وَكَذَّبُوْاஇன்னும் அவர்கள் பொய்ப்பித்தனர்وَاتَّبَعُوْۤاஇன்னும் பின்பற்றினார்கள்اَهْوَآءَهُمْதங்கள் மன இச்சைகளைوَكُلُّஎல்லாاَمْرٍகாரியங்களும்مُّسْتَقِرٌّநிலையாகத் தங்கக் கூடியதுதான்
அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.
فَتَوَلَّஆகவே, நீர் விலகி விடுவீராக!عَنْهُمْۘஅவர்களை விட்டுيَوْمَநாளில்يَدْعُஅழைக்கின்றالدَّاعِஅழைப்பாளர்اِلٰى شَىْءٍஒன்றை நோக்கிنُّكُرٍۙமிக கடினமான(து)
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்قَوْمُமக்கள்نُوْحٍநூஹூடையفَكَذَّبُوْاஆக, அவர்கள் பொய்ப்பித்தனர்عَبْدَنَاநமது அடியாரைوَقَالُوْاஇன்னும் கூறினர்مَجْنُوْنٌஒரு பைத்தியக்காரர்وَّازْدُجِرَஇன்னும் அவர் எச்சரிக்கப்பட்டார்
இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) “பைத்தியக்காரர்” என்று கூறினர்; அவர் விரட்டவும் பட்டார்.
எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதாக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.
“ஆது” (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர்; அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?)
“நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்” என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.
(அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது; “ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்” என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம்; விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.
وَلَقَدْதிட்டவட்டமாகاَنْذَرَهُمْஅவர் அவர்களுக்கு எச்சரித்தார்بَطْشَتَـنَاநமது தண்டனையைفَتَمَارَوْاஅவர்கள் சந்தேகித்தனர்بِالنُّذُرِஎச்சரிக்கையை
வ லகத் அன்தரஹும் Bபத்ஷதனா Fபதமாரவ் Bபின்னுதுர்
திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்கலாயினர்.
அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள்; ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். “என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்” (என்றும் கூறினோம்).
ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர்; அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.
அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், “நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று அவர்களுக்கு கூறப்படும்).