77. ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)

மக்கீ, வசனங்கள்: 50

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۟ۙ
وَ الْمُرْسَلٰتِஅனுப்பப்படுபவற்றின் மீது சத்தியமாகعُرْفًاۙதொடர்ச்சியாக
வல் முர்ஸலாதி'உர்Fபா
தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக-
فَالْعٰصِفٰتِ عَصْفًا ۟ۙ
فَالْعٰصِفٰتِபின்னர் புயலாக வீசுபவை மீதுعَصْفًاۙஅதிவேகமாக
Fபல்'ஆஸிFபாதி 'அஸ்Fபா
வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۟ۙ
وَّ النّٰشِرٰتِபரப்புபவற்றின் மீது சத்தியமாகنَشْرًاۙபரப்புதலாக
வன்னாஷிராதி னஷ்ரா
(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
فَالْفٰرِقٰتِ فَرْقًا ۟ۙ
فَالْفٰرِقٰتِபிரித்துக் காட்டுபவற்றின் மீதுفَرْقًاۙதெளிவாகப் பிரித்தலாக
Fபல்Fபாரிகாதி Fபர்கா
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
فَالْمُلْقِیٰتِ ذِكْرًا ۟ۙ
فَالْمُلْقِیٰتِபின்னர் கொண்டு வந்து சேர்ப்பவைذِكْرًاۙநினைவூட்டுதலை
Fபல்முல்கியாதி திக்ரா
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
عُذْرًا اَوْ نُذْرًا ۟ۙ
عُذْرًاகுற்றச்சாட்டை நீக்குவதற்காகاَوْஅல்லதுنُذْرًاۙஎச்சரிப்பதற்காக
'உத்ரன் அவ் னுத்ரா
(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌ ۟ؕ
اِنَّمَاநிச்சயமாகتُوْعَدُوْنَஉங்களுக்கு வாக்களிக்கப்படுவதுلَوَاقِعٌؕநிகழ்ந்தே தீரும்
இன்னமா தூ'அதூன லவாகி'
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْ ۟ۙ
فَاِذَاஆகவே எப்போதுالنُّجُوْمُநட்சத்திரங்கள்طُمِسَتْۙஒளியிழக்கச் செய்யப்படுமோ
Fப இதம் னுஜூமு துமிஸத்
இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
وَاِذَا السَّمَآءُ فُرِجَتْ ۟ۙ
وَ اِذَاமேலும் எப்போதுالسَّمَآءُவானம்فُرِجَتْۙபிளக்கப்படுமோ
வ இதஸ் ஸமா'உ Fபுரிஜத்
மேலும், வானம் பிளக்கப்படும் போது-
وَاِذَا الْجِبَالُ نُسِفَتْ ۟ۙ
وَ اِذَاமேலும் எப்போதுالْجِبَالُமலைகள்نُسِفَتْۙதூளாக்கப்படுமோ
வ இதல் ஜிBபாலு னுஸிFபத்
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْ ۟ؕ
وَ اِذَاமேலும் எப்போதுالرُّسُلُதூதர்களுக்குاُقِّتَتْؕநேரம் குறிக்கப்படுகிறதோ
வ இதர் ருஸுலு உக்கிதத்
மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
لِاَیِّ یَوْمٍ اُجِّلَتْ ۟ؕ
لِاَیِّஎந்தیَوْمٍநாளுக்காகاُجِّلَتْؕதவணை வைக்கப்பட்டுள்ளது
லி அய்யி யவ்மின் உஜ்ஜிலத்
எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الْفَصْلِ ۟ؕ
وَ مَاۤமேலும் எதுاَدْرٰىكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்னவென்றுیَوْمُநாள்الْفَصْلِؕதீர்ப்பு
வ மா அத்ராக மா யவ்முல் Fபஸ்ல்
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَیْلٌகேடுیَّوْمَىِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِیْنَபொய்ப்பிப்பவர்களுக்கு
வய்லு(ன்)ய் யவ்ம 'இதில்லில்முகத்திBபீன்
(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِیْنَ ۟ؕ
اَلَمْநாம் ...வில்லையா?نُهْلِكِஅழிக்கالْاَوَّلِیْنَؕமுன்னோர்களை
அலம் னுஹ்லிகில் அவ்வலீன்
முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِیْنَ ۟
ثُمَّபின்னர்نُتْبِعُهُمُஅவர்களைத் தொடரச் செய்வோம்الْاٰخِرِیْنَபிந்தியவர்களை
தும்ம னுத்Bபி'உஹுமுல் ஆகிரீன்
பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟
كَذٰلِكَஇவ்வாறேنَفْعَلُநாம் செய்வோம்بِالْمُجْرِمِیْنَகுற்றவாளிகளுக்கு
கதலிக னFப்'அலு Bபில்முஜ்ரிமீன்
குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَیْلٌகேடுیَّوْمَىِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِیْنَபொய்ப்பிப்பவர்களுக்கு
வய்லு(ன்)வ் யவ்ம 'இதில் லில் முகத்திBபீன்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ ۟ۙ
اَلَمْஇல்லையாنَخْلُقْكُّمْநாம் உங்களைப் படைக்கمِّنْஇருந்துمَّآءٍநீர்مَّهِیْنٍۙஅற்பமான
அலம் னக்லுக்கும் மிம்மா'இம் மஹீன்
அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
فَجَعَلْنٰهُ فِیْ قَرَارٍ مَّكِیْنٍ ۟ۙ
فَجَعَلْنٰهُபின்னர் அதனை நாம் ஆக்கினோம்فِیْஒருقَرَارٍதங்குமிடத்தில்مَّكِیْنٍۙபாதுகாப்பான
Fபஜ'அல்னாஹு Fபீ கராரிம் மகீன்
பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.
فَقَدَرْنَا ۖۗ فَنِعْمَ الْقٰدِرُوْنَ ۟
فَقَدَرْنَا ۖۗஎனவே நாம் நிர்ணயித்தோம்فَنِعْمَஎவ்வளவு சிறந்தவர்கள்الْقٰدِرُوْنَநிர்ணயிப்பவர்கள்
Fபகதர்னா Fபனிஃமல் காதிரூன்
இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَیْلٌகேடுیَّوْمَىِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِیْنَபொய்ப்பிப்பவர்களுக்கு
வய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا ۟ۙ
اَلَمْநாம் ...வில்லையா?نَجْعَلِஆக்கالْاَرْضَபூமியைكِفَاتًاۙசேகரிக்குமிடமாக
அலம் னஜ்'அலில் அர்ள கிFபாதா
பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
اَحْیَآءً وَّاَمْوَاتًا ۟ۙ
اَحْیَآءًஉயிருள்ளவர்களையும்وَّ اَمْوَاتًاۙஇறந்தவர்களையும்
அஹ்யா'அ(ன்)வ் வ அம்வாதா
உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).
وَّجَعَلْنَا فِیْهَا رَوَاسِیَ شٰمِخٰتٍ وَّاَسْقَیْنٰكُمْ مَّآءً فُرَاتًا ۟ؕ
وَّ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்فِیْهَاஅதில்رَوَاسِیَஉறுதியான மலைகளைشٰمِخٰتٍஉயர்ந்தوَّ اَسْقَیْنٰكُمْமேலும் உங்களுக்குப் புகட்டினோம்مَّآءًநீரைفُرَاتًاؕஇனிமையான
வ ஜ'அல்னா Fபீஹா ரவாஸிய ஷாமிகாதி(ன்)வ் வ அஸ்கய்னாகும் மா'அன் Fபுராதா
அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَیْلٌகேடுیَّوْمَىِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِیْنَபொய்ப்பிப்பவர்களுக்கு
வய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
اِنْطَلِقُوْۤا اِلٰی مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟ۚ
اِنْطَلِقُوْۤاசெல்லுங்கள்اِلٰیநோக்கிمَاஎதனைكُنْتُمْநீங்கள்بِهٖஅதைتُكَذِّبُوْنَۚபொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ
இன்தலிகூ இலா மா குன்தும் Bபிஹீ துகத்திBபூன்
“நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
اِنْطَلِقُوْۤا اِلٰی ظِلٍّ ذِیْ ثَلٰثِ شُعَبٍ ۟ۙ
اِنْطَلِقُوْۤاசெல்லுங்கள்اِلٰیநோக்கிظِلٍّநிழலைذِیْஉடையثَلٰثِமூன்றுشُعَبٍۙகிளைகளை
இன்தலிகூ இலா ளில்லின் தீ தலாதி ஷு'அBப்
மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.
لَّا ظَلِیْلٍ وَّلَا یُغْنِیْ مِنَ اللَّهَبِ ۟ؕ
لَّاஇல்லைظَلِیْلٍநிழல் தரக்கூடியதாகوَّ لَاமேலும் இல்லைیُغْنِیْகாப்பாற்றக்கூடியதாகمِنَஇருந்துاللَّهَبِؕநெருப்புச் சுவாலை
லா ளலீலி(ன்)வ் வலா யுக்னீ மினல் லஹBப்
(அது) நிழலளிப்பதுமல்ல; (நரகின்) தீச்சுவாலையை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
اِنَّهَا تَرْمِیْ بِشَرَرٍ كَالْقَصْرِ ۟ۚ
اِنَّهَاநிச்சயமாக அதுتَرْمِیْவீசியெறியும்بِشَرَرٍதீப்பொறிகளைكَالْقَصْرِۚமாளிகையைப் போன்ற
இன்னஹா தர்மீ Bபிஷரரின் கல்கஸ்ர்
நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.
كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌ ۟ؕ
كَاَنَّهٗஅது போன்றிருக்கும்جِمٰلَتٌஒட்டகங்கள்صُفْرٌؕமஞ்சள் நிற
க அன்னஹூ ஜிமாலதுன் ஸுFப்ர்
நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَیْلٌகேடுیَّوْمَىِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِیْنَபொய்ப்பிப்பவர்களுக்கு
வய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகதிBபீன்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
هٰذَا یَوْمُ لَا یَنْطِقُوْنَ ۟ۙ
هٰذَاஇதுیَوْمُநாளாகும்لَاஇல்லைیَنْطِقُوْنَۙஅவர்கள் பேசுவார்கள்
ஹாதா யவ்மு லா யன்திகூன்
இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.
وَلَا یُؤْذَنُ لَهُمْ فَیَعْتَذِرُوْنَ ۟
وَ لَاமேலும் இல்லைیُؤْذَنُஅனுமதிக்கப்படும்لَهُمْஅவர்களுக்குفَیَعْتَذِرُوْنَஅவர்கள் காரணம் கூற
வ லா யு'தனு லஹும் Fப யஃததிரூன்
அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகல் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَیْلٌகேடுیَّوْمَىِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِیْنَபொய்ப்பிப்பவர்களுக்கு
வய்லு(ன்)வ் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
هٰذَا یَوْمُ الْفَصْلِ ۚ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِیْنَ ۟
هٰذَاஇதுیَوْمُநாள்الْفَصْلِ ۚதீர்ப்புجَمَعْنٰكُمْஉங்களை நாம் ஒன்று சேர்த்துள்ளோம்وَ الْاَوَّلِیْنَமேலும் முன்னோர்களையும்
ஹாத யவ்முல் Fபஸ்லி ஜம 'னாகும் வல் அவ்வலீன்
இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).
فَاِنْ كَانَ لَكُمْ كَیْدٌ فَكِیْدُوْنِ ۟
فَاِنْஎனவேكَانَஇருந்தால்لَكُمْஉங்களிடம்كَیْدٌசூழ்ச்சிفَكِیْدُوْنِஎனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்
Fப இன் கான லகும் கய்துன் Fபகீதூன்
எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟۠
وَیْلٌகேடுیَّوْمَىِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِیْنَ۠பொய்ப்பிப்பவர்களுக்கு
வய்லு(ன்)ய் யவ்ம'இதில் லில்முகத்திBபீன்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ ظِلٰلٍ وَّعُیُوْنٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்கள்فِیْஇல்ظِلٰلٍநிழல்கள்وَّ عُیُوْنٍۙமேலும் நீரூற்றுகள்
இன்னல் முத்தகீன Fபீ ளிலாலி(ன்)வ் வ 'உயூன்
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
وَّفَوَاكِهَ مِمَّا یَشْتَهُوْنَ ۟ؕ
وَّ فَوَاكِهَமேலும் கனிகளும்مِمَّاஎவற்றைیَشْتَهُوْنَؕஅவர்கள் விரும்புகிறார்களோ
வ Fபவாகிஹ மிம்மா யஷ்தஹூன்
இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
كُلُوْاஉண்ணுங்கள்وَ اشْرَبُوْاமேலும் பருகுங்கள்هَنِیْٓـًٔۢاமகிழ்ச்சியுடன்بِمَاகாரணமாகكُنْتُمْநீங்கள்تَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தீர்கள்
குலூ வஷ்ரBபூ ஹனீ 'அம் Bபிமா குன்தும் தஃமலூன்
“நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என்று கூறப்படும்).
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیகூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَیْلٌகேடுیَّوْمَىِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِیْنَபொய்ப்பிப்பவர்களுக்கு
வய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِیْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ ۟
كُلُوْاஉண்ணுங்கள்وَ تَمَتَّعُوْاமேலும் சுகம் அனுபவியுங்கள்قَلِیْلًاசிறிது காலம்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்مُّجْرِمُوْنَகுற்றவாளிகள்
குலூ வ தமத்த'ஊ கலீலன் இன்னகும் முஜ்ரிமூன்
(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَیْلٌகேடுیَّوْمَىِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِیْنَபொய்ப்பிப்பவர்களுக்கு
வய்லுன்(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
وَاِذَا قِیْلَ لَهُمُ ارْكَعُوْا لَا یَرْكَعُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுقِیْلَகூறப்பட்டால்لَهُمُஅவர்களுக்குارْكَعُوْاகுனிந்து வணங்குங்கள்لَاஇல்லைیَرْكَعُوْنَகுனிந்து வணங்குகிறார்கள்
வ இதா கீல லஹுமுர் க'ஊ லா யர்க'ஊன்
“நீங்கள் குனிந்து வணங்குங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَیْلٌகேடுیَّوْمَىِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِیْنَபொய்ப்பிப்பவர்களுக்கு
வய்லுன்(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَهٗ یُؤْمِنُوْنَ ۟۠
فَبِاَیِّஎனவே எந்தحَدِیْثٍۭசெய்தியைبَعْدَهٗஇதற்குப் பிறகுیُؤْمِنُوْنَ۠அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
FபBபி அய்யி ஹதீதிம் Bபஃதஹூ யு'மினூன்
எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?