93. ஸூரத்துள் ளுஹா(முற்பகல்)

மக்கீ, வசனங்கள்: 11

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
وَالضُّحٰی ۟ۙ
وَالضُّحٰىۙ‏முற்பகலின் மீது சத்தியமாக
வள் ளுஹா
முஹம்மது ஜான்
முற்பகல் மீது சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
காலைப்பொழுதின் மீது சத்தியமாக!
IFT
ஒளிமிக்க பகலின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முற்பகல் மீது சத்தியமாக!
Saheeh International
By the morning brightness
وَالَّیْلِ اِذَا سَجٰی ۟ۙ
وَالَّيْلِஇரவின் மீது சத்தியமாகاِذَا سَجٰىۙ‏அது நிசப்தமாகும்போது
வல் லய்லி இத ஸஜா
முஹம்மது ஜான்
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
IFT
மேலும், இரவின் மீதும் சத்தியமாக, அது அமைதியாக வந்தடையும் போது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இருண்ட) இரவின் மீதும் சத்தியமாக – அது ஒடுங்கிவிட்டால் -
Saheeh International
And [by] the night when it covers with darkness,
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰی ۟ؕ
مَا وَدَّعَكَஉம்மை விடவில்லைرَبُّكَஉம் இறைவன்وَمَا قَلٰىؕ‏இன்னும் வெறுக்கவில்லை
ம வத் த'அக ரBப்Bபுக வ ம கலா
முஹம்மது ஜான்
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை.
IFT
(நபியே!) உம் இறைவன் உம்மை ஒருபோதும் கைவிடவில்லை; கோபம் கொள்ளவும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உமதிரட்சகன் உம்மைக் கைவிடவில்லை, (உம்மை) அவன் வெறுக்கவுமில்லை.
Saheeh International
Your Lord has not taken leave of you, [O Muhammad], nor has He detested [you].
وَلَلْاٰخِرَةُ خَیْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰی ۟ؕ
وَلَـلْاٰخِرَةُஇன்னும் மறுமைதான்خَيْرٌமிகச் சிறந்ததுلَّكَஉமக்குمِنَ الْاُوْلٰىؕ‏இம்மையைவிட
வலல்ஆகிரது கய்ருல் லக மினல்-ஊலா
முஹம்மது ஜான்
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(ஒவ்வொரு நாளும் உமது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையை விட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கிறது.
IFT
மேலும், திண்ணமாக, பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தைவிட உமக்கு மிகவும் சிறந்ததாயிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (மறுமையெனும்) பிந்தியதானது (இம்மையெனும்) முந்தியதைவிட உமக்கு மிகச் சிறந்ததாகும்.
Saheeh International
And the Hereafter is better for you than the first [life].
وَلَسَوْفَ یُعْطِیْكَ رَبُّكَ فَتَرْضٰی ۟ؕ
وَلَسَوْفَ يُعْطِيْكَஇன்னும் திட்டமாக உமக்குக் கொடுப்பான்رَبُّكَஉம் இறைவன்فَتَرْضٰىؕ‏ஆகவே நீர் திருப்தியடைவீர்
வ ல ஸவ்Fப யுஃதீக ரBப்Bபுக Fபதர்ளா
முஹம்மது ஜான்
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
அப்துல் ஹமீது பாகவி
உமது இறைவன் மேலும் (பல உயர் பதவிகளை) உமக்கு அளிப்பான். (அவற்றைக் கொண்டு) நீர் திருப்தியடைவீர்.
IFT
மேலும், விரைவில் உம் இறைவன் நீர் திருப்தியடைந்து விடுமளவு உமக்கு வழங்குவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், உமதிரட்சகன் அடுத்து(ப்பல உயர்பதவிகளை) உமக்கு அளிப்பான், அப்போது நீர் திருப்தியடைவீர்.
Saheeh International
And your Lord is going to give you, and you will be satisfied.
اَلَمْ یَجِدْكَ یَتِیْمًا فَاٰوٰی ۪۟
اَلَمْ يَجِدْكَஉம்மை அவன் காணவில்லையா?يَتِيْمًاஅநாதையாகفَاٰوٰى‏ஆகவே ஆதரித்தான்
அலம் ய ஜித்க யதீமன் Fப ஆவா
முஹம்மது ஜான்
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா?
IFT
அவன் உம்மை அநாதையாய்க் காணவில்லையா? பிறகு, புகலிடம் தந்தான் அல்லவா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உம்மை அவன் அநாதையாகக் கண்டுகொள்ளவில்லையா? ஆகவே, (அரவணைப்புப் பெற்று நீர் ஆறுதல் பெற) அவன் இடம் அளித்தான்.
Saheeh International
Did He not find you an orphan and give [you] refuge?
وَوَجَدَكَ ضَآلًّا فَهَدٰی ۪۟
وَوَجَدَكَஇன்னும் உம்மைக் கண்டான்ضَآ لًّاவழி அறியாதவராகفَهَدٰى‏ஆகவே அவன் நேர்வழி செலுத்தினான்
வ வ ஜதக ளால் லன் Fபஹதா
முஹம்மது ஜான்
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
அப்துல் ஹமீது பாகவி
திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான்.
IFT
மேலும், அவன் உம்மை வழியறியாதவராய்க் கண்டான்; பிறகு, நேர்வழி காண்பித்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (வேதம் என்ன மார்க்கம் என்னவென்பதைப்பற்றி) தெரியாதவராக உம்மை அவன் கண்டான், ஆகவே, (அதற்கு) அவன் (உமக்கு) வழி காட்டினான்.
Saheeh International
And He found you lost and guided [you],
وَوَجَدَكَ عَآىِٕلًا فَاَغْنٰی ۟ؕ
وَوَجَدَكَஇன்னும் உம்மைக் கண்டான்عَآٮِٕلًاவறியவராகفَاَغْنٰىؕ‏ஆகவே செல்வந்தராக்கினான்
வ வ ஜதக 'ஆ-இலன் Fப அக்னா
முஹம்மது ஜான்
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
முடைப்பட்டவராக உம்மைக் கண்ட அவன் (உம்மைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா?)
IFT
மேலும், அவன் உம்மை ஏழையாய்க் கண்டான்; பிறகு செல்வராய் ஆக்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தேவையுடையவராக அவன் உம்மைக் கண்டான், ஆகவே, (உமது தேவையை நிறைவேற்றி உம்மை) தேவையற்றவராக ஆக்கிவிட்டான்.
Saheeh International
And He found you poor and made [you] self-sufficient.
فَاَمَّا الْیَتِیْمَ فَلَا تَقْهَرْ ۟ؕ
فَاَمَّاஆகالْيَتِيْمَஅநாதைக்குفَلَا تَقْهَرْؕ‏அநீதி செய்யாதீர்
Fப அம் மல் யதீம Fபல தக்ஹர்
முஹம்மது ஜான்
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர்.
IFT
ஆகவே, நீர் அநாதைகளுடன் கடுமையாய் நடந்து கொள்ளாதீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்!
Saheeh International
So as for the orphan, do not oppress [him].
وَاَمَّا السَّآىِٕلَ فَلَا تَنْهَرْ ۟ؕ
وَاَمَّاஆகالسَّآٮِٕلَயாசகரைفَلَا تَنْهَرْؕ‏கடிந்து கொள்ளாதீர்
வ அம் மஸ் ஸா-இல Fபல தன்ஹர்
முஹம்மது ஜான்
யாசிப்போரை விரட்டாதீர்.
அப்துல் ஹமீது பாகவி
யாசிப்பவரை வெருட்டாதீர்.
IFT
மேலும், யாசகம் கேட்பவரை விரட்டாதீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (தர்மம்) கேட்பவரை விரட்டாதீர்!
Saheeh International
And as for the petitioner, do not repel [him].
وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ۟۠
وَاَمَّاஆகبِنِعْمَةِஅருளைرَبِّكَஉம் இறைவனின்فَحَدِّثْ‏அறிவிப்பீராக
வ அம்ம Bபி னிஃமதி ரBப்Bபிக Fபஹத் தித்
முஹம்மது ஜான்
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
(உம்மீது புரிந்துள்ள) உமது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக!
IFT
மேலும், உம் இறைவனின் அருட்கொடைபற்றி எடுத்துரைப்பீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (உம்மீது புரிந்துள்ள) உமதிரட்சகனின் அருட்கொடையைப்பற்றி (அவனுக்கு நன்றி தெரிவிக்கும்பொருட்டு) அறிவித்துக் கொண்டிருப்பீராக!
Saheeh International
But as for the favor of your Lord, report [it].