68. ஸூரத்துல் கலம்(எழுதுகோல்)

மக்கீ, வசனங்கள்: 52

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
نٓ وَالْقَلَمِ وَمَا یَسْطُرُوْنَ ۟ۙ
نٓ‌நூன்وَالْقَلَمِஎழுது கோல் மீது(ம்) சத்தியமாக!وَمَا يَسْطُرُوْنَۙ‏இன்னும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும்
னூன்; வல்கலமி வமா யஸ்துரூன்
நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
مَاۤ اَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍ ۟ۚ
مَاۤ اَنْتَநீர் இல்லைبِـنِعْمَةِஅருளால்رَبِّكَஉமது இறைவனின்بِمَجْنُوْنٍ‌ۚ‏பைத்தியக்காரராக
மா அன்த Bபினிஃமதி ரBப்Bபிக Bபிமஜ்னூன்
உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
وَاِنَّ لَكَ لَاَجْرًا غَیْرَ مَمْنُوْنٍ ۟ۚ
وَاِنَّநிச்சயமாகلَڪَஉமக்குلَاَجْرًاநற்கூலி உண்டுغَيْرَ مَمْنُوْنٍ‌ۚ‏முடிவற்ற
வ இன்ன லக ல அஜ்ரன் கய்ர மம்னூன்
இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.
وَاِنَّكَ لَعَلٰی خُلُقٍ عَظِیْمٍ ۟
وَاِنَّكَநிச்சயமாக நீர்لَعَلٰى خُلُقٍநற்குணத்தில்عَظِيْمٍ‏மகத்தான
வ இன்னக ல'அலா குலுகின் 'அளீம்
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
فَسَتُبْصِرُ وَیُبْصِرُوْنَ ۟ۙ
فَسَتُبْصِرُவிரைவில் நீரும் காண்பீர்وَيُبْصِرُوْنَۙ‏அவர்களும் காண்பார்கள்
FபஸதுBப்ஸிரு வ யுBப்ஸிரூன்
எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.
بِاَیِّىكُمُ الْمَفْتُوْنُ ۟
بِاَيِّٮكُمُஉங்களில் யார்الْمَفْتُوْنُ‏சோதிக்கப்பட்டவர்
Bபி அய்யிகுமுல் மFப்தூன்
உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.
اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ ۪ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்هُوَஅவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَنْ ضَلَّவழிதவறியவனைعَنْ سَبِيْلِهٖஅவனது பாதையில் இருந்துوَهُوَஅவன்தான்اَعْلَمُமிக அறிந்தவன்بِالْمُهْتَدِيْنَ‏நேர்வழி பெற்றவர்களை(யும்)
இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு Bபிமன் ளல்ல 'அன் ஸBபீலிஹீ வ ஹுவ அஃலமு Bபில்முஹ்ததீன்
உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.
فَلَا تُطِعِ الْمُكَذِّبِیْنَ ۟
فَلَا تُطِعِஆகவே, நீர் கீழ்ப்படியாதீர்الْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பிப்பவர்களுக்கு
Fபலா துதி'இல் முகத்திBபீன்
எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
وَدُّوْا لَوْ تُدْهِنُ فَیُدْهِنُوْنَ ۟
وَدُّوْاஆசைப்படுகின்றனர்لَوْ تُدْهِنُநீர் அனுசரித்து போகவேண்டும் என்றுفَيُدْهِنُوْنَ‏அப்படியென்றால் அவர்களும் அனுசரிப்பார்கள்
வத்தூ லவ் துத்ஹினு Fப-யுத்ஹினூன்
(சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِیْنٍ ۟ۙ
وَلَا تُطِعْநீர் கீழ்ப்படியாதீர்!كُلَّஎவருக்கும்حَلَّافٍஅதிகம் சத்தியம் செய்கின்றவன்مَّهِيْنٍۙ‏அற்பமானவன்
வ லா துதிஃ குல்ல ஹல்லா Fபிம் மஹீன்
அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
هَمَّازٍ مَّشَّآءٍ بِنَمِیْمٍ ۟ۙ
هَمَّازٍஅதிகம் புறம் பேசுபவன்مَّشَّآءٍۢ بِنَمِيْمٍۙ‏அதிகம் கோள் சொல்பவன்
ஹம்மாZஜிம் மஷ் ஷா'இம் Bபினமீம்
(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
مَّنَّاعٍ لِّلْخَیْرِ مُعْتَدٍ اَثِیْمٍ ۟ۙ
مَّنَّاعٍஅதிகம் தடுப்பவன்لِّلْخَيْرِநன்மையைمُعْتَدٍவரம்பு மீறிاَثِيْمٍۙ‏பெரும் பாவி
மன்னா'இல் லில்கய்ரி முஃததின் அதீம்
(எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி.
عُتُلٍّ بَعْدَ ذٰلِكَ زَنِیْمٍ ۟ۙ
عُتُلٍّ ۢஅசிங்கமானவன்بَعْدَபிறகுذٰلِكَஇதற்குزَنِيْمٍۙ‏ஈனன்
'உதுல்லிம் Bபஃத தாலிக Zஜனீம்
கடின சித்தமுடையவன்; அப்பால் இழி பிறப்புமுடையவன்.
اَنْ كَانَ ذَا مَالٍ وَّبَنِیْنَ ۟ؕ
اَنْ كَانَஇருந்த காரணத்தால்ذَا مَالٍசெல்வ(மு)ம் உடையவனாகوَّبَنِيْنَؕ‏ஆண் பிள்ளைகளும்
அன் கான தா மாலி(ன்)வ்-வ Bபனீன்
பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால் -
اِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
اِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِஅவன் மீதுاٰيٰتُنَاநமது வசனங்கள்قَالَகூறுகின்றான்اَسَاطِيْرُகட்டுக் கதைகள்الْاَوَّلِيْنَ‏முன்னோரின்
இதா துத்லா 'அலய்ஹி ஆயாதுனா கால அஸாதீருல் அவ்வலீன்
நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவன் கூறுகின்றான்.
سَنَسِمُهٗ عَلَی الْخُرْطُوْمِ ۟
سَنَسِمُهٗவிரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம்عَلَى الْخُـرْطُوْمِ‏மூக்கின் மீது
ஸனஸிமுஹூ 'அலல் குர்தூம்
விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.
اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَاۤ اَصْحٰبَ الْجَنَّةِ ۚ اِذْ اَقْسَمُوْا لَیَصْرِمُنَّهَا مُصْبِحِیْنَ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்بَلَوْنٰهُمْஅவர்களை சோதித்தோம்كَمَا بَلَوْنَاۤநாம் சோதித்ததுபோல்اَصْحٰبَ الْجَـنَّةِ‌ ۚதோட்ட முடையவர்களைاِذْ اَقْسَمُوْاஅவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!لَيَصْرِمُنَّهَاஅதை அவர்கள் நிச்சயமாக அறுவடை செய்ய வேண்டும்مُصْبِحِيْنَۙ‏அவர்கள் அதிகாலையில் இருக்கும் போது
இன்னா Bபலவ்னாஹும் கமா Bபலவ்னா அஸ்-ஹாBபல் ஜன்னதி இத் 'அக்ஸமூ ல-யஸ்ரி முன்னஹா முஸ்Bபிஹீன்
நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.
وَلَا یَسْتَثْنُوْنَ ۟
وَلَا يَسْتَثْنُوْنَ‏அவர்கள் அல்லாஹ் நாடினால் என்று கூறவில்லை
வ லா யஸ்தத்னூன்
அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை;
فَطَافَ عَلَیْهَا طَآىِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَآىِٕمُوْنَ ۟
فَطَافَஇரவில் சுற்றியதுعَلَيْهَاஅதன் மீதுطَآٮِٕفٌஒரு கட்டளைمِّنْ رَّبِّكَஉமது இறைவனிடமிருந்துوَهُمْ نَآٮِٕمُوْنَ‏அவர்கள் தூங்கியவர்களாக இருந்த போது
FபதாFப 'அலய்ஹா தா'இ Fபும் மிர் ரBப்Bபிக வ ஹும் னா'இமூன்
எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.
فَاَصْبَحَتْ كَالصَّرِیْمِ ۟ۙ
فَاَصْبَحَتْஆகிவிட்டதுكَالصَّرِيْمِۙ‏அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று
Fப அஸ்Bபஹத் கஸ்ஸரீம்
(நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.
فَتَنَادَوْا مُصْبِحِیْنَ ۟ۙ
فَتَـنَادَوْاஒருவரை ஒருவர் அழைத்தனர்مُصْبِحِيْنَۙ‏அவர்கள் அதிகாலையில் ஆனவுடன்
Fபதனாதவ் முஸ்Bபிஹீன்
(இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.
اَنِ اغْدُوْا عَلٰی حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صٰرِمِیْنَ ۟
اَنِ اغْدُوْاகாலையில் செல்லுங்கள்عَلٰى حَرْثِكُمْஉங்கள் விவசாய நிலத்திற்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰرِمِيْنَ‏அறுவடை செய்பவர்களாக
அனிக்தூ 'அலா ஹர்திகும் இன் குன்தும் ஸாரிமீன்
“நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்” (என்று கூறிக் கொண்டனர்).
فَانْطَلَقُوْا وَهُمْ یَتَخَافَتُوْنَ ۟ۙ
فَانْطَلَقُوْاசென்றனர்وَهُمْஅவர்கள்يَتَخَافَتُوْنَۙ‏தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக
Fபன்தலகூ வ ஹும் யதகாFபதூன்
எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்;
اَنْ لَّا یَدْخُلَنَّهَا الْیَوْمَ عَلَیْكُمْ مِّسْكِیْنٌ ۟ۙ
اَنْ لَّا يَدْخُلَنَّهَاஅதில் நுழைந்து விடக்கூடாதுالْيَوْمَஇன்றைய தினம்عَلَيْكُمْஉங்களிடம்مِّسْكِيْنٌۙ‏ஏழை ஒருவரும்
அல் லா யத்குலன்னஹல் யவ்ம 'அலய்கும் மிஸ்கீன்
“எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது” (என்று).
وَّغَدَوْا عَلٰی حَرْدٍ قٰدِرِیْنَ ۟
وَّغَدَوْاஇன்னும் காலையில் புறப்பட்டனர்عَلٰى حَرْدٍஒரு கெட்ட எண்ணத்துடன்قٰدِرِيْنَ‏சக்தி உள்ளவர்களாக
வ கதவ் 'அலா ஹர்தின் காதிரீன்
உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.
فَلَمَّا رَاَوْهَا قَالُوْۤا اِنَّا لَضَآلُّوْنَ ۟ۙ
فَلَمَّا رَاَوْهَاஅவர்கள் அதைப் பார்த்த போதுقَالُوْۤاகூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்لَـضَآلُّوْنَۙ‏வழிதவறி விட்டோம்
Fபலம்மா ர அவ்ஹா காலூ இன்னா லளால்லூன்
ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: “நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்” என்று கூறினார்கள்.
بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟
بَلْஇல்லை, மாறாகنَحْنُநாங்கள்مَحْرُوْمُوْنَ‏இழப்பிற்குள்ளாகி விட்டோம்
Bபல் னஹ்னு மஹ்ரூமூன்
(பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) “இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்” (என்றும் கூறிக்கொண்டனர்.)
قَالَ اَوْسَطُهُمْ اَلَمْ اَقُلْ لَّكُمْ لَوْلَا تُسَبِّحُوْنَ ۟
قَالَகூறினார்اَوْسَطُهُمْஅவர்களில் நீதவான்اَلَمْ اَقُلْ لَّكُمْநான் உங்களுக்கு கூறவில்லையா?لَوْلَا تُسَبِّحُوْنَ‏நீங்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா
கால அவ்ஸதுஹும் அலம் அகுல் லகும் லவ் லா துஸBப்Bபிஹூன்
அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் “நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?” என்று கூறினார்.
قَالُوْا سُبْحٰنَ رَبِّنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
قَالُوْاகூறினார்கள்سُبْحٰنَமிகப் பரிசுத்தமானவன்رَبِّنَاۤஎங்கள் இறைவன்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاநாங்கள்ஆகிவிட்டோம்ظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
காலூ ஸுBப்ஹான ரBப்Bபினா இன்னா குன்னா ளாலிமீன்
“எங்கள் இறைவன் தூயவன்; நாம் தாம் நிச்சயமாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்” என்றும் கூறினர்.
فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَلَاوَمُوْنَ ۟
فَاَقْبَلَமுன்னோக்கினர்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰى بَعْضٍசிலரைيَّتَلَاوَمُوْنَ‏அவர்களுக்குள் பழித்தவர்களாக
Fப அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதலாவமூன்
பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோக்கினர்.
قَالُوْا یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِیْنَ ۟
قَالُوْاகூறினார்கள்يٰوَيْلَنَاۤஎங்களின் நாசமே!اِنَّا كُنَّاநிச்சயமாக நாங்கள் இருந்தோம்طٰغِيْنَ‏வரம்பு மீறியவர்களாக
காலூ யா வய்லனா இன்னா குன்னா தாகீன்
அவர்கள் கூறினார்கள்: “எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.
عَسٰی رَبُّنَاۤ اَنْ یُّبْدِلَنَا خَیْرًا مِّنْهَاۤ اِنَّاۤ اِلٰی رَبِّنَا رٰغِبُوْنَ ۟
عَسٰىகூடும்رَبُّنَاۤஎங்கள் இறைவன்اَنْ يُّبْدِلَـنَاஎங்களுக்கு பகரமாக தர(க்கூடும்)خَيْرًاசிறந்ததைمِّنْهَاۤஅதை விடاِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِلٰىபக்கம்رَبِّنَاஎங்கள் இறைவன்رٰغِبُوْنَ‏ஆசை உள்ளவர்கள்
'அஸா ரBப்Bபுனா அ(ன்)ய் யுBப்திலனா கய்ரம் மின்ஹா இன்னா இலா ரBப்Bபினா ராகிBபூன்
“எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்” (எனக் கூறினர்).
كَذٰلِكَ الْعَذَابُ ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟۠
كَذٰلِكَஇவ்வாறுதான்الْعَذَابُ‌ؕதண்டனைوَلَعَذَابُதண்டனைالْاٰخِرَةِமறுமையின்اَكْبَرُ ۘமிகப் பெரியதுلَوْ كَانُوْاஅவர்கள் இருக்க வேண்டுமே!يَعْلَمُوْنَ‏அறிந்தவர்களாக
கதாலிகல் அதாBப், வ ல'அதாBபுல் ஆகிரதி அக்Bபர்; லவ் கானூ யஃலமூன்
இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது; அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).  
اِنَّ لِلْمُتَّقِیْنَ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
اِنَّ لِلْمُتَّقِيْنَநிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்குعِنْدَ رَبِّهِمْதங்கள் இறைவனிடம்جَنّٰتِசொர்க்கங்கள்النَّعِيْمِ‏இன்பம் நிறைந்த
இன்ன லில்முத்தகீன 'இன்த ரBப்Bபிஹிம் ஜன்னாதின் ன'ஈம்
நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.
اَفَنَجْعَلُ الْمُسْلِمِیْنَ كَالْمُجْرِمِیْنَ ۟ؕ
اَفَنَجْعَلُஆக்குவோமா?الْمُسْلِمِيْنَமுற்றிலும் பணிந்தவர்களைكَالْمُجْرِمِيْنَؕ‏குற்றவாளிகளைப் போல்
அFபனஜ்'அலுல் முஸ்லிமீன கல்முஜ்ரிமீன்
நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
مَا لَكُمْ ۥ كَیْفَ تَحْكُمُوْنَ ۟ۚ
مَا لَـكُمْஉங்களுக்கு என்ன ஆனதுكَيْفَஎப்படிتَحْكُمُوْنَ‌ۚ‏நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்
மா லகும் கய்Fப தஹ்குமூன்
(சத்தியத்தை நிராகரிப்போரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?
اَمْ لَكُمْ كِتٰبٌ فِیْهِ تَدْرُسُوْنَ ۟ۙ
اَمْ لَـكُمْஉங்களுக்கு ?كِتٰبٌவேதம்فِيْهِஅதில்تَدْرُسُوْنَۙ‏படிக்கின்றீர்களா
அம் லகும் கிதாBபுன் Fபீஹி தத்ருஸூன்
அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா? அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?
اِنَّ لَكُمْ فِیْهِ لَمَا تَخَیَّرُوْنَ ۟ۚ
اِنَّநிச்சயமாகلَـكُمْஉங்களுக்குفِيْهِஅதில்لَمَا تَخَيَّرُوْنَ‌ۚ‏நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?
இன்ன லகும் Fபீஹி லமா தகய்யரூன்
நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தெரிந்தெடுத்துக் கொள்வதுவே (சரி) என்று அதில் இருக்கின்றதா,
اَمْ لَكُمْ اَیْمَانٌ عَلَیْنَا بَالِغَةٌ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۙ اِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُوْنَ ۟ۚ
اَمْ?لَـكُمْஉங்களுக்குاَيْمَانٌஒப்பந்தங்கள்عَلَيْنَاநம்மிடம்بَالِغَةٌஉறுதியானاِلٰى يَوْمِ الْقِيٰمَةِ‌ ۙமறுமை நாள் வரைاِنَّ لَـكُمْநிச்சயமாக உங்களுக்குلَمَا تَحْكُمُوْنَ‌ۚ‏நீங்கள் தீர்ப்பளிப்பதெல்லாம்
அம் லகும் அய்மானுன் 'அலய்னா Bபாலிகதுன் இலா யவ்மில் கியாமதி இன்ன லகும் லமா தஹ்குமூன்
அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?
سَلْهُمْ اَیُّهُمْ بِذٰلِكَ زَعِیْمٌ ۟ۚۛ
سَلْهُمْஅவர்களிடம் கேட்பீராகاَيُّهُمْஅவர்களில் யார்بِذٰلِكَஇதற்குزَعِيْمٌ ۛۚ‏பொறுப்பாளர்
ஸல்ஹும் அய்யுஹும் Bபிதா லிக Zஜ'ஈம்
(அவ்வாறெனில்) அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை (நபியே!) நீர் அவர்களிடம் கேட்பீராக.
اَمْ لَهُمْ شُرَكَآءُ ۛۚ فَلْیَاْتُوْا بِشُرَكَآىِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟
اَمْ لَهُمْஇவர்களுக்கு உண்டா?شُرَكَآءُ ۛۚகூட்டாளிகள்فَلْيَاْتُوْاஅவர்கள் கொண்டு வரட்டும்بِشُرَكَآٮِٕهِمْஅவர்களின் அந்த கூட்டாளிகளைاِنْ كَانُوْاஅவர்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
அம் லஹும் ஷுரகா'உ Fபல் ய'தூ Bபிஷுரகா 'இஹிம் இன் கானூ ஸாதிகீன்
அல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.
یَوْمَ یُكْشَفُ عَنْ سَاقٍ وَّیُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ فَلَا یَسْتَطِیْعُوْنَ ۟ۙ
يَوْمَநாளில்يُكْشَفُஅகற்றப்படுகின்றعَنْ سَاقٍகெண்டைக்காலை விட்டும்وَّيُدْعَوْنَஇன்னும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்اِلَى السُّجُوْدِசிரம்பணியفَلَا يَسْتَطِيْعُوْنَۙ‏ஆனால், அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
யவ்ம யுக்ஷFபு 'அன் ஸாகி(ன்)வ் வ யுத்'அவ்ன இலஸ் ஸுஜூதி Fபலா யஸ்ததீ'ஊன்
கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.
خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ وَقَدْ كَانُوْا یُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ ۟
خَاشِعَةًதாழ்ந்து இருக்கும்اَبْصَارُهُمْஅவர்களின் பார்வைகள்تَرْهَقُهُمْஅவர்களை சூழும்ذِلَّةٌ ؕஇழிவுوَقَدْ كَانُوْا يُدْعَوْنَஅவர்கள் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்اِلَى السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ‏தொழுகைக்கு/அவர்கள் சுகமானவர்களாக இருந்தபோது
காஷி'அதன் அBப்ஸாருஹும் தர்ஹகுஹும் தில்லது(ன்)வ் வ கத் கானூ யுத்'அவ்ன இலஸ்ஸுஜூதி வ ஹும் ஸாலிமூன்
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
فَذَرْنِیْ وَمَنْ یُّكَذِّبُ بِهٰذَا الْحَدِیْثِ ؕ سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَیْثُ لَا یَعْلَمُوْنَ ۟ۙ
فَذَرْنِىْஎன்னை(யும்) விட்டு விடுவீராக!وَمَنْ يُّكَذِّبُபொய்ப் பிப்பவர்களையும்بِهٰذَا الْحَـدِيْثِ‌ؕஇந்த வேதத்தைسَنَسْتَدْرِجُهُمْஅவர்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிப்போம்مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَۙ‏அவர்கள் அறியாத விதத்தில்
Fபதர்னீ வ ம(ன்)ய் யுகத்திBபு Bபிஹாதல் ஹதீதி ஸனஸ்தத் ரிஜுஹும் மின் ஹய்து லா யஃலமூன்
எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.
وَاُمْلِیْ لَهُمْ ؕ اِنَّ كَیْدِیْ مَتِیْنٌ ۟
وَاُمْلِىْநாம் தவணை அளிப்போம்لَهُمْ‌ؕஅவர்களுக்குاِنَّநிச்சயமாகكَيْدِىْஎனது சூழ்ச்சிمَتِيْنٌ‏மிக பலமானது
வ உம்லீ லஹும்; இன்ன கய்தீ மதீன்
அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன்; நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.
اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ ۟ۚ
اَمْ تَسْــٴَــلُهُمْஇவர்களிடம் நீர் கேட்கின்றீரா?اَجْرًاகூலி ஏதும்فَهُمْஅவர்கள்مِّنْ مَّغْرَمٍகடனால்مُّثْقَلُوْنَ‌ۚ‏சிரமப்படுகிறார்களா?
அம் தஸ்'அலுஹும் அஜ்ரன் Fபஹும் மின் மக்ரமின் முத்கலூன்
நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?
اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟
اَمْ عِنْدَهُمُஅவர்களிடம் இருக்கின்றதா?الْغَيْبُமறைவானவைفَهُمْஅவர்கள்يَكْتُبُوْنَ‏எழுதுகின்றனரா?
அம் 'இன்தஹுமுல் கய்Bபு Fபஹும் யக்துBபூன்
அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِ ۘ اِذْ نَادٰی وَهُوَ مَكْظُوْمٌ ۟ؕ
فَاصْبِرْபொறுமை காப்பீராக!لِحُكْمِதீர்ப்புக்காகرَبِّكَஉமது இறைவனின்وَلَا تَكُنْநீர் ஆகிவிடாதீர்كَصَاحِبِ الْحُوْتِ‌ۘமீனுடையவரைப்போல்اِذْ نَادٰىஅவர் அழைத்த நேரத்தில்وَهُوَஅவர்مَكْظُوْمٌؕ‏கடும் கோபமுடையவராக
Fபஸ்Bபிர் லிஹுக்மி ரBப்Bபிக வலா தகுன் கஸாஹிBபில் ஹூத்; இத் னாதா வ ஹுவ மக்ளூம்
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக; மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம்; அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:
لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَآءِ وَهُوَ مَذْمُوْمٌ ۟
لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌஅவரை அடைந்திருக்காவிட்டால்/அருள்مِّنْ رَّبِّهٖஅவருடைய இறைவனிடமிருந்துلَنُبِذَஎறியப்பட்டிருப்பார்بِالْعَرَآءِஒரு பெருவெளியில்وَهُوَஅவர் இருந்தார்مَذْمُوْمٌ‏பழிப்பிற்குரிய வராகத்தான்
லவ் லா அன் ததார கஹூ னிஃமதும் மிர் ரBப்Bபிஹீ லனுBபித Bபில்'அரா'இ வ ஹுவ மத்மூம்
அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.
فَاجْتَبٰىهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟
فَاجْتَبٰهُபிறகு, அவரை தேர்ந்தெடுத்தான்رَبُّهٗஅவரது இறைவன்فَجَعَلَهٗஅவரை ஆக்கினான்مِنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில்
Fபஜ்தBபாஹு ரBப்Bபுஹூ Fபஜ'அலஹூ மினஸ் ஸாலிஹீன்
ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.
وَاِنْ یَّكَادُ الَّذِیْنَ كَفَرُوْا لَیُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَیَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌ ۟ۘ
وَاِنْ يَّكَادُநிச்சயமாக நெருங்கினார்(கள்)الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்لَيُزْلِقُوْنَكَஉம்மை நீக்கிவிடبِاَبْصَارِهِمْதங்கள் பார்வைகளால்لَمَّا سَمِعُواஅவர்கள் செவியுற்றபோதுالذِّكْرَஅறிவுரையைوَيَقُوْلُوْنَஇன்னும் அவர்கள் கூறினார்கள்اِنَّهٗநிச்சயமாக அவர்لَمَجْنُوْنٌ‌ۘ‏ஒரு பைத்தியக்காரர்தான்
வ இ(ன்)ய்-யகாதுல் லதீன கFபரூ ல-யுZஜ்லிகூனக BபிஅBப்ஸாரிஹிம் லம்மா ஸமி'உத்-திக்ர வ யகூலூன இன்னஹூ லமஜ்னூன்
மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர்.
وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟۠
وَمَا هُوَஅது இல்லைاِلَّا ذِكْرٌஓர் அறிவுரையே தவிரلِّلْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களுக்கு
வமா ஹுவ இல்லா திக்ருல் லில்'ஆலமீன்
ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை.