11. ஸூரத்து ஹூது

மக்கீ, வசனங்கள்: 123

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
الٓرٰ ۫ كِتٰبٌ اُحْكِمَتْ اٰیٰتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِیْمٍ خَبِیْرٍ ۟ۙ
الٓرٰ‌அலிஃப்; லாம்; றா.كِتٰبٌஒரு வேத நூல்اُحْكِمَتْஉறுதியாக்கப்பட்டனاٰيٰـتُهٗஇதன் வசனங்கள்ثُمَّபிறகுفُصِّلَتْதெளிவாக்கப்பட்டனمِنْஇருந்துلَّدُنْஇடம், புறம்حَكِيْمٍமகா ஞானவான்خَبِيْرٍۙ‏ஆழ்ந்தறிபவன்
அலிFப்-லாம்-ரா; கிதாBபுன் உஹ்கிமத் ஆயாதுஹூ தும்ம Fபுஸ்ஸிலத் மில் லதுன் ஹகீமின் கBபீர்
அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும்; இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன- மேலும், (இவை யாவற்றையும்) நன்கறிபவனும், ஞானம் மிக்கோனுமாகிய(இறை)வனிடம் இருந்து(வந்து)ள்ளன.
اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنَّنِیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ وَّبَشِیْرٌ ۟ۙ
اَلَّا تَعْبُدُوْۤاவணங்காதீர்கள் என்றுاِلَّا اللّٰهَ‌ ؕஅல்லாஹ்வைத் தவிரاِنَّنِىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குمِّنْهُஅவனிடமிருந்துنَذِيْرٌஎச்சரிப்பாளன்وَّبَشِيْرٌ ۙ‏இன்னும் நற்செய்தியாளன்
அல்லா தஃBபுதூ இல்லல் லாஹ்; இன்னனீ லகும் மின்ஹு னதீரு(ன்)வ் வ Bபஷீர்
நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள். “நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும், நான் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்” (என்றும்).
وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّیُؤْتِ كُلَّ ذِیْ فَضْلٍ فَضْلَهٗ ؕ وَاِنْ تَوَلَّوْا فَاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ كَبِیْرٍ ۟
وَّاَنِ اسْتَغْفِرُوْاஇன்னும் பாவமன்னிப்புக் கோருங்கள் என்றுرَبَّكُمْஉங்கள் இறைவனிடம்ثُمَّபிறகுتُوْبُوْۤاதிரும்புங்கள்اِلَيْهِஅவன் பக்கம்يُمَتِّعْكُمْசுகமளிப்பான்/உங்களைمَّتَاعًاஒரு சுகம்حَسَنًاஅழகியதுاِلٰٓىவரைاَجَلٍஒரு காலம்مُّسَمًّىகுறிப்பிடப்பட்டதுوَ يُؤْتِஇன்னும் கொடுப்பான்كُلَّஒவ்வொருذِىْ فَضْلٍஅதிகமுடையவருக்குفَضْلَهٗஅவருடைய அதிகத்தைوَاِنْ تَوَلَّوْاநீங்கள் புறக்கணித்தால்فَاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைيَوْمٍஒரு நாளின்كَبِيْرٍ‏மாபெரும்
வ அனிஸ் தக்Fபிரூ ரBப்Bபகும் தும்ம தூBபூ இலய்ஹி யுமத்திஃகும் மதா'அன் ஹஸனன் இலா அஜலிம் முஸம்ம(ன்)வ் வ யு'தி குல்ல தீ Fபள்லின் Fபள்லஹூ வ இன் தவல்லவ் Fப இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் கBபீர்
“நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்; ஆனால் நீங்கள் (ஈமான் கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்படுகிறேன்” (என்றும்).
اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ ۚ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اِلَىபக்கமேاللّٰهِஅல்லாஹ்வின்مَرْجِعُكُمْ‌ۚஉங்கள் மீளுமிடம்وَهُوَஅவன்عَلٰىமீதுكُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
இலல் லாஹி மர்ஜி'உகும் வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
“அல்லாஹ்விடமே நீங்கள் மீண்டு வர வேண்டியுள்ளது; அவன் எல்லாப்பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்” (என்றும் நபியே! நீர் கூறுவீராக).
اَلَاۤ اِنَّهُمْ یَثْنُوْنَ صُدُوْرَهُمْ لِیَسْتَخْفُوْا مِنْهُ ؕ اَلَا حِیْنَ یَسْتَغْشُوْنَ ثِیَابَهُمْ ۙ یَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۚ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
اَلَاۤஅறிவீராகاِنَّهُمْநிச்சயமாக இவர்கள்يَثْنُوْنَதிருப்புகின்றனர்صُدُوْرَهُمْநெஞ்சங்களை/தங்கள்لِيَسْتَخْفُوْاஅவர்கள் மறைப்பதற்காகمِنْهُ‌ؕஅவனிடமிருந்துاَلَاஅறிவீராகحِيْنَநேரம், சமயம்يَسْتَغْشُوْنَமறைத்துக் கொள்கிறார்கள்ثِيَابَهُمْۙதங்கள் ஆடைகளால்يَعْلَمُஅறிகின்றான்مَاஎதைيُسِرُّوْنَமறைக்கிறார்கள்وَمَاஇன்னும் எதைيُعْلِنُوْنَ‌ۚபகிரங்கப்படுத்துகிறார்கள்اِنَّهٗநிச்சயமாக அவன்عَلِيْمٌۢநன்கறிபவன்بِذَاتِ الصُّدُوْرِ‏நெஞ்சங்களில் உள்ளவற்றை
அலா இன்னஹும் யத்னூன ஸுதூரஹும் லியஸ்தக்Fபூ மின்ஹ்; அலா ஹீன யஸ்தக்ஷூன தியாBபஹும் யஃலமு மா யுஸிர்ரூன வமா யுஃலினூன்; இன்னஹூ 'அலீமுன் Bபிதாதிஸ் ஸுதூர்
“அவர்கள் தங்களை (அல்லாஹ்விடமிருந்து) மறைத்துக் கொள்வதற்காகத் தங்கள் இருதயங்களை (மறைத்து) மூடுகிறார்கள்! அவர்கள் தம் ஆடைகளால் (தம்மைப்) போர்த்திக்கொண்டாலும், அவர்கள் மறைத்து வைப்பதையும், வெளிப்படையாகக் காட்டுவதையும் அவன் அறிகிறான் - ஏனெனில் நிச்சயமாக அவன் இதயங்களின் (இரகசியங்கள்) யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான்” (என்பதை அறிந்து கொள்வீர்களாக)!
وَمَا مِنْ دَآبَّةٍ فِی الْاَرْضِ اِلَّا عَلَی اللّٰهِ رِزْقُهَا وَیَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ؕ كُلٌّ فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟
وَمَاஇல்லைمِنْ دَآ بَّةٍஎந்த/ஓர் உயிரினம்فِى الْاَرْضِபூமியில்اِلَّاதவிரعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்வின்رِزْقُهَاஅதற்கு உணவளிப்பதுوَ يَعْلَمُஇன்னும் அறிகின்றான்مُسْتَقَرَّهَاஅவற்றின் தங்குமிடத்தைوَمُسْتَوْدَعَهَا‌ؕஇன்னும் அவற்றின் அடங்குமிடத்தைكُلٌّஎல்லாம்فِىْ كِتٰبٍபதிவேட்டில்مُّبِيْنٍ‏தெளிவான(து)
வமா மின் தாBப்Bபதின் Fபில் அர்ளி இல்லா 'அலல் லாஹி ரிZஜ்குஹா வ யஃலமு முஸ்தகர்ரஹா வ முஸ்தவ்த'அஹா; குல்லுன் Fபீ கிதாBபிம் முBபீன்
இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.
وَهُوَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ وَّكَانَ عَرْشُهٗ عَلَی الْمَآءِ لِیَبْلُوَكُمْ اَیُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَلَىِٕنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْ بَعْدِ الْمَوْتِ لَیَقُوْلَنَّ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
وَ هُوَஅவன்الَّذِىْஎத்தகையவன்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களைوَالْاَرْضَஇன்னும் பூமியைفِىْஇல்سِتَّةِஆறுاَ يَّامٍநாள்கள்وَّكَانَஇன்னும் இருந்ததுعَرْشُهٗஅவனுடைய அர்ஷுعَلَىமீதுالْمَآءِநீர்لِيَبْلُوَكُمْஅவன் உங்களை சோதிப்பதற்காகاَيُّكُمْஉங்களில் யார்اَحْسَنُமிக அழகியவர்عَمَلًا ؕசெயலால்وَلَٮِٕنْ قُلْتَநீர் கூறினால்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்مَّبْعُوْثُوْنَஎழுப்பப்படுவீர்கள்مِنْۢ بَعْدِபின்னர்الْمَوْتِஇறப்புلَيَـقُوْلَنَّநிச்சயம் கூறுவார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்கள்اِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரسِحْرٌசூனியமேمُّبِيْنٌ‏பகிரங்கமான(து)
வ ஹுவல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Fபீ ஸித்ததி அய்யாமி(ன்)வ் வ கான 'அர்ஷுஹூ அலல் மா'இ லியBப்லுவகும் அய்யுகும் அஹ்ஸனு 'அமலா; வ ல'இன் குல்த இன்னகும் மBப்'ஊதூன மின் Bபஃதில் மவ்தி ல யகூலன்னல் லதீன கFபரூ இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
وَلَىِٕنْ اَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ اِلٰۤی اُمَّةٍ مَّعْدُوْدَةٍ لَّیَقُوْلُنَّ مَا یَحْبِسُهٗ ؕ اَلَا یَوْمَ یَاْتِیْهِمْ لَیْسَ مَصْرُوْفًا عَنْهُمْ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
وَلَٮِٕنْ اَخَّرْنَاநாம் பிற்படுத்தினால்عَنْهُمُஅவர்களை விட்டுالْعَذَابَவேதனையைاِلٰٓىவரைاُمَّةٍஒரு காலம்مَّعْدُوْدَةٍஎண்ணப்பட்டதுلَّيَـقُوْلُنَّநிச்சயம் கூறுவார்கள்مَاஎது?يَحْبِسُهٗؕதடுக்கின்றது/அதைاَلَاஅறிந்துகொள்ளுங்கள்!يَوْمَநாளில்يَاْتِيْهِمْஅது வரும்/அவர்களிடம்لَـيْسَ مَصْرُوْفًاஅறவே திருப்பப்படாதுعَنْهُمْஅவர்களை விட்டுوَحَاقَஇன்னும் சூழும்بِهِمْஅவர்களைمَّاஎதுكَانُوْاஇருந்தனர்بِهٖஅதைيَسْتَهْزِءُوْنَ‏பரிகாசம்செய்கின்றனர்
வல'இன் அகர்னா 'அன்ஹுமுல் 'அதாBப இலா உம்மதிம் மஃதூததில் ல யகூலுன்ன மா யஹ்Bபிஸுஹ்; அலா யவ்ம ய'தீஹிம் லய்ஸ மஸ்ரூFபன் 'அன்ஹும் வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
(குஃப்ரின் காரணமாக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய) வேதனையை ஒரு குறித்தகாலம் வரை நாம் பிற்படுத்தினால் “அதைத் தடுத்தது யாது?” என்று அவர்கள் நிச்சயமாக (ஏளனமாகக்) கேட்பார்கள்; அவர்களுக்கு வேதனை வரும் நாளில் அவர்களை விட்டும் (அது) தடுக்கப்படாது என்பதையும், எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
وَلَىِٕنْ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنٰهَا مِنْهُ ۚ اِنَّهٗ لَیَـُٔوْسٌ كَفُوْرٌ ۟
وَلَٮِٕنْ اَذَقْنَاநாம் சுவைக்க வைத்தால்الْاِنْسَانَமனிதனுக்குمِنَّاநம்மிடமிருந்துرَحْمَةًஓர் அருளைثُمَّபிறகுنَزَعْنٰهَاநீக்கினோம்/அதைمِنْهُ‌ۚஅவனிடமிருந்துاِنَّهٗநிச்சயமாக அவன்لَيَــــٴُـوْسٌநிராசையாளனாகكَفُوْرٌ‏நன்றி கெட்டவனாக
வ ல'இன் அதக்னல் இன்ஸான மின்னா ரஹ்மதன் தும்ம னZஜ'னாஹா மின்ஹு, இன்னஹூ லய'ஊஸுன் கFபூர்
நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து; பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.
وَلَىِٕنْ اَذَقْنٰهُ نَعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ ذَهَبَ السَّیِّاٰتُ عَنِّیْ ؕ اِنَّهٗ لَفَرِحٌ فَخُوْرٌ ۟ۙ
وَلَٮِٕنْ اَذَقْنٰهُநாம் அவனுக்கு சுவைக்க வைத்தால்نَـعْمَآءَஇன்பத்தைبَعْدَபின்னர்ضَرَّآءَதுன்பம்مَسَّتْهُஅவனுக்கு ஏற்பட்ட(து)لَيَـقُوْلَنَّநிச்சயம் கூறுவான்ذَهَبَசென்றனالسَّيِّاٰتُதீமைகள்عَنِّىْ‌ ؕஎன்னை விட்டுاِنَّهٗநிச்சயமாக அவன்لَـفَرِحٌமகிழ்பவனாகفَخُوْرٌۙ‏தற்பெருமையாளனாக
வல'இன் அதக்னாஹு னஃமா'அ Bபஃத ளர்ரா'அ மஸ்ஸத் ஹு ல யகூலன்ன தஹBபஸ் ஸய்யிஆது 'அன்னீ; இன்னஹூ லFபரிஹுன் Fபகூர்
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், “என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன” என்று நிச்சயமாகக் கூறுவான்; நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான்.
اِلَّا الَّذِیْنَ صَبَرُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِیْرٌ ۟
اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்صَبَرُوْاசகித்தார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِؕநன்மைகளைاُولٰٓٮِٕكَஅவர்கள்لَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்புوَّاَجْرٌஇன்னும் கூலிكَبِيْرٌ‏பெரிய(து)
இல்லல் லதீன ஸBபரூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி உலா'இக லஹும் மக்Fபிரது(ன்)வ் வ அஜ்ருன் கBபீர்
ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.
فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا یُوْحٰۤی اِلَیْكَ وَضَآىِٕقٌ بِهٖ صَدْرُكَ اَنْ یَّقُوْلُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ كَنْزٌ اَوْ جَآءَ مَعَهٗ مَلَكٌ ؕ اِنَّمَاۤ اَنْتَ نَذِیْرٌ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ وَّكِیْلٌ ۟ؕ
فَلَعَلَّكَநீர் ஆகலாம்تَارِكٌۢவிட்டுவிடக்கூடிய வராகبَعْضَசிலவற்றைمَاஎவைيُوْحٰٓىவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَيْكَஉமக்குوَضَآٮِٕقٌ ۢஇன்னும் நெருக்கடியாகبِهٖஅதன் மூலம்صَدْرُكَநெஞ்சம்/உம்اَنْ يَّقُوْلُوْاஅவர்கள் கூறுவதுلَوْلَاۤ اُنْزِلَஇறக்கப்பட வேண்டாமா?عَلَيْهِஅவருக்குكَنْزٌஒரு பொக்கிஷம்اَوْஅல்லதுجَآءَவரவேண்டாமாمَعَهٗஅவருடன்مَلَكٌ‌ ؕஒரு வானவர்اِنَّمَاۤ اَنْتَநீரெல்லாம்نَذِيْرٌ‌ ؕஓர் எச்சரிப்பாளர்தான்وَاللّٰهُஅல்லாஹ்தான்عَلٰىமீதுكُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்وَّكِيْلٌ ؕ‏பொறுப்பாளன்
Fபல'அல்லக தாரிகும் Bபஃள மா யூஹா இலய்க வ ளா'இகும் Bபிஹீ ஸத்ருக அய் யகூலூ லவ் லா உன்Zஜில 'அலய்ஹி கன்Zஜுன் அவ் ஜா'அ ம'அஹூ மலக்; இன்னமா அன்த னதீர்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இ(ன்)வ் வகீல்
(நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ قُلْ فَاْتُوْا بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهٖ مُفْتَرَیٰتٍ وَّادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اَمْஅல்லதுيَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்افْتَـرٰٮهُ‌அவர் புனைந்தார்/இதைقُلْகூறுவீராகفَاْتُوْاவாருங்கள்بِعَشْرِகொண்டு/பத்துسُوَرٍஅத்தியாயங்கள்مِّثْلِهٖஇது போன்றمُفْتَرَيٰتٍபுனையப்பட்டவைوَّ ادْعُوْاஇன்னும் நீங்கள் அழையுங்கள்مَنِஎவர்اسْتَطَعْتُمْசாத்தியப்பட்டீர்கள்مِّنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
அம் யகூலூனFப் தராஹு குல் Fபாதூ Bபி'அஷ்ரி ஸுவரிம் மித்லிஹீ முFப்தரயாதி(ன்)வ் வத்'ஊ மனிஸ் ததஃதும் மின் தூனில் லாஹி இன் குன்தும் ஸாதிகீன்
அல்லது ”இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்கள்? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
فَاِلَّمْ یَسْتَجِیْبُوْا لَكُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اُنْزِلَ بِعِلْمِ اللّٰهِ وَاَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟
فَاِلَّمْ يَسْتَجِيْبُوْاஅவர்கள் பதில் அளிக்கவில்லையெனில்لَـكُمْஉங்களுக்குفَاعْلَمُوْۤاஅறியுங்கள்اَنَّمَاۤஎல்லாம்اُنْزِلَஇறக்கப்பட்டதுبِعِلْمِஅறிவைக் கொண்டேاللّٰهِஅல்லாஹ்வின்وَاَنْ لَّاۤஇன்னும் நிச்சயமாக இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ‌ۚஅவன்فَهَلْஆகவேاَنْتُمْ مُّسْلِمُوْنَ‏நீங்கள் முஸ்லிம்கள்
Fப இல் லம் யஸ்தஜீBபூ லகும் Fபஃலமூ அன்னமா உன்Zஜில்ல Bபி'இல்மில் லாஹி வ அல் லா இலாஹ இல்லா ஹுவ Fபஹல் அன்தும் முஸ்லிமூன்
அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கா விட்டால்: “அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே அருளப்பட்டது; இன்னும் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறில்லை; இனியேனும் நீங்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுவீர்களா?” (என்று கூறவும்.)
مَنْ كَانَ یُرِیْدُ الْحَیٰوةَ الدُّنْیَا وَزِیْنَتَهَا نُوَفِّ اِلَیْهِمْ اَعْمَالَهُمْ فِیْهَا وَهُمْ فِیْهَا لَا یُبْخَسُوْنَ ۟
مَنْஎவர்(கள்)كَانَஇருந்தார்(கள்)يُرِيْدُநாடுவார்(கள்)الْحَيٰوةَவாழ்க்கையைالدُّنْيَاஉலக(ம்)وَ زِيْنَتَهَاஇன்னும் அதன் அலங்காரத்தைنُوَفِّமுழுமையாக கூலி தருவோம்اِلَيْهِمْஅவர்களுக்குاَعْمَالَهُمْஅவர்களின் செயல்களைفِيْهَاஅதில்وَهُمْஅவர்கள்فِيْهَاஅதில்لَا يُبْخَسُوْنَ‏குறைக்கப்பட மாட்டார்கள்
மன் கான யுரீதுல் ஹயாதத் துன்யா வ Zஜீனதஹா னுவFப்Fபி இலய்ஹிம் அ'மா லஹும் Fபீஹா வ ஹும் Fபீஹா லா யுBப்கஸூன்
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَیْسَ لَهُمْ فِی الْاٰخِرَةِ اِلَّا النَّارُ ۖؗ وَحَبِطَ مَا صَنَعُوْا فِیْهَا وَبٰطِلٌ مَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்الَّذِيْنَஎவர்கள்لَـيْسَஇல்லைلَهُمْஅவர்களுக்குفِىْ الْاٰخِرَةِமறுமையில்اِلَّا النَّارُ‌ ‌ۖ தவிர/நெருப்புوَحَبِطَஇன்னும் அழிந்தனمَاஎவைصَنَعُوْاஅவர்கள் செய்தனர்فِيْهَاஅதில்وَبٰطِلٌஇன்னும் வீணானவையேمَّاஎவைكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்வார்கள்
உலா'இகல் லதீன லய்ஸ லஹும் Fபில் ஆகிரதி இல்லன் னாரு வ ஹBபித மா ஸன'ஊ Fபீஹா வ Bபாதிலும் மா கானூ யஃமலூன்
இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!
اَفَمَنْ كَانَ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَیَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ اُولٰٓىِٕكَ یُؤْمِنُوْنَ بِهٖ ؕ وَمَنْ یَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ ۚ فَلَا تَكُ فِیْ مِرْیَةٍ مِّنْهُ ۗ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
اَفَمَنْஎவர்(கள்)?كَانَஇருக்கின்றார்(கள்)عَلٰىமீதுبَيِّنَةٍதெளிவான அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّهٖதன் இறைவன்وَيَتْلُوْهُஇன்னும் ஓதுகிறார்/அதைشَاهِدٌசாட்சியாளர்مِّنْهُஅவன் புறத்திலிருந்துوَمِنْ قَبْلِهٖஇன்னும் அதற்கு முன்னர்كِتٰبُவேதம்مُوْسٰٓىமூஸாவின்اِمَامًاவழிகாட்டியாகوَّرَحْمَةً‌  ؕஇன்னும் அருளாகاُولٰٓٮِٕكَஅவர்கள்يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்வார்கள்بِهٖ‌ ؕஇதைوَمَنْஎவர்يَّكْفُرْநிராகரிப்பார்بِهٖஇதைمِنَ الْاَحْزَابِகூட்டங்களில்فَالنَّارُநரகம்مَوْعِدُهٗ‌ ۚஅவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாகும்فَلَا تَكُஇருக்காதீர்فِىْ مِرْيَةٍசந்தேகத்தில்مِّنْهُ‌இதில்اِنَّهُநிச்சயமாக இதுالْحَـقُّஉண்மைதான்مِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்وَلٰـكِنَّஎனினும்اَكْثَرَபலர்النَّاسِமக்களில்لَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
அFபமன் கான 'அல Bபய்யினதிம் மிர் ரBப்Bபிஹீ வ யத்லூஹு ஷாஹிதும் மின்ஹு வ மின் கBப்லிஹீ கிதாBபு மூஸா இமாம(ன்)வ் வ ரஹ்மஹ்; உலா 'இக யு'மினூன Bபிஹ்; வ மய் யக்Fபுர் Bபிஹீ மினல் அஹ்ZஜாBபி Fபன் னாரு மவ்'இதுஹ்; Fபலா தகு Fபீ மிர்யதிம் மின்ஹ்; இன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிக வ லாகின்ன அக்தரன் னாஸி லா யு'மினூன்
எவர் தன் இறைவனிடமிருந்து (பெற்ற)தெளிவின் மீது இருக்கிறாரோ மேலும் இறைவனிடமிருந்து ஒரு சாட்சியாளர் எவரிடம் (பக்க பலமாய்) வந்திருக்கிறாரோ மேலும் இதற்கு முன்னால் மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறதோ அவர்கள் தான் இதனை நம்புவார்கள்; ஆனால் (இக்) கூட்டதார்களில் எவர் இதை நிராகரிக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் நரக நெருப்பேயாகும். ஆதலால் (நபியே!) இதைப் பற்றி நீர் சந்தேகத்திலிருக்க வேண்டாம் - இ(வ்வேதமான)து நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا ؕ اُولٰٓىِٕكَ یُعْرَضُوْنَ عَلٰی رَبِّهِمْ وَیَقُوْلُ الْاَشْهَادُ هٰۤؤُلَآءِ الَّذِیْنَ كَذَبُوْا عَلٰی رَبِّهِمْ ۚ اَلَا لَعْنَةُ اللّٰهِ عَلَی الظّٰلِمِیْنَ ۟ۙ
وَمَنْயார்?اَظْلَمُமகா அநியாயக்காரன்مِمَّنِஎவரைவிடافْتَـرٰىபுனைந்தார்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுكَذِبًا‌ ؕபொய்யைاُولٰٓٮِٕكَஅவர்கள்يُعْرَضُوْنَஅவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள்عَلٰىமுன்رَبِّهِمْதங்கள் இறைவன்وَ يَقُوْلُகூறுவார்(கள்)الْاَشْهَادُசாட்சியாளர்கள்هٰٓؤُلَاۤءِஇவர்கள்الَّذِيْنَஎவர்கள்كَذَبُوْاபொய்யுரைத்தார்கள்عَلٰىமீதுرَبِّهِمْ‌ ۚதங்கள் இறைவன்اَلَاஅறிந்துகொள்ளுங்கள்!لَـعْنَةُசாபம்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَىமீதுالظّٰلِمِيْنَۙ‏அநியாயக்காரர்கள்
வ மன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபா; உலா'இக யுஃரளூன 'அலா ரBப்Bபிஹிம் வ யகூலுல் அஷ்ஹா துஹா'உலா'இல் லதீன கதBபூ 'அலா ரBப்Bபிஹிம்; அலா லஃனதுல் லாஹி அலள் ளாலிமீன்
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; “இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்” என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.
الَّذِیْنَ یَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ؕ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்يَصُدُّوْنَதடுப்பார்கள்عَنْவிட்டுسَبِيْلِபாதைاللّٰهِஅல்லாஹ்வின்وَيَبْغُوْنَهَاஇன்னும் தேடுவார்கள்/அதில்عِوَجًا ؕகோணலைوَهُمْஅவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைهُمْஅவர்கள்كٰفِرُوْنَ‏நிராகரிப்பவர்கள்
அல்லதீன யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி வ யBப்கூனஹா 'இவஜ(ன்)வ் வ ஹும் Bபில் ஆகிரதிஹும் காFபிரூன்
அவர்கள் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கின்றார்கள்; மேலும் அதில் கோணலையும் உண்டுபண்ண விரும்புகிறார்கள் - இவர்கள் தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்.
اُولٰٓىِٕكَ لَمْ یَكُوْنُوْا مُعْجِزِیْنَ فِی الْاَرْضِ وَمَا كَانَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِیَآءَ ۘ یُضٰعَفُ لَهُمُ الْعَذَابُ ؕ مَا كَانُوْا یَسْتَطِیْعُوْنَ السَّمْعَ وَمَا كَانُوْا یُبْصِرُوْنَ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்لَمْ يَكُوْنُوْاஅவர்கள் இருக்கவில்லைمُعْجِزِيْنَபலவீனப்படுத்து பவர்களாகفِى الْاَرْضِபூமியில்وَمَا كَانَஇன்னும் இல்லைلَهُمْஅவர்களுக்குمِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمِنْ اَوْلِيَآءَ‌ ۘஉதவியாளர்கள்எவரும்يُضٰعَفُபன்மடங்காக்கப்படும்لَهُمُஅவர்களுக்குالْعَذَابُ‌ ؕவேதனைمَا كَانُوْاஅவர்கள் இருக்கவில்லைيَسْتَطِيْعُوْنَசக்தி பெறுகிறார்கள்السَّمْعَசெவியேற்கوَمَا كَانُوْاஇன்னும் அவர்கள் இருக்கவில்லைيُبْصِرُوْنَ‏பார்ப்பவர்களாக
உலா'இக லம் யகூனூ முஃஜிZஜீன Fபில் அர்ளி வமா கான லஹும் மின் தூனில் லாஹி மின் அவ்லியா'; யுளா'அFபு லஹுமுல் 'அதாBப்; மா கானூ யஸ்ததீ'ஊனஸ் ஸம்'அ வமா கானூ யுBப்ஸிரூன்
இவர்கள் பூமியில் (அல்லாஹ் திட்டமிட்டிருப்பதைத்) தோற்கடித்து விடமுடியாது, அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு வேறு பாதுகாவலர்கள் இல்லை; இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும்; அவர்கள் (நல்லவற்றைக்) கேட்கும் சக்தியை இழந்து விட்டார்கள் - இவர்கள் (நேர்வழியைக்) காணவும் மாட்டார்கள்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்الَّذِيْنَஎவர்கள்خَسِرُوْۤاநட்டமடைந்தார்கள்اَنْفُسَهُمْதமக்குத் தாமேوَضَلَّஇன்னும் மறைந்துவிடும்عَنْهُمْஅவர்களை விட்டுمَّاஎவைكَانُوْاஇருந்தனர்يَفْتَرُوْنَ‏அவர்கள் புனைவார்கள்
உலா'இகல் லதீன கஸிரூ அன்Fபுஸஹும் வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
இவர்கள்தாம் தங்களுக்கு தாங்களே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்கள்; இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) யாவும் (தீர்ப்பு நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும்.
لَا جَرَمَ اَنَّهُمْ فِی الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ ۟
لَا جَرَمَசந்தேகமின்றிاَ نَّهُمْநிச்சயமாக அவர்கள்فِى الْاٰخِرَةِமறுமையில்هُمُ الْاَخْسَرُوْنَ‏மகா நஷ்டவாளிகள்
லா ஜரம அன்னஹும் Fபில் ஆகிரதி ஹுமுல் அக்ஸரூன்
நிச்சயமாக இவர்கள் மறுமையில் பெரும் நஷ்டமடைந்தவர்களாக இருப்பார்கள் என்பதில் (சிறிதும்) சந்தேகமில்லை.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَخْبَتُوْۤا اِلٰی رَبِّهِمْ ۙ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தனர்الصّٰلِحٰتِநன்மைகளைوَاَخْبَـتُوْۤاஇன்னும் பயத்துடனும் மிக்க பணிவுடனும் திரும்பினார்கள்اِلٰىபக்கம்رَبِّهِمْۙதங்கள் இறைவனின்اُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ الْجَـنَّةِ‌ؕசொர்க்கவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ அக்Bபதூ இலா ரBப்Bபிஹிம் உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்து இன்னும் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகின்றார்களோ அவர்களே சுவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
مَثَلُ الْفَرِیْقَیْنِ كَالْاَعْمٰی وَالْاَصَمِّ وَالْبَصِیْرِ وَالسَّمِیْعِ ؕ هَلْ یَسْتَوِیٰنِ مَثَلًا ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟۠
مَثَلُஉதாரணம்الْفَرِيْقَيْنِஇரு பிரிவினரின்كَالْاَعْمٰىகுருடனைப் போன்றுوَالْاَصَمِّஇன்னும் செவிடன்وَالْبَـصِيْرِஇன்னும் பார்ப்பவன்وَالسَّمِيْعِ‌ ؕஇன்னும் கேட்பவன்هَلْ يَسْتَوِيٰنِஇருவரும் சமமாவார்களா?مَثَلًا‌ ؕஉதாரணத்தால்اَفَلَا تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
மதலுல் Fபரீகய்னி கல் அஃமா வல் அஸம்மி வல்Bபஸீரி வஸ்ஸமீ'; ஹல் யஸ்தவியானி மதலா; அFபலா ததக்கரூன்
இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖۤ ؗ اِنِّیْ لَكُمْ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاஅனுப்பினோம்نُوْحًا اِلٰى قَوْمِهٖۤநூஹை/அவருடைய மக்களிடம்اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குنَذِيْرٌஓர் எச்சரிப்பாளன்مُّبِيْنٌۙ‏பகிரங்கமான
வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ இன்னீ லகும் னதீரும் முBபீன்
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.”
اَنْ لَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ اَلِیْمٍ ۟
اَنْ لَّا تَعْبُدُوْۤاநீங்கள் வணங்காதீர்கள்اِلَّاதவிரاللّٰهَ‌ؕஅல்லாஹ்اِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைيَوْمٍநாளின்اَلِيْمٍ‏துன்புறுத்தக் கூடியது
அல் லா தஃBபுதூ இல்லல் லாஹ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் அலீம்
“நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சுகிறேன்” (என்று கூறினார்).
فَقَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰىكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰىكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِیْنَ هُمْ اَرَاذِلُنَا بَادِیَ الرَّاْیِ ۚ وَمَا نَرٰی لَكُمْ عَلَیْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِیْنَ ۟
فَقَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்مِنْ قَوْمِهٖஅவருடைய சமுதாயத்தில்مَاநாம் பார்க்கவில்லைنَرٰٮكَஉம்மைاِلَّاதவிரبَشَرًاஒரு மனிதராகمِّثْلَنَاஎங்களைப் போன்றوَمَاநாம் பார்க்கவில்லைنَرٰٮكَஉம்மைاتَّبَعَكَபின்பற்றினார்/உம்மைاِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்هُمْஅவர்கள்اَرَاذِلُــنَاஎங்களில் மிக இழிவானவர்கள்بَادِىَ الرَّاْىِ‌ۚவெளிப் பார்வையில்وَمَا نَرٰىநாங்கள்பார்க்கவில்லைلَـكُمْஉங்களுக்குعَلَيْنَاஎங்களைவிடمِنْ فَضْلٍۢஎந்த ஒரு மேன்மையையும்بَلْ نَظُنُّكُمْமாறாக/கருதுகிறோம்/உங்களைكٰذِبِيْنَ‏பொய்யர்களாக
Fபகாலல் மல உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ ம னராக இல்லா Bபஷரம் மித்லனா வமா னராகத் தBப'அக இல்லல் லதீன ஹும் அராதிலுனா Bபாதியர் ராயி வமா னரா லகும் 'அலய்னா மின் Fபள்லின் Bபல் னளுன்னுகும் காதிBபீன்
அவரை நிராகரித்த அவருடைய சமூகத்தின் தலைவர்கள் (அவரை நோக்கி), “நாம் உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே அன்றி (வேறு விதமாகக்) காணவில்லை; எங்களுக்குள்ளே ஆழ்ந்து யோசனை செய்யாத இழிவானர்களேயன்றி (வேறெவரும்) உம்மைப் பின்பற்றி நடப்பதாகவும் நாம் காணவில்லை; எங்களைவிட உங்களுக்கு எந்த விதமான மேன்மை இருப்பதாகவும் நாம் காணவில்லை - மாறாக உங்களை (யெல்லாம்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَاٰتٰىنِیْ رَحْمَةً مِّنْ عِنْدِهٖ فَعُمِّیَتْ عَلَیْكُمْ ؕ اَنُلْزِمُكُمُوْهَا وَاَنْتُمْ لَهَا كٰرِهُوْنَ ۟
قَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاَرَءَيْتُمْநீங்கள் கவனித்தீர்களா?اِنْ كُنْتُநான் இருந்துعَلٰىமீதுبَيِّنَةٍஒரு தெளிவான அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّىْஎன் இறைவன்وَاٰتٰٮنِىْஇன்னும் அளித்தான் எனக்குرَحْمَةًஅருளைمِّنْதன்னிடம்عِنْدِهٖஇருந்துفَعُمِّيَتْஅவை மறைக்கப்பட்டனعَلَيْكُمْؕஉங்களுக்குاَنُلْزِمُكُمُوْهَاநாம் நிர்ப்பந்திப்போமா?/உங்களை/அவற்றைوَاَنْـتُمْநீங்களும்لَـهَاஅவற்றைكٰرِهُوْنَ‏வெறுப்பவர்களாக
கால யா கவ்மி அர'அய்தும் இன் குன்து 'அலா Bபய்யினதிம் மிர் ரBப்Bபீ வ ஆதானீ ரஹ்மதம் மின் 'இன்திஹீ Fப'உம் மியத் 'அலய்கும் அனுல்Zஜிமுகு மூஹா வ அன்தும் லஹா காரிஹூன்
(அதற்கு) அவர் (மக்களை நோக்கி) “என் சமூகத்தவர்களே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா?” என்று கூறினார்.
وَیٰقَوْمِ لَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مَالًا ؕ اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ وَمَاۤ اَنَا بِطَارِدِ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ اِنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَلٰكِنِّیْۤ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேلَاۤநான் கேட்கவில்லைاَسْــٴَــلُكُمْஉங்களிடம்عَلَيْهِஇதன் மீதுمَالًاஒரு செல்வத்தைؕاِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلَى اللّٰهِ‌அல்லாஹ் மீதுوَمَاۤஇல்லைاَنَاநான்بِطَارِدِவிரட்டுபவனாகالَّذِيْنَஎவர்களைاٰمَنُوْا‌ ؕநம்பிக்கை கொண்டார்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مُّلٰقُوْاசந்திப்பவர்கள்رَبِّهِمْதங்கள் இறைவனைوَلٰـكِنِّىْۤஎன்றாலும் நிச்சயமாக நான்اَرٰٮكُمْகாண்கிறேன்/ உங்களைقَوْمًاமக்களாகتَجْهَلُوْنَ‏நீங்கள் அறிய மாட்டீர்கள்
வ யா கவ்மி லா அஸ்'அலுகும் 'அலய்ஹி மாலன் இன் அஜ்ரிய இல்லா 'அலல் லாஹ்; வ மா அன Bபிதாரிதில் லதீன ஆமனூ; இன்னஹும் முலாகூ ரBப்Bபிஹிம் வ லாகின்னீ அராகும் கவ்மன் தஜ்ஹலூன்
“அன்றியும், என் சமூகத்தவர்களே! இதற்காக (அல்லாஹ்வின் கட்டளையை எடுத்துச் சொல்வதற்காக) நான் உங்களிடம் எந்தப் பொருளையும் கேட்கவில்லை; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை; எனவே ஈமான் கொண்டவர்களை (அவர்கள் நிலை எப்படி இருப்பினும்) நான் விரட்டி விடுபவன் அல்லன்; நிச்சயமாக அவர்கள் தம் இறைவனை (நன்மையுடன்) சந்திப்பவர்களாக இருக்கின்றனர்; ஆனால் உங்களையே அறிவில்லா சமூகத்தவர்களாகவே நான் காண்கிறேன்,
وَیٰقَوْمِ مَنْ یَّنْصُرُنِیْ مِنَ اللّٰهِ اِنْ طَرَدْتُّهُمْ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேمَنْயார்?يَّـنْصُرُنِىْஉதவுவார்/எனக்குمِنَ اللّٰهِஅல்லாஹ்விடத்தில்اِنْ طَرَدْتُّهُمْ‌ؕநான் அவர்களை விரட்டினால்اَفَلَا تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
வ யா கவ்மி மய் யன்ஸுருனீ மினல் லாஹி இன் தரத்துஹும்; அFபலா ததக் கரூன்
“என் சமூகத்தவர்களே! நான் அவர்களை விரட்டிவிட்டால்; அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எனக்கு உதவி செய்பவர் யார்? (இதை) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
وَلَاۤ اَقُوْلُ لَكُمْ عِنْدِیْ خَزَآىِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَیْبَ وَلَاۤ اَقُوْلُ اِنِّیْ مَلَكٌ وَّلَاۤ اَقُوْلُ لِلَّذِیْنَ تَزْدَرِیْۤ اَعْیُنُكُمْ لَنْ یُّؤْتِیَهُمُ اللّٰهُ خَیْرًا ؕ اَللّٰهُ اَعْلَمُ بِمَا فِیْۤ اَنْفُسِهِمْ ۖۚ اِنِّیْۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟
وَلَاۤ اَقُوْلُநான் கூறமாட்டேன்لَـكُمْஉங்களுக்குعِنْدِىْஎன்னிடம்خَزَآٮِٕنُபொக்கிஷங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்وَلَاۤ اَعْلَمُஇன்னும் அறியமாட்டேன்الْغَيْبَமறைவைوَلَاۤ اَقُوْلُஇன்னும் கூறமாட்டேன்اِنِّىْநிச்சயமாக நான்مَلَكٌஒரு வானவர்وَّلَاۤ اَقُوْلُஇன்னும் கூறமாட்டேன்لِلَّذِيْنَஎங்களுக்குتَزْدَرِىْۤஇழிவாகக் காண்கிறதுاَعْيُنُكُمْகண்கள்/உங்கள்لَنْஅறவே கொடுக்கவே மாட்டான்يُّؤْتِيَهُمُஅவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்خَيْرًا‌ ؕஒரு நன்மைاَللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَاஎதைفِىْۤஉள்ளங்களில்اَنْفُسِهِمْஅவர்கள்اِنِّىْۤநிச்சயமாக நான்اِذًاஅப்போதுلَّمِنَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களில்தான்
வ லா அகூலு லகும் 'இன்தீ கZஜா'இனுல் லாஹி வ லா அஃலமுல் கய்Bப வலா அகூலு இன்னீ மலகு(ன்)வ் வ லா அகூலு லில்லதீன தZஜ்தரீ அஃயுனுகும் லய் யு'தியஹுமுல் லாஹு கய்ரன் அல்லாஹு அஃலமு Bபிமா Fபீ அன்Fபுஸிஹிம் இன்னீ இதல் லமினள் ளாலிமீன்
“அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை; மறைவானவற்றை நான் அறிந்தவனுமல்லன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்றும் நான் கூறவில்லை; எவர்களை உங்களுடைய கண்கள் இழிவாக நோக்குகின்றனவோ, அவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறவில்லை; அவர்களின் இதயங்களில் உள்ளதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன் (இவ்வுண்மைகளுக்கு மாறாக நான் எதுவும் செய்தால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்” (என்றும் கூறினார்).
قَالُوْا یٰنُوْحُ قَدْ جٰدَلْتَنَا فَاَكْثَرْتَ جِدَالَنَا فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالُوْاகூறினார்கள்يٰـنُوْحُநூஹே!قَدْநீர் தர்க்கித்து விட்டீர்جَادَلْتَـنَاஎங்களுடன்فَاَكْثَرْتَஅதிகப்படுத்தினீர்جِدَالَـنَاதர்க்கத்தை/ எங்களுடன்فَاْتِنَاஆகவே வருவீராக/எங்களிடம்بِمَا تَعِدُنَاۤஎதைக் கொண்டு/வாக்களித்தீர்/எங்களுக்குاِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏ ‏உண்மையாளர்களில்
காலூ யா னூஹு கத் ஜாதல்தனா Fப அக்தர்த ஜிதாலனா Fபாதினா Bபிமா த'இதுனா இன் குன்த மினஸ் ஸாதிகீன்
(அதற்கு) அவர்கள், “நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர்; அதிகமாகவே நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர். எனவே, நீர் உண்மையாளராக இருந்தால், எங்களுக்கு நீர் வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
قَالَ اِنَّمَا یَاْتِیْكُمْ بِهِ اللّٰهُ اِنْ شَآءَ وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ ۟
قَالَகூறினார்اِنَّمَاஎல்லாம்يَاْتِيْكُمْஅதைக் கொண்டு வருவான்بِهِஉங்களிடம்اللّٰهُஅல்லாஹ்தான்اِنْ شَآءَஅவன் நாடினால்وَمَاۤ اَنْتُمْநீங்கள் இல்லைبِمُعْجِزِيْنَ‏பலவீனப்படுத்துபவர்களாக
கால இன்னமா யாதீகும் Bபிஹில் லாஹு இன் ஷா'அ வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன்
(அதற்கு) அவர், “நிச்சயமாக அல்லாஹ் நாடினால், அதை உங்களிடம் கொண்டு வருபவன் அவனே ஆவான்; அதை நீங்கள் தடுத்து விடக்கூடியவர்களும் அல்லர்” என்று கூறினார்.
وَلَا یَنْفَعُكُمْ نُصْحِیْۤ اِنْ اَرَدْتُّ اَنْ اَنْصَحَ لَكُمْ اِنْ كَانَ اللّٰهُ یُرِیْدُ اَنْ یُّغْوِیَكُمْ ؕ هُوَ رَبُّكُمْ ۫ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟ؕ
وَلَا يَنْفَعُكُمْஉங்களுக்கு பலனலிக்காதுنُصْحِىْۤஎன் நல்லுபதேசம்اِنْ اَرَدْتُّநான் நாடினால்اَنْ اَنْصَحَநான் நல்லுபதேசம்புரியلَكُمْஉங்களுக்குاِنْ كَانَ اللّٰهُஇருந்தால்/அல்லாஹ்يُرِيْدُநாடுகிறான்اَنْ يُّغْوِيَكُمْ‌ؕஉங்களை அவன் வழிகெடுக்கهُوَஅவன்رَبُّكُمْஉங்கள் இறைவன்وَاِلَيْهِஅவனிடமேتُرْجَعُوْنَؕ‏நீங்கள் திருப்பப்படுவீர்கள்
வ லா யன்Fப'உகும் னுஸ்ஹீ இன் அரத்து அன் அன்ஸஹ லகும் இன் கானல் லாஹு யுரீது அய் யுக்வி யகும்; ஹுவ ரBப்Bபுகும் வ இலய்ஹி துர்ஜ'ஊன்
“நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக்கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பலனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” (என்றும் கூறினார்).
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ قُلْ اِنِ افْتَرَیْتُهٗ فَعَلَیَّ اِجْرَامِیْ وَاَنَا بَرِیْٓءٌ مِّمَّا تُجْرِمُوْنَ ۟۠
اَمْஅல்லதுيَقُوْلُوْنَகூறுகிறார்கள்افْتَـرٰٮهُ‌அவர் புனைந்தார்قُلْகூறுவீராகاِنِநான் புனைந்திருந்தால்افْتَرَيْتُهٗஅதைفَعَلَىَّஎன் மீதேاِجْرَامِىْஎன் குற்றம்وَاَنَاஇன்னும் நான்بَرِىْٓءٌவிலகியவன்مِّمَّا تُجْرِمُوْنَ‏விட்டு/எவை/நீங்கள் குற்றம் புரிகிறீர்கள்
அம் யகூலூனFப் தராஹு குல் இனிFப் தரய்துஹூ Fப'அலய்ய இஜ்ராமீ வ அன Bபரீ'உம் மிம்மா துஜ்ரிமூன்
(நபியே! நீர் இதைக் கூறும் போது:) “இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்” என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: “நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்; நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.”
وَاُوْحِیَ اِلٰی نُوْحٍ اَنَّهٗ لَنْ یُّؤْمِنَ مِنْ قَوْمِكَ اِلَّا مَنْ قَدْ اٰمَنَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟ۚۖ
وَاُوْحِىَஇன்னும் வஹீ அறிவிக்கப்பட்டதுاِلٰى نُوْحٍநூஹுக்குاَنَّهٗநிச்சயமாக செய்திلَنْ يُّؤْمِنَஅறவே நம்பிக்கை கொள்ள மாட்டார்مِنْ قَوْمِكَஉமது மக்களில்اِلَّاதவிரمَنْ قَدْ اٰمَنَஎவர்/நம்பிக்கை கொண்டு விட்டார்فَلَا تَبْتَٮِٕسْஆகவே நீர் கவலைப்படாதீர்بِمَاகாரணமாக/எவைكَانُوْاஇருந்தனர்يَفْعَلُوْنَ‌ ۖ ۚ‏அவர்கள் செய்வார்கள்
வ ஊஹிய இலா னூஹின் அன்னஹூ ல(ன்)ய்-யு'மின மின் கவ்மிக இல்லா மன் கத் ஆமன Fபலா தBப்த'இஸ் Bபிமா கானூ யFப்'அலூன்
மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.
وَاصْنَعِ الْفُلْكَ بِاَعْیُنِنَا وَوَحْیِنَا وَلَا تُخَاطِبْنِیْ فِی الَّذِیْنَ ظَلَمُوْا ۚ اِنَّهُمْ مُّغْرَقُوْنَ ۟
وَاصْنَعِஇன்னும் செய்வீராகالْفُلْكَகப்பலைبِاَعْيُنِنَاநம் கண்கள் முன்பாகوَوَحْيِنَاஇன்னும் நம்அறிவிப்புப்படிوَلَا تُخَاطِبْنِىْஎன்னிடம் பேசாதீர்فِى الَّذِيْنَஎவர்கள்ظَلَمُوْا‌ ۚஅநியாயம் செய்தார்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مُّغْرَقُوْنَ‏மூழ்கடிக்கப்படுபவர்கள்
வஸ்ன'இல் Fபுல்க Bபி-அஃயுனினா வ வஹ்யினா வலா துகா திBப்னீ Fபில் லதீன ளலமூ; இன்னஹும் முக்ரகூன்
“நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்.”
وَیَصْنَعُ الْفُلْكَ ۫ وَكُلَّمَا مَرَّ عَلَیْهِ مَلَاٌ مِّنْ قَوْمِهٖ سَخِرُوْا مِنْهُ ؕ قَالَ اِنْ تَسْخَرُوْا مِنَّا فَاِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُوْنَ ۟ؕ
وَيَصْنَعُஅவர் செய்கிறார்الْفُلْكَகப்பலைوَكُلَّمَا مَرَّகடந்தபோதெல்லாம்عَلَيْهِஅவருக்கு அருகில்مَلَاٌமுக்கிய பிரமுகர்கள்مِّنْஇருந்துقَوْمِهٖஅவருடைய மக்கள்سَخِرُوْاபரிகசித்தனர்مِنْهُ‌ؕஅவரைقَالَகூறினார்اِنْ تَسْخَرُوْاநீங்கள் பரிகசித்தால்مِنَّاஎங்களைفَاِنَّاநிச்சயமாக நாங்கள்نَسْخَرُபரிகசிப்போம்مِنْكُمْஉங்களைكَمَا تَسْخَرُوْنَؕ‏நீங்கள் பரிகசிப்பது போன்று
வ யஸ்ன'உல் Fபுல்க வ குல்லமா மர்ர 'அலய்ஹி மல'உம் மின் கவ்மிஹீ ஸகிரூ மின்ஹ்; கால இன் தஸ்கரூ மின்னா Fப இன்னா னஸ்கரு மின்கும் கமா தஸ்கரூன்
அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்: “நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார்.
فَسَوْفَ تَعْلَمُوْنَ ۙ مَنْ یَّاْتِیْهِ عَذَابٌ یُّخْزِیْهِ وَیَحِلُّ عَلَیْهِ عَذَابٌ مُّقِیْمٌ ۟
فَسَوْفَ تَعْلَمُوْنَۙநீங்கள் அறிவீர்கள்مَنْஎவர்يَّاْتِيْهِஅவருக்கு வரும்عَذَابٌஒரு வேதனைيُّخْزِيْهِஇழிவுபடுத்தும்/அவரைوَيَحِلُّஇன்னும் இறங்கும்عَلَيْهِஅவர் மீதுعَذَابٌஒரு வேதனைمُّقِيْمٌ‏நிலையானது
Fபஸவ்Fப தஃலமூன மய் ய'தீஹி 'அதாBபு(ன்)ய் யுக்Zஜீஹி வ யஹில்லு 'அலய்ஹி 'அதாBபுன் முகீம்
“அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்).
حَتّٰۤی اِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُ ۙ قُلْنَا احْمِلْ فِیْهَا مِنْ كُلٍّ زَوْجَیْنِ اثْنَیْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَیْهِ الْقَوْلُ وَمَنْ اٰمَنَ ؕ وَمَاۤ اٰمَنَ مَعَهٗۤ اِلَّا قَلِیْلٌ ۟
حَتّٰۤىஇறுதியாகاِذَاபோதுجَآءَவந்ததுاَمْرُنَاநம் கட்டளைوَفَارَஇன்னும் பொங்கியதுالتَّنُّوْرُۙஅடுப்புقُلْنَاகூறினோம்احْمِلْஏற்றுவீராகفِيْهَاஅதில்مِنْஇருந்துكُلٍّஎல்லாம்زَوْجَيْنِஇரு ஜோடியைاثْنَيْنِஇரண்டுوَاَهْلَكَஇன்னும் உமது குடும்பத்தைاِلَّاதவிரمَنْஎவர்سَبَقَமுந்தி விட்டதுعَلَيْهِஅவர் மீதுالْقَوْلُவாக்குوَمَنْஇன்னும் எவர்اٰمَنَ‌ؕநம்பிக்கை கொண்டார்وَمَاۤ اٰمَنَநம்பிக்கை கொள்ளவில்லைمَعَهٗۤஅவருடன்اِلَّاதவிரقَلِيْلٌ‏குறைவானவர்கள்
ஹத்தா இதா ஜா'அ அம்ருனா வ Fபாரத் தன்னூரு குல்னஹ் மில் Fபீஹா மின் குல்லின் Zஜவ்ஜய்னித் னய்னி வ அஹ்லக இல்லா மன் ஸBபக 'அலய்ஹில் கவ்லு வ மன் ஆமன்; வ மா ஆமன ம'அஹூ இல்லா கலீல்
இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி:) “உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.
وَقَالَ ارْكَبُوْا فِیْهَا بِسْمِ اللّٰهِ مَؔجْرٖىهَا وَمُرْسٰىهَا ؕ اِنَّ رَبِّیْ لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَقَالَகூறினார்ارْكَبُوْاபயணியுங்கள்فِيْهَاஇதில்بِسْمِபெயர் கொண்டுاللّٰهِஅல்லாஹ்வின்مَجْرٖؔٮھَاஅது ஓடும் போதுوَمُرْسٰٮهَا ؕநிறுத்தப்படும் போதுاِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்لَـغَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ ‏பெரும் கருணையாளன்
வ காலர் கBபூ Fபீஹா Bபிஸ்மில் லாஹி மஜ்ரய்ஹா வ முர்ஸாஹா; இன்ன ரBப்Bபீ ல கFபூருர் ரஹீம்
இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார்.
وَهِیَ تَجْرِیْ بِهِمْ فِیْ مَوْجٍ كَالْجِبَالِ ۫ وَنَادٰی نُوْحُ بْنَهٗ وَكَانَ فِیْ مَعْزِلٍ یّٰبُنَیَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِیْنَ ۟
وَهِىَஅது (கப்பல்)تَجْرِىْசெல்கிறதுبِهِمْஅவர்களைக்கொண்டுفِىْ مَوْجٍஅலையில்كَالْجِبَالِமலைகளைப் போன்றுوَنَادٰىஇன்னும் சப்தமிட்டு அழைத்தார்نُوْحُநூஹ்اۨبْنَهٗதன் மகனைوَكَانَஇருந்தான்فِىْ مَعْزِلٍஒரு விலகுமிடத்தில்يّٰبُنَىَّஎன் மகனே!ارْكَبْபயணிمَّعَنَاஎங்களுடன்وَلَا تَكُنْஆகிவிடாதேمَّعَஉடன்الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
வ ஹிய தஜ்ரீ Bபிஹிம் Fபீ மவ்ஜின் கல்ஜிBபாலி வ னாதா னூஹுனிBப் னஹூ வ கான Fபீ மஃZஜிலி(ன்)ய் யா Bபுனய் யர்கம் ம'அனா வலா தகும் ம'அல் காFபிரீன்
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார்.
قَالَ سَاٰوِیْۤ اِلٰی جَبَلٍ یَّعْصِمُنِیْ مِنَ الْمَآءِ ؕ قَالَ لَا عَاصِمَ الْیَوْمَ مِنْ اَمْرِ اللّٰهِ اِلَّا مَنْ رَّحِمَ ۚ وَحَالَ بَیْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِیْنَ ۟
قَالَகூறினான்سَاٰوِىْۤஒதுங்குவேன்اِلٰىமேல்جَبَلٍஒரு மலைيَّعْصِمُنِىْகாக்கும்/என்னைمِنَஇருந்துالْمَآءِ‌ؕநீர்قَالَகூறினார்لَاஅறவே இல்லைعَاصِمَபாதுகாப்பவர்الْيَوْمَஇன்றுمِنْஇருந்துاَمْرِகட்டளைاللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரمَنْஎவர்رَّحِمَ‌ۚகருணை காட்டினான்وَحَالَஇன்னும் தடையானதுبَيْنَهُمَاஅவ்விருவருக்கும் இடையில்الْمَوْجُஅலைفَكَانَஆகவே ஆகினான்مِنَ الْمُغْرَقِيْنَ‏மூழ்கடிக்கப்பட்டவர்களில்
கால ஸ ஆவீ இலா ஜBபலி(ன்)ய் யஃஸிமுனீ மினல் மா'; கால லா 'ஆஸிமல் யவ்ம மின் அம்ரில் லாஹி இல்லா மர் ரஹிம்; வ ஹால Bபய்னஹுமல் மவ்ஜு Fபகான மினல் முக்ரகீன்
அதற்கு அவன்: “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்; இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.
وَقِیْلَ یٰۤاَرْضُ ابْلَعِیْ مَآءَكِ وَیٰسَمَآءُ اَقْلِعِیْ وَغِیْضَ الْمَآءُ وَقُضِیَ الْاَمْرُ وَاسْتَوَتْ عَلَی الْجُوْدِیِّ وَقِیْلَ بُعْدًا لِّلْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
وَقِيْلَகூறப்பட்டதுيٰۤاَرْضُபூமியேابْلَعِىْவிழுங்குمَآءَكِதண்ணீரை/உன்وَيٰسَمَآءُஇன்னும் வானமேاَقْلِعِىْநிறுத்துوَغِيْضَஇன்னும் வற்றியதுالْمَآءُதண்ணீர்وَقُضِىَஇன்னும் முடிக்கப்பட்டதுالْاَمْرُகாரியம்وَاسْتَوَتْஇன்னும் தங்கியதுعَلَى الْجُوْدِىِّ‌ஜூதி மலையில்وَقِيْلَஇன்னும் கூறப்பட்டதுبُعْدًاஅழிவுதான்لِّـلْقَوْمِமக்களுக்குالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்கள்
வ கீல யா அர்ளுBப்ல'ஈ மா'அகி வ யா ஸமா'உ அக்லி'ஈ வ கீளல் மா'உ வ குளியல் அம்ரு வஸ்தவத் 'அலல் ஜூதிய்யி வ கீல Bபுஃதல் லில்கவ்மிள் ளாலிமீன்
பின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.
وَنَادٰی نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِیْ مِنْ اَهْلِیْ وَاِنَّ وَعْدَكَ الْحَقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِیْنَ ۟
وَنَادٰىஅழைத்தார்نُوْحٌநூஹ்رَّبَّهٗதன் இறைவனைفَقَالَகூறினார்رَبِّஎன் இறைவாاِنَّநிச்சயமாகابْنِىْஎன் மகன்مِنْ اَهْلِىْஎன் குடும்பத்திலுள்ளவன்وَاِنَّநிச்சயமாகوَعْدَكَஉன் வாக்குالْحَـقُّஉண்மையானதுوَاَنْتَநீاَحْكَمُமகா தீர்ப்பாளன்الْحٰكِمِيْنَ‏தீர்ப்பளிப்பவர்களில்
வ னாதா னூஹுர் ரBப்Bபஹூ Fபகால ரBப்Bபி இன்னBப்னீ மின் அஹ்லீ வ இன்ன வஃதகல் ஹக்கு வ அன்த அஹ்கமுல் ஹாகிமீன்
நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார்.
قَالَ یٰنُوْحُ اِنَّهٗ لَیْسَ مِنْ اَهْلِكَ ۚ اِنَّهٗ عَمَلٌ غَیْرُ صَالِحٍ ۖؗۗ فَلَا تَسْـَٔلْنِ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ ؕ اِنِّیْۤ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ ۟
قَالَகூறினான்يٰـنُوْحُநூஹே!اِنَّهٗஅவன்لَـيْسَஇல்லைمِنْ اَهْلِكَஉங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன்ۚاِنَّهٗநிச்சயமாக இதுعَمَلٌசெயல்غَيْرُஅல்லصَالِحٍ ۖநல்ல(து)فَلَا تَسْـــٴَـــلْنِஎன்னிடம் கேட்காதேمَاஎதைلَـيْسَஇல்லைلَـكَஉமக்குبِهٖஅதில்عِلْمٌ‌ ؕஞானம்اِنِّىْۤநிச்சயமாக நான்اَعِظُكَஉபதேசிக்கிறேன்/உமக்குاَنْ تَكُوْنَநீர் ஆகுவதைمِنَ الْجٰهِلِيْنَ‏அறியாதவர்களில்
கால யா னூஹு இன்னஹூ லய்ஸ மின் அஹ்லிக இன்னஹூ 'அமலுன் கய்ரு ஸாலிஹின் Fபலா தஸ்'அல்னி மா லய்ஸ லக Bபிஹீ 'இல்முன் இன்னீ அ'இளுக அன் தகூன மினல் ஜாஹிலீன்
அ(தற்கு இறை)வன் கூறினான்: “நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்.”
قَالَ رَبِّ اِنِّیْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْـَٔلَكَ مَا لَیْسَ لِیْ بِهٖ عِلْمٌ ؕ وَاِلَّا تَغْفِرْ لِیْ وَتَرْحَمْنِیْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟
قَالَகூறினார்رَبِّஎன் இறைவாاِنِّىْۤநிச்சயமாக நான்اَعُوْذُபாதுகாப்புக் கோருகிறேன்بِكَஉன்னிடம்اَنْ اَسْــٴَــلَكَநான்கேட்பதைவிட்டுمَاஎதைلَـيْسَஇல்லைلِىْஎனக்குبِهٖஅதில்عِلْمٌ‌ؕஞானம்وَاِلَّا تَغْفِرْநீ மன்னிக்க வில்லையெனில்لِىْஎன்னைوَتَرْحَمْنِىْۤகருணை காட்டவில்லையெனில்/எனக்குاَكُنْஆகிவிடுவேன்مِّنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
கால ரBப்Bபி இன்னீ அ'ஊது Bபிக அன் அஸ்'அலக மா லய்ஸ லீ Bபிஹீ 'இல்மு(ன்)வ் வ இல்லா தக்Fபிர் லீ வ தர்ஹம்னீ அகும் மினல் காஸிரீன்
“என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
قِیْلَ یٰنُوْحُ اهْبِطْ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَكٰتٍ عَلَیْكَ وَعَلٰۤی اُمَمٍ مِّمَّنْ مَّعَكَ ؕ وَاُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ یَمَسُّهُمْ مِّنَّا عَذَابٌ اَلِیْمٌ ۟
قِيْلَகூறப்பட்டதுيٰـنُوْحُநூஹே!اهْبِطْநீர் இறங்குவீராகبِسَلٰمٍபாதுகாப்புடன்مِّنَّاநமதுوَبَرَكٰتٍஇன்னும் அருள்வளங்கள்عَلَيْكَஉம்மீதுوَعَلٰٓىஇன்னும் மீதுاُمَمٍஉயிரினங்கள்مِّمَّنْ مَّعَكَ‌ؕஉம்முடன் இருக்கின்றவர்கள்وَاُمَمٌஇன்னும் சமுதாயங்கள்سَنُمَتِّعُهُمْசுகமளிப்போம்/அவர்களுக்குثُمَّபிறகுيَمَسُّهُمْஅடையும்/அவர்களைمِّنَّاநம்மிடமிருந்துعَذَابٌஒரு வேதனைاَلِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
கீல யா னூஹுஹ் Bபித் Bபிஸலாமிம் மின்னா வ Bபரகாதின் 'அலய்க வ 'அலா உமமிம் மிம்மம் ம'அக்; வ உமமுன் ஸனுமத்தி'உஹும் தும்ம யமஸ்ஸுஹும் மின்ன 'அதாBபுன் அலீம்
“நூஹே! உம் மீதும் உம்மோடு இருக்கின்ற மக்கள் மீதும் நமது பாதுகாப்புடனும் அபிவிருத்திகளுடனும் நீர் இறங்குவீராக; இன்னும் சில மக்களுக்கு நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் நம்மிடமிருந்து நோவினை தரும் வேதனை அவர்களை தீண்டும்” என்று கூறப்பட்டது.
تِلْكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهَاۤ اِلَیْكَ ۚ مَا كُنْتَ تَعْلَمُهَاۤ اَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هٰذَا ۛؕ فَاصْبِرْ ۛؕ اِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِیْنَ ۟۠
تِلْكَ مِنْ اَنْۢبَآءِஇவை/சரித்திரங்களில்الْغَيْبِமறைவான(து)نُوْحِيْهَاۤவஹீ அறிவிக்கிறோம்/இவற்றைاِلَيْكَ‌ۚஉமக்குمَا كُنْتَநீர் இருக்கவில்லைتَعْلَمُهَاۤஅறிவீர்/இவற்றைاَنْتَநீரோوَلَاஇன்னும் இல்லைقَوْمُكَஉமது மக்களோمِنْ قَبْلِமுன்னர்هٰذَا‌ ۛؕஇதற்குفَاصْبِرْ‌ ۛؕஆகவே பொறுப்பீராகاِنَّ الْعَاقِبَةَநிச்சயமாக முடிவுلِلْمُتَّقِيْنَ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
தில்க மின் அம்Bபா'இல் கய்Bபி னூஹீஹா இலய்க மா குன்த தஃலமுஹா அன்த வலா கவ்முக மின் கBப்லி ஹாதா Fபஸ்Bபிர் இன்னல் 'ஆகிBபத லில்முத்தகீன்
(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).
وَاِلٰی عَادٍ اَخَاهُمْ هُوْدًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اِنْ اَنْتُمْ اِلَّا مُفْتَرُوْنَ ۟
وَاِلٰىஇடம்عَادٍஆதுاَخَاசகோதரர்هُمْஅவர்களுடையهُوْدًا‌ ؕஹூதைقَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَا لَـكُمْஉங்களுக்கில்லைمِّنْஅறவேاِلٰهٍவணக்கத்திற்குரியவன்غَيْرُهٗ‌ ؕஅவனையன்றிاِنْ اَنْتُمْநீங்கள் இல்லைاِلَّاதவிரمُفْتَرُوْنَ‏புனைபவர்களாகவே
வ இலா 'ஆதின் அகாஹும் ஹூதா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ இன் அன்தும் இல்லா முFப்தரூன்
“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.
یٰقَوْمِ لَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا ؕ اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی الَّذِیْ فَطَرَنِیْ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
يٰقَوْمِஎன் மக்களேلَاۤநான் கேட்கவில்லைاَسْــٴَــلُكُمْஉங்களிடம்عَلَيْهِஅதற்காகاَجْرًا‌ ؕஒரு கூலியைاِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلَىமீதுالَّذِىْஎத்தகையவன்فَطَرَنِىْபடைத்தான்اَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
யா கவ்மி லா அஸ்'அலுகும் 'அலய்ஹி அஜ்ரன் இன் அஜ்ரிய இல்லா 'அலல் லதீ Fபதரனீ; அFபலா தஃகிலூன்
“என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? (என்றும்.)
وَیٰقَوْمِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًا وَّیَزِدْكُمْ قُوَّةً اِلٰی قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِیْنَ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேاسْتَغْفِرُوْاமன்னிப்புக் கோருங்கள்رَبَّكُمْஉங்கள் இறைவனிடம்ثُمَّபிறகுتُوْبُوْۤاதிருந்தி திரும்புங்கள்اِلَيْهِஅவன் பக்கம்يُرْسِلِஅனுப்புவான்السَّمَآءَமழையைعَلَيْكُمْஉங்களுக்குمِّدْرَارًاதாரை தாரையாகوَّيَزِدْكُمْஇன்னும் அதிகப்படுத்துவான்/உங்களுக்குقُوَّةًபலத்தைاِلٰى قُوَّتِكُمْஉங்கள் பலத்துடன்وَلَا تَتَوَلَّوْاதிரும்பி விடாதீர்கள்مُجْرِمِيْنَ‏குற்றவாளிகளாக
வ யா கவ்மிஸ் தக்Fபிரூ ரBப்Bபகும் தும்ம தூBபூ இலய்ஹி யுர்ஸிலிஸ் ஸமா'அ 'அலய்கும் மித்ரார(ன்)வ் வ யZஜித்கும் குவ்வதன் இலா குவ்வதிகும் வலா ததவல்லவ் முஜ்ரிமீன்
“என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்).
قَالُوْا یٰهُوْدُ مَا جِئْتَنَا بِبَیِّنَةٍ وَّمَا نَحْنُ بِتَارِكِیْۤ اٰلِهَتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِیْنَ ۟
قَالُوْاகூறினர்يٰهُوْدُஹூதே!مَا جِئْتَـنَاநம்மிடம் நீ வரவில்லைبِبَيِّنَةٍஓர் அத்தாட்சியைக் கொண்டுوَّمَاஇன்னும் இல்லைنَحْنُநாங்கள்بِتٰـرِكِىْۤவிடுபவர்களாகاٰلِهَـتِنَاதெய்வங்களை/எங்கள்عَنْ قَوْلِكَஉம் சொல்லுக்காகوَمَاஇன்னும் இல்லைنَحْنُநாங்கள்لَـكَஉம்மைبِمُؤْمِنِيْنَ‏நம்பிக்கை கொண்டவர்களாக
காலூ யா ஹூது மா ஜி'தனா BபிBபய்யினதி(ன்)வ் வமா னஹ்னு Bபிதாரிகீ ஆலிஹதினா 'அன் கவ்லிக வமா னஹ்னு லக Bபிமு'மினீன்
(அதற்கு) அவர்கள்: “ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்” என்று (பதில்) கூறினார்.
اِنْ نَّقُوْلُ اِلَّا اعْتَرٰىكَ بَعْضُ اٰلِهَتِنَا بِسُوْٓءٍ ؕ قَالَ اِنِّیْۤ اُشْهِدُ اللّٰهَ وَاشْهَدُوْۤا اَنِّیْ بَرِیْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۟ۙ
اِنْ نَّقُوْلُகூறமாட்டோம்اِلَّاதவிரاعْتَـرٰٮكَ بَعْضُதீண்டி விட்டன/உம்மை/சிலاٰلِهَتِنَاஎங்கள் தெய்வங்களில்بِسُوْٓءٍ‌ ؕஒரு தீமையைக் கொண்டுقَالَகூறினார்اِنِّىْۤநிச்சயமாக நான்اُشْهِدُசாட்சியாக்குகிறேன்اللّٰهَஅல்லாஹ்வைوَاشْهَدُوْۤاநீங்கள் சாட்சி கூறுங்கள்اَنِّىْநிச்சயமாக நான்بَرِىْٓءٌவிலகியவன்مِّمَّا تُشْرِكُوْنَ ۙ‏நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து
இன் னகூலு இல்லஃ தராக Bபஃளு ஆலிஹதினா Bபிஸூ'; கால இன்னீ உஷ்ஹிதுல் லாஹ வஷ் ஹதூ அன்னீ Bபரீ'உம் மிம்மா துஷ்ரிகூன்
“எங்களுடைய தெய்வங்களில் சில கேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை” (என்றும் கூறினார்கள்: அதற்கு) அவர், “நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்” என்று கூறினார்.
مِنْ دُوْنِهٖ فَكِیْدُوْنِیْ جَمِیْعًا ثُمَّ لَا تُنْظِرُوْنِ ۟
مِنْ دُوْنِهٖ‌அவனையன்றிفَكِيْدُوْஆகவே, சூழ்ச்சி செய்யுங்கள்نِىْஎனக்குجَمِيْعًاஅனைவரும்ثُمَّபிறகுلَاஅவகாசமளிக்காதீர்கள்تُنْظِرُوْنِ‏எனக்கு
மின் தூனிஹீ Fபகீதூனீ ஜமீ'அன் தும்ம லா துன்ளிரூன்
“(ஆகவே) அவனையன்றி நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்குச் சூழ்ச்சியைச் செய்து பாருங்கள்; (இதில்) நீங்கள் எனக்கு எந்த அவகாசமும் கொடுக்க வேண்டாம்” (என்றும் கூறினார்).
اِنِّیْ تَوَكَّلْتُ عَلَی اللّٰهِ رَبِّیْ وَرَبِّكُمْ ؕ مَا مِنْ دَآبَّةٍ اِلَّا هُوَ اٰخِذٌ بِنَاصِیَتِهَا ؕ اِنَّ رَبِّیْ عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
اِنِّىْநிச்சயமாக நான்تَوَكَّلْتُநம்பிக்கை வைத்து விட்டேன்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுرَبِّىْஎன் இறைவன்وَرَبِّكُمْ ؕஇன்னும் உங்கள் இறைவன்مَاஇல்லைمِنْஎதுவும்دَآبَّةٍஉயிரினம்اِلَّاதவிரهُوَஅவன்اٰخِذٌ ۢபிடித்தேبِنَاصِيَتِهَا ؕஅதன் உச்சி முடியைاِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்عَلٰى صِرَاطٍவழியில்مُّسْتَقِيْمٍ‏நேரானது
இன்னீ தவக்கல்து 'அலல்லாஹி ரBப்Bபீ வ ரBப்Bபிகும்; மா மின் தாBப்Bபதின் இல்லா ஹுவ ஆகிதும் Bபினாஸியதிஹா; இன்ன ரBப்Bபீ 'அலா ஸிராதிம் முஸ்தகீம்
நிச்சயமாக நான், எனக்கும் உங்களுக்கும் இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழியிலிருக்கின்றான்.
فَاِنْ تَوَلَّوْا فَقَدْ اَبْلَغْتُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖۤ اِلَیْكُمْ ؕ وَیَسْتَخْلِفُ رَبِّیْ قَوْمًا غَیْرَكُمْ ۚ وَلَا تَضُرُّوْنَهٗ شَیْـًٔا ؕ اِنَّ رَبِّیْ عَلٰی كُلِّ شَیْءٍ حَفِیْظٌ ۟
فَاِنْ تَوَلَّوْاநீங்கள் விலகினால்فَقَدْதிட்டமாகاَبْلَغْتُكُمْஎடுத்துரைத்து விட்டேன்/உங்களுக்குمَّاۤஎதைاُرْسِلْتُஅனுப்பப்பட்டேன்بِهٖۤஅதைக் கொண்டுاِلَيْكُمْ‌ ؕஉங்களிடம்وَيَسْتَخْلِفُஇன்னும் தோன்றச் செய்வான்رَبِّىْஎன் இறைவன்قَوْمًاமக்களைغَيْرَஅல்லாத(வர்கள்)كُمْۚநீங்கள்وَلَاநீங்கள் தீங்கிழைக்க முடியாதுتَضُرُّوْنَهٗஅவனுக்குشَيْئًا‌ ؕஎதையும்اِنَّ رَبِّىْநிச்சயமாக என் இறைவன்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதுحَفِيْظٌ‏பாதுகாவலன்
Fப இன் தவல்லவ் Fபகத் அBப்லக்துகும் மா உர்ஸில்து Bபிஹீ இலய்கும்; வ யஸ்தக்லிFபு ரBப்Bபீ கவ்மன் கய்ரகும் வலா தளுர் ரூனஹூ ஷய்'ஆ; இன்ன ரBப்Bபீ 'அலா குல்லி ஷய்'இன் ஹFபீள்
“நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எதற்காக நான் உங்களிடம் அனுப்பப் பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்” (என்றும் கூறினார்).
وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا هُوْدًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا ۚ وَنَجَّیْنٰهُمْ مِّنْ عَذَابٍ غَلِیْظٍ ۟
وَ لَمَّا جَآءَவந்த போதுاَمْرُنَاநம் உத்தரவுنَجَّيْنَاபாதுகாத்தோம்هُوْدًاஹூதைوَّالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்مَعَهٗஅவருடன்بِرَحْمَةٍ مِّنَّا ۚநமது அருளால்وَஇன்னும் பாதுகாத்தோம்نَجَّيْنٰهُمْஅவர்களைمِّنْ عَذَابٍவேதனையிலிருந்துغَلِيْظٍ‏கடுமையானது
வ லம்மா ஜா'அ அம்ருனா னஜய்னா ஹூத(ன்)வ் வல்லதீன ஆமனூ ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ னஜய்னாஹும் மின் 'அதாBபின் கலீள்
நம்முடைய (தண்டனைக்கான) உத்தரவு வந்தபோது, ஹூதையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நம் ரஹ்மத்தை (கிருபையைக்) கொண்டு காப்பாற்றினோம் - இன்னும் கடுமையான வேதனையை விட்டும் அவர்களை ஈடேற்றினோம்.
وَتِلْكَ عَادٌ ۙ۫ جَحَدُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهٗ وَاتَّبَعُوْۤا اَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِیْدٍ ۟
وَتِلْكَஇவர்கள்عَادٌ‌ஆதுجَحَدُوْاமறுத்தனர்بِاٰيٰتِஅத்தாட்சிகளைرَبِّهِمْதங்கள் இறைவனின்وَعَصَوْاஇன்னும் மாறு செய்தனர்رُسُلَهٗதூதர்களுக்கு/அவனுடையوَاتَّبَعُوْۤاஇன்னும் பின்பற்றினர்اَمْرَகட்டளைكُلِّஎல்லோருடையجَبَّارٍபிடிவாதக்காரர்கள்عَنِيْدٍ‏முரடர்கள்
வ தில்க 'ஆத், ஜஹதூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் வ 'அஸவ் ருஸுலஹூ வத்தBப'ஊ அம்ர குல்லி ஜBப்Bபாரின் 'அனீத்
(நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள்.
وَاُتْبِعُوْا فِیْ هٰذِهِ الدُّنْیَا لَعْنَةً وَّیَوْمَ الْقِیٰمَةِ ؕ اَلَاۤ اِنَّ عَادًا كَفَرُوْا رَبَّهُمْ ؕ اَلَا بُعْدًا لِّعَادٍ قَوْمِ هُوْدٍ ۟۠
وَاُتْبِعُوْاஇன்னும் சேர்ப்பிக்கப் பட்டார்கள்فِىْ هٰذِهِ الدُّنْيَاஇந்த உலகத்தில்لَعْنَةًசாபத்தைوَّيَوْمَ الْقِيٰمَةِ‌ؕஇன்னும் மறுமையில்اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّநிச்சயமாகعَادًاஆதுكَفَرُوْاநிராகரித்தனர்رَبَّهُمْ‌ؕதங்கள் இறைவனுக்குاَلَاஅறிந்துகொள்ளுங்கள்!بُعْدًاகேடுதான்لِّعَادٍஆதுக்குقَوْمِமக்கள்هُوْدٍ‏ஹூதுடைய
வ உத்Bபி'ஊ Fபீ ஹாதிஹித் துன்யா லஃனத(ன்)வ் வ யவ்மல் கியாமஹ்; அலா இன்ன 'ஆதன் கFபரூ ரBப்Bபஹும்; அலா Bபுஃதல் லி 'ஆதின் கவ்மின் ஹூத்
எனவே, அவர்கள் இவ்வுலகிலும், நியாயத் தீர்ப்பு நாளிலும் (அல்லாஹ்வின்) சாபத்தினால் தொடரப்பெற்றனர்; அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக “ஆது” கூட்டத்தார் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள்; இன்னும் அறிந்து கொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான “ஆது” கூட்டத்தாருக்கு கேடுதான்.
وَاِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِیْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ ؕ اِنَّ رَبِّیْ قَرِیْبٌ مُّجِیْبٌ ۟
وَاِلٰىஇன்னும் இடம்ثَمُوْدَஸமூதுاَخَاهُمْசகோதரர்/அவர்களுடையصٰلِحًا‌ۘஸாலிஹைقَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்مَا لَـكُمْஉங்களுக்கில்லைمِّنْஅறவேاِلٰهٍவணக்கத்திற்குரியவன்غَيْرُهٗ‌ ؕஅவனையன்றிهُوَஅவனேاَنْشَاَஉருவாக்கினான்كُمْஉங்களைمِّنَ الْاَرْضِபூமியிலிருந்துوَاسْتَعْمَرவசிக்க வைத்தான்َكُمْஉங்களைفِيْهَاஅதில்فَاسْتَغْفِرُوْஆகவே, மன்னிப்புக் கோருங்கள்هُஅவனிடம்ثُمَّபிறகுتُوْبُوْۤاதிருந்தி திரும்புங்கள்اِلَيْهِ‌ ؕஅவன் பக்கம்اِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்قَرِيْبٌமிகச் சமீபமானவன்مُّجِيْبٌ‏பதிலளிப்பவன்
வ இலா தமூத அகாஹும் ஸாலிஹா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹிம் கய்ருஹூ ஹுவ அன்ஷ அகும் மினல் அர்ளி வஸ்தஃ மரகும் Fபீஹா Fபஸ்தக்Fபிரூஹு தும்ம தூBபூ இலய்ஹ்; இன்ன ரBப்Bபீ கரீBபும் முஜீBப்
இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”
قَالُوْا یٰصٰلِحُ قَدْ كُنْتَ فِیْنَا مَرْجُوًّا قَبْلَ هٰذَاۤ اَتَنْهٰىنَاۤ اَنْ نَّعْبُدَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِیْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَیْهِ مُرِیْبٍ ۟
قَالُوْاகூறினர்يٰصٰلِحُஸாலிஹேقَدْ كُنْتَதிட்டமாகநீர்இருந்தீர்فِيْنَاஎங்களில்مَرْجُوًّاஆதரவுக்குரியவராகقَبْلَமுன்புهٰذَآ‌ اَتَـنْهٰٮنَاۤஇது/நீர் தடுக்கிறீரா?/எங்களைاَنْ نَّـعْبُدَநாங்கள் வணங்குவதை விட்டுمَا يَعْبُدُஎதை வணங்குவார்اٰبَآؤُنَاமூதாதைகள்/எங்கள்وَاِنَّنَاநிச்சயமாக நாங்கள்لَفِىْ شَكٍّசந்தேகத்தில்مِّمَّاஇருந்து/எவைتَدْعُوْஅழைக்கிறீர்نَاۤஎங்களைاِلَيْهِஎதன் பக்கம்مُرِيْبٍ‏மிக ஆழமான சந்தேகம்
காலூ யா ஸாலிஹு கத் குன்த Fபீனா மர்ஜுவ்வன் கBப்ல ஹாதா அதன்ஹானா அன் னஃBபு த மா யஃBபுது ஆBபா'உனா வ இன்னனா லFபீ ஷக்கிம் மிம்மா தத்'ஊனா இலய்ஹி முரீBப்
அதற்கு அவர்கள், “ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَاٰتٰىنِیْ مِنْهُ رَحْمَةً فَمَنْ یَّنْصُرُنِیْ مِنَ اللّٰهِ اِنْ عَصَیْتُهٗ ۫ فَمَا تَزِیْدُوْنَنِیْ غَیْرَ تَخْسِیْرٍ ۟
قَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاَرَءَيْتُمْஅறிவியுங்கள்اِنْ كُنْتُநான் இருந்தால்عَلٰى بَيِّنَةٍஒரு தெளிவான அத்தாட்சியில்مِّنْஇருந்துرَّبِّىْஎன் இறைவன்وَاٰتٰٮنِىْஇன்னும் தந்தான்/எனக்குمِنْهُதன்னிடமிருந்துرَحْمَةًஅருளைفَمَنْயார்?يَّـنْصُرُنِىْஉதவுவார்/எனக்குمِنَ اللّٰهِஅல்லாஹ்விடத்தில்اِنْ عَصَيْتُهٗ‌அவனுக்கு நான் மாறு செய்தால்فَمَاஅதிகமாக்க மாட்டீர்கள்تَزِيْدُوْنَنِىْஎனக்குغَيْرَஅன்றிتَخْسِيْرٍ‏நஷ்டம் ஏற்படுத்துவது
கால யா கவ்மி அர'அய்தும் இன் குன்து 'அலா Bபய்யினதிம் மிர் ரBப்Bபீ வ ஆதானீ மின்ஹு ரஹ்மதன் Fபமய் யன்ஸுருனீ மினல் லாஹி இன் 'அஸய்துஹூ Fபமா தZஜீதூனனீ கய்ர தக்ஸீர்
“என் சமூகத்தாரே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடத்திலிருந்து தெளிவான அத்தாட்சியைப் பெற்றிருக்க, அவன் தன்னிடமிருந்து எனக்கு ரஹ்மத்தும் (அருளும்) வழங்கியிருக்க நான் அவனுக்கு மாறு செய்தால், அல்லாஹ்வை விட்டும் எனக்கு உதவி செய்பவர் யார்? நீங்களோ, எனக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அதிகமாக்கி விடமாட்டீர்கள்” என்று கூறினார்.
وَیٰقَوْمِ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰیَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِیْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابٌ قَرِیْبٌ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேهٰذِهٖஇதுنَاقَةُபெண் ஒட்டகம்اللّٰهِஅல்லாஹ்வின்لَـكُمْஉங்களுக்குاٰيَةًஅத்தாட்சியானفَذَرُوْهَاஆகவே, விட்டு விடுங்கள்/அதைتَاْكُلْஅது சாப்பி(டட்)டும்فِىْۤ اَرْضِபூமியில்اللّٰهِஅல்லாஹ்வின்وَلَا تَمَسُّوْهَاஅதற்கு செய்யாதீர்கள்بِسُوْٓءٍஒரு கெடுதியையும்فَيَاْخُذَكُمْபிடிக்கும்/உங்களைعَذَابٌஒரு வேதனைقَرِيْبٌ‏அதிசீக்கிரமானது
வ யா கவ்மி ஹாதிஹீ னாகதுல் லாஹி லகும் ஆயதன் Fபதரூஹா தாகுல் Fபீ அர்ளில் லாஹி வலா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப யாகுதகும் அதாBபுன் கரீBப்
“அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்).
فَعَقَرُوْهَا فَقَالَ تَمَتَّعُوْا فِیْ دَارِكُمْ ثَلٰثَةَ اَیَّامٍ ؕ ذٰلِكَ وَعْدٌ غَیْرُ مَكْذُوْبٍ ۟
فَعَقَرُوْவெட்டினார்கள்هَاஅதைفَقَالَஆகவே, கூறினார்تَمَتَّعُوْاசுகமாக இருங்கள்فِىْ دَارِஇல்லத்தில்كُمْஉங்கள்ثَلٰثَةَமூன்றுاَ يَّامٍநாள்கள்ؕذٰ لِكَஇதுوَعْدٌஒரு வாக்குغَيْرُ مَكْذُوْبٍ‏பொய்ப்பிக்கபடாத
Fப 'அகரூஹா Fபகால தமத்த'ஊ Fபீ தாரிகும் தலாதத அய்யாமின் தாலிக வஃதுன் கய்ரு மக்தூBப்
ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.
فَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا صٰلِحًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْیِ یَوْمِىِٕذٍ ؕ اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِیُّ الْعَزِیْزُ ۟
فَلَمَّاபோதுجَآءَவந்ததுاَمْرُنَاநம் கட்டளைنَجَّيْنَاபாதுகாத்தோம்صٰلِحًـاஸாலிஹைوَّالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்مَعَهٗஅவருடன்بِرَحْمَةٍ مِّنَّاநமது அருளைக் கொண்டுوَمِنْஇன்னும் இருந்துخِزْىِஇழிவுيَوْمِٮِٕذٍ‌ؕஅந்நாளின்اِنَّநிச்சயமாகرَبَّكَ هُوَஉம் இறைவன்தான்الْقَوِىُّபலமிக்கவன்الْعَزِيْزُ‏மிகைத்தவன்
Fபலம்மா ஜா'அ அம்ருனா னஜ்ஜய்னா ஸாலிஹ(ன்)வ் வல் லதீன ஆமனூ ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ மின் கிZஜ்யி யவ்மி'இத் இன்ன ரBப்Bபக ஹுவல் கவிய்யுல் 'அZஜீZஜ்
நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.
وَاَخَذَ الَّذِیْنَ ظَلَمُوا الصَّیْحَةُ فَاَصْبَحُوْا فِیْ دِیَارِهِمْ جٰثِمِیْنَ ۟ۙ
وَاَخَذَஇன்னும் பிடித்ததுالَّذِيْنَஎவர்கள்ظَلَمُواஅநீதியிழைத்தனர்الصَّيْحَةُஇடி முழக்கம்فَاَصْبَحُوْاஆகவே, காலையில் ஆகிவிட்டனர்فِىْ دِيَارِهِمْதங்கள் இல்லங்களில்جٰثِمِيْنَۙ‏இறந்தவர்களாக
வ அகதல் லதீன ளலமுஸ் ஸய்ஹது Fப அஸ்Bபஹூ Fபீ தியாரிஹிம் ஜாதிமீனா
அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்,
كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ؕ اَلَاۤ اِنَّ ثَمُوْدَاۡ كَفَرُوْا رَبَّهُمْ ؕ اَلَا بُعْدًا لِّثَمُوْدَ ۟۠
كَاَنْ لَّمْ يَغْنَوْاபோன்று அவர்கள் வசிக்கவில்லைفِيْهَا‌ ؕ اَلَاۤஅவற்றில்/அறிந்து கொள்ளுங்கள்اِنَّநிச்சயமாகثَمُوْدَا۟ஸமூதுكَفَرُوْاநிராகரித்தனர்رَبَّهُمْ‌ؕதங்கள் இறைவனைاَلَاஅறிந்து கொள்ளுங்கள்بُعْدًاசாபம் உண்டாகட்டும்لِّـثَمُوْدَ‏ஸமூதுக்கு
க அல் லம் யக்னவ் Fபீஹா; அலா இன்ன தமூத கFபரூ ரBப்Bபஹும்; அலா Bபுஃதல் லி தமூத்.
(அதற்குமுன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டதினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர் அறிந்து கொள்வீர்களாக! “ஸமூது” (கூட்டத்தினர்)க்கு நாசம்தான்.
وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی قَالُوْا سَلٰمًا ؕ قَالَ سَلٰمٌ فَمَا لَبِثَ اَنْ جَآءَ بِعِجْلٍ حَنِیْذٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَتْவந்தனர்رُسُلُنَاۤநம் தூதர்கள்اِبْرٰهِيْمَஇப்றாஹீமிடம்بِالْبُشْرٰىநற்செய்தியைக் கொண்டுقَالُوْاகூறினர்سَلٰمًا‌ ؕஈடேற்றம் உண்டாகுகقَالَகூறினார்سَلٰمٌ‌ஈடேற்றம் உண்டாகுகفَمَا لَبِثَஅவர் தாமதிக்கவில்லைاَنْ جَآءَவருவதற்குبِعِجْلٍஒரு கன்றுக் குட்டியைக் கொண்டுحَنِيْذٍ‏சுடப்பட்டது
வ லகத் ஜா'அத் ருஸுலுனா இBப்ராஹீம Bபில்Bபுஷ்ரா காலூ ஸலாமன் கால ஸலாமுன் Fபமா லBபித அன் ஜா'அ Bபி'இஜ்லின் ஹனீத்
நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) “ஸலாம்” (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.
فَلَمَّا رَاٰۤ اَیْدِیَهُمْ لَا تَصِلُ اِلَیْهِ نَكِرَهُمْ وَاَوْجَسَ مِنْهُمْ خِیْفَةً ؕ قَالُوْا لَا تَخَفْ اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمِ لُوْطٍ ۟ؕ
فَلَمَّا رَاٰۤஅவர் பார்த்தபோதுاَيْدِيَهُمْஅவர்களுடைய கரங்களைلَا تَصِلُசேராதுاِلَيْهِஅதன் பக்கம்نَـكِرَசந்தேகித்தார்هُمْஅவர்களைப் பற்றிوَاَوْجَسَஇன்னும் அவர் மறைத்தார்مِنْهُمْஅவர்களைப் பற்றிخِيْفَةً‌  ؕபயத்தைقَالُوْاகூறினார்கள்لَا تَخَفْபயப்படாதீர்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اُرْسِلْنَاۤஅனுப்பப்பட்டோம்اِلٰى قَوْمِமக்களின் பக்கம்لُوْطٍ ؕ‏லூத்துடைய
Fபலம்மா ர ஆ அய்தியஹும் லா தஸிலு இலய்ஹி னகிரஹும் வ அவ்ஜஸ மின்ஹும் கீFபஹ்; காலூ லா தகFப் இன்னா உர்ஸில்னா இலா கவ்மி லூத்
ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
وَامْرَاَتُهٗ قَآىِٕمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنٰهَا بِاِسْحٰقَ ۙ وَمِنْ وَّرَآءِ اِسْحٰقَ یَعْقُوْبَ ۟
وَامْرَاَ تُهٗஅவருடைய மனைவிقَآٮِٕمَةٌநின்று கொண்டிருந்தாள்فَضَحِكَتْசிரித்தாள்فَبَشَّرْنٰهَاநற்செய்தி கூறினோம்/அவளுக்குبِاِسْحٰقَ ۙஇஸ்ஹாக்கைக் கொண்டுوَمِنْ وَّرَآءِஇன்னும் பின்னால்اِسْحٰقَஇஸ்ஹாக்கிற்குيَعْقُوْبَ‏யஃகூப்
வம்ர அதுஹூ கா'இமதுன் Fபளஹிகத் FபBபஷ்ஷர்னாஹா Bபி இஷ்ஹாக வ மி(ன்)வ் வரா'இ இஷ்ஹாக யஃகூBப்
அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம்.
قَالَتْ یٰوَیْلَتٰۤی ءَاَلِدُ وَاَنَا عَجُوْزٌ وَّهٰذَا بَعْلِیْ شَیْخًا ؕ اِنَّ هٰذَا لَشَیْءٌ عَجِیْبٌ ۟
قَالَتْகூறினாள்يٰوَيْلَتٰٓىஎன் துக்கமேءَاَلِدُபிள்ளைபெறுவேனாوَاَنَاநானுமோعَجُوْزٌகிழவியாகوَّهٰذَاஇவரோبَعْلِىْஎன் கணவராகியشَيْخًا ؕவயோதிகராகاِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَشَىْءٌவிஷயம்தான்عَجِيْبٌ‏வியப்பான(து)
காலத் யா வய்லதா 'ஆலிது வ அன 'அஜூZஜு(ன்)வ் வ ஹாத Bபஃலீ ஷய்கன் இன்ன ஹாதா லஷய்'உன் 'அஜீBப்
அதற்கு அவர் கூறினார்: “ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!”
قَالُوْۤا اَتَعْجَبِیْنَ مِنْ اَمْرِ اللّٰهِ رَحْمَتُ اللّٰهِ وَبَرَكٰتُهٗ عَلَیْكُمْ اَهْلَ الْبَیْتِ ؕ اِنَّهٗ حَمِیْدٌ مَّجِیْدٌ ۟
قَالُوْۤاகூறினார்கள்اَتَعْجَبِيْنَவியப்படைகிறீரா?مِنْ اَمْرِகட்டளையில்اللّٰهِ‌அல்லாஹ்வுடையرَحْمَتُகருணைاللّٰهِஅல்லாஹ்வின்وَبَرَكٰتُهٗஇன்னும் அவனுடைய அருள்கள்عَلَيْكُمْஉங்கள் மீதுاَهْلَ الْبَيْتِ‌ؕவீட்டாரேاِنَّهٗநிச்சயமாக அவன்حَمِيْدٌமகா புகழாளன்مَّجِيْدٌ‏மகா கீர்த்தியாளன்
காலூ அதஃஜBபீன மின் அம்ரில் லாஹி ரஹ்மதுல் லாஹி வ Bபரகாதுஹூ 'அலய்கும் அஹ்லல் Bபய்த்; இன்னஹூ ஹமீதுன் மஜீத்
(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.
فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِیْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰی یُجَادِلُنَا فِیْ قَوْمِ لُوْطٍ ۟ؕ
فَلَمَّا ذَهَبَசென்றபோதுعَنْ اِبْرٰهِيْمَஇப்றாஹீமை விட்டுالرَّوْعُதிடுக்கம்وَجَآءَتْهُஇன்னும் வந்தது/அவருக்குالْبُشْرٰىநற்செய்திيُجَادِلُــنَاதர்க்கித்தார்/நம்மிடம்فِىْ قَوْمِமக்கள் விஷயத்தில்لُوْطٍؕ‏லூத்துடைய
Fபலம்மா தஹBப அன் இBப்ராஹீமர் ரவ்'உ வ ஜா'அத் ஹுல் Bபுஷ்ரா யுஜாதிலுனா Fபீ கவ்மி லூத்
(இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
اِنَّ اِبْرٰهِیْمَ لَحَلِیْمٌ اَوَّاهٌ مُّنِیْبٌ ۟
اِنَّ اِبْرٰهِيْمَநிச்சயமாக இப்றாஹீம்لَحَـلِيْمٌசகிப்பாளர்اَوَّاهٌஅதிகம் பிரார்த்திப்பவர்مُّنِيْبٌ‏திரும்பக்கூடியவர்
இன்ன இBப்ராஹீம ல ஹலீமுன் அவ்வாஹுன் முனீBப்
நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்.
یٰۤاِبْرٰهِیْمُ اَعْرِضْ عَنْ هٰذَا ۚ اِنَّهٗ قَدْ جَآءَ اَمْرُ رَبِّكَ ۚ وَاِنَّهُمْ اٰتِیْهِمْ عَذَابٌ غَیْرُ مَرْدُوْدٍ ۟
يٰۤـاِبْرٰهِيْمُஇப்ராஹீமேاَعْرِضْபுறக்கணிப்பீராகعَنْ هٰذَا ۚஇதை விட்டுاِنَّهٗநிச்சயமாகقَدْதிட்டமாகجَآءَவந்ததுاَمْرُகட்டளைرَبِّكَ‌ ۚஉம் இறைவனின்وَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்اٰتِيْهِمْவரும்/அவர்களுக்குعَذَابٌவேதனைغَيْرُ مَرْدُوْدٍ‏தடுக்கபடாதது
யா இBப்ராஹீமு அஃரிள் 'அன் ஹாதா இன்னஹூ கத் ஜா'அ அம்ரு ரBப்Bபிக வ இன்னஹும் ஆதீஹிம் 'அதாBபுன் கய்ருன் மர்தூத்
“இப்ராஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது - மேலும், அவர்களுக்குத் தவிர்க்கமுடியாத வேதனை நிச்சயமாக வரக்கூடியதேயாகும்.
وَلَمَّا جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِیْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالَ هٰذَا یَوْمٌ عَصِیْبٌ ۟
وَلَمَّا جَآءَتْவந்த போதுرُسُلُـنَاநம் தூதர்கள்لُوْطًاலூத்திடம்سِىْٓءَசிரமத்திற்குள்ளானார்بِهِمْஅவர்களால்وَضَاقَஇன்னும் சுருங்கினார்بِهِمْஅவர்களால்ذَرْعًاமனம்وَّقَالَஇன்னும் கூறினார்هٰذَاஇதுيَوْمٌநாள்عَصِيْبٌ‏மிகக் கடுமையான(து)
வ லம்மா ஜா'அத் ருஸுலுனா லூதன் ஸீ'அ Bபிஹிம் வ ளாக Bபிஹிம் தர்'அ(ன்)வ் வ கால ஹாதா யவ்முன் 'அஸீBப்
நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.
وَجَآءَهٗ قَوْمُهٗ یُهْرَعُوْنَ اِلَیْهِ ؕ وَمِنْ قَبْلُ كَانُوْا یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ ؕ قَالَ یٰقَوْمِ هٰۤؤُلَآءِ بَنَاتِیْ هُنَّ اَطْهَرُ لَكُمْ فَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ فِیْ ضَیْفِیْ ؕ اَلَیْسَ مِنْكُمْ رَجُلٌ رَّشِیْدٌ ۟
وَجَآءَهٗவந்தார்(கள்)/அவரிடம்قَوْمُهٗஅவருடைய மக்கள்يُهْرَعُوْنَவிரைந்தவர்களாகاِلَيْهِ ؕஅவர் பக்கம்وَمِنْ قَبْلُஇன்னும் இதற்கு முன்னர்كَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَஅவர்கள் செய்பவர்களாகالسَّيِّاٰتِ ؕதீயவற்றைقَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேهٰٓؤُلَاۤءِஇவர்களைبَنٰتِىْஎன் பெண் பிள்ளைகள்هُنَّஅவர்கள்اَطْهَرُமிக சுத்தமானவர்(கள்)لَـكُمْ‌ ۚஉங்களுக்குفَاتَّقُوْاஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَلَا تُخْزُوْنِஎன்னை அவமான படுத்தாதீர்கள்فِىْ ضَيْفِىْ ؕஎன் விருந்தினர் விஷயத்தில்اَلَيْسَஇல்லையா?مِنْكُمْஉங்களில்رَجُلٌஓர் ஆடவர்رَّشِيْدٌ‏நல்லறிவுள்ளவர்
வ ஜா'அஹூ கவ்முஹூ யுஹ்ர'ஊன இலய்ஹி வ மின் கBப்லு கானூ யஃமலூனஸ் ஸய்யிஆத்; கால யா கவ்மி ஹா'உலா'இ Bபனாதீ ஹுன்ன அத்ஹரு லகும் Fபத்தகுல் லாஹ வலா துக்Zஜூனி Fபீ ளய்Fபீ அலய்ஸ மின்கும் ரஜுலுர் ரஷீத்
அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.
قَالُوْا لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِیْ بَنٰتِكَ مِنْ حَقٍّ ۚ وَاِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِیْدُ ۟
قَالُوْاகூறினார்கள்لَقَدْ عَلِمْتَஅறிந்து கொண்டீர்مَاஇல்லைلَـنَاஎங்களுக்குفِىْ بَنٰتِكَஇடம்/பெண் பிள்ளைகள்/உம்مِنْ حَقٍّ‌ ۚஒரு தேவைوَاِنَّكَநிச்சயமாக நீர்لَـتَعْلَمُஉறுதிபட அறிவீர்مَاஎதைنُرِيْدُ‏நாடுகிறோம்
காலூ லகத் 'அலிம்த மா லனா Fபீ Bபனாதிக மின் ஹக்க், வ இன்னக லதஃலமு மா னுரீத்
(அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்” என்று கூறினார்கள்.
قَالَ لَوْ اَنَّ لِیْ بِكُمْ قُوَّةً اَوْ اٰوِیْۤ اِلٰی رُكْنٍ شَدِیْدٍ ۟
قَالَகூறினார்لَوْஇருக்க வேண்டுமே!اَنَّநிச்சயமாகلِىْஎனக்குبِكُمْஉங்களிடம்قُوَّةًபலம்اَوْஅல்லதுاٰوِىْۤஒதுங்குவேன்!اِلٰىபக்கம்رُكْنٍஆதரவாளர்شَدِيْدٍ‏வலிமையானவர்
கால லவ் அன்ன லீ Bபிகும் குவ்வதன் அவ் ஆவீ இலா ருக்னின் ஷதீத்
அதற்கு அவர் “உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே” என்று (விசனத்துடன்) கூறினார்.
قَالُوْا یٰلُوْطُ اِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ یَّصِلُوْۤا اِلَیْكَ فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّیْلِ وَلَا یَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ اِلَّا امْرَاَتَكَ ؕ اِنَّهٗ مُصِیْبُهَا مَاۤ اَصَابَهُمْ ؕ اِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُ ؕ اَلَیْسَ الصُّبْحُ بِقَرِیْبٍ ۟
قَالُوْاகூறினர்يٰلُوْطُலூத்தே!اِنَّاநிச்சயமாக நாங்கள்رُسُلُதூதர்கள்رَبِّكَஉம் இறைவனின்لَنْ يَّصِلُوْۤاஅறவே சேர மாட்டார்கள்اِلَيْكَ‌உம் பக்கம்فَاَسْرِஆகவே, செல்வீராகبِاَهْلِكَஉம் குடும்பத்தைக் கொண்டுبِقِطْعٍஒரு பகுதியில்مِّنَ الَّيْلِஇரவின்وَلَا يَلْتَفِتْதிரும்பிப் பார்க்க வேண்டாம்مِنْكُمْஉங்களில்اَحَدٌஒருவரும்اِلَّاதவிரامْرَاَتَكَ‌ؕஉம் மனைவிاِنَّهٗநிச்சயமாக/செய்திمُصِيْبُهَاஅடையக்கூடியதே/அவளைمَاۤ اَصَابَهُمْ‌ؕஎது/அடைகின்ற(து)/அவர்களைاِنَّநிச்சயமாகمَوْعِدَهُمُவாக்களிக்கப்பட்ட நேரம்/இவர்களின்الصُّبْحُ‌ؕவிடியற்காலைاَلَيْسَஇல்லையா?الصُّبْحُவிடியற்காலைبِقَرِيْبٍ‏சமீபமாக
காலூ யா லூது இன்னா ருஸுலு ரBப்Bபிக லய் யஸிலூ இலய்க Fப அஸ்ரி Bபி அஹ்லிக Bபிகித் 'இம் மினல் லய்லி வலா யல்தFபித் மின்கும் அஹதுன் இல்லம் ர அதக இன்னஹூ முஸீBபுஹா மா அஸாBபஹும்; இன்ன மவ்'இ தஹுமுஸ் ஸுBப்ஹ்; அலய்ஸஸ் ஸுBப்ஹு BபிகரீBப்
(விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்: “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?”
فَلَمَّا جَآءَ اَمْرُنَا جَعَلْنَا عَالِیَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَیْهَا حِجَارَةً مِّنْ سِجِّیْلٍ ۙ۬ مَّنْضُوْدٍ ۟ۙ
فَلَمَّاபோதுجَآءَவந்ததுاَمْرُنَاநம் கட்டளைجَعَلْنَاஆக்கினோம்عَالِيَهَاஅதன் மேல்புறத்தைسَافِلَهَاஅதன் கீழ்ப்புறமாகوَاَمْطَرْنَاஇன்னும் மழையாக பொழிந்தோம்عَلَيْهَاஅதன் மீதுحِجَارَةًகற்களைمِّنْஇருந்துسِجِّيْلٍۙ இறுக்கமாக்கப்பட்டதுمَّنْضُوْدٍۙ‏சுடப்பட்ட களிமண்
Fபலம்மா ஜா'அ அம்ருனா ஜ'அல்னா 'ஆலியஹா ஸாFபிலஹா வ அம்தர்னா 'அலய்ஹா ஹிஜாரதம் மின் ஸிஜ்ஜீலிம் மன்ளூத்
எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.
مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ ؕ وَمَا هِیَ مِنَ الظّٰلِمِیْنَ بِبَعِیْدٍ ۟۠
مُّسَوَّمَةًஅடையாளமிடப்பட்டிருந்ததுعِنْدَ رَبِّكَ‌ؕஉங்கள் இறைவனால்وَ مَاஇல்லைهِىَஅவைمِنَஇருந்துالظّٰلِمِيْنَஅக்கிரமக்காரர்கள்بِبَعِيْدٍ‏தூரமாக
முஸவ்வமதன் 'இன்த ரBப்Bபிக்; வமா ஹிய மினள் ளாலிமீன BபிBப'ஈத்
அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ وَلَا تَنْقُصُوا الْمِكْیَالَ وَالْمِیْزَانَ اِنِّیْۤ اَرٰىكُمْ بِخَیْرٍ وَّاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ مُّحِیْطٍ ۟
وَاِلٰى مَدْيَنَ‘மத்யன்’க்குاَخَاசகோதரர்هُمْஅவர்களுடையشُعَيْبًا‌ ؕஷுஐபைقَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَا لَـكُمْஉங்களுக்கு இல்லைمِّنْஅறவேاِلٰهٍவணக்கத்திற்குரியவன்غَيْرُهٗ ؕஅவனையன்றிوَلَا تَـنْقُصُواகுறைக்காதீர்கள்الْمِكْيَالَஅளவையில்وَالْمِيْزَانَ‌இன்னும் நிறுவையில்اِنِّىْۤநிச்சயமாக நான்اَرٰٮكُمْகாண்கிறேன்/ உங்களைبِخَيْرٍநல்லதொரு வசதியில்وَّاِنِّىْۤஇன்னும் நிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைيَوْمٍஒரு நாளின்مُّحِيْطٍ‏சூழக்கூடியது
வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ வலா தன்குஸுல் மிக்யால வல்மீZஜான்; இன்னீ அராகும் Bபிகய்ரி(ன்)வ் வ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மிம் முஹீத்
மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.
وَیٰقَوْمِ اَوْفُوا الْمِكْیَالَ وَالْمِیْزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேاَوْفُواமுழுமைப்படுத்துங்கள்الْمِكْيَالَஅளவையில்وَالْمِيْزَانَஇன்னும் நிறுவையில்بِالْقِسْطِ‌நீதமாகوَلَا تَبْخَسُواஇன்னும் குறைக்காதீர்கள்النَّاسَமக்களுக்குاَشْيَآءَபொருள்களைهُمْஅவர்களுடையوَلَا تَعْثَوْاகலகம் செய்யாதீர்கள்فِى الْاَرْضِபூமியில்مُفْسِدِيْنَ‏விஷமிகளாக
வ யா கவ்மி அவ்Fபுல் மிக்யால வல்மீZஜான Bபில்கிஸ்தி வலா தBப்கஸுன் னாஸ அஷ்யா'அஹும் வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
“(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்.
بَقِیَّتُ اللّٰهِ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۚ۬ وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِحَفِیْظٍ ۟
بَقِيَّتُமீதப்படுத்தியதுاللّٰهِஅல்லாஹ்خَيْرٌமிக மேலானதுلَّـكُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்டவர்களாகۚ وَمَاۤஇல்லைاَنَاநான்عَلَيْكُمْஉங்கள் மீதுبِحَفِيْظٍ‏கண்காணிப்பாளன்
Bபகிய்யதுல் லாஹி கய்ருல் லகும் இன் குன்தும் மு'மினீன்; வமா அன 'அலய்கும் BபிஹFபீள்
“நீங்கள் உண்மை முஃமின்களாக இருந்தால், அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு நன்மையுடையதாகும்; நான் உங்களைக் கண்காணிப்பவனும் அல்லன்” என்று கூறினார்.
قَالُوْا یٰشُعَیْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّفْعَلَ فِیْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا ؕ اِنَّكَ لَاَنْتَ الْحَلِیْمُ الرَّشِیْدُ ۟
قَالُوْاகூறினார்கள்يٰشُعَيْبُஷுஐபேاَصَلٰوتُكَஉம் தொழுகையா?تَاْمُرُكَதூண்டுகிறது/உம்மைاَنْ نَّتْرُكَநாங்கள் விடுவதற்குمَاஎவற்றைيَعْبُدُவணங்கினார்கள்اٰبَآؤُنَاۤமூதாதைகள்/எங்கள்اَوْஅல்லதுاَنْ نَّـفْعَلَநாங்கள் செய்வதைفِىْۤசெல்வங்களில்اَمْوَالِنَاஎங்கள்مَا نَشٰٓؤُا‌ ؕநாங்கள் நாடுகின்றபடிاِنَّكَ لَاَنْتَநிச்சயமாக நீர்தான்الْحَـلِيْمُமகா சகிப்பாளர்الرَّشِيْدُ‏நல்லறிவாளர்
காலூ யா ஷு'அய்Bபு 'அ ஸலாதுக த'முருக அன் னத்ருக மா யஃBபுது ஆBபா'உனா அவ் அன் னFப்'அல Fபீ அம்வாலினா மா னஷா'ஊ இன்னக ல அன்தல் ஹலீமுர் ரஷீத்
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.
قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَرَزَقَنِیْ مِنْهُ رِزْقًا حَسَنًا ؕ وَمَاۤ اُرِیْدُ اَنْ اُخَالِفَكُمْ اِلٰی مَاۤ اَنْهٰىكُمْ عَنْهُ ؕ اِنْ اُرِیْدُ اِلَّا الْاِصْلَاحَ مَا اسْتَطَعْتُ ؕ وَمَا تَوْفِیْقِیْۤ اِلَّا بِاللّٰهِ ؕ عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ اُنِیْبُ ۟
قَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاَرَءَيْتُمْஅறிவியுங்கள்اِنْ كُنْتُநான் இருப்பதால்عَلٰى بَيِّنَةٍதெளிவான அத்தாட்சியில்مِّنْ رَّبِّىْஎன் இறைவனின்وَرَزَقَنِىْஇன்னும் வழங்கினான்/ எனக்குمِنْهُதன்னிடமிருந்துرِزْقًاஉணவைحَسَنًا‌ ؕஅழகியது / நல்லதுوَمَاۤ اُرِيْدُநாடமாட்டேன்اَنْநான் முரண்படுவதற்குاُخَالِفَكُمْஉங்களுக்குاِلٰىஇல்مَاۤஎவைاَنْهٰٮكُمْதடுக்கிறேன்/உங்களைعَنْهُ‌ ؕஅவற்றை விட்டுاِنْ اُرِيْدُநாடமாட்டேன்اِلَّاதவிரالْاِصْلَاحَசீர்திருத்துவதைمَا اسْتَطَعْتُ‌ ؕநான் இயன்றவரைوَمَاஇல்லைتَوْفِيْقِىْۤஎன் நற்பாக்கியம்اِلَّاதவிரبِاللّٰهِ‌ ؕஅல்லாஹ்வைக் கொண்டேعَلَيْهِஅவன் மீதேتَوَكَّلْتُநம்பிக்கை வைத்தேன்وَاِلَيْهِஅவன் பக்கமேاُنِيْبُ‏திரும்புகிறேன்
கால யா கவ்மி அர'அய்தும் இன் குன்து 'அலா Bபய்யினதிம் மிர் ரBப்Bபீ வ ரZஜகனீ மின்ஹு ரிZஜ்கன் ஹஸனா; வ மா உரீது அன் உகாலிFபகும் இலா மா அன்ஹாகும் 'அன்ஹ்; இன் உரீது இல்லல் இஸ்லாஹ மஸ்ததஃத்; வமா தவ்Fபீகீ இல்லா Bபில்லாஹ்; 'அலய்ஹி தவக்கல்து வ இலய்ஹி உனீBப்
(அதற்கு) அவர் கூறினார்: “(என்னுடைய) சமூகத்தவர்களே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா? (ஆகவே) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன்.
وَیٰقَوْمِ لَا یَجْرِمَنَّكُمْ شِقَاقِیْۤ اَنْ یُّصِیْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ ؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِیْدٍ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேلَا يَجْرِمَنَّكُمْநிச்சயம் உங்களை தூண்ட வேண்டாம்شِقَاقِىْۤஎன்மீதுள்ள விரோதம்اَنْ يُّصِيْبَكُمْஉங்களை அடைவதற்க்குمِّثْلُபோன்றمَاۤஎதுاَصَابَஅடைந்ததுقَوْمَமக்களைنُوْحٍநூஹூடையاَوْஅல்லதுقَوْمَமக்களைهُوْدٍஹூதுடையاَوْஅல்லதுقَوْمَமக்களைصٰلِحٍ‌ؕஸாலிஹ்வுடையوَمَاஇல்லைقَوْمُமக்கள்لُوْطٍலூத்துடையمِّنْكُمْஉங்களுக்குبِبَعِيْدٍ‏தூரமாக
வ யா கவ்மி லா யஜ்ரி மன்னகும் ஷிகாகீ அய் யுஸீBபகும் மித்லு மா அஸாBப கவ்ம னூஹின் அவ் கவ்ம ஹூதின் அவ் கவ்ம ஸாலிஹ்; வமா கவ்மு லூதிம் மின்கும் BபிBப'ஈத்
“என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!
وَاسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ ؕ اِنَّ رَبِّیْ رَحِیْمٌ وَّدُوْدٌ ۟
وَاسْتَغْفِرُوْاமன்னிப்புக் கோருங்கள்رَبَّكُمْஉங்கள் இறைவனிடம்ثُمَّபிறகுتُوْبُوْۤاதிருந்தி திரும்புங்கள்اِلَيْهِ‌ؕஅவன் பக்கமேاِنَّ رَبِّىْநிச்சயமாக என் இறைவன்رَحِيْمٌபெரும் கருணையாளன்وَّدُوْدٌ‏மகா நேசன்
வஸ்தக்Fபிரூ ரBப்Bபகும் தும்ம தூBபூ இலய்ஹ்; இன்ன ரBப்Bபீ ரஹீமு(ன்)வ் வதூத்
“ஆகவே உங்களுடைய இறைவனிடம் நீங்கள் மன்னிப்புக் கோரி இன்னும் அவனிடமே தவ்பா செய்து (அவன் பக்கமே) மீளுங்கள்; நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினார்).
قَالُوْا یٰشُعَیْبُ مَا نَفْقَهُ كَثِیْرًا مِّمَّا تَقُوْلُ وَاِنَّا لَنَرٰىكَ فِیْنَا ضَعِیْفًا ۚ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنٰكَ ؗ وَمَاۤ اَنْتَ عَلَیْنَا بِعَزِیْزٍ ۟
قَالُوْاகூறினார்கள்يٰشُعَيْبُஷுஐபேمَا نَفْقَهُநாம் விளங்கவில்லைكَثِيْرًاபலவற்றைمِّمَّا تَقُوْلُநீர் கூறுவதில்وَاِنَّاநிச்சயமாக நாம்لَـنَرٰٮكَஉம்மை காண்கிறோம்فِيْنَاஎங்களில்ضَعِيْفًا‌ ۚபலவீனராகوَلَوْلَاஇல்லாவிடில்رَهْطُكَஉம் இனத்தார்لَرَجَمْنٰكَ‌கல் எறிந்தே கொன்றிருப்போம்/உம்மைوَمَاۤஇல்லைاَنْتَநீர்عَلَيْنَاநம்மிடம்بِعَزِيْزٍ‏மதிப்புடையவராக
காலூ யா ஷு'அய்Bபு மா னFப்கஹு கதீரம் மிம்மா தகூலு வ இன்னா லனராக Fபீனா ள'ஈFப(ன்)வ் வ லவ் லா ரஹ்துக லரஜம்னாக வ மா அன்த 'அலய்னா Bபி'அZஜீZஜ்
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள்.
قَالَ یٰقَوْمِ اَرَهْطِیْۤ اَعَزُّ عَلَیْكُمْ مِّنَ اللّٰهِ ؕ وَاتَّخَذْتُمُوْهُ وَرَآءَكُمْ ظِهْرِیًّا ؕ اِنَّ رَبِّیْ بِمَا تَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟
قَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاَرَهْطِىْۤஎன் இனத்தாரா?اَعَزُّஅதிகம் மதிப்புடையவர்(கள்)عَلَيْكُمْஉங்களிடம்مِّنَ اللّٰهِ ؕஅல்லாஹ்வை விடوَ اتَّخَذْتُمُوْهُஅவனை நீங்கள் எடுத்து கொண்டீர்கள்وَرَآءَபின்னால்كُمْஉங்களுக்குظِهْرِيًّا‌ ؕஎறியப்பட்டவனாகاِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَசெய்கிறீர்கள்مُحِيْطٌ‏சூழ்ந்திருப்பவன்
கால யா கவ்மி அரஹ்தீ அ'அZஜ்Zஜு 'அலய்கும் மினல் லாஹி வத்தகத்துமூஹு வரா'அகும் ளிஹ்ரிய்யன் இன்ன ரBப்Bபீ Bபிமா தஃமலூன முஹீத்
(அதற்கு) அவர் கூறினார்: “(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா? நீங்கள் அவனை முதுகுக்குப் பின் தள்ளிப் (புறக்கணித்து) விட்டீர்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்யும் செயல்களை (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுதானிருக்கின்றான்.
وَیٰقَوْمِ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ اِنِّیْ عَامِلٌ ؕ سَوْفَ تَعْلَمُوْنَ ۙ مَنْ یَّاْتِیْهِ عَذَابٌ یُّخْزِیْهِ وَمَنْ هُوَ كَاذِبٌ ؕ وَارْتَقِبُوْۤا اِنِّیْ مَعَكُمْ رَقِیْبٌ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேاعْمَلُوْاநீங்கள் செயல்படுங்கள்عَلٰى مَكَانَتِكُمْஉங்கள் தகுதிக்கு ஏற்பاِنِّىْநிச்சயமாக நான்عَامِلٌ‌ ؕசெயல்படுகிறேன்سَوْفَ تَعْلَمُوْنَ ۙஅறிவீர்கள்مَنْயாருக்கு?يَّاْتِيْهِஅவருக்கு வரும்عَذَابٌஒரு வேதனைيُّخْزِيْهِஇழிவுபடுத்தும்/தன்னைوَمَنْஇன்னும் யார்?هُوَஅவர்كَاذِبٌ‌ ؕபொய்யர்وَارْتَقِبُوْۤاஎதிர் பார்த்திருங்கள்اِنِّىْநிச்சயமாக நான்مَعَكُمْஉங்களுடன்رَقِيْبٌ‏எதிர்பார்ப்பவன்
வ யா கவ்மிஃ மலூ 'அலா மகானதிகும் இன்னீ 'ஆமிலுன் ஸவ்Fப தஃலமூன ம(ன்)ய் ய'தீஹி 'அதாBபு(ன்)ய் யுக்Zஜீஹி வ மன் ஹுவ காதிBப்; வர்தகிBபூ இன்ன்னீ ம'அகும் ரகீBப்
“என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கொண்டிருங்கள்! நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன்; இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” (என்றும் கூறினார்).
وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا شُعَیْبًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَاَخَذَتِ الَّذِیْنَ ظَلَمُوا الصَّیْحَةُ فَاَصْبَحُوْا فِیْ دِیَارِهِمْ جٰثِمِیْنَ ۟ۙ
وَلَمَّا جَآءَவந்த போதுاَمْرُنَاநம் கட்டளைنَجَّيْنَاபாதுகாத்தோம்شُعَيْبًاஷுஐபைوَّالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்مَعَهٗஅவருடன்بِرَحْمَةٍஅருளைக் கொண்டுمِّنَّا ۚநமதுوَاَخَذَتِஇன்னும் பிடித்ததுالَّذِيْنَஎவர்களைظَلَمُواஅநியாயம்செய்தார்கள்الصَّيْحَةُசப்தம்فَاَصْبَحُوْاகாலையில் ஆகிவிட்டனர்فِىْ دِيَارِهِمْதங்கள் இல்லங்களில்جٰثِمِيْنَۙ‏இறந்தவர்களாக
வ லம்மா ஜா'அ அம்ருனா னஜ்ஜய்னா ஷு'அய்Bப(ன்)வ் வல் லதீன ஆமனூ ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ அகததில் லதீன ளலமுஸ் ஸய்ஹது Fப அஸ்Bபஹூ Fபீ தியாரிஹிம் ஜாதிமீன்
(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.
كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ؕ اَلَا بُعْدًا لِّمَدْیَنَ كَمَا بَعِدَتْ ثَمُوْدُ ۟۠
كَاَنْ لَّمْ يَغْنَوْاஅவர்கள் வசிக்காததைப் போல்فِيْهَا‌ ؕஅதில்اَلَاஅறிந்துகொள்ளுங்கள்!بُعْدًاஅழிவுلِّمَدْيَنَமத்யனுக்குكَمَا بَعِدَتْஅழிந்தது போன்றுثَمُوْدُ‏ஸமூத்
க-அல்-லம் யக்னவ் Fபீஹா; அலா Bபுஃதல் லி மத்யன கமா Bப'இதத் தமூத்
அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்திலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்: ஸமூது (கூட்டத்தார் சாபக்கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்!
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مُوْسٰىமூஸாவைبِاٰيٰتِنَاநம் வசனங்களுடன்وَسُلْطٰنٍஇன்னும் அத்தாட்சிمُّبِيْنٍۙ‏தெளிவான(து)
வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
நிச்சயமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடன், தெளிவான அத்தாட்சியுடனும், அனுப்பிவைத்தோம்.
اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَاتَّبَعُوْۤا اَمْرَ فِرْعَوْنَ ۚ وَمَاۤ اَمْرُ فِرْعَوْنَ بِرَشِیْدٍ ۟
اِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்وَஇன்னும்مَلَا۟ ٮِٕهٖஅவனுடைய முக்கிய பிரமுகர்கள்فَاتَّبَعُوْۤاஅவர்கள் பின்பற்றினர்اَمْرَகட்டளையைفِرْعَوْنَ‌ۚஃபிர்அவ்னின்وَمَاۤஇல்லைاَمْرُகட்டளைفِرْعَوْنَஃபிர்அவ்னுடையبِرَشِيْدٍ‏நல்லறிவுடையதாக
இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Fபத்தBப'ஊ அம்ர Fபிர்'அவ்ன வ மா அம்ரு Fபிர்'அவ்ன Bபிரஷீத்
(அவற்றுடன் அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரமுகர்களிடமும் (வந்தார்). அப்போது ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய சமூகத்தார்) பின்பற்றி வந்தார்கள்; ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேர்மையானதாக இருக்கவில்லை.
یَقْدُمُ قَوْمَهٗ یَوْمَ الْقِیٰمَةِ فَاَوْرَدَهُمُ النَّارَ ؕ وَبِئْسَ الْوِرْدُ الْمَوْرُوْدُ ۟
يَقْدُمُமுன் செல்வான்قَوْمَهٗதன் மக்களுக்குيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்فَاَوْرَدَهُمُசேர்ப்பான்/அவர்களைالنَّارَ‌ؕநரகத்தில்وَبِئْسَஅது கெட்டதுالْوِرْدُசேருமிடம்الْمَوْرُوْدُ‏சேரப்படும்
யக்துமு கவ்மஹூ யவ்மல் கியாமதி Fப அவ்ரத ஹுமுன் னார வ Bபி'ஸல் விர்துல் மவ்ரூத்
அவன் (ஃபிர்அவ்ன்) மறுமை நாளில் தன் சமூகத்தாருக்கு முன் சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான்; (அவர்களைக்) கொண்டு போய்ச் சேர்க்குமிடம் மிகவும் கெட்டது.
وَاُتْبِعُوْا فِیْ هٰذِهٖ لَعْنَةً وَّیَوْمَ الْقِیٰمَةِ ؕ بِئْسَ الرِّفْدُ الْمَرْفُوْدُ ۟
وَاُتْبِعُوْاஇன்னும் அவர்களை தொடர்ந்ததுفِىْ هٰذِهٖஇதில்لَـعْنَةًசாபம்وَّيَوْمَ الْقِيٰمَةِ‌ ؕஇன்னும் மறுமை நாளில்بِئْسَமிகக் கெட்டதுالرِّفْدُசன்மானம்الْمَرْفُوْدُ‏சன்மானம் கொடுக்கப்பட்டது
வ உத்Bபி'ஊ Fபீ ஹாதிஹீ லஃனத(ன்)வ் வ யவ்மல் கியாமஹ்; Bபி'ஸர் ரிFப்துல் மர்Fபூத்
இ(வ்வுலகத்)திலும், கியாம நாளிலும் அவர்கள் சாபத்தால் பின்தொடரப்பட்டனர்; அவர்களுக்கு கிடைக்கும் (இந்த) சன்மானம் மிகவும் கெட்டது.
ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْقُرٰی نَقُصُّهٗ عَلَیْكَ مِنْهَا قَآىِٕمٌ وَّحَصِیْدٌ ۟
ذٰ لِكَஇவைمِنْ اَنْۢبَآءِசரித்திரங்களில்الْـقُرٰىஊர்கள்نَقُصُّهٗவிவரிக்கிறோம்/ இவற்றைعَلَيْكَ‌உம்மீதுمِنْهَاஇவற்றில்قَآٮِٕمٌநிற்கிறதுوَّحَصِيْدٌ‏இன்னும் அறுக்கப்பட்டது
தாலிக மின் அம்Bபா'இல் குரா னகுஸ்ஸுஹூ 'அலய்க மின்ஹா கா'இமு(ன்)வ் வ ஹஸீத்
(நபியே! மேற்கூறப்பட்ட) இவை (சிற்) சில ஊர்களின் வரலாறுகள் ஆகும்; இவற்றை நாம் உமக்கு எடுத்துரைத்தோம். இவற்றில் சில (இப்போதும்) உள்ளன; சில (அறுவடை செய்யப்பட்டவை போல்) அழிபட்டும் போயின.
وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَمَاۤ اَغْنَتْ عَنْهُمْ اٰلِهَتُهُمُ الَّتِیْ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مِنْ شَیْءٍ لَّمَّا جَآءَ اَمْرُ رَبِّكَ ؕ وَمَا زَادُوْهُمْ غَیْرَ تَتْبِیْبٍ ۟
وَمَاநாம் அநீதி இழைக்கவில்லைظَلَمْنٰهُمْஅவர்களுக்குوَلٰـكِنْஎனினும்ظَلَمُوْۤاஅநீதி இழைத்தனர்اَنْفُسَهُمْ‌தங்களுக்கேفَمَاۤ اَغْنَتْபலனளிக்கவில்லைعَنْهُஅவர்களுக்குاٰلِهَتُهُதெய்வங்கள்/ அவர்களுடையالَّتِىْஎவைيَدْعُوْنَஅழைக்கின்றார்கள்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمِنْ شَىْءٍசிறிதும்لَّمَّا جَآءَவந்த போதுاَمْرُகட்டளைرَبِّكَؕஉம் இறைவனின்وَمَا زَادُوْஅவை அதிகப்படுத்தவில்லைهُمْஅவர்களுக்குغَيْرَதவிரتَتْبِيْبٍ‏அழிவை
வமா ளலம்னாஹும் வ லாகின் ளலமூ அன்Fபுஸஹும் Fபமா அக்னத் 'அன்ஹும் ஆலிஹதுஹுமுல் லதீ யத்'ஊன மின் தூனில் லாஹி மின் ஷய்'இல் லம்மா ஜா'அ அம்ரு ரBப்Bபிக வமா Zஜாதூஹும் கய்ர தத்BபீBப்
அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை; எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். உம் இறைவனிடமிருந்து கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த அவர்களின் தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப்பலனும் அளிக்கவில்லை; மேலும் அவை அவர்களுக்கு நஷ்டத்தை தவிர (வேறெதையும்) அதிகரிக்கச் செய்யவில்லை.
وَكَذٰلِكَ اَخْذُ رَبِّكَ اِذَاۤ اَخَذَ الْقُرٰی وَهِیَ ظَالِمَةٌ ؕ اِنَّ اَخْذَهٗۤ اَلِیْمٌ شَدِیْدٌ ۟
وَكَذٰلِكَஇது போன்றுதான்اَخْذُபிடிرَبِّكَஉம் இறைவனின்اِذَاۤ اَخَذَஅவன் பிடித்தால்الْقُرٰىஊர்களைوَهِىَஅவையோظَالِمَةٌ‌ ؕஅநியாயம் புரிந்தவைاِنَّநிச்சயமாகاَخْذَهٗۤஅவனுடைய பிடிاَلِيْمٌதுன்புறுத்தக் கூடியதுشَدِيْدٌ‏மிகக் கடுமையானது
வ கதாலிக அக்து ரBப்Bபிக இதா அகதல் குரா வ ஹிய ளாலிமஹ்; இன்ன அக்தஹூ அலீமுன் ஷதீத்
அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவும் மிகக் கடினமானதாகவும் இருக்கும்.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّمَنْ خَافَ عَذَابَ الْاٰخِرَةِ ؕ ذٰلِكَ یَوْمٌ مَّجْمُوْعٌ ۙ لَّهُ النَّاسُ وَذٰلِكَ یَوْمٌ مَّشْهُوْدٌ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَاٰيَةًஓர் அத்தாட்சிلِّمَنْஎவருக்குخَافَபயந்தார்عَذَابَவேதனைالْاٰخِرَةِ‌ ؕமறுமையின்ذٰ لِكَஅதுيَوْمٌநாள்مَّجْمُوْعٌ  ۙஒன்று சேர்க்கப்படும்لَّهُஅதில்النَّاسُமக்கள்وَذٰ لِكَஇன்னும் அதுيَوْمٌநாள்مَّشْهُوْدٌ‏சமர்ப்பிக்கப்படும்
இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிமன் காFப 'அதாBபல் ஆகிரஹ்; தாலிக யவ்மும் மஜ்மூ'உல் லஹுன் னாஸு வ தாலிக யவ்மும் மஷ்ஹூத்
நிச்சயமாக மறுமை நாளின் வேதனையைப் பயப்படுகிறவர்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது; அது மனிதர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் - அன்றியும் அவர்கள் யாவரும் (இறைவன் முன்னிலையில்) கொண்டுவரப்படும் நாளாகும்.
وَمَا نُؤَخِّرُهٗۤ اِلَّا لِاَجَلٍ مَّعْدُوْدٍ ۟ؕ
وَمَاநாம் பிற்படுத்த மாட்டோம்نُؤَخِّرُهٗۤஅதைاِلَّاதவிரلِاَجَلٍஒரு தவணைக்கேمَّعْدُوْدٍؕ‏எண்ணப்பட்டது
வமா னு'அக்கிருஹூ இல்லா லி அஜலிம் மஃதூத்
குறிப்பிட்ட தவணைக்காகவே தவிர அதனை நாம் பிற்படுத்தவில்லை.
یَوْمَ یَاْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ اِلَّا بِاِذْنِهٖ ۚ فَمِنْهُمْ شَقِیٌّ وَّسَعِیْدٌ ۟
يَوْمَநாளில்يَاْتِஅது வரும்لَا تَكَلَّمُபேசாதுنَفْسٌஎந்த ஓர் ஆன்மாاِلَّاதவிரبِاِذْنِهٖ‌ۚஅவனுடைய அனுமதி கொண்டேفَمِنْهُمْஅவர்களில்شَقِىٌّதுர்ப்பாக்கியவான்وَّسَعِيْدٌ‏இன்னும் நற்பாக்கியவான்
யவ்ம யாதி லா தகல்லமு னFப்ஸுன் இல்லா Bபி இத்னிஹ்; Fபமின்ஹும் ஷகிய்யு(ன்)வ் வ ஸ'ஈத்
அந்நாள் வரும்போது அவனுடைய அனுமதியின்றி எவரும் பேச இயலாது; இன்னும், அவர்களில் துர்பாக்கிய சாலிகளும் இருப்பர்; நற்பாக்கிய சாலிகளும் இருப்பர்.
فَاَمَّا الَّذِیْنَ شَقُوْا فَفِی النَّارِ لَهُمْ فِیْهَا زَفِیْرٌ وَّشَهِیْقٌ ۟ۙ
فَاَمَّاஆகவேالَّذِيْنَ شَقُوْاதுர்ப்பாக்கியமடைந்தவர்கள்فَفِى النَّارِநரகில்لَهُمْஅவர்களுக்குفِيْهَاஅதில்زَفِيْرٌபெரும் கூச்சல்وَّشَهِيْقٌ ۙ‏இன்னும் இறைச்சல்
Fப அம்மல் லதீன ஷகூ FபFபின் னாரி லஹும் Fபீஹா ZஜFபீரு(ன்)வ் வ ஷஹீக்
துர்பாக்கிய சாலிகள் (நரக) நெருப்பில் (எறியப்பட்டு) இருப்பார்கள். அதில் அவர்களுக்கு பெருங்கூச்சலும், முணக்கமும்(தான்) இருக்கும்.
خٰلِدِیْنَ فِیْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ ؕ اِنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا یُرِیْدُ ۟
خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமானவர்கள்فِيْهَاஅதில்مَا دَامَتِநிலைத்திருக்கும்வரைالسَّمٰوٰتُவானங்கள்وَالْاَرْضُஇன்னும் பூமிاِلَّاதவிரمَا شَآءَநாடியதைرَبُّكَ‌ ؕஉம் இறைவன்اِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்فَعَّالٌசெய்பவன்لِّمَاநாடுவான்يُرِيْدُ‏எதை
காலிதீன Fபீஹா மா தாமதிஸ் ஸமாவாது வல் அர்ளு இல்லா மா ஷா'அ ரBப்Bபுக்; இன்ன ரBப்Bபக Fப' 'ஆலுல் லிமா யுரீத்
உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நீடிக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ந்நரகத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள்; நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன்.
وَاَمَّا الَّذِیْنَ سُعِدُوْا فَفِی الْجَنَّةِ خٰلِدِیْنَ فِیْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ ؕ عَطَآءً غَیْرَ مَجْذُوْذٍ ۟
وَاَمَّاஆகவேالَّذِيْنَ سُعِدُوْاநற்பாக்கியமடைந்தவர்கள்فَفِى الْجَـنَّةِசொர்க்கத்தில்خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்فِيْهَاஅதில்مَا دَامَتِநிலைத்திருக்கும்வரைالسَّمٰوٰتُவானங்கள்وَالْاَرْضُஇன்னும் பூமிاِلَّا مَا شَآءَநாடியதைத் தவிரرَبُّكَ‌ ؕஉம் இறைவன்عَطَآءًஅருட்கொடையாகغَيْرَ مَجْذُوْذٍ‏முடிவுறாதது
வ அம்மல் லதீன ஸு'இதூ FபFபில் ஜன்னதி காலிதீன Fபீஹா மா தாமதிஸ் ஸமாவாது வல் அர்ளு இல்லா மா ஷா'அ ரBப்Bபுக்; அதா'அன் கய்ர மஜ்தூத்
நற்பாக்கிய சாலிகளோ சுவனபதியில் இருப்பார்கள்; உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சுவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட் கொடையாகும்.
فَلَا تَكُ فِیْ مِرْیَةٍ مِّمَّا یَعْبُدُ هٰۤؤُلَآءِ ؕ مَا یَعْبُدُوْنَ اِلَّا كَمَا یَعْبُدُ اٰبَآؤُهُمْ مِّنْ قَبْلُ ؕ وَاِنَّا لَمُوَفُّوْهُمْ نَصِیْبَهُمْ غَیْرَ مَنْقُوْصٍ ۟۠
فَلَا تَكُஆகிவிடாதீர்فِىْ مِرْيَةٍசந்தேகத்தில்مِّمَّا يَعْبُدُவணங்குபவற்றில்هٰٓؤُلَاۤءِ ؕஇவர்கள்مَا يَعْبُدُوْنَஇவர்கள் வணங்கவில்லைاِلَّاதவிரكَمَاபோன்றேيَعْبُدُவணங்கினார்(கள்)اٰبَآؤُமூதாதைகள்هُمْஇவர்களுடையمِّنْ قَبْلُ‌ؕமுன்னர்وَاِنَّاநிச்சயமாக நாம்لَمُوَفُّوْهُمْமுழுமையாகக் கொடுப்போம்/இவர்களுக்குنَصِيْبَهُمْபாகத்தை/ இவர்களுடையغَيْرَ مَنْقُوْصٍ‏குறைக்கப்படாமல்
Fபலா தகு Fபீ மிர்யதிம் மிம்ம்மா யஃBபுது ஹா'உலா'; மா யஃBபுதூன இல்லா கமா யஃBபுது ஆBபா'உஹும் மின் கBப்ல்; வ இன்னா லமுவFப் Fபூஹும் னஸீBபஹும் கய்ர மன்கூஸ்
(நபியே!) இவர்கள் வணங்குபவை பற்றி நீர் சந்தேகப்பட வேண்டாம்; (இவர்களுக்கு) முன் இவர்களுடைய மூதாதையர் வணங்கி வந்த பிரகாரமே தான் இவர்களும் வணங்குகிறார்கள்; நிச்சயமாக (தண்டனைக்குரிய) இவர்களின் பங்கைக் குறைவின்றி, முழுமையாக நாம் இவர்களுக்குக் கொடுப்போம்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَاخْتُلِفَ فِیْهِ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاகொடுத்தோம்مُوْسَىமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைفَاخْتُلِفَமாறுபாடு கொள்ளப்பட்டதுفِيْهِ‌ ؕஅதில்وَ لَوْلَاஇல்லையெனில்كَلِمَةٌஒரு வாக்குسَبَقَتْமுந்தியதுمِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்لَـقُضِىَமுடிக்கப்பட்டிருக்கும்بَيْنَهُمْ‌ ؕஇவர்களுக்கிடையில்وَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَفِىْ شَكٍّசந்தேகத்தில்தான்مِّنْهُஅதில்مُرِيْبٍ‏மிக ஆழமான (சந்தேகம்)
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப Fபக்துலிFப Fபீஹ்; வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகுளிய Bபய்னஹும்; வ இன்னஹும் லFபீ ஷக்கிம் மின்ஹு முரீBப்
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது; உமது இறைவனிடமிருந்து முந்தி விட்ட வாக்கு இல்லை என்றால் இவர்கள் மத்தியிலே முடிவு செய்யப்பட்டிருக்கும். நிச்சயமாக இவர்கள் இதை (குர்ஆனை)ப் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
وَاِنَّ كُلًّا لَّمَّا لَیُوَفِّیَنَّهُمْ رَبُّكَ اَعْمَالَهُمْ ؕ اِنَّهٗ بِمَا یَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
وَاِنَّநிச்சயமாகكُلًّاஎல்லோருக்கும்لَّمَّاநிச்சயமாக முழுமையாகக் கொடுப்பான்لَيُوَفِّيَنَّهُمْஅவர்களுக்குرَبُّكَஉம் இறைவன்اَعْمَالَهُمْ‌ ؕஅவர்களுடைய செயல்களைاِنَّهٗநிச்சயமாக அவன்بِمَا يَعْمَلُوْنَஅவர்கள் செய்பவற்றைخَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
வ இன்ன குல்லல் லம்மா ல யுவFப்Fபியன்னஹும் ரBப்Bபுக அஃமாலஹும்; இன்னஹூ Bபிமா யஃமலூன கBபீர்
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய இறைவன் அவர்களுடைய செயல்களுக்கு உரிய கூலியை முழுமையாகக் கொடுப்பான் - நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை அறிந்தவனாக இருக்கின்றான்.
فَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا ؕ اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
فَاسْتَقِمْநிலையாக இருங்கள்كَمَاۤபோன்றேاُمِرْتَநீர் ஏவப்பட்டீர்وَمَنْஇன்னும் எவர்(கள்)تَابَதிருந்தி திரும்பினார்(கள்)مَعَكَஉம்முடன்وَلَا تَطْغَوْا‌ ؕவரம்பு மீறாதீர்கள்اِنَّهٗநிச்சயமாக அவன்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்பவற்றைبَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
Fபஸ்தகிம் கமா உமிர்த வ மன் தாBப ம'அக வலா தத்கவ்; இன்னஹூ Bபிமா தஃமலூன Bபஸீர்
நீரும் உம்மோடு திருந்தியவரும் ஏவப்பட்டவாறே உறுதியாக இருப்பீர்களாக;வரம்பு மீறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை கவனித்தவனாக இருக்கின்றான்.
وَلَا تَرْكَنُوْۤا اِلَی الَّذِیْنَ ظَلَمُوْا فَتَمَسَّكُمُ النَّارُ ۙ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِیَآءَ ثُمَّ لَا تُنْصَرُوْنَ ۟
وَلَا تَرْكَنُوْۤاநீங்கள் சாய்ந்து விடாதீர்கள்اِلَىபக்கம்الَّذِيْنَஎவர்கள்ظَلَمُوْاஅநீதி இழைத்தார்கள்فَتَمَسَّكُمُஉங்களை அடைந்து விடும்النَّارُۙநெருப்புوَمَاஇல்லைلَـكُمْஉங்களுக்குمِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمِنْ اَوْلِيَآءَபாதுகாப்பவர்கள் எவரும்ثُمَّ لَا تُنْصَرُوْنَ‏பிறகு/உதவி செய்யப்பட மாட்டீர்கள்
வ லா தர்கனூ இலல் லதீன ளலமூ Fபதமஸ்ஸ குமுன் னாரு வமா லகும் மின் தூனில் லாஹி மின் அவ்லியா'அ தும்ம லா துன்ஸரூன்
இன்னும், யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் - அப்படிச் செய்தால் நரக நெருப்பு உங்களைப் பிடித்துக்கொள்ளும்; அல்லாஹ்வை அன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை; மேலும் (நீங்கள் அவனுக்கெதிராக வேறெவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டீர்கள்.
وَاَقِمِ الصَّلٰوةَ طَرَفَیِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ الَّیْلِ ؕ اِنَّ الْحَسَنٰتِ یُذْهِبْنَ السَّیِّاٰتِ ؕ ذٰلِكَ ذِكْرٰی لِلذّٰكِرِیْنَ ۟ۚ
وَاَقِمِநிலை நிறுத்துவீராக!الصَّلٰوةَதொழுகையைطَرَفَىِஇரு முனைகளில்النَّهَارِபகலின்وَزُلَـفًاஇன்னும் ஒரு பகுதியில்مِّنَ الَّيْلِ‌ ؕஇரவில்اِنَّ الْحَسَنٰتِநிச்சயமாகநன்மைகள்يُذْهِبْنَபோக்கி விடுகின்றனالسَّيِّاٰتِ ؕபாவங்களைذٰ لِكَ ذِكْرٰىஇது/ஒருநல்லுபதேசம்لِلذّٰكِرِيْنَ ۚ‏நினைவு கூருபவர்களுக்கு
வ அகிமிஸ் ஸலாத தரFபயின் னஹாரி வ ZஜுலFபம் மினல் லய்ல்; இன்னல் ஹஸனாதி யுத்ஹிBப்னஸ் ஸய்யி ஆத்; தாலிக திக்ரா லித் தாகிரீன்
பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்.
وَاصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟
وَاصْبِرْபொறுப்பீராகفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُضِيْعُவீணாக்க மாட்டான்اَجْرَகூலியைالْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிபவர்களின்
வஸ்Bபிர் Fப இன்னல் லாஹ லா யுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُوْنِ مِنْ قَبْلِكُمْ اُولُوْا بَقِیَّةٍ یَّنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِی الْاَرْضِ اِلَّا قَلِیْلًا مِّمَّنْ اَنْجَیْنَا مِنْهُمْ ۚ وَاتَّبَعَ الَّذِیْنَ ظَلَمُوْا مَاۤ اُتْرِفُوْا فِیْهِ وَكَانُوْا مُجْرِمِیْنَ ۟
فَلَوْ لَا كَانَஇருந்திருக்க வேண்டாமா?مِنَ الْقُرُوْنِதலை முறையினர்களில்مِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்اُولُوْا بَقِيَّةٍசிறந்தோர்يَّـنْهَوْنَதடுக்கின்றார்கள்عَنِ الْفَسَادِவிஷமத்தை விட்டுفِى الْاَرْضِபூமியில்اِلَّاஎனினும்قَلِيْلًاகுறைவானவர்(கள்)مِّمَّنْஇருந்து/எவர்கள்اَنْجَيْنَاநாம் பாதுகாத்தோம்مِنْهُمْ‌ ۚஅவர்களில்وَاتَّبَعَஇன்னும் பின்பற்றினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்ظَلَمُوْاஅநியாயம் செய்தனர்مَاۤஎதில்اُتْرِفُوْاஇன்பமளிக்கப்பட்டார்கள்فِيْهِஅதில்وَكَانُوْاஇன்னும் இருந்தனர்مُجْرِمِيْنَ‏குற்றவாளிகளாக
Fபலவ் லா கான மினல் குரூனி மின் கBப்லிகும் ஊலூ Bபகிய்யதி(ன்)ய் யன்ஹவ்ன 'அனில் Fபஸாதி Fபில் அர்ளி இல்லா கலீலம் மிம்மன் அன்ஜய்னா மின்ஹும்; வத்தBப'அல் லதீன ளலமூ மா உத்ரிFபூ Fபீஹி வ கானூ முஜ்ரிமீன்
உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்வச் செருக்கையே பின்பற்றுகிறார்கள்; மேலும் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள்.
وَمَا كَانَ رَبُّكَ لِیُهْلِكَ الْقُرٰی بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ ۟
وَمَا كَانَஇருக்க வில்லைرَبُّكَஉம் இறைவன்لِيُهْلِكَஅழிப்பவனாகالْقُرٰىஊர்களைبِظُلْمٍஅநியாயமாகوَّاَهْلُهَاஅவற்றில் வசிப்போரோمُصْلِحُوْنَ‏சீர்திருத்துபவர்கள்
வமா கான ரBப்Bபுக லியுஹ்லிகல் குரா Bபிளுல்மி(ன்)வ் வ அஹ்லுஹா முஸ்லிஹூன்
(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் - அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.
وَلَوْ شَآءَ رَبُّكَ لَجَعَلَ النَّاسَ اُمَّةً وَّاحِدَةً وَّلَا یَزَالُوْنَ مُخْتَلِفِیْنَ ۟ۙ
وَلَوْ شَآءَநாடியிருந்தால்رَبُّكَஉம் இறைவன்لَجَـعَلَஆக்கியிருப்பான்النَّاسَமக்களைاُمَّةً وَّاحِدَةً‌ஒரே வகுப்பினராகوَّلَا يَزَالُوْنَ مُخْتَلِفِيْنَۙ‏அவர்கள் மாறுபட்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்
வ லவ் ஷா'அ ரBப்Bபுக லஜ'அலன்ன்னாஸ உம்மத(ன்)வ் வா ஹிதத(ன்)வ் வலா யZஜாலூன முக்தலிFபீன்
உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
اِلَّا مَنْ رَّحِمَ رَبُّكَ ؕ وَلِذٰلِكَ خَلَقَهُمْ ؕ وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟
اِلَّاதவிரمَنْஎவர்رَّحِمَஅருள் புரிந்தான்رَبُّكَ‌ ؕஉம் இறைவன்وَلِذٰلِكَஇதற்காகத்தான்خَلَقَهُمْ‌அவன் படைத்தான்وَتَمَّتْநிறைவேறியதுكَلِمَةُவாக்குرَبِّكَஉம் இறைவனின்لَاَمْلَـئَنَّநிச்சயமாக நான் நிரப்புவேன்جَهَـنَّمَநரகத்தைمِنَ الْجِنَّةِஜின்களில்وَالنَّاسِஇன்னும் மக்கள்اَجْمَعِيْنَ‏அனைவர்
இல்லா மர் ரஹிம ரBப்Bபுக்; வ லிதாலிக கலகஹும்; வ தம்மத் கலிமது ரBப்Bபிக ல அம்ல'அன்ன ஜஹன்னம மினல் ஜின்னதி வன்ன்னாஸி அஜ்ம'ஈன்
(அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர; இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான்; “நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக்கொண்டும் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும்.
وَكُلًّا نَّقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ ۚ وَجَآءَكَ فِیْ هٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟
وَكُلًّاஎல்லாவற்றையும்نَّقُصُّவிவரிக்கிறோம்عَلَيْكَஉமக்குمِنْஇருந்துاَنْۢبَآءِசரித்திரங்கள்الرُّسُلِதூதர்களின்مَاஎதைنُثَبِّتُஉறுதிப்படுத்துவோம்بِهٖஅதைக் கொண்டுفُؤَادَكَ‌ ۚஉம் உள்ளத்தைوَجَآءَكَஇன்னும் வந்தன/உமக்குفِىْ هٰذِهِ الْحَـقُّஇவற்றில்/உண்மைوَمَوْعِظَةٌநல்லுபதேசம்وَّذِكْرٰىஅறிவுரைلِلْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
வ குல்லன் னகுஸ்ஸு 'அலய்க மின் அம்Bபா'இர் ருஸுலி மா னுதBப்Bபிது Bபிஹீ Fபு'ஆதக்; வ ஜா'அக Fபீ ஹாதிஹில் ஹக்கு வ மவ்'இளது(ன்)வ் வ திக்ரா லில்மு' மினீன்
(நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன.
وَقُلْ لِّلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ ؕ اِنَّا عٰمِلُوْنَ ۟ۙ
وَقُلْகூறுவீராகلِّـلَّذِيْنَஎவர்களுக்குلَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்اعْمَلُوْاநீங்கள் செய்யுங்கள்عَلٰى مَكَانَتِكُمْؕஉங்கள் போக்கில்اِنَّاநிச்சயமாக நாங்கள்عٰمِلُوْنَۙ‏செய்பவர்கள், செய்வோம்
வ குல் லில்லதீன லா யு'மினூ னஃமலூ 'அலா மகானதிகும் இன்னா 'ஆமிலூன்
நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உங்கள் போக்கில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செயல்படுகிறோம்.”
وَانْتَظِرُوْا ۚ اِنَّا مُنْتَظِرُوْنَ ۟
وَانْـتَظِرُوْا‌ ۚஎதிர்பாருங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்مُنْتَظِرُوْنَ‏எதிர்பார்ப்பவர்கள், எதிர்பார்க்கிறோம்
வன்தளிரூ இன்னா முன் தளிரூன்
நீங்களும் (உங்கள் போக்கின் முடிவை) எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நாங்களும் (அவ்வாறே) எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”
وَلِلّٰهِ غَیْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاِلَیْهِ یُرْجَعُ الْاَمْرُ كُلُّهٗ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَیْهِ ؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟۠
وَلِلّٰهِஅல்லாஹ்வுக்கேغَيْبُமறைவானவைالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَاِلَيْهِஅவனிடமேيُرْجَعُதிருப்பப்படும்الْاَمْرُகாரியங்கள்كُلُّهٗஅவை எல்லாம்فَاعْبُدْهُஆகவே, அவனை வணங்குவீராகوَتَوَكَّلْநம்பிக்கை வைப்பீராகعَلَيْهِ‌ؕஅவன் மீதேوَمَاஇல்லைرَبُّكَஉம் இறைவன்بِغَافِلٍகண்காணிக்காதவனாகعَمَّا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்பவற்றை
வ லில்லாஹி கய்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வ இலய்ஹி யுர்ஜ'உல் அம்ரு குல்லுஹூ FபஃBபுத் ஹு வ தவக்கல் 'அலய்ஹ்; வமா ரBப்Bபுக BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை.