஎங்களுக்குمِنْ فَضْلِهٖதன் அருளிலிருந்துلَـنَصَّدَّقَنَّநிச்சயமாக நாம் தர்மம்செய்வோம்وَلَنَكُوْنَنَّநிச்சயமாக நாம் ஆகிவிடுவோம்مِنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில்
வ மின்ஹும் மன் 'ஆஹ தல் லாஹ ல'இன் ஆதானா மின் Fபள்லிஹீ லனஸ் ஸத்தகன்ன வ லனகூனன்ன மினஸ்ஸாலிஹீன்
அவர்களில் சிலர், “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்தால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.
فَلَمَّاۤ اٰتٰىهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ ۟
فَلَمَّاۤ اٰتٰٮهُمْபோது/கொடுத்தான்/அவர்களுக்குمِّنْ فَضْلِهٖதன் அருளிலிருந்துبَخِلُوْاகஞ்சத்தனம்செய்தனர்بِهٖஅதில்وَتَوَلَّوْاஇன்னும் விலகிவிட்டனர்وَّهُمْஅவர்கள்مُّعْرِضُوْنَ‏புறக்கணிப்பவர்களாக
Fபலம்மா ஆதாஹும் மின் Fபள்லிஹீ Bபகிலூ Bபிஹீ வ தவல்லவ் வ ஹும் முஃரிளூன்
(அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கிவிட்டனர்.
فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِیْ قُلُوْبِهِمْ اِلٰی یَوْمِ یَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا یَكْذِبُوْنَ ۟
فَاَعْقَبَهُمْஆகவே முடிவாக்கினான்/அவர்களுக்குنِفَاقًاநயவஞ்சகத்தைفِىْ قُلُوْبِهِمْஅவர்களுடைய உள்ளங்களில்اِلٰى يَوْمِநாள் வரைيَلْقَوْنَهٗசந்திப்பார்கள்/அவனைبِمَاۤஎதன் காரணமாகاَخْلَفُواமாறாக நடந்தனர்اللّٰهَஅல்லாஹ்விடம்مَاஎதைوَعَدُوْهُவாக்களித்தனர்/அதைوَبِمَاஇன்னும் எதன் காரணமாகكَانُوْاஇருந்தனர்يَكْذِبُوْنَ‏பொய்சொல்பவர்களாக
Fப அஃகBபஹும் னிFபாகன் Fபீ குலூBபிஹிம் இலா யவ்மி யல்கவ் னஹூ Bபிமா அக்லFபுல் லாஹ மா வ'அதூஹு வ Bபிமா கானூ யக்திBபூன்
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.
اَلَمْ یَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ وَاَنَّ اللّٰهَ عَلَّامُ الْغُیُوْبِ ۟ۚ
اَلَمْ يَعْلَمُوْۤاஅவர்கள் அறியவில்லையா?اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَعْلَمُஅறிவான்سِرَّهُمْஅவர்களின் ரகசியத்தைوَنَجْوٰٮهُمْஇன்னும் அவர்களின் பேச்சைوَاَنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلَّامُமிக மிக அறிந்தவன்الْغُيُوْبِ‌ ۚ‏மறைவானவற்றை
அலம் யஃலமூ அன்னல் லாஹ யஃலமு ஸிர்ரஹும் வ னஜ்வாஹும் வ அன்னல் லாஹ 'அல்லாமுல் குயூBப்
அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும், மறைவானவற்றை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
اَلَّذِیْنَ یَلْمِزُوْنَ الْمُطَّوِّعِیْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ فِی الصَّدَقٰتِ وَالَّذِیْنَ لَا یَجِدُوْنَ اِلَّا جُهْدَهُمْ فَیَسْخَرُوْنَ مِنْهُمْ ؕ سَخِرَ اللّٰهُ مِنْهُمْ ؗ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اَلَّذِيْنَஎவர்கள்يَلْمِزُوْنَகுறை கூறுகின்றனர், குத்திப் பேசுகின்றனர்الْمُطَّوِّعِيْنَஉபரியாக செய்பவர்களைمِنَ الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களில்فِى الصَّدَقٰتِதர்மங்களில்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்لَا يَجِدُوْنَபெறமாட்டார்கள்اِلَّاதவிரجُهْدَهُمْதங்கள் உழைப்பைفَيَسْخَرُوْنَகேலிசெய்கின்றனர்مِنْهُمْؕஅவர்களைسَخِرَகேலி செய்கிறான்اللّٰهُஅல்லாஹ்مِنْهُمْஅவர்களைوَلَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைاَلِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
அல்லதீன யல்மிZஜூனல் முத் தவ்வி'ஈன மினல்மு'மினீன Fபிஸ் ஸதகாதி வல்லதீன லா யஜிதூன இல்லா ஜுஹ்தஹும் Fபயஸ்கரூன மின்ஹும் ஸகிரல் லாஹு மின்ஹும் வ லஹும் அதாBபுன் அலீம்
இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.
اِسْتَغْفِرْ لَهُمْ اَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ ؕ اِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِیْنَ مَرَّةً فَلَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠
اِسْتَغْفِرْநீர் மன்னிப்புத்தேடுவீராகلَهُمْஅவர்களுக்காகاَوْஅல்லதுلَا تَسْتَغْفِرْமன்னிப்புத் தேடாதீர்لَهُمْؕஅவர்களுக்காகاِنْ تَسْتَغْفِرْநீர் மன்னிப்புத் தேடினாலும்لَهُمْஅவர்களுக்காகسَبْعِيْنَஎழுபதுمَرَّةًமுறைفَلَنْ يَّغْفِرَமன்னிக்கவே மாட்டான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْ‌ؕஅவர்களைذٰلِكَ بِاَنَّهُمْஅதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்بِاللّٰهِஅல்லாஹ்வைوَرَسُوْلِهٖ‌ؕஇன்னும் அவனுடைய தூதரைوَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்கள்الْفٰسِقِيْنَ‏பாவிகளான
இஸ்தக்Fபிர் லஹும் அவ் லா தஸ்தக்Fபிர் லஹும் இன் தஸ்தக்Fபிர் லஹும் ஸBப்'ஈன மர்ரதன் Fபல(ன்)ய் யக்Fபிரல் லாஹு லஹும்; தாலிக Bபி அன்னஹும் கFபரூ Bபில்லாஹி வ ரஸூலிஹ்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
(நபியே!) நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோராவிட்டாலும் சரியே! இவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவ மன்னிப்புக் கோரினாலும் - நிச்சயமாக அல்லாஹ் இவர்களை மன்னிக்க மாட்டான். ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் - இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
فَرِحَ الْمُخَلَّفُوْنَ بِمَقْعَدِهِمْ خِلٰفَ رَسُوْلِ اللّٰهِ وَكَرِهُوْۤا اَنْ یُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَقَالُوْا لَا تَنْفِرُوْا فِی الْحَرِّ ؕ قُلْ نَارُ جَهَنَّمَ اَشَدُّ حَرًّا ؕ لَوْ كَانُوْا یَفْقَهُوْنَ ۟
فَرِحَமகிழ்ச்சியடைந்தனர்الْمُخَلَّفُوْنَபின்தங்கியவர்கள்بِمَقْعَدِهِمْதாங்கள் தங்கியதைப் பற்றிخِلٰفَமாறாகرَسُوْلِதூதருக்குاللّٰهِஅல்லாஹ்வின்وَكَرِهُوْۤاஇன்னும் வெறுத்தனர்اَنْ يُّجَاهِدُوْاஅவர்கள் போரிடுவதைبِاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களால்وَاَنْفُسِهِمْஇன்னும் தங்கள் உயிர்களால்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَقَالُوْاகூறினர்لَا تَنْفِرُوْاபுறப்படாதீர்கள்فِى الْحَـرِّؕவெயிலில்قُلْகூறுவீராகنَارُநெருப்புجَهَـنَّمَநரகத்தின்اَشَدُّமிகக் கடுமையானதுحَرًّا‌ؕவெப்பத்தால்لَوْ كَانُوْاஅவர்கள் இருக்க வேண்டுமே!يَفْقَهُوْنَ‏சிந்தித்து விளங்குபவர்களாக
Fபரிஹல் முகல்லFபூன Bபிமக்'அதிஹிம் கிலாFப ரஸூலில் லாஹி வ கரிஹூ அய் யுஜாஹிதூ Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் Fபீ ஸBபீலில் லாஹி வ காலூ லா தன்Fபிரூ Fபில் ஹர்ர்; குல் னாரு ஜஹன்னம அஷத்து ஹர்ரா; லவ் கானூ யFப்கஹூன்
(தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் “நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).
فَلْیَضْحَكُوْا قَلِیْلًا وَّلْیَبْكُوْا كَثِیْرًا ۚ جَزَآءً بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
فَلْيَـضْحَكُوْاஅவர்கள் சிரிக்கட்டும்قَلِيْلاًகுறைவாகوَّلْيَبْكُوْاஅவர்கள் அழட்டும்كَثِيْرًا‌ ۚஅதிகமாகجَزَآءًۢகூலியாகبِمَا كَانُوْاஇருந்ததற்காகيَكْسِبُوْنَ‏செய்வார்கள்
Fபல்யள்ஹகூ கலீல(ன்)வ் வல்யBப்கூ கதீரன் ஜZஜா'அன் Bபிமா கானூ யக்ஸிBபூன்
எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாகக் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்.
فَاِنْ رَّجَعَكَ اللّٰهُ اِلٰی طَآىِٕفَةٍ مِّنْهُمْ فَاسْتَاْذَنُوْكَ لِلْخُرُوْجِ فَقُلْ لَّنْ تَخْرُجُوْا مَعِیَ اَبَدًا وَّلَنْ تُقَاتِلُوْا مَعِیَ عَدُوًّا ؕ اِنَّكُمْ رَضِیْتُمْ بِالْقُعُوْدِ اَوَّلَ مَرَّةٍ فَاقْعُدُوْا مَعَ الْخٰلِفِیْنَ ۟
فَاِنْதிருப்பினால்رَّجَعَكَஉம்மைاللّٰهُஅல்லாஹ்اِلٰى طَآٮِٕفَةٍஒரு கூட்டத்திடம்مِّنْهُمْஅவர்களில்فَاسْتَـاْذَنُوْكَஅனுமதி கோரினால்/உம்மிடம்لِلْخُرُوْجِவெளியேறுவதற்குفَقُلْகூறுவீராகلَّنْ تَخْرُجُوْاஅறவே புறப்படாதீர்கள்مَعِىَஎன்னுடன்اَبَدًاஒருபோதும்وَّلَنْ تُقَاتِلُوْاஇன்னும் அறவே போரிடாதீர்கள்مَعِىَஎன்னுடன்عَدُوًّا‌ ؕஒரு எதிரியிடம்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்رَضِيْتُمْவிரும்பினீர்கள்بِالْقُعُوْدِஉட்கார்ந்து விடுவதைاَوَّلَ مَرَّةٍமுதல் முறைفَاقْعُدُوْاஆகவே உட்கார்ந்து விடுங்கள்مَعَ الْخٰلـِفِيْنَ‏பின் தங்கி விடுபவர்களுடன்
Fப இர் ரஜ'அகல் லாஹு இலா தா'இFபதிம் மின்ஹும் Fபஸ்தா தனூக லில்குரூஜி Fபகுல் லன் தக்ருஜூ ம'இய அBபத(ன்)வ் வ லன் துகாதிலூ ம'இய 'அதுவ்வன் இன்னகும் ரளீதும் Bபில்கு'ஊதி அவ்வல மர்ரதின் Fபக்'உதூ ம'அல் காலிFபீன்
(நபியே!) உம்மை அல்லாஹ் அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்பி வருமாறு செய்து (உம் வெற்றியையும், பொருட்களையும் பார்த்துவிட்டு மறு யுத்தத்திற்குப்) புறப்பட்டு வர உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் “நீங்கள் ஒருக்காலும் என்னுடன் புறப்படாதீர்கள்; இன்னும் என்னுடன் சேர்ந்து எந்த விரோதியுடனும் நீங்கள் போர் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் முதன் முறையில் (போருக்குப் புறப்படாமல் தன் வீடுகளில்) உட்கார்ந்திருப்பதைத் தான் பொருத்த மெனக்கொண்டீர்கள் - எனவே (இப்பொழுதும் தம் இல்லங்களில்) தங்கியவர்களுடனேயே இருந்து விடுங்கள்” என்று கூறுவீராக!.
وَلَا تُصَلِّ عَلٰۤی اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰی قَبْرِهٖ ؕ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ ۟
وَلَا تُصَلِّதொழாதீர்عَلٰٓىமீதுاَحَدٍஒருவர்مِّنْهُمْஅவர்களில்مَّاتَஇறந்தார்اَبَدًاஒருபோதும்وَّلَا تَقُمْநிற்காதீர்عَلٰىஅருகில்قَبْرِهٖ ؕ اِنَّهُمْஅவருடைய புதைகுழிக்கு/நிச்சயமாக அவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்بِاللّٰهِஅல்லாஹ்வைوَرَسُوْلِهٖஇன்னும் அவனுடைய தூதரைوَمَاتُوْاஇன்னும் இறந்தனர்وَهُمْஅவர்களோفٰسِقُوْنَ‏பாவிகள்
வ லா துஸல்லி 'அலா அஹதிம் மின்ஹும் மாத அBபத(ன்)வ் வலா தகும் 'அலா கBப்ரிஹீ இன்னஹும் கFபரூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வ மாதூ வ ஹும் Fபாஸிகூன்
அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.
وَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَاَوْلَادُهُمْ ؕ اِنَّمَا یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّعَذِّبَهُمْ بِهَا فِی الدُّنْیَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ ۟
وَلَاஆச்சரியப்படுத்த வேண்டாம்تُعْجِبْكَஉம்மைاَمْوَالُهُمْசெல்வங்கள்/அவர்களுடையوَاَوْلَادُهُمْ‌ؕஇன்னும் பிள்ளைகள்/அவர்களுடையاِنَّمَا يُرِيْدُநாடுவதெல்லாம்اللّٰهُஅல்லாஹ்اَنْவேதனை செய்வதற்குيُّعَذِّبَهُمْஅவர்களைبِهَاஅவற்றின் மூலம்فِى الدُّنْيَاஉலகில்وَتَزْهَقَஇன்னும் பிரிவதற்கு, அழிவதற்குاَنْفُسُهُمْஅவர்களுடைய உயிர்கள்وَهُمْஅவர்கள் இருக்கكٰفِرُوْنَ‏நிராகரித்தவர்களாக
வ லா துஃஜிBப்க அம்வாலுஹும் வ அவ்லாதுஹும்; இன்னமா யுரீதுல் லாஹு அ(ன்)ய் யு'அத்திBபஹும் Bபிஹா Fபித் துன்யா வ தZஜ்ஹக அன்Fபுஸுஹும் வ ஹும் காFபிரூன்
இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்.
وَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ اَنْ اٰمِنُوْا بِاللّٰهِ وَجَاهِدُوْا مَعَ رَسُوْلِهِ اسْتَاْذَنَكَ اُولُوا الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوْا ذَرْنَا نَكُنْ مَّعَ الْقٰعِدِیْنَ ۟
وَاِذَاۤ اُنْزِلَتْஇறக்கப்பட்டால்سُوْرَةٌஓர் அத்தியாயம்اَنْஎன்றுاٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَجَاهِدُوْاஇன்னும் போரிடுங்கள்مَعَஉடன்رَسُوْلِهِஅவனுடயை தூதர்اسْتَـاْذَنَكَஅனுமதி கோரினார்(கள்) /உம்மிடம்اُولُوا الطَّوْلِசெல்வந்தர்கள்مِنْهُمْஅவர்களில்وَقَالُوْاஇன்னும் கூறுகின்றனர்ذَرْنَاவிட்டுவிடுவீராக/எங்களைنَكُنْஇருக்கிறோம்مَّعَஉடன்الْقٰعِدِيْنَ‏உட்கார்ந்தவர்கள்
வ இதா உன்Zஜிலத் ஸூரதுன் அன் ஆமினூ Bபில்லாஹி வ ஜாஹிதூ ம'அ ரஸூலிஹிஸ் தாதனக உலுத்தவ்லி மின்ஹும் வ காலூ தர்னா னகும் ம'அல்கா 'இதீன்
மேலும், அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுங்கள்” என்று ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் வசதிபடைத்த செல்வந்தர்கள்: “எங்களை விட்டு விடுங்கள்; நாங்கள் (போருக்கு வராமல்) தங்கியிருப்போருடன் இருந்து கொள்கின்றோம்” என்று உம்மிடம் அனுமதி கோருகின்றனர்.
رَضُوْا بِاَنْ یَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ وَطُبِعَ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَفْقَهُوْنَ ۟
رَضُوْاதிருப்தியடைந்தனர்بِاَنْ يَّكُوْنُوْاஅவர்கள் ஆகிவிடுவதைக் கொண்டுمَعَ الْخَوَالِفِபின்தங்கிய பெண்களுடன்وَطُبِعَமுத்திரையிடப்பட்டதுعَلٰىமீதுقُلُوْبِهِمْஅவர்களுடைய உள்ளங்கள்فَهُمْ لَا يَفْقَهُوْنَ‏ஆகவே அவர்கள்/சிந்தித்து விளங்கமாட்டார்கள்
ரளூ Bபி அய் யகூனூ ம'அல் கவாலிFபி வ துBபி'அ 'அலா குலூBபிஹிம் Fபஹும் லா யFப்கஹூன்
(போரில் கலந்துகொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) பின் தங்கியவர்களுடன் இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்; அவர்களுடைய இருதயங்கள்மீது முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே (இதன் இழிவை) அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
لٰكِنِ الرَّسُوْلُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ جٰهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ؕ وَاُولٰٓىِٕكَ لَهُمُ الْخَیْرٰتُ ؗ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
لٰـكِنِஎனினும்الرَّسُوْلُதூதர்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்مَعَهٗஅவருடன்جَاهَدُوْاபோரிட்டனர்بِاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களாலும்وَاَنْفُسِهِمْ‌ؕஇன்னும் தங்கள் உயிர்களாலும்وَاُولٰۤٮِٕكَ لَهُمُஅவர்களுக்குத்தான்الْخَيْـرٰتُ‌நன்மைகள்وَاُولٰۤٮِٕكَ هُمُஇன்னும் அவர்கள்தான்الْمُفْلِحُوْنَ‏வெற்றியாளர்கள்
லாகினிர் ரஸூலு வல் லதீன ஆமனூ ம'அஹூ ஜாஹதூ Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம்; வ உலா'இக லஹுமுல் கய்ராது வ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
எனினும், (அல்லாஹ்வின்) தூதரும், அவருடன் இருக்கும் முஃமின்களும், தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள்; அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு - இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
اَعَدَّ اللّٰهُ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟۠
اَعَدَّஏற்படுத்தினான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْஅவர்களுக்காகجَنّٰتٍசொர்க்கங்களைتَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَا‌ ؕஅவற்றில்ذٰ لِكَஅதுதான்الْـفَوْزُவெற்றிالْعَظِيْمُ‏மகத்தானது
அ'அத்தல் லாஹு லஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
அவர்களுக்கு அல்லாஹ் சுவனபதிகளைச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் எந்நாளும் இருப்பார்கள். இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும்.
وَجَآءَ الْمُعَذِّرُوْنَ مِنَ الْاَعْرَابِ لِیُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ الَّذِیْنَ كَذَبُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ سَیُصِیْبُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَ جَآءَஇன்னும் வந்தார்(கள்)الْمُعَذِّرُوْنَபுகல் கூறுபவர்கள்مِنَ الْاَعْرَابِகிராமவாசிகளில்لِيُؤْذَنَஅனுமதி அளிக்கப்படுவதற்குلَهُمْதங்களுக்குوَقَعَدَஇன்னும் உட்கார்ந்தார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَذَبُواபொய்யுரைத்தனர்اللّٰهَஅல்லாஹ்விடம்وَرَسُوْلَهٗ‌ ؕஇன்னும் அவனுடைய தூதர்سَيُصِيْبُஅடையும்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்مِنْهُمْஇவர்களில்عَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தும்
வ ஜா'அல் மு'அத் திரூன மினல் அஃராBபி லியு'தன லஹும் வ க'அதல் லதீன கதBபுல் லாஹ வ ரஸூலஹ்; ஸயுஸீBபுல் லதீன கFபரூ மின்ஹும் 'அதாBபுன் அலீம்
கிராம வாசிகளில் சிலர் உம்மிடம் புகல் சொல்லிக் கொண்டு, (போரில் கலந்து கொள்ளாமலிருக்கத்) தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென்று கேட்க வந்தனர்; இன்னும் அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கேட்காமலே வீடுகளில்) உட்கார்ந்து கொண்டார்கள் - அவர்களில் நிராகரித்தவர்களை வெகு விரைவில் நோவினை செய்யும் வேதனை வந்தடையும்.
لَیْسَ عَلَی الضُّعَفَآءِ وَلَا عَلَی الْمَرْضٰی وَلَا عَلَی الَّذِیْنَ لَا یَجِدُوْنَ مَا یُنْفِقُوْنَ حَرَجٌ اِذَا نَصَحُوْا لِلّٰهِ وَرَسُوْلِهٖ ؕ مَا عَلَی الْمُحْسِنِیْنَ مِنْ سَبِیْلٍ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟ۙ
لَـيْسَஇல்லைعَلَىமீதுالضُّعَفَآءِபலவீனர்கள்وَلَاஇன்னும் இல்லைعَلَىமீதுالْمَرْضٰىநோயாளிகள்وَلَاஇன்னும் இல்லைعَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்لَا يَجِدُوْنَபெறமாட்டார்கள்مَاஎதைيُنْفِقُوْنَசெலவழிப்பார்கள்حَرَجٌஒரு சிரமம், குற்றம்اِذَا نَصَحُوْاநன்மையை நாடினால்لِلّٰهِஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلِهٖ‌ؕஇன்னும் அவனுடைய தூதருக்குمَاஇல்லைعَلَىமீதுالْمُحْسِنِيْنَநல்லறம் புரிவோர்مِنْ سَبِيْلٍ‌ؕ وَاللّٰهُவழி ஏதும்/அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌۙ‏பெரும் கருணையாளன்
லய்ஸ 'அலள் ளு'ஆFபா'இ வலா 'அலல் மர்ளா வலா 'அலல் லதீன லா யஜிதூன மா யுன்Fபிகூன ஹரஜுன் இதா னஸஹூ லில்லாஹி வ ரஸூலிஹ்; மா 'அலல் முஹ்ஸினீன மின் ஸBபீல்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
பலஹீனர்களும், நோயாளிகளும், (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்ய வசதியில்லாதவர்களும், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உண்மையுடன் இருப்பார்களானால், (இத்தகைய) நல்லோர்கள் மீது எந்த குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; கிருபையுள்ளவன்.
وَّلَا عَلَی الَّذِیْنَ اِذَا مَاۤ اَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَاۤ اَجِدُ مَاۤ اَحْمِلُكُمْ عَلَیْهِ ۪ تَوَلَّوْا وَّاَعْیُنُهُمْ تَفِیْضُ مِنَ الدَّمْعِ حَزَنًا اَلَّا یَجِدُوْا مَا یُنْفِقُوْنَ ۟ؕ
وَّلَاஇன்னும் இல்லைعَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்اِذَا مَاۤ اَتَوْكَஅவர்கள் வந்தால் உம்மிடம்لِتَحْمِلَهُمْநீர் ஏற்றுவதற்காக/அவர்களைقُلْتَகூறினீர்لَاۤ اَجِدُநான்பெறவில்லையேمَاۤ اَحْمِلُكُمْஎதை/ஏற்றுவேன்/உங்களைعَلَيْهِஅதன் மீதுتَوَلَّوْاதிரும்பினர்وَّاَعْيُنُهُمْஅவர்களுடைய கண்கள்تَفِيْضُபொங்கி வழிகின்றனمِنَ الدَّمْعِகண்ணீரால்حَزَنًاகவலையினால்اَلَّا يَجِدُوْاபெறமாட்டார்கள் என்பதற்காகمَاஎதைيُنْفِقُوْنَؕ‏செலவழிப்பார்கள்
வ லா 'அலல் லதீன இதா மா அதவ்க லிதஹ்மிலஹும் குல்த லா அஜிது மா அஹ்மிலுகும் 'அலய்ஹி தவல்லவ் வ அஃயுனுஹும் தFபீளு மினத்தம்'இ ஹZஜனன் அல்லா யஜிதூ மா யுன்Fபிகூன்
போருக்குச் செல்லத் தங்களுக்கு வாகனம் தேவைப்பட்டு உம்மிடம் வந்தவர்களிடம் “உங்களை நான் ஏற்றி விடக்கூடிய வாகனங்கள் என்னிடம் இல்லையே” என்று நீர் கூறிய போது, (போருக்காகத்) தாங்களே செலவு செய்து கொள்ள வசதியில்லையே என்று எண்ணித் துக்கத்தால் தங்களின் கண்களில் கண்ணீர் வடித்தவர்களாகத் திரும்பிச் சென்று விட்டார்களே அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாதது பற்றி) எவ்வித குற்றமும் இல்லை.
اِنَّمَا السَّبِیْلُ عَلَی الَّذِیْنَ یَسْتَاْذِنُوْنَكَ وَهُمْ اَغْنِیَآءُ ۚ رَضُوْا بِاَنْ یَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ ۙ وَطَبَعَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
اِنَّمَا السَّبِيْلُவழியெல்லாம்عَلَىமீதுதான்الَّذِيْنَஎவர்கள்يَسْتَاْذِنُوْنَكَஅனுமதி கோருகின்றனர்/உம்மிடம்وَهُمْஅவர்கள் இருக்கاَغْنِيَآءُ‌ۚசெல்வந்தர்களாகرَضُوْاதிருப்தியடைந்தனர்بِاَنْ يَّكُوْنُوْاஅவர்கள் ஆகுவது கொண்டுمَعَஉடன்الْخَـوَالِفِۙபின்தங்கிய பெண்கள்وَطَبَعَஇன்னும் முத்திரையிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلٰىமீதுقُلُوْبِهِمْஉள்ளங்கள்/அவர்களுடையفَهُمْஆகவே, அவர்கள்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
இன்னமஸ் ஸBபீலு 'அலல் லதீன யஸ்த'தினூனக வ ஹும் அக்னியா'; ரளூ Bபிஅ(ன்)ய்-யகூனூ ம'அல் கவாலிFபி வ தBப'அல் லாஹு 'அலா குலூBபிஹிம் Fபஹும் லா யஃலமூன்
குற்றம் பிடிக்கப்பட வேண்டியவர்கள் (யாரெனில், தாம்) செல்வந்தர்களாக இருந்தும், (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதிகோரி, பின் தங்கியிருப்பவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களே அவர்கள் தாம்; அவர்களுடைய இருதயங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் - ஆகவே அவர்கள் (இதன் இழிவை) அறிய மாட்டார்கள்.
یَعْتَذِرُوْنَ اِلَیْكُمْ اِذَا رَجَعْتُمْ اِلَیْهِمْ ؕ قُلْ لَّا تَعْتَذِرُوْا لَنْ نُّؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّاَنَا اللّٰهُ مِنْ اَخْبَارِكُمْ ؕ وَسَیَرَی اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰی عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
يَعْتَذِرُوْنَபுகல் கூறுவார்கள்اِلَيْكُمْஉங்களிடம்اِذَا رَجَعْتُمْநீங்கள் திரும்பினால்اِلَيْهِمْ‌ ؕஅவர்களிடம்قُلْகூறுவீராகلَّا تَعْتَذِرُوْاபுகல் கூறாதீர்கள்لَنْ نُّـؤْمِنَநாங்கள் நம்பமாட்டோம்لَـكُمْஉங்களைقَدْ نَـبَّاَஅறிவித்து விட்டான்نَاஎங்களுக்குاللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்து (சில)اَخْبَارِكُمْ‌ ؕஉங்கள் செய்திகள்وَ سَيَرَىஇன்னும் பார்ப்பான்اللّٰهُஅல்லாஹ்عَمَلَـكُمْஉங்கள் செயலைوَرَسُوْلُهٗஇன்னும் அவனுடைய தூதர்ثُمَّபிறகுتُرَدُّوْنَதிருப்பப்படுவீர்கள்اِلٰى عٰلِمِஅறிந்தவனிடம்الْغَيْبِமறைவைوَالشَّهَادَةِஇன்னும் வெளிப்படைفَيُنَبِّئُكُمْஅறிவிப்பான்/உங்களுக்குبِمَاஎதைكُنْتُمْஇருந்தீர்கள்تَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
யஃததிரூன இலய்கும் இதா ரஜஃதும் இலய்ஹிம்; குல் லா தஃததிரூ லன் னு'மின லகும் கத் னBப்Bப அன்னல் லாஹு மின் அக்Bபாரிகும்; வ ஸ யரல் லாஹு 'அமலகும் வ ரஸூலுஹூ தும்ம துரத்தூன இலா 'ஆலிமில் கய்Bபி வஷ்ஷஹாததி Fப யுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
(முஃமின்களே! போரிலிருந்து வெற்றியோடு) நீங்கள் அவர்களிடம் திரும்பிய போது, (போருக்கு வராமலிருந்தது பற்றி) உங்களிடம் வந்து புகல் கூறுகின்றனர்; “புகல் கூறாதீர்கள்; நிச்சயமாக நாங்கள் உங்களை நம்ப மாட்டோம்; நிச்சயமாக உங்களைப் பற்றிய செய்திகளை எங்களுக்கு அல்லாஹ் (முன்னமேயே) அறிவித்து விட்டான்; சீக்கிரமே அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உங்கள் செயல்களைக் கவனிப்பார்கள்; மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறியும் அவனிடத்தில் பின்னர் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்; அப்போது அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.
سَیَحْلِفُوْنَ بِاللّٰهِ لَكُمْ اِذَا انْقَلَبْتُمْ اِلَیْهِمْ لِتُعْرِضُوْا عَنْهُمْ ؕ فَاَعْرِضُوْا عَنْهُمْ ؕ اِنَّهُمْ رِجْسٌ ؗ وَّمَاْوٰىهُمْ جَهَنَّمُ ۚ جَزَآءً بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
سَيَحْلِفُوْنَசத்தியமிடுவார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுلَـكُمْஉங்களிடம்اِذَا انْقَلَبْتُمْநீங்கள் திரும்பினால்اِلَيْهِمْஅவர்களிடம்لِتُعْرِضُوْاநீங்கள் புறக்கணித்து விடுவதற்காகعَنْهُمْ‌ؕஅவர்களைفَاَعْرِضُوْاஆகவே புறக்கணித்து விடுங்கள்عَنْهُمْ‌ؕஅவர்களைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்رِجْسٌ‌அசுத்தமானவர்கள்وَّمَاْوٰٮهُمْஇன்னும் தங்குமிடம்/அவர்களுடையجَهَـنَّمُ‌ۚநரகம்தான்جَزَآءًۢகூலியாகبِمَاஎதற்குكَانُوْاஇருந்தனர்يَكْسِبُوْنَ‏செய்கின்றனர்
ஸ யஹ்லிFபூன Bபில்லாஹி லகும் இதன்கலBப்தும் இலய்ஹிம் லிதுஃரிளூ 'அன்ஹும் Fப அஃரிளூ 'அன்ஹும் இன்னஹும் ரிஜ்ஸு(ன்)வ் வ ம'வாஹும் ஜஹன்னமு ஜZஜா'அன் Bபி மாகானூ யக்ஸிBபூன்
(போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்பி வருங்கால், நீங்கள் அவர்களைக்(குற்றம் பிடிக்காது) புறக்கணித்து விட்டுவிட வேண்டுமென்று அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள்; ஆகவே நீங்களும் அவர்களைப் புறக்கணித்துவிட்டு விடுங்கள் - அவர்கள் நிச்சயமாக அசுத்தமானவர்கள்; அவர்களுக்குப் புகலிடம் நரகமே; அதுவே அவர்களுக்கு தீவினைக்குரிய (சரியான) கூலியாகும்.
یَحْلِفُوْنَ لَكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ ۚ فَاِنْ تَرْضَوْا عَنْهُمْ فَاِنَّ اللّٰهَ لَا یَرْضٰی عَنِ الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟
يَحْلِفُوْنَசத்தியமிடுகின்றனர்لَـكُمْஉங்களிடம்لِتَرْضَوْاநீங்கள் திருப்தியடைவதற்காகعَنْهُمْ‌ۚஅவர்களைப் பற்றிفَاِنْ تَرْضَوْاநீங்கள் திருப்தியடைந்தாலும்عَنْهُمْஅவர்களைப் பற்றிفَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَرْضٰىதிருப்தியடைய மாட்டான்عَنِ الْقَوْمِமக்களைப் பற்றிالْفٰسِقِيْنَ‏பாவிகளான
யஹ்லிFபூன லகும் லிதர்ளவ் 'அன்ஹும் Fப இன் தர்ளவ் 'அன்ஹும் Fப இன்னல் லாஹ லா யர்ளா 'அனில் கவ்மில் Fபாஸிகீன்
அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடையும் பொருட்டு அவர்கள் உங்களிடம் இவ்வாறு சத்தியம் செய்கிறார்கள்; நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும் மெய்யாக அல்லாஹ் பாவிகளான (இக்) கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்.
اَلْاَعْرَابُ اَشَدُّ كُفْرًا وَّنِفَاقًا وَّاَجْدَرُ اَلَّا یَعْلَمُوْا حُدُوْدَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
اَلْاَعْرَابُகிராம அரபிகள்اَشَدُّமிகக் கடுமையானவர்(கள்)كُفْرًاநிராகரிப்பில்وَّ نِفَاقًاஇன்னும் நயவஞ்சகத்தில்وَّاَجْدَرُஇன்னும் மிகத் தகுதியானவர்(கள்)اَلَّا يَعْلَمُوْاஅவர்கள் அறியாமல் இருக்கحُدُوْدَசட்டங்களைمَاۤஎதுاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்عَلٰىமீதுرَسُوْلِهٖ‌ؕதன் தூதர்وَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
அல் அஃராBபு அஷத்து குFப்ர(ன்)வ் வ னிFபாக(ன்)வ் வ அஜ்தரு அல்லா யஃலமூ ஹுதூத மா அன்Zஜலல் லாஹு 'அலா ரஸூலிஹ்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
காட்டரபிகள் குஃப்ரிலும் (நிராகரிப்பிலும்) நயவஞ்சகத்திலும் மிகவும் கொடியவர்கள்; அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது அருளியிருக்கும் வேதத்தின் வரம்புகளை அவர்கள் அறியாதிருக்கவே தகுதியானவர்கள். இன்னும் அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும்; ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
وَمِنَ الْاَعْرَابِ مَنْ یَّتَّخِذُ مَا یُنْفِقُ مَغْرَمًا وَّیَتَرَبَّصُ بِكُمُ الدَّوَآىِٕرَ ؕ عَلَیْهِمْ دَآىِٕرَةُ السَّوْءِ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
وَمِنَஇன்னும் இருந்துالْاَعْرَابِகிராம அரபிகள்مَنْஎவர்يَّتَّخِذُஎடுத்துக் கொள்வார்مَاஎதைيُنْفِقُதர்மம் செய்கிறார்مَغْرَمًاநஷ்டமாகوَّيَتَرَبَّصُஇன்னும் எதிர்பார்க்கின்றனர்بِكُمُஉங்களுக்குالدَّوَآٮِٕرَ‌ؕசுழற்சிகளைعَلَيْهِمْஅவர்கள் மீதுதான்دَآٮِٕرَةُசுழற்சிالسَّوْءِ‌ؕவேதனையின்وَاللّٰهُஅல்லாஹ்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்عَلِيْمٌ‏நன்கறிபவன்
வ மினல் அஃராBபி மய் யத்தகிது மா யுன்Fபிகு மக்ரம(ன்)வ் வ யதரBப்Bபஸு Bபிகுமுத் தவா'இர்; அலய்ஹிம் தா'இரதுஸ் ஸவ்'; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
கிராமப்புறத்தவர்களில் சிலர் (தர்மத்திற்காகச்) செலவு செய்வதை நஷ்டமாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள்; நீங்கள் (காலச் சுழலில் சிக்கித்) துன்பம் அடைய வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள் - ஆனால் அவர்கள் மீதுதான் கெட்டகாலம் சுழன்று கொண்டு இருக்கிறது - இன்னும், அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும்(யாவற்றையும்) நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
وَمِنَ الْاَعْرَابِ مَنْ یُّؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَیَتَّخِذُ مَا یُنْفِقُ قُرُبٰتٍ عِنْدَ اللّٰهِ وَصَلَوٰتِ الرَّسُوْلِ ؕ اَلَاۤ اِنَّهَا قُرْبَةٌ لَّهُمْ ؕ سَیُدْخِلُهُمُ اللّٰهُ فِیْ رَحْمَتِهٖ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
وَمِنَஇன்னும் இருந்துالْاَعْرَابِகிராம அரபிகளில்مَنْஎவர்يُّؤْمِنُநம்பிக்கைகொள்கிறார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِஇன்னும் இறுதி நாளைوَيَتَّخِذُஇன்னும் எடுத்துக் கொள்கிறார்கள்مَاஎதைيُنْفِقُதர்மம் புரிகிறார்(கள்)قُرُبٰتٍவணக்கங்களாகعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்وَصَلَوٰتِஇன்னும் பிரார்த்தனைகளாகالرَّسُوْلِ‌ؕதூதரின்اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّهَاநிச்சயமாக அதுقُرْبَةٌவணக்கம்لَّهُمْ‌ؕஅவர்களுக்குسَيُدْخِلُهُمُநுழைப்பான்/அவர்களைاللّٰهُஅல்லாஹ்فِىْ رَحْمَتِهٖ‌ ؕதன் கருணையில்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
வ மினல் அஃராBபி மய் யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ யத்தகிது மா யுன்Fபிகு குருBபாதின் 'இன்தல் லாஹி வ ஸலவாதிர் ரஸூல்; 'அலா இன்னஹா குர்Bபதுல் லஹும்; ஸயுத்கிலு ஹுமுல் லாஹு Fபீ ரஹ்மதிஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறை தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் ரஹ்மத்தில் (பேரருளில்) புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِیْنَ وَالْاَنْصَارِ وَالَّذِیْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
وَالسّٰبِقُوْنَமுந்தியவர்கள்الْاَوَّلُوْنَமுதலாமவர்கள்مِنَ الْمُهٰجِرِيْنَமுஹாஜிர்களில்وَالْاَنْصَارِஇன்னும் அன்ஸாரிகள்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اتَّبَعُوْபின்பற்றினார்கள்هُمْஇவர்களைبِاِحْسَانٍ ۙநல்லறத்தில்رَّضِىَதிருப்தியடைந்தான்اللّٰهُஅல்லாஹ்عَنْهُمْஇவர்களைப் பற்றிوَرَضُوْاஇன்னும் திருப்தியடைந்தனர்عَنْهُஅவனைப் பற்றிوَاَعَدَّஇன்னும் ஏற்படுத்தினான்لَهُمْஇவர்களுக்குجَنّٰتٍசொர்க்கங்களைتَجْرِىْஓடும்تَحْتَهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَاۤஅவற்றில்اَبَدًا‌ ؕஎப்போதும்ذٰ لِكَஇதுالْـفَوْزُவெற்றிالْعَظِيْمُ‏மகத்தானது
வஸ் ஸாBபிகூனல் அவ்வலூன மினல் முஹாஜிரீன வல் அன்ஸாரி வல்லதீனத் தBப'ஊ ஹும் Bபி இஹ்ஸானிர் ரளியல் லாஹு 'அன்ஹும் வ ரளூ 'அன்ஹு வ அ'அத்த லஹும் ஜன்னாதின் தஜ்ரீ தஹ்தஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
وَمِمَّنْ حَوْلَكُمْ مِّنَ الْاَعْرَابِ مُنٰفِقُوْنَ ۛؕ وَمِنْ اَهْلِ الْمَدِیْنَةِ ؔۛ۫ مَرَدُوْا عَلَی النِّفَاقِ ۫ لَا تَعْلَمُهُمْ ؕ نَحْنُ نَعْلَمُهُمْ ؕ سَنُعَذِّبُهُمْ مَّرَّتَیْنِ ثُمَّ یُرَدُّوْنَ اِلٰی عَذَابٍ عَظِیْمٍ ۟ۚ
وَمِمَّنْஇன்னும் எவர்களில்حَوْلَــكُمْஉங்களைச் சூழவுள்ளمِّنَ الْاَعْرَابِகிராம அரபிகளில்مُنٰفِقُوْنَ‌‌ ۛؕநயவஞ்சகர்கள்وَஇன்னும்مِنْ اَهْلِவாசிகளில்الْمَدِيْنَةِ‌ ‌மதீனா‌ؔۛمَرَدُوْاஅவர்கள் ஊறி விட்டனர்عَلَىமீதுالنِّفَاقِநயவஞ்சகம்لَا تَعْلَمُهُمْ ‌ؕஅறியமாட்டீர்/அவர்களைنَحْنُநாம்نَـعْلَمُهُمْ‌அறிவோம்ؕஅவர்களைسَنُعَذِّبُهُمْவேதனை செய்வோம்/அவர்களைمَّرَّتَيْنِஇருமுறைثُمَّபிறகுيُرَدُّوْنَதிருப்பப்படுவார்கள்اِلٰىபக்கம்عَذَابٍவேதனையின்عَظِيْمٍ‌ ۚ‏பெரிய
வ மிம்மன்ன் ஹவ்லகும் மினல் அஃராBபி முனாFபிகூன வ மின் அஹ்லில் மதீனதி மரதூ 'அலன் னிFபாக், லா தஃலமுஹும் னஹ்னு னஃலமுஹும்; ஸனு'அத்திBபுஹும் மர்ரதய்னி தும்ம யுரத்தூன இலா 'அதாBபின் 'அளீம்
உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்; இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலைபெற்றுவிட்டவர்களும் இருக்கிறார்கள் - (நபியே!) அவர்களை நீர் அறிய மாட்டீர், நாம் அவர்களை நன்கறிவோம்; வெகுசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் - பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்.
وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًا وَّاٰخَرَ سَیِّئًا ؕ عَسَی اللّٰهُ اَنْ یَّتُوْبَ عَلَیْهِمْ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَاٰخَرُوْنَஇன்னும் மற்றவர்கள் (சிலர்)اعْتَرَفُوْاஒப்புக் கொண்டனர்بِذُنُوْبِهِمْதங்கள் குற்றங்களைخَلَطُوْاகலந்தனர்عَمَلًاசெயலைصَالِحًـاநல்லதுوَّاٰخَرَஇன்னும் மற்றதைسَيِّئًا ؕகெட்டதுعَسَى اللّٰهُ اَنْ يَّتُوْبَகூடும்/அல்லாஹ்/மன்னிக்கعَلَيْهِمْ‌ ؕஅவர்களைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
வ ஆகரூ னஃதரFபூ BபிதுனூBபிஹிம் கலதூ 'அமலன் ஸாலிஹ(ன்)வ் வ ஆகர ஸய்யி'அன் 'அஸல் லாஹு 'அ(ன்)ய் யதூBப 'அலய்ஹிம்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّیْهِمْ بِهَا وَصَلِّ عَلَیْهِمْ ؕ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
خُذْஎடுப்பீராகمِنْஇருந்துاَمْوَالِهِمْசெல்வங்கள்/அவர்களுடையصَدَقَةًதர்மத்தைتُطَهِّرُநீர் சுத்தப்படுத்துவீர்هُمْஅவர்களைوَتُزَكِّيْهِمْ بِهَاஇன்னும் உயர்த்துவீர்/அவர்களை/அதன் மூலம்وَصَلِّஇன்னும் பிரார்த்திப்பீராகعَلَيْهِمْ‌ؕஅவர்களுக்குاِنَّ صَلٰوتَكَநிச்சயமாக உம் பிரார்த்தனைسَكَنٌநிம்மதி தரக்கூடியதுلَّهُمْ‌ؕஅவர்களுக்குوَاللّٰهُஅல்லாஹ்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
குத் மின் அம்வாலிஹிம் ஸதகதன் துதஹ்ஹிருஹும் வ துZஜக்கீஹிம் Bபிஹா வ ஸல்லி 'அலய்ஹிம் இன்ன ஸலாதக ஸகனுல் லஹும்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
اَلَمْ یَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ هُوَ یَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَیَاْخُذُ الصَّدَقٰتِ وَاَنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
اَلَمْ يَعْلَمُوْۤاஅவர்கள் அறியவில்லையா?اَنَّ اللّٰهَ هُوَநிச்சயமாக அல்லாஹ்தான்يَقْبَلُஏற்கிறான்التَّوْبَةَபிழை பொறுப்புعَنْ عِبَادِهٖதன் அடியார்களிடமிருந்துوَيَاْخُذُஇன்னும் எடுக்கிறான்الصَّدَقٰتِதர்மங்களைوَ اَنَّ اللّٰهَ هُوَநிச்சயமாக அல்லாஹ்தான்التَّوَّابُமகா அங்கீகரிப்பவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
அலம் யஃலமூ அன்னல் லாஹ ஹுவ யக்Bபலுத் தவ்Bபத 'அன் இBபாதிஹீ வ ய'குதுஸ் ஸதகாதி வ அன்னல் லாஹ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்புக் கோருதலை - ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன்.
وَقُلِ اعْمَلُوْا فَسَیَرَی اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ وَالْمُؤْمِنُوْنَ ؕ وَسَتُرَدُّوْنَ اِلٰی عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۚ
وَقُلِகூறுவீராகاعْمَلُوْاசெய்யுங்கள்فَسَيَرَىபார்க்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَمَلَكُمْஉங்கள் செயலைوَرَسُوْلُهٗஇன்னும் அவனுடைய தூதர்وَالْمُؤْمِنُوْنَ‌ؕஇன்னும் நம்பிக்கையாளர்கள்وَسَتُرَدُّوْنَஇன்னும் திருப்பப்படுவீர்கள்اِلٰىபக்கம்عٰلِمِஅறிந்தவன்الْغَيْبِமறைவைوَالشَّهَادَةِஇன்னும் வெளிப்படையைفَيُنَبِّئُكُمْஅறிவிப்பான்/உங்களுக்குبِمَاஎதைكُنْتُمْஇருந்தீர்கள்تَعْمَلُوْنَ‌ۚ‏செய்கிறீர்கள்
வ குல் இஃமலூ Fபஸயரல் லாஹு 'அமலகும் வ ரஸூலுஹூ வல் மு'மினூன்; வ ஸதுரத்தூன இலா 'ஆலிமில் கய்Bபி வஷ்ஷஹாததி Fப யுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
(நபியே! அவர்களிடம்:) “நற் செயல்களைச் செய்யுங்கள்; திடனாக உங்கள் செயல்களை அல்லாஹ்வும், அவன் தூதரும், முஃமின்களும் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள்; மேலும், இரகசியங்களையும், பரகசிங்களையும் அறியும் இறைவனிடத்தில் நீங்கள் மீட்டப்படுவீர்கள் - அப்பொழுது, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறும்.
وَاٰخَرُوْنَ مُرْجَوْنَ لِاَمْرِ اللّٰهِ اِمَّا یُعَذِّبُهُمْ وَاِمَّا یَتُوْبُ عَلَیْهِمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
وَاٰخَرُوْنَஇன்னும் மற்றவர்கள்مُرْجَوْنَதள்ளிவைக்கப் பட்டவர்கள்لِاَمْرِஉத்தரவிற்காகاللّٰهِஅல்லாஹ்வின்اِمَّاஒன்றுيُعَذِّبُهُمْதண்டிப்பான்/அவர்களைوَاِمَّاஒன்றுيَتُوْبُமன்னிப்பான்عَلَيْهِمْ‌ؕஅவர்களைوَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ‏மகா ஞானவான்
வ ஆகரூன முர்ஜவ்ன லி அம்ரில் லாஹி இம்மா யு'அத்திBபுஹும் வ இம்மா யதூBபு 'அலய்ஹிம்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பார்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
وَالَّذِیْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِیْقًا بَیْنَ الْمُؤْمِنِیْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ ؕ وَلَیَحْلِفُنَّ اِنْ اَرَدْنَاۤ اِلَّا الْحُسْنٰی ؕ وَاللّٰهُ یَشْهَدُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اتَّخَذُوْاஎடுத்துக் கொண்டனர்مَسْجِدًاஒரு மஸ்ஜிதைضِرَارًاகெடுதல் செய்வதற்காகوَّكُفْرًاஇன்னும் நிராகரிப்பிற்காகوَّتَفْرِيْقًۢاஇன்னும் பிரிப்பதற்காகبَيْنَமத்தியில்الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்கள்وَاِرْصَادًاபதுங்குமிடமாகவும்لِّمَنْஎவர்களுக்கானحَارَبَபோரிட்டார்(கள்)اللّٰهَஅல்லாஹ்விடம்وَرَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதர்مِنْ قَبْلُ‌ؕமுன்னர்وَلَيَحْلِفُنَّஇன்னும் நிச்சயமாக சத்தியம் செய்கின்றனர்اِنْ اَرَدْنَاۤநாங்கள் நாடவில்லைاِلَّاதவிரالْحُسْنٰى‌ؕநன்மையைوَاللّٰهُஅல்லாஹ்يَشْهَدُசாட்சி கூறுகிறான்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَـكٰذِبُوْنَ‏பொய்யர்கள்தான்
வல்லதீனத் தகதூ மஸ்ஜிதன் ளிரார(ன்)வ் வ குFப்ர(ன்)வ் வ தFப்ரீகன் Bபய்னல் மு'மினீன வ இர்ஸாதல் லிமன் ஹாரBபல் லாஹ வ ரஸூலஹூ மின் கBப்ல்; வ ல யஹ்லிFபுன்ன இன் அரத்னா இல்லல் ஹுஸ்னா வல்லாஹு யஷ் ஹது இன்னஹும் லகாதிBபூன்
இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
لَا تَقُمْ فِیْهِ اَبَدًا ؕ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَی التَّقْوٰی مِنْ اَوَّلِ یَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِیْهِ ؕ فِیْهِ رِجَالٌ یُّحِبُّوْنَ اَنْ یَّتَطَهَّرُوْا ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُطَّهِّرِیْنَ ۟
لَا تَقُمْநின்று வணங்காதீர்فِيْهِஅதில்اَبَدًا ؕஒரு போதும்لَمَسْجِدٌமஸ்ஜிதுதான்اُسِّسَஅடித்தளமிடப்பட்டதுعَلَى التَّقْوٰىஇறையச்சத்தின் மீதுمِنْஇருந்துاَوَّلِமுதல்يَوْمٍநாள்اَحَقُّமிகத் தகுதியானதுاَنْ تَقُوْمَநீர் நின்று வணங்குவதற்குفِيْهِ‌ؕஅதில்فِيْهِஅதில்رِجَالٌஆண்கள்يُّحِبُّوْنَவிரும்புகின்றர்اَنْ يَّتَطَهَّرُوْا ؕதாங்கள் அதிகம் பரிசுத்தமாகுவதைوَاللّٰهُஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُطَّهِّرِيْنَ‏மிக பரிசுத்தமானவர்களை
லா தகும் Fபீஹி அBபதா; லமஸ்ஜிதுன் உஸ்ஸிஸ 'அலத் தக்வா மின் அவ்வலி யவ்மின் அஹக்கு 'அன் தகூம Fபீஹ்; Fபீஹி ரிஜாலு(ன்)ய் யுஹிBப்Bபூன 'அ(ன்)ய் யத தஹ் ஹரூ; வல்லாஹு யுஹிBப்Bபுல் முத்தஹ் ஹிரீன்
ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
اَفَمَنْ اَسَّسَ بُنْیَانَهٗ عَلٰی تَقْوٰی مِنَ اللّٰهِ وَرِضْوَانٍ خَیْرٌ اَمْ مَّنْ اَسَّسَ بُنْیَانَهٗ عَلٰی شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهٖ فِیْ نَارِ جَهَنَّمَ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
اَفَمَنْஎவர்?اَسَّسَஅடித்தளமிட்டார்بُنْيَانَهٗதான் கட்டுவதைعَلٰىமீதுتَقْوٰىஅச்சம்مِنَ اللّٰهِஅல்லாஹ்வின்وَஇன்னும்رِضْوَانٍபொருத்தம்خَيْرٌசிறந்ததுاَمْஅல்லதுمَّنْஎவர்اَسَّسَஅடித்தளமிட்டார்بُنْيَانَهٗதான் கட்டுவதைعَلٰىமீதுشَفَاஓரம்جُرُفٍஓடைهَارٍசரிந்து விடக்கூடியதுفَانْهَارَஅது சரிந்து விட்டதுبِهٖஅவனுடன்فِىْ نَارِ جَهَـنَّمَ‌ؕநெருப்பில்/நரகம்وَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்கள்
அFபமன் அஸ்ஸஸ Bபுன்யானஹூ 'அலா தக்வா மினல் லாஹி வ ரிள்வானின் கய்ருன் அம் மன் அஸ்ஸஸ Bபுன்யானஹூ 'அலா ஷFபா ஜுருFபின் ஹாரின் Fபன்ஹார Bபிஹீ Fபீ னாரி ஜஹன்னம்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.
لَا یَزَالُ بُنْیَانُهُمُ الَّذِیْ بَنَوْا رِیْبَةً فِیْ قُلُوْبِهِمْ اِلَّاۤ اَنْ تَقَطَّعَ قُلُوْبُهُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟۠
لَا يَزَالُநீடித்திருக்கும்بُنْيَانُهُمُஅவர்களுடைய கட்டடம்الَّذِىْஎதுبَنَوْاஅவர்கள் கட்டினர்رِيْبَةًசந்தேகமாகவேفِىْஉள்ளங்களில்قُلُوْبِهِمْஅவர்களுடையاِلَّاۤதவிரاَنْ تَقَطَّعَதுண்டு துண்டானால்قُلُوْبُهُمْ‌ؕ وَاللّٰهُஉள்ளங்கள்/அவர்களுடைய/அல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ‏மகா ஞானவான்
லா யZஜாலு Bபுன்யானு ஹுமுல் லதீ Bபனவ் ரீBபதன் Fபீ குலூBபிஹிம் இல்லா அன் தகத்த'அ குலூBபுஹும்; வல் லாஹு 'அலீமுன் ஹகீம்
அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.  
اِنَّ اللّٰهَ اشْتَرٰی مِنَ الْمُؤْمِنِیْنَ اَنْفُسَهُمْ وَاَمْوَالَهُمْ بِاَنَّ لَهُمُ الْجَنَّةَ ؕ یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَیَقْتُلُوْنَ وَیُقْتَلُوْنَ ۫ وَعْدًا عَلَیْهِ حَقًّا فِی التَّوْرٰىةِ وَالْاِنْجِیْلِ وَالْقُرْاٰنِ ؕ وَمَنْ اَوْفٰی بِعَهْدِهٖ مِنَ اللّٰهِ فَاسْتَبْشِرُوْا بِبَیْعِكُمُ الَّذِیْ بَایَعْتُمْ بِهٖ ؕ وَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்اشْتَرٰىவிலைக்கு வாங்கினான்مِنَஇருந்துالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்கள்اَنْفُسَهُمْஉயிர்களை/அவர்களுடையوَاَمْوَالَهُمْஇன்னும் செல்வங்களை/அவர்களுடையبِاَنَّபகரமாக/நிச்சயம்لَهُمُஅவர்களுக்குالْجَــنَّةَ‌ ؕசொர்க்கம்يُقَاتِلُوْنَபோர் புரிவார்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்فَيَقْتُلُوْنَகொல்வார்கள்وَ يُقْتَلُوْنَ‌இன்னும் கொல்லப்படுவார்கள்وَعْدًاவாக்குறுதியாகعَلَيْهِதன் மீதுحَقًّاகடமையானفِى التَّوْرٰٮةِதவ்றாத்தில்وَالْاِنْجِيْلِஇன்னும் இன்ஜீல்وَالْقُرْاٰنِ‌ ؕஇன்னும் குர்ஆன்وَمَنْயார்اَوْفٰىஅதிகம் நிறைவேற்றுபவர்بِعَهْدِهٖதன் வாக்கைمِنَ اللّٰهِஅல்லாஹ்வை விடفَاسْتَـبْشِرُوْاஆகவேமகிழ்ச்சியுறுங்கள்بِبَيْعِكُمُவிற்பனையைக் கொண்டு/உங்கள்الَّذِىْஎதுبَايَعْتُمْவிற்றுக் கொண்டீர்கள்بِهٖ‌ ؕஅதற்குப் பகரமாகوَذٰ لِكَ هُوَஇதுதான்الْفَوْزُவெற்றிالْعَظِيْمُ‏மகத்தானது
இன்னல் லாஹஷ் தரா மினல் மு'மினீன அன்Fபுஸஹும் வ அம்வாலஹும் Bபி அன்ன லஹுமுல் ஜன்னஹ்; யுகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி Fப யக்துலூன வ யுக்தலூன வஃதன் 'அலய்ஹி ஹக்கன் Fபித் தவ்ராதி வல் இன்ஜீலி வல் குர்'ஆன்; வ மன் அவ்Fபா Bபி'அஹ்திஹீ மினல் லாஹ்; Fபஸ்தBப்ஷிரூ Bபி Bபய்'இகுமுல் லதீ Bபாயஃதும் Bபிஹ்; வ தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
اَلتَّآىِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السَّآىِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰهِ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
اَلتَّاۤٮِٕبُوْنَதிருந்தியவர்கள்الْعٰبِدُوْنَவணக்கசாலிகள்الْحٰمِدُوْنَபுகழ்பவர்கள்السّاۤٮِٕحُوْنَநோன்புநோற்பவர்கள்الرّٰكِعُوْنَகுனிபவர்கள்السّٰجِدُوْنَசிரம் பணிபவர்கள்الْاٰمِرُوْنَஏவக்கூடியவர்கள்بِالْمَعْرُوْفِநன்மையைوَالنَّاهُوْنَஇன்னும் தடுக்கக்கூடியவர்கள்عَنِ الْمُنْكَرِபாவத்தை விட்டுوَالْحٰــفِظُوْنَஇன்னும் பாதுகாப்பவர்கள்لِحُدُوْدِவரம்புகளை, சட்டங்களைاللّٰه ؕஅல்லாஹ்வுடையوَبَشِّرِஇன்னும் நற்செய்தி கூறுவீராகالْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
அத் தா'இBபூனல் 'ஆBபிதூனல் ஹாமிதூனஸ் ஸா'இஹூனர் ராகி'ஊனஸ் ஸாஜிதூனல் ஆமிரூன Bபில்மஃரூFபி வன்னாஹூன 'அனில் முன்கரி வல்ஹாFபிளூன லிஹுதூதில் லாஹ்; வ Bபஷ்ஷிரில் மு'மினீன்
மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
مَا كَانَ لِلنَّبِیِّ وَالَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ یَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِیْنَ وَلَوْ كَانُوْۤا اُولِیْ قُرْبٰی مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟
مَا كَانَதகுந்ததல்லلِلنَّبِىِّநபிக்குوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاۤநம்பிக்கை கொண்டனர்اَنْ يَّسْتَغْفِرُوْاஅவர்கள் மன்னிப்புக் கோருவதுلِلْمُشْرِكِيْنَஇணைவைப்பவர்களுக்குوَ لَوْ كَانُوْۤاஅவர்கள் இருந்தாலும்اُولِىْ قُرْبٰىஉறவினர்களாகمِنْۢ بَعْدِபின்னர்مَا تَبَيَّنَதெளிவாகியلَهُمْதங்களுக்குاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اَصْحٰبُவாசிகள்الْجَحِيْمِ‏நரகம்
மா கான லின் னBபிய்யி வல்லதீன ஆமனூ 'அ(ன்)ய் யஸ்தக்Fபிரூ லில் முஷ்ரிகீன வ லவ் கானூ உலீ குர்Bபா மின் Bபஃதி மா தBபியன லஹும் அன்னஹும் அஸ்'ஹாBபுல் ஜஹீம்
முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.
وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِیَّاهُ ۚ فَلَمَّا تَبَیَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ ؕ اِنَّ اِبْرٰهِیْمَ لَاَوَّاهٌ حَلِیْمٌ ۟
وَمَا كَانَஇருக்கவில்லைاسْتِغْفَارُமன்னிப்புக் கோரியதுاِبْرٰهِيْمَஇப்றாஹீம்لِاَبِيْهِதன் தந்தைக்குاِلَّاதவிரعَنْ مَّوْعِدَةٍஒரு வாக்குறுதிக்காகوَّعَدَهَاۤஅதை வாக்களித்தார்اِيَّاهُ‌ ۚஅவருக்குفَلَمَّا تَبَيَّنَதெளிவான போதுلَهٗۤஅவருக்குاَنَّهٗநிச்சயமாக அவர்عَدُوٌّஓர் எதிரிلِّلّٰهِஅல்லாஹ்வுக்குتَبَرَّاَஅவர் விலகிக் கொண்டார்مِنْهُ‌ ؕஅவரிலிருந்துاِنَّ اِبْرٰهِيْمَநிச்சயமாக இப்றாஹீம்لَاَوَّاهٌஅதிகம் பிரார்த்திப்பவர்حَلِيْمٌ‏பெரும் சகிப்பாளர்
வமா கானஸ் திக்Fபாரு இBப்ராஹீம லி அBபீஹி இல்லா 'அன் மவ்'இததி(ன்)வ் வ 'அதஹா இய்யாஹு Fபலம்மா தBபய்யன லஹூ அன்னஹூ 'அதுவ்வுல் லில்லாஹி தBபர்ர அ மின்ஹ்; இன்ன இBப்ராஹீம ல அவ்வாஹுன் ஹலீம்
இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.
وَمَا كَانَ اللّٰهُ لِیُضِلَّ قَوْمًا بَعْدَ اِذْ هَدٰىهُمْ حَتّٰی یُبَیِّنَ لَهُمْ مَّا یَتَّقُوْنَ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
وَمَا كَانَஇருக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்لِيُـضِلَّவழிகெடுப்பவனாகقَوْمًۢاஒரு கூட்டத்தைبَعْدَபின்னர்اِذْ هَدٰٮهُمْஅவன்/நேர்வழிப்படுத்திய/அவர்களைحَتّٰىவரைيُبَيِّنَவிவரிப்பான்لَهُمْஅவர்களுக்குمَّاஎவற்றைيَتَّقُوْنَ‌ؕஅவர்கள் தவிர்ந்து கொள்வார்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
வமா கானல் லாஹு லியுளில்ல கவ்மன் Bபஃத இத் ஹதாஹும் ஹத்தா யுBபய்யின லஹும் மா யத்தகூன்; இன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.
اِنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ یُحْیٖ وَیُمِیْتُ ؕ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَهٗஅவனுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமியின்يُحْىٖஉயிர்ப்பிக்கிறான்وَيُمِيْتُ‌ؕஇன்னும் மரணிக்கச் செய்கிறான்وَمَا لَـكُمْஉங்களுக்கு இல்லைمِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمِنْ وَّلِىٍّஒரு பாதுகாவலர்وَّلَا نَصِيْرٍ‏ஓர் உதவியாளர் இல்லை
இன்னல் லாஹ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி யுஹ்யீ வ யுமீத்; வமா லகும் மின் தூனில் லாஹி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரணிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.
لَقَدْ تَّابَ اللّٰهُ عَلَی النَّبِیِّ وَالْمُهٰجِرِیْنَ وَالْاَنْصَارِ الَّذِیْنَ اتَّبَعُوْهُ فِیْ سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ یَزِیْغُ قُلُوْبُ فَرِیْقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَیْهِمْ ؕ اِنَّهٗ بِهِمْ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟ۙ
لَـقَدْதிட்டவட்டமாகتَّابَமன்னித்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَى النَّبِىِّநபி மீதுوَالْمُهٰجِرِيْنَஇன்னும் முஹாஜிர்கள்وَالْاَنْصَارِஇன்னும் அன்ஸாரிகள்الَّذِيْنَஎவர்கள்اتَّبَعُوْهُஅவரைப் பின்பற்றினார்கள்فِىْ سَاعَةِகாலத்தில்الْعُسْرَةِசிரமம்مِنْۢ بَعْدِபின்னர்مَا كَادَநெருங்கியதுيَزِيْغُவழிதவறقُلُوْبُஉள்ளங்கள்فَرِيْقٍஒரு பிரிவினரின்مِّنْهُمْஅவர்களில்ثُمَّபிறகுتَابَமன்னித்தான்عَلَيْهِمْ‌ؕஅவர்களைاِنَّهٗநிச்சயமாக அவன்بِهِمْஅவர்கள் மீதுرَءُوْفٌஇரக்கமுள்ளவன்رَّحِيْمٌۙபெரும் கருணையாளன்
லகத் தாBபல் லாஹு 'அலன் னBபிய்யி வல் முஹாஜிரீன வல் அன்ஸாரில் லதீனத் தBப'ஊஹு Fபீ ஸா'அதில் 'உஸ்ரதி மின் Bபஃதி மா காத யZஜீகு குலூBபு Fபரிகின் மின்ஹும் தும்ம தாBப 'அலய்ஹிம்; இன்னஹூ Bபிஹிம் ர'ஊFபுர் ரஹீம்
நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.
وَّعَلَی الثَّلٰثَةِ الَّذِیْنَ خُلِّفُوْا ؕ حَتّٰۤی اِذَا ضَاقَتْ عَلَیْهِمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَیْهِمْ اَنْفُسُهُمْ وَظَنُّوْۤا اَنْ لَّا مَلْجَاَ مِنَ اللّٰهِ اِلَّاۤ اِلَیْهِ ؕ ثُمَّ تَابَ عَلَیْهِمْ لِیَتُوْبُوْا ؕ اِنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟۠
وَّعَلَىமீதுالثَّلٰثَةِமூவர்الَّذِيْنَஎவர்கள்خُلِّفُوْا ؕபிற்படுத்தப்பட்டனர்حَتّٰۤىவரைاِذَاபோதுضَاقَتْநெருக்கடியானதுعَلَيْهِمُஅவர்களுக்குالْاَرْضُபூமிبِمَا رَحُبَتْவிசாலமாக இருந்தும்وَضَاقَتْஇன்னும் நெருக்கடியானதுعَلَيْهِمْஅவர்கள் மீதுاَنْفُسُهُمْஆன்மாக்கள்/அவர்களின்وَظَنُّوْۤاஇன்னும் அவர்கள் உறுதி கொண்டனர்اَنْ لَّاஅறவே இல்லைمَلْجَاَஒதுங்குமிடம்مِنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துاِلَّاۤ اِلَيْهِ ؕதவிர/அவனிடமேثُمَّபிறகுتَابَஅவன் மன்னித்தான்عَلَيْهِمْஅவர்களைلِيَتُوْبُوْا ؕஅவர்கள் திருந்துவதற்காகاِنَّ اللّٰهَ هُوَநிச்சயமாக அல்லாஹ் அவன்தான்التَّوَّابُமகா அங்கீகரிப்பவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ 'அலத் தலாததில் லதீன குல்லிFபூ ஹத்தா இதா ளாகத் 'அலய்ஹிமுல் அர்ளு Bபிமா ரஹுBபத் வ ளாகத் 'அலய்ஹிம் அன்Fபுஸுஹும் வ ளன்ன்னூ அல் லா மல்ஜ-அ மினல் லாஹி இல்லா இலய்ஹி தும்ம தாBப 'அலய்ஹிம் லியதூBபூ; இன்னல் லாஹ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களேاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَكُوْنُوْاஇன்னும் இருங்கள்مَعَஉடன்الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ வ கூனூ ம'அஸ் ஸாதிகீன்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.
مَا كَانَ لِاَهْلِ الْمَدِیْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ یَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَلَا یَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّفْسِهٖ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ لَا یُصِیْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا یَطَـُٔوْنَ مَوْطِئًا یَّغِیْظُ الْكُفَّارَ وَلَا یَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّیْلًا اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌ ؕ اِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟ۙ
مَا كَانَதகுந்ததல்லلِاَهْلِ الْمَدِيْنَةِமதீனாவாசிகளுக்குوَمَنْஇன்னும் எவர்حَوْلَهُمْஅவர்களைச் சுற்றிمِّنَ الْاَعْرَابِகிராம அரபிகளில்اَنْ يَّتَخَلَّفُوْاஅவர்கள் பின்தங்குவதுعَنْ رَّسُوْلِதூதரை விட்டுاللّٰهِஅல்லாஹ்வின்وَ لَا يَرْغَبُوْاஇன்னும் அவர்கள் நேசிப்பது (தகுந்தது) இல்லைبِاَنْفُسِهِمْதங்கள் உயிர்களைعَنْ نَّـفْسِهٖ ؕஅவருடைய உயிரைவிடذٰ لِكَ بِاَنَّهُمْஅதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்لَاஅடையாதுيُصِيْبُهُمْஅவர்களுக்குظَمَاٌஒரு தாகம்وَّلَا نَصَبٌஒரு களைப்புوَّلَا مَخْمَصَةٌஒரு பசிفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَلَا يَطَــٴُـــوْنَஇன்னும் மிதிக்கமாட்டார்கள்مَوْطِئًاஓர் இடம்يَّغِيْظُகோபமூட்டும்الْكُفَّارَநிராகரிப்பாளர்களைوَلَا يَنَالُوْنَஇன்னும் அடையமாட்டார்கள்مِنْஇருந்துعَدُوٍّஓர் எதிரிنَّيْلاًஒரு துன்பத்தைاِلَّاதவிரكُتِبَஎழுதப்பட்டதுلَهُمْஅவர்களுக்குبِهٖஇவற்றுக்குப் பதிலாகعَمَلٌசெயல்صَالِحٌ‌ ؕநன்மையானதுاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يُضِيْعُவீணாக்க மாட்டான்اَجْرَகூலியைالْمُحْسِنِيْنَۙ‏நல்லறம் புரிவோரின்
மா கான லி அஹ்லில் மதீனதி வ மன் ஹவ்லஹும் மினல் அஃராBபி அய் யதகல்லFபூ 'அர்-ரஸூலில் லாஹி வலா யர்கBபூ Bபி அன்Fபுஸிஹிம் 'அன் னFப்ஸிஹ்; தாலிக Bபி அன்னஹும் லா யுஸீBபுஹும் ளம உ(ன்)வ் வலா னஸBபு(ன்)வ் வலா மக்மஸதுன் Fபீ ஸBபீலில் லாஹி வலா யத'ஊன மவ்தி'அய் யகீளுல் குFப்Fபார வலா யனாலூன மின் 'அதுவ்வின் னய்லன் இல்லா குதிBப லஹும் Bபிஹீ 'அமலுன் ஸாலிஹ்; இன்னல் லாஹ லா யுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல; ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
وَلَا یُنْفِقُوْنَ نَفَقَةً صَغِیْرَةً وَّلَا كَبِیْرَةً وَّلَا یَقْطَعُوْنَ وَادِیًا اِلَّا كُتِبَ لَهُمْ لِیَجْزِیَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَلَا يُنْفِقُوْنَதர்மம் புரிய மாட்டார்கள்نَفَقَةًஒரு தர்மத்தைصَغِيْرَةًசிறியதுوَّلَا كَبِيْرَةًஇன்னும் பெரியதுوَّلَا يَقْطَعُوْنَஅவர்கள் கடக்க மாட்டார்கள்وَادِيًاஒரு பள்ளத்தாக்கைاِلَّاதவிரكُتِبَபதியப்பட்டதுلَهُمْஅவர்களுக்குلِيَجْزِيَهُمُகூலி கொடுப்பதற்காக/அவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்اَحْسَنَமிக அழகியதைمَاஎதைكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்கிறார்கள்
வ லா யுன்Fபிகூன னFப கதன் ஸகீரத(ன்)வ் வலா கBபீரத(ன்)வ் வலா யக்த'ஊன வாதியன் இல்லா குதிBப லஹும் லியஜ்Zஜியஹுமுல் லாஹு அஹ்ஸன மா கானூ யஃமலூன்
இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப் பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை; அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான்.
وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِیَنْفِرُوْا كَآفَّةً ؕ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآىِٕفَةٌ لِّیَتَفَقَّهُوْا فِی الدِّیْنِ وَلِیُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْۤا اِلَیْهِمْ لَعَلَّهُمْ یَحْذَرُوْنَ ۟۠
وَمَا كَانَசரியல்லالْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்لِيَنْفِرُوْاஅவர்கள் புறப்படுவதுكَآفَّةً‌ ؕஅனைவருமேفَلَوْلَا نَفَرَபுறப்பட்டிருக்க வேண்டாமாمِنْஇருந்துكُلِّஒவ்வொருفِرْقَةٍபிரிவுمِّنْهُمْஅவர்களில்طَآٮِٕفَةٌஒரு கூட்டம்لِّيَـتَفَقَّهُوْاஅவர்கள் ஞானம் பெறுவதற்காகفِى الدِّيْنِமார்க்கத்தில்وَ لِيُنْذِرُوْاஇன்னும் அவர்களை எச்சரிப்பதற்காகقَوْمَهُمْதங்கள் சமுதாயத்தைاِذَاபோதுرَجَعُوْۤاதிரும்பினார்கள்اِلَيْهِمْஅவர்களிடம்لَعَلَّهُمْ يَحْذَرُوْنَ‏அவர்கள் எச்சரிக்கையாக
வமா கானல் மு'மினூன லியன்Fபிரூ காFப்Fபஹ்; Fபலவ் லா னFபர மின் குல்லி Fபிர்கதிம் மின்ஹும் தா'இFபதுல் லியதFபக்கஹூ Fபித்தீனி வ லியுன்திரூ கவ்மஹும் இதா ரஜ'ஊ இலய்ஹிம் ல'அல்லஹும் யஹ்தரூன்
முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்று கொள்வதற்காகவும், (வெளியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قَاتِلُوا الَّذِیْنَ یَلُوْنَكُمْ مِّنَ الْكُفَّارِ وَلْیَجِدُوْا فِیْكُمْ غِلْظَةً ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேقَاتِلُواபோரிடுங்கள்/எவர்கள்الَّذِيْنَஅடுத்திருக்கின்றனர்يَلُوْنَكُمْஉங்களைمِّنَ الْكُفَّارِநிராகரிப்பாளர்களில்وَلْيَجِدُوْاஇன்னும் அவர்கள் காணட்டும்فِيْكُمْஉங்களிடம்غِلْظَةً‌  ؕகடுமையைوَاعْلَمُوْاۤஇன்னும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்مَعَ الْمُتَّقِيْنَ‏அஞ்சுபவர்களுடன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ காதிலுல் லதீன யலூனகும் மினல் குFப்Fபாரி வல்யஜிதூ Fபீகும் கில்ளஹ்; வஃலமூ அன்னல் லாஹ ம'அல் முத்தகீன்
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ فَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ اَیُّكُمْ زَادَتْهُ هٰذِهٖۤ اِیْمَانًا ۚ فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا فَزَادَتْهُمْ اِیْمَانًا وَّهُمْ یَسْتَبْشِرُوْنَ ۟
وَاِذَا مَاۤ اُنْزِلَتْஇறக்கப்பட்டால்سُوْرَةٌஓர் அத்தியாயம்فَمِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்يَّقُوْلُகூறுவார்اَيُّكُمْஉங்களில் எவர்زَادَتْهُ هٰذِهٖۤஅதிகப்படுத்தியது/அவருக்கு/இதுاِيْمَانًا‌ ۚநம்பிக்கைفَاَمَّاஆகவேالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்فَزَادَتْهُمْஅதிகப்படுத்தியது/ அவர்களுக்குاِيْمَانًاநம்பிக்கையைوَّهُمْஅவர்களோيَسْتَبْشِرُوْنَ‏மகிழ்ச்சியடைகின்றனர்
வ இதா மா உன்Zஜிலத் ஸூரதுன் Fபமின்ஹும் மய் யகூலு அய்யுகும் Zஜாதத் ஹு ஹாதிஹீ ஈமானா; Fப அம்மல் லதீன ஆமனூ FபZஜாதத் ஹும் ஈமான(ன்)வ் வ ஹும் யஸ்தBப்ஷிரூன்
ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், “இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?” என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள்.
وَاَمَّا الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا اِلٰی رِجْسِهِمْ وَمَاتُوْا وَهُمْ كٰفِرُوْنَ ۟
وَاَمَّاஆகவேالَّذِيْنَஎவர்கள்فِىْ قُلُوْبِهِمْஅவர்களுடைய உள்ளங்களில்مَّرَضٌஒரு நோய்فَزَادَتْهُمْஅதிகப்படுத்தியது/ அவர்களுக்குرِجْسًاஒரு அசுத்தத்தைاِلٰى رِجْسِهِمْஅவர்களுடைய அசுத்தத்துடன்وَمَاتُوْاஇன்னும் இறந்தனர்وَهُمْ كٰفِرُوْنَ‏நிராகரிப்பாளர்களாகவே
வ அம்மல் லதீன Fபீ குலூBபிஹிம் மரளுன் FபZஜாதத் ஹும் ரிஜ்ஸன் இலா ரிஜ்ஸிஹிம் வ மாதூ வ ஹும் காFபிரூன்
ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது; அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்.
اَوَلَا یَرَوْنَ اَنَّهُمْ یُفْتَنُوْنَ فِیْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَیْنِ ثُمَّ لَا یَتُوْبُوْنَ وَلَا هُمْ یَذَّكَّرُوْنَ ۟
اَوَلَا يَرَوْنَஅல்லதுபார்க்கவில்லையாاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்يُفْتَـنُوْنَசோதிக்கப்படுகின்றனர்فِىْ كُلِّஒவ்வொன்றில்عَامٍஆண்டுمَّرَّةًஒரு முறைاَوْஅல்லதுمَرَّتَيْنِஇரு முறைகள்ثُمَّபிறகுلَا يَتُوْبُوْنَஅவர்கள் திருந்தவில்லைوَلَا هُمْ يَذَّكَّرُوْنَ‏இன்னும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதில்லை
'அ வலா யரவ்ன அன்னஹும் யுFப்தனூன Fபீ குல்லி 'ஆமின் மர்ரதன் 'அவ் மர்ரதய்னி தும்ம லா யதூBபூன வலா ஹும் யத்தக்கரூன்
ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்” என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை;(அது பற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.
وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ نَّظَرَ بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ ؕ هَلْ یَرٰىكُمْ مِّنْ اَحَدٍ ثُمَّ انْصَرَفُوْا ؕ صَرَفَ اللّٰهُ قُلُوْبَهُمْ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟
وَاِذَا مَاۤ اُنْزِلَتْஇறக்கப்பட்டால்سُوْرَةٌஓர் அத்தியாயம்نَّظَرَபார்க்கிறார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اِلٰى بَعْضٍؕ هَلْசிலரின் பக்கம்/?يَرٰٮكُمْபார்க்கின்றனர்/ உங்களைمِّنْ اَحَدٍ ثُمَّஒருவரும்/பின்னர்انْصَرَفُوْا‌ ؕதிரும்பி விடுகின்றனர்صَرَفَதிருப்பி விட்டான்اللّٰهُஅல்லாஹ்قُلُوْبَهُمْஉள்ளங்களை/அவர்களுடையبِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக அவர்கள்قَوْمٌமக்களாகلَّا يَفْقَهُوْنَ‏அறியமாட்டார்கள்
வ இதா மா உன்Zஜிலத் ஸூரதுன் னளர Bபஃளுஹும் இலா Bபஃளின் ஹல் யராகும் மின் அஹதின் தும்மன் ஸரFபூ; ஸரFபல் லாஹு குலூBபஹும் Bபி அன்னஹும் கவ்முல் லா யFப்கஹூன்
யாதொரு (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: “உங்களை யாராவது பார்த்து விட்டார்களோ?” என்று கேட்டுக் கொண்டே திரும்பி(ப் போய்) விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான் - (காரணமென்னவெனில்) அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களாக இருக்கின்றனர்.
لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟
لَـقَدْ جَآءَவந்து விட்டார்كُمْஉங்களிடம்رَسُوْلٌஒரு தூதர்مِّنْ اَنْفُسِكُمْஉங்களிலிருந்தேعَزِيْزٌகடினமானதுعَلَيْهِஅவர் மீதுمَا عَنِتُّمْநீங்கள் சிரமப்படுவதுحَرِيْصٌபேராசையுடையவர்عَلَيْكُمْஉங்கள் மீதுبِالْمُؤْمِنِيْنَமீது/ நம்பிக்கையாளர்கள்رَءُوْفٌபெரும் இரக்கமுள்ளவர்رَّحِيْمٌ‏பெரும் கருணையுள்ளவர்
லகத் ஜா'அகும் ரஸூலும் மின் அன்Fபுஸிகும் 'அZஜீZஜுன் 'அலய்ஹி மா 'அனித்தும் ஹரீஸுன் 'அலய்கும் Bபில்மு'மினீன ர'ஊFபுர் ரஹீம்
(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِیَ اللّٰهُ ۖۗؗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَیْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟۠
فَاِنْ تَوَلَّوْاஅவர்கள் திரும்பினால்فَقُلْகூறுவீராகحَسْبِىَ اللّٰهُ அல்லாஹ் எனக்குப் போதுமானவன்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّا هُوَ ؕதவிர/அவனைعَلَيْهِஅவன் மீதேتَوَكَّلْتُ‌ ؕநான் நம்பிக்கை வைத்து விட்டேன்وَهُوَ رَبُّஅவன் அதிபதிالْعَرْشِஅர்ஷின்الْعَظِيْمِ‏மகத்தானது
Fப இன் தவல்லவ் Fபகுல் ஹஸ்Bபியல் லாஹு லா இலாஹ இல்லா ஹுவ 'அலய்ஹி தவக்க்கல்து வ ஹுவ ரBப்Bபுல் 'அர்ஷில் 'அளீம்
(நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக!