93. ஸூரத்துள் ளுஹா(முற்பகல்)

மக்கீ, வசனங்கள்: 11

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالَّیْلِ اِذَا سَجٰی ۟ۙ
وَالَّيْلِஇரவின் மீது சத்தியமாகاِذَا سَجٰىۙ‏அது நிசப்தமாகும்போது
வல் லய்லி இத ஸஜா
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰی ۟ؕ
مَا وَدَّعَكَஉம்மை விடவில்லைرَبُّكَஉம் இறைவன்وَمَا قَلٰىؕ‏இன்னும் வெறுக்கவில்லை
ம வத் த'அக ரBப்Bபுக வ ம கலா
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
وَلَلْاٰخِرَةُ خَیْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰی ۟ؕ
وَلَـلْاٰخِرَةُஇன்னும் மறுமைதான்خَيْرٌமிகச் சிறந்ததுلَّكَஉமக்குمِنَ الْاُوْلٰىؕ‏இம்மையைவிட
வலல்ஆகிரது கய்ருல் லக மினல்-ஊலா
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
وَلَسَوْفَ یُعْطِیْكَ رَبُّكَ فَتَرْضٰی ۟ؕ
وَلَسَوْفَ يُعْطِيْكَஇன்னும் திட்டமாக உமக்குக் கொடுப்பான்رَبُّكَஉம் இறைவன்فَتَرْضٰىؕ‏ஆகவே நீர் திருப்தியடைவீர்
வ ல ஸவ்Fப யுஃதீக ரBப்Bபுக Fபதர்ளா
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
اَلَمْ یَجِدْكَ یَتِیْمًا فَاٰوٰی ۪۟
اَلَمْ يَجِدْكَஉம்மை அவன் காணவில்லையா?يَتِيْمًاஅநாதையாகفَاٰوٰى‏ஆகவே ஆதரித்தான்
அலம் ய ஜித்க யதீமன் Fப ஆவா
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
وَوَجَدَكَ ضَآلًّا فَهَدٰی ۪۟
وَوَجَدَكَஇன்னும் உம்மைக் கண்டான்ضَآ لًّاவழி அறியாதவராகفَهَدٰى‏ஆகவே அவன் நேர்வழி செலுத்தினான்
வ வ ஜதக ளால் லன் Fபஹதா
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
وَوَجَدَكَ عَآىِٕلًا فَاَغْنٰی ۟ؕ
وَوَجَدَكَஇன்னும் உம்மைக் கண்டான்عَآٮِٕلًاவறியவராகفَاَغْنٰىؕ‏ஆகவே செல்வந்தராக்கினான்
வ வ ஜதக 'ஆ-இலன் Fப அக்னா
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
فَاَمَّا الْیَتِیْمَ فَلَا تَقْهَرْ ۟ؕ
فَاَمَّاஆகالْيَتِيْمَஅநாதைக்குفَلَا تَقْهَرْؕ‏அநீதி செய்யாதீர்
Fப அம் மல் யதீம Fபல தக்ஹர்
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
وَاَمَّا السَّآىِٕلَ فَلَا تَنْهَرْ ۟ؕ
وَاَمَّاஆகالسَّآٮِٕلَயாசகரைفَلَا تَنْهَرْؕ‏கடிந்து கொள்ளாதீர்
வ அம் மஸ் ஸா-இல Fபல தன்ஹர்
யாசிப்போரை விரட்டாதீர்.
وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ۟۠
وَاَمَّاஆகبِنِعْمَةِஅருளைرَبِّكَஉம் இறைவனின்فَحَدِّثْ‏அறிவிப்பீராக
வ அம்ம Bபி னிஃமதி ரBப்Bபிக Fபஹத் தித்
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.