100. ஸூரத்துல் ஆதியாத்தி(வேகமாகச் செல்லுபவை)

மக்கீ, வசனங்கள்: 11

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالْعٰدِیٰتِ ضَبْحًا ۟ۙ
وَالْعٰدِيٰتِஅதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாகضَبْحًا ۙ‏மூச்சிரைக்க
வல்'ஆதி யாதி ளBப்ஹா
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
فَالْمُوْرِیٰتِ قَدْحًا ۟ۙ
فَالْمُوْرِيٰتِஇன்னும் (தீ) மூட்டுகின்ற குதிரைகள்قَدْحًا ۙ‏தீப்பொறிகளை
Fபல் மூரி யாதி கத்ஹா
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
فَالْمُغِیْرٰتِ صُبْحًا ۟ۙ
فَالْمُغِيْرٰتِஇன்னும் பாய்கின்ற குதிரைகள்صُبْحًا ۙ‏அதிகாலையில்
Fபல் முகீராதி ஸுBப்ஹா
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ۟ۙ
فَاَثَرْنَஇன்னும் கிளப்பினبِهٖஅதில்نَقْعًا ۙ‏புழுதியை
Fப அதர்ன Bபிஹீ னக்'ஆ
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۟ۙ
فَوَسَطْنَஇன்னும் நடுவில் நுழைந்தனبِهٖஅதில்جَمْعًا ۙ‏கூட்டத்திற்கு
Fபவ ஸத்ன Bபிஹீ ஜம்'ஆ
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَكَنُوْدٌ ۟ۚ
اِنَّநிச்சயமாகالْاِنْسَانَமனிதன்لِرَبِّهٖதன் இறைவனுக்குلَـكَنُوْدٌ ۚ‏நன்றி கெட்டவன்
இன்னல்-இன்ஸான லிரBப்Bபிஹீ லகனூத்
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
وَاِنَّهٗ عَلٰی ذٰلِكَ لَشَهِیْدٌ ۟ۚ
وَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக அவன்عَلٰى ذٰلِكَஅதற்குلَشَهِيْدٌ ۚ‏சாட்சி
வ இன்னஹு 'அலா தாலிக ல ஷஹீத்
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
وَاِنَّهٗ لِحُبِّ الْخَیْرِ لَشَدِیْدٌ ۟ؕ
وَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக அவன்لِحُبِّநேசிப்பதில்الْخَيْرِசெல்வத்தைلَشَدِيْدٌ ؕ‏உறுதியாக கடினமானவன்
வ இன்னஹு லிஹுBப்Bபில் கய்ரி ல ஷதீத்
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
اَفَلَا یَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِی الْقُبُوْرِ ۟ۙ
اَفَلَا يَعْلَمُஅவன் அறியவேண்டாமா?اِذَا بُعْثِرَஎழுப்பப்படும்போதுمَا فِى الْقُبُوْرِۙ‏புதை குழிகளில் உள்ளவர்கள்
அFபல யஃலமு இத Bபுஃதிர ம Fபில்குBபூர்
அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
وَحُصِّلَ مَا فِی الصُّدُوْرِ ۟ۙ
وَحُصِّلَஇன்னும் பிரித்தறியப்படும்مَا فِى الصُّدُوْرِۙ‏நெஞ்சங்களில் உள்ளவை
வ ஹுஸ்ஸில மா Fபிஸ் ஸுதூர்
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
اِنَّ رَبَّهُمْ بِهِمْ یَوْمَىِٕذٍ لَّخَبِیْرٌ ۟۠
اِنَّநிச்சயமாகرَبَّهُمْஅவர்களுடைய இறைவன்بِهِمْஅவர்களைيَوْمَٮِٕذٍஅந்நாளில்لَّخَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
இன்ன ரBப்Bபஹும் Bபிஹிம் யவ்ம 'இதின் லகBபீர்
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.