50. ஸூரத்து ஃகாஃப்

மக்கீ, வசனங்கள்: 45

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قٓ ۚ۫ وَالْقُرْاٰنِ الْمَجِیْدِ ۟ۚ
قٓ ۚகாஃப்وَالْقُرْاٰنِகுர்ஆன் மீது சத்தியமாக!الْمَجِيْدِۚ‏கீர்த்திமிக்க(து)
காFப்; வல் குர் ஆனில் மஜீத்
காஃப், கண்ணியமிக்க இக்குர்ஆன் மீது சத்தியமாக!
بَلْ عَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا شَیْءٌ عَجِیْبٌ ۟ۚ
بَلْமாறாகعَجِبُوْۤاஆச்சரியப்பட்டனர்اَنْ جَآءَவந்ததால்هُمْஅவர்களிடம்مُّنْذِرٌஓர் எச்சரிப்பாளர்مِّنْهُمْஅவர்களில் இருந்தேفَقَالَஆகவே, கூறினர்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்هٰذَاஇதுشَىْءٌஒரு விஷயம்عَجِيْبٌ‌ۚ‏மிக ஆச்சரியமான
Bபல் 'அஜிBபூ அன் ஜா'அஹும் முன்திரும் மின்ஹும் Fபகாலல் காFபிரூன ஹாதா ஷய்'உன் 'அஜீBப்
எனினும்: அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்; ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்: “இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்.”
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ۚ ذٰلِكَ رَجْعٌ بَعِیْدٌ ۟
ءَاِذَا مِتْنَاநாங்கள் இறந்துவிட்டாலுமாوَكُنَّاஇன்னும் நாங்கள் ஆகிவிட்டாலுமாتُرَابًا ۚமண்ணாகذٰ لِكَஅதுرَجْعٌ ۢமீட்சியாகும்بَعِيْدٌ‏தூரமான(து)
'அ-இதா மித்னா வ குன்னா துராBபன் தாலிக ரஜ்'உம் Bப'ஈத்
“நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? இப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது” (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).
قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْاَرْضُ مِنْهُمْ ۚ وَعِنْدَنَا كِتٰبٌ حَفِیْظٌ ۟
قَدْதிட்டமாகعَلِمْنَاநாம் அறிவோம்مَا تَنْقُصُகுறைப்பதைالْاَرْضُபூமிمِنْهُمْ‌ۚஅவர்களில்وَعِنْدَنَاநம்மிடம் இருக்கிறது.كِتٰبٌபதிவு நூல்حَفِيْظٌ‏பாதுகாக்கக்கூடிய(து)
கத் 'அலிம்னா மா தன்கு-ஸுல்-அர்ளு மின்ஹும் வ 'இன்தனா கிதாBபுன் ஹFபீள்
(மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.
بَلْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِیْۤ اَمْرٍ مَّرِیْجٍ ۟
بَلْமாறாகكَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தனர்بِالْحَقِّஉண்மையைلَمَّا جَآءَஅது வந்த போதுهُمْஅவர்களிடம்فَهُمْஅவர்கள் இருக்கின்றனர்فِىْۤ اَمْرٍஒரு விஷயத்தில்مَّرِيْجٍ‏குழப்பமான
Bபல் கத்தBபூ Bபில்ஹக்கி லம்மா ஜா'அஹும் Fபஹும் Fபீ அம்ரிம் மரீஜ்
இருப்பினும், சத்திய (வேத)த்தை -அது தம்மிடம் வந்த போது பொய்ப்பிக்(க முற்படு)கிறார்கள்; அதனால், அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.
اَفَلَمْ یَنْظُرُوْۤا اِلَی السَّمَآءِ فَوْقَهُمْ كَیْفَ بَنَیْنٰهَا وَزَیَّنّٰهَا وَمَا لَهَا مِنْ فُرُوْجٍ ۟
اَ فَلَمْ يَنْظُرُوْۤاஅவர்கள் பார்க்கவில்லையா?اِلَى السَّمَآءِவானத்தைفَوْقَهُمْதங்களுக்கு மேல் உள்ளكَيْفَ بَنَيْنٰهَاநாம் அதை எப்படி படைத்தோம்?وَزَ يَّـنّٰهَاஇன்னும் அதை எப்படி அலங்கரித்தோம்?وَمَا لَهَاஅதில் இல்லைمِنْ فُرُوْجٍ‏பிளவுகள்
அFபலம் யன்ளுரூ இலஸ் ஸமா'இ Fபவ்கஹும் கய்Fப Bபனய்னாஹா வ Zஜய்யன்னாஹா வமா லஹா மின் Fபுரூஜ்
அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَیْنَا فِیْهَا رَوَاسِیَ وَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِیْجٍ ۟ۙ
وَالْاَرْضَஇன்னும் பூமியைمَدَدْنٰهَاநாம் அதை விரித்தோம்وَاَ لْقَيْنَا فِيْهَاஇன்னும் அதில் அமைத்தோம்رَوَاسِىَபெரிய மலைகளைوَاَنْۢبَتْنَاஇன்னும் தாவரங்களை முளைக்க வைத்தோம்فِيْهَاஅதில்مِنْ كُلِّ زَوْجٍۢஎல்லா வகையானبَهِيْجٍ ۙ‏அழகான
வல் அர்ள மதத்னாஹா வ அல்கய்னா Fபீஹா ரவாஸிய வ அம்Bபத்னா Fபீஹா மின் குல்லி Zஜவ்ஜிம் Bபஹீஜ்
மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.
تَبْصِرَةً وَّذِكْرٰی لِكُلِّ عَبْدٍ مُّنِیْبٍ ۟
تَبْصِرَةًஉற்று நோக்குவதற்காக(வும்)وَّذِكْرٰىபடிப்பினை பெறுவதற்காகவும்لِكُلِّ عَبْدٍஎல்லா அடியார்களுக்கும்مُّنِيْبٍ‏திரும்பக்கூடிய(வர்)
தBப்ஸிரத(ன்)வ் வ திக்ரா லிகுல்லி 'அBப்திம் முனீBப்
(இது இறைவன் பக்கம்) திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் (அகப்) பார்வை அளிப்பதாகவும், (நினைவூட்டும்) நல்லுபதேசமாகவும் உள்ளது.
وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰرَكًا فَاَنْۢبَتْنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِیْدِ ۟ۙ
وَنَزَّلْنَاஇன்னும் நாம் இறக்கினோம்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துمَآءًநீரைمُّبٰـرَكًاஅருள் நிறைந்த(து)فَاَنْۢبَـتْـنَاமுளைக்க வைத்தோம்بِهٖஅதன் மூலம்جَنّٰتٍதோட்டங்களை(யும்)وَّحَبَّதானியங்களையும்الْحَصِيْدِ ۙ‏அறுவடை செய்யப்படும்
வ னZஜ்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அம் முBபாரகன் Fப அம்Bபத்னா Bபிஹீ ஜன்னாதி(ன்)வ் வ ஹBப்Bபல் ஹஸீத்
அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.
وَالنَّخْلَ بٰسِقٰتٍ لَّهَا طَلْعٌ نَّضِیْدٌ ۟ۙ
وَالنَّخْلَஇன்னும் பேரித்த மரங்களையும்بٰسِقٰتٍஉயரமான(வைகள்)لَّهَاஅவற்றில்طَلْـعٌகுலைகள் இருக்கின்றனنَّضِيْدٌ ۙ‏அடர்த்தியான(து)
வன்னக்ல Bபாஸிகாதில் லஹ தல்'உன் னளீத்
அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட (குலைகளையுடைய) நெடிய பேரீச்ச மரங்களையும் (உண்டாக்கினோம்).
رِّزْقًا لِّلْعِبَادِ ۙ وَاَحْیَیْنَا بِهٖ بَلْدَةً مَّیْتًا ؕ كَذٰلِكَ الْخُرُوْجُ ۟
رِّزْقًاஉணவாக இருப்பதற்காகلِّلْعِبَادِ‌ ۙஅடியார்களுக்குوَاَحْيَيْنَاநாம் உயிர்ப்பிப்போம்بِهٖஅதன் மூலம்بَلْدَةًபூமியைمَّيْـتًا‌ ؕஇறந்த(து)كَذٰلِكَஇவ்வாறுதான்الْخُـرُوْجُ‏வெளியேறுவதும்
ரிZஜ்கல் லில்'இBபாத், வ அஹ்யய்னா Bபிஹீ Bபல்ததம் மய்தா; கதாலிகல் குரூஜ்
(அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்), மேலும், அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம், இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّاَصْحٰبُ الرَّسِّ وَثَمُوْدُ ۟ۙ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்قَوْمُமக்களும்نُوْحٍநூஹூடையوَّاَصْحٰبُ الرَّسِّகிணற்றுடையவர்களும்وَثَمُوْدُۙ‏ஸமூது மக்களும்
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ அஸ்ஹாBபுர் ரஸ்ஸி வ தமூத்
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ரஸ்ஸு (கிணற்று) வாசிகளும், ஸமூது மக்களும் (இவ்வாறு மறுமையை) மறுத்தார்கள்.
وَعَادٌ وَّفِرْعَوْنُ وَاِخْوَانُ لُوْطٍ ۟ۙ
وَعَادٌஆது மக்களும்وَّفِرْعَوْنُஃபிர்அவ்னும்وَاِخْوَانُசகோதரர்களும்لُوْطٍۙ‏லூத்துடைய
வ 'ஆது(ன்)வ் வ Fபிர்'அவ்னு வ இக்வானு லூத்
“ஆது” (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்).
وَّاَصْحٰبُ الْاَیْكَةِ وَقَوْمُ تُبَّعٍ ؕ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِیْدِ ۟
وَّاَصْحٰبُ الْاَيْكَةِதோட்டக்காரர்களும்وَقَوْمُமக்களும்تُبَّعٍ‌ؕதுப்பஃ உடையكُلٌّஎல்லோரும்كَذَّبَபொய்ப்பித்தனர்الرُّسُلَதூதர்களைفَحَقَّஆகவே, உறுதியாகிவிட்டதுوَعِيْدِ‏என் எச்சரிக்கை
வ அஸ்ஹாBபுல் அய்கதி வ கவ்மு துBப்Bப'; குல்லுன் கத்தBபர் ருஸுல Fபஹக்க வ'ஈத்
(அவ்வாறே மத்யன்) தோப்புவாசிகளும், துப்பவுடைய கூட்டத்தாரும் ஆக எல்லோரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்; எனவே (அவர்களைப் பற்றிய) என்னுடைய எச்சரிக்கை உண்மையாயிற்று.
اَفَعَیِیْنَا بِالْخَلْقِ الْاَوَّلِ ؕ بَلْ هُمْ فِیْ لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِیْدٍ ۟۠
اَفَعَيِيْنَاநாம் பலவீனமாக ஆகிவிட்டோமா?بِالْخَـلْقِபடைத்ததினால்الْاَوَّلِ‌ؕமுதல் முறைبَلْமாறாகهُمْஅவர்கள் இருக்கின்றனர்فِىْ لَبْسٍகுழப்பத்தில்مِّنْ خَلْقٍபடைக்கப்படுவதில்جَدِيْدٍ‏புதிதாக
அFப'அ யீனா Bபில்கல்கில் அவ்வல்; Bபல் ஹும் Fபீ லBப்ஸிம் மின் கல்கின் ஜதீத்
எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா? இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர்.  
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَیْهِ مِنْ حَبْلِ الْوَرِیْدِ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகخَلَقْنَاநாம் படைத்தோம்الْاِنْسَانَமனிதனைوَنَعْلَمُஇன்னும் நாம் அறிவோம்مَاஎதைتُوَسْوِسُகிசுகிசுக்கிறதோبِهٖஅதைنَفْسُهٗ ۖۚஅவனது உள்ளம்وَنَحْنُநாம்اَقْرَبُமிக நெருக்கமானவர்கள்اِلَيْهِஅவனுக்குمِنْ حَبْلِநரம்பைவிடالْوَرِيْدِ‏கழுத்தின்
வ லகத் கலக்னல் இன்ஸான வ னஃலமு மா துவஸ்விஸு Bபிஹீ னFப்ஸுஹூ வ னஹ்னு அக்ரBபு இலய்ஹி மின் ஹBப்லில் வரீத்
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.
اِذْ یَتَلَقَّی الْمُتَلَقِّیٰنِ عَنِ الْیَمِیْنِ وَعَنِ الشِّمَالِ قَعِیْدٌ ۟
اِذْ يَتَلَقَّىசந்திக்கின்ற போதுالْمُتَلَقِّيٰنِசந்திக்கின்ற இரு வானவர்கள்عَنِ الْيَمِيْنِவலது பக்கத்திலும்وَعَنِ الشِّمَالِஇடது பக்கத்திலும்قَعِيْدٌ‏கண்காணிப்பவர்
'இத் யதலக்கல் முதலக்கி யானி 'அனில் யமீனி வ 'அனிஷ் ஷிமாலி க'ஈத்
(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-
مَا یَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَیْهِ رَقِیْبٌ عَتِیْدٌ ۟
مَا يَلْفِظُபேச மாட்டான்مِنْ قَوْلٍபேச்சில் எதையும்اِلَّاதவிரلَدَيْهِஅவனிடம் இருந்தேرَقِيْبٌகண்காணிப்பாளர்عَتِيْدٌ‏ஆஜராகி இருப்பவர்
மா யல்Fபிளு மின் கவ்லின் இல்லா லதய்ஹி ரகீBபுன் 'அதீத்
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
وَجَآءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ؕ ذٰلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِیْدُ ۟
وَ جَآءَتْவந்துவிட்டதுسَكْرَةُமயக்கம்الْمَوْتِமரணத்தின்بِالْحَـقِّ‌ؕஉண்மையாகذٰلِكَஅதுதான்مَاஎதுكُنْتَநீ இருந்தாய்مِنْهُஅதை விட்டுتَحِيْدُ‏விலகி ஓடுபவனாக
வ ஜா'அத் ஸக்ரதுல் மவ்தி Bபில்ஹக்க்; தாலிக மா குன்த மின்ஹு தஹீத்
மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது; (அப்போது அவனிடம்) நீ எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)
وَنُفِخَ فِی الصُّوْرِ ؕ ذٰلِكَ یَوْمُ الْوَعِیْدِ ۟
وَنُفِخَஊதப்படும்فِى الصُّوْرِ ؕசூரில்ذٰ لِكَ يَوْمُஅதுதான்/நாள்الْوَعِيْدِ‏எச்சரிக்கப்பட்ட
வ னுFபிக Fபிஸ் ஸூர்; தாலிக யவ்முல் வ'ஈத்
மேலும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சுறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும்.
وَجَآءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَآىِٕقٌ وَّشَهِیْدٌ ۟
وَجَآءَتْவரும்كُلُّஎல்லாنَفْسٍஆன்மாவும்مَّعَهَاஅதனுடன் இருக்கின்ற நிலையில்سَآٮِٕقٌஓட்டிவருபவரும்وَّشَهِيْدٌ‏சாட்சி சொல்பவரும்
வ ஜா'அத் குல்லு னFப்ஸிம் ம'அஹா ஸா'இகு(ன்)வ் வ ஷஹீத்
அன்றியும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர், சாட்சியாளர் ஆகியோருடன் வரும்.
لَقَدْ كُنْتَ فِیْ غَفْلَةٍ مِّنْ هٰذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَآءَكَ فَبَصَرُكَ الْیَوْمَ حَدِیْدٌ ۟
لَقَدْதிட்டவட்டமாகكُنْتَநீ இருந்தாய்فِىْ غَفْلَةٍமறந்த நிலையில்مِّنْ هٰذَاஇதைفَكَشَفْنَاநாம் அகற்றினோம்عَنْكَஉன்னை விட்டும்غِطَآءَكَஉனது திரையைفَبَصَرُكَஆகவே, உனது பார்வைالْيَوْمَஇன்றைய தினம்حَدِيْدٌ‏மிகக் கூர்மையானதாக
லகத் குன்த Fபீ கFப் லதிம் மின் ஹாதா FபகஷFப்னா 'அன்க கிதா'அக FபBபஸருகல் யவ்ம ஹதீத்
“நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது.” (என்று கூறப்படும்).
وَقَالَ قَرِیْنُهٗ هٰذَا مَا لَدَیَّ عَتِیْدٌ ۟ؕ
وَقَالَகூறுவார்قَرِيْـنُهٗஅவனுடைய நண்பன்هٰذَاஇதுمَاஎதுلَدَىَّஎன்னிடம்عَتِيْدٌ ؕ‏தயாராக
வ கால கரீனுஹூ ஹாதா மா லதய்ய 'அதீத்
அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) “இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது” என்று கூறுவார்.
اَلْقِیَا فِیْ جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِیْدٍ ۟ۙ
اَلْقِيَاநீங்கள் இருவரும் தள்ளுங்கள்!فِىْ جَهَنَّمَநரகத்தில்كُلَّஎல்லோரையும்كَفَّارٍநிராகரிப்பாளர்عَنِيْدٍۙ‏முரண்டு பிடிப்பவர்
அல்கியா Fபீ ஜஹன்னம குல்ல கFப்Fபாரின் 'அனீத்
“மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள்.
مَّنَّاعٍ لِّلْخَیْرِ مُعْتَدٍ مُّرِیْبِ ۟ۙ
مَّنَّاعٍதடுப்பவர்لِّلْخَيْرِசெல்வத்தைمُعْتَدٍஎல்லை மீறுபவர்مُّرِيْبِ ۙ‏சந்தேகிப்பவன்
மன்னா'இல் லில்கய்ரி முஃததிம் முரீBப்
“(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி) சந்தேகிப்பவனாக, வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான்.
لَّذِیْ جَعَلَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَاَلْقِیٰهُ فِی الْعَذَابِ الشَّدِیْدِ ۟
اۨلَّذِىْஎவர்جَعَلَஏற்படுத்தினாரோمَعَ اللّٰهِஅல்லாஹ்வுடன்اِلٰهًا اٰخَرَவேறு ஒரு கடவுளைفَاَ لْقِيٰهُஅவரையும் தள்ளுங்கள்!فِى الْعَذَابِவேதனையில்الشَّدِيْدِ‏கடுமையான(து)
அல்லதீ ஜ'அல ம'அல் லாஹி இலாஹன் ஆகர Fப அல்கியாஹு Fபில்'அதாBபிஷ் ஷதீத்
“அவன் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஏற்படுத்தினான். ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்” (என்றும் கூறப்படும்).
قَالَ قَرِیْنُهٗ رَبَّنَا مَاۤ اَطْغَیْتُهٗ وَلٰكِنْ كَانَ فِیْ ضَلٰلٍۢ بَعِیْدٍ ۟
قَالَகூறுவான்قَرِيْنُهٗஅவனுடைய நண்பன்رَبَّنَاஎங்கள் இறைவா!مَاۤ اَطْغَيْتُهٗநான் அவனை மீறச்செய்யவில்லைوَلٰـكِنْஎனினும்كَانَஇருந்தான்فِىْ ضَلٰلٍۢவழிகேட்டில்بَعِيْدٍ‏தூரமான(து)
கால கரீனுஹூ ரBப்Bபனா மா அத்கய்துஹூ வ லாகின் கான Fபீ ளலாலின் Bப'ஈத்
(அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்: “எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை; ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-”
قَالَ لَا تَخْتَصِمُوْا لَدَیَّ وَقَدْ قَدَّمْتُ اِلَیْكُمْ بِالْوَعِیْدِ ۟
قَالَகூறுவான்لَا تَخْتَصِمُوْاதர்க்கம் செய்யாதீர்கள்لَدَىَّஎன்னிடம்وَقَدْதிட்டமாகقَدَّمْتُமுற்படுத்திவிட்டேன்اِلَيْكُمْஉங்களுக்குبِالْوَعِيْدِ‏எச்சரிக்கையை
கால லா தக்தஸிமூ லதாய்ய வ கத் கத்தம்து இலய்கும் Bபில்வ'ஈத்
“என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்” என்று (அல்லாஹ்) கூறுவான்.
مَا یُبَدَّلُ الْقَوْلُ لَدَیَّ وَمَاۤ اَنَا بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟۠
مَا يُبَدَّلُமாற்றப்படாதுالْقَوْلُபேச்சுகள்لَدَىَّஎன்னிடம்وَمَاۤ اَنَاநான் இல்லைبِظَلَّامٍஅறவே அநியாயம் செய்பவனாகلِّلْعَبِيْدِ‏அடியார்களுக்கு
மா யுBபத்தலுல் கவ்லு லதய்ய வ மா அன Bபிளல் லாமில் லில்'அBபீத்
(எனவே என்னுடைய) அச்சொல் “என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்” (என்றும் அல்லாஹ் கூறுவான்).  
یَوْمَ نَقُوْلُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَاْتِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَّزِیْدٍ ۟
يَوْمَநாளில்نَـقُوْلُநாம் கூறுகின்றلِجَهَـنَّمَநரகத்திடம்هَلِ امْتَلَـئْتِநீ நிரம்பிவிட்டாயா?وَتَقُوْلُஅது கூறும்هَلْ مِنْ مَّزِيْدٍ‏இன்னும் அதிகம் இருக்கிறதா?
யவ்ம னகூலு லி'ஜஹன்னம ஹலிம் தலாதி வ தகூலு ஹல் மிம் மZஜீத்
நரகத்தை நோக்கி, “நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!
وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِیْنَ غَیْرَ بَعِیْدٍ ۟
وَاُزْلِفَتِசமீபமாகக் கொண்டு வரப்படும்الْجَـنَّةُசொர்க்கம்لِلْمُتَّقِيْنَஇறையச்சமுள்ளவர்களுக்குغَيْرَ بَعِيْدٍ‏தூரமின்றி
வ உZஜ்லிFபதில் ஜன்னது லில் முத்தகீன கய்ர Bப'ஈத்
(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.
هٰذَا مَا تُوْعَدُوْنَ لِكُلِّ اَوَّابٍ حَفِیْظٍ ۟ۚ
هٰذَاஇதுதான்مَاஎதுتُوْعَدُوْنَவாக்களிக்கப்படுகிறதுلِكُلِّஎல்லோருக்கும்اَوَّابٍஅல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பக்கூடிய(வர்)حَفِيْظٍ‌ۚ‏பேணக்கூடிய(வர்)
ஹாத மா தூ'அதூன லிகுல்லி அவ்வாBபின் ஹFபீள்
“இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).”
مَنْ خَشِیَ الرَّحْمٰنَ بِالْغَیْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِیْبِ ۟ۙ
مَنْஎவர்خَشِىَபயந்தாரோالرَّحْمٰنَபேரருளாளனைبِالْغَيْبِமறைவில்وَجَآءَஇன்னும் வந்தாரோبِقَلْبٍஉள்ளத்துடன்مُّنِيْبِۙ‏அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பிய(து)
மன் கஷியர் ரஹ்மான Bபில்கய்Bபி வ ஜா'அ Bபிகல்Bபிம் முனீBப்
எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).
دْخُلُوْهَا بِسَلٰمٍ ؕ ذٰلِكَ یَوْمُ الْخُلُوْدِ ۟
اۨدْخُلُوْهَاநீங்கள் அதில் நுழையுங்கள்!بِسَلٰمٍ‌ؕபாதுகாப்புடன்ذٰلِكَஇதுதான்يَوْمُநாள்الْخُلُوْدِ‏நிரந்தர
உத்குலூஹா Bபிஸலாமின் தாலிக யவ்முல் குலூத்
“ஸலாமுடன் - சாந்தியுடன் - இ(ச் சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்; இதுதான் நித்தியமாக நீங்கள் தங்கியிருக்கும் நாளாகும்” (என்று கூறப்படும்).
لَهُمْ مَّا یَشَآءُوْنَ فِیْهَا وَلَدَیْنَا مَزِیْدٌ ۟
لَهُمْஅவர்களுக்குمَّاஎவைيَشَآءُوْنَஅவர்கள் நாடுகின்றனர்فِيْهَاஅதில்وَلَدَيْنَاஇன்னும் நம்மிடம் உண்டுمَزِيْدٌ‏மேலதிகமும்
லஹும் மா யஷா'ஊன Fபீஹா வ லதய்னா மZஜீத்
அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது; இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது.
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوْا فِی الْبِلَادِ ؕ هَلْ مِنْ مَّحِیْصٍ ۟
وَكَمْஎத்தனையோاَهْلَـكْنَاநாம் அழித்தோம்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்مِّنْ قَرْنٍதலைமுறையினரைهُمْஅவர்கள்اَشَدُّமிக பலமான(வர்கள்)مِنْهُمْஇவர்களை விடبَطْشًاவலிமை(யுள்ளவர்கள்)فَنَقَّبُوْاஅவர்கள் சுற்றினார்கள்فِى الْبِلَادِ ؕநகரங்களில்هَلْ مِنْ مَّحِيْصٍ‏தப்பிக்கும் இடம் ஏதும் இருக்கிறதா?
வ கம் அஹ்லக்னா கBப்லஹும் மின் கர்னின் ஹும் அஷத்து மின்ஹும் Bபத்ஷன் Fபனக்கBபூ Fபில் Bபிலாத், ஹல் மிம் மஹீஸ்
அன்றியும், (நிராகரிப்போரான) அவர்களைவிட பலசாலிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை அவர்களுக்கு முன்னர் நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் (அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள) பல ஊர்களிலும் (துளைத்துச்) சென்றனர்; ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்ள புகலிடம் இருந்ததா?
اِنَّ فِیْ ذٰلِكَ لَذِكْرٰی لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَی السَّمْعَ وَهُوَ شَهِیْدٌ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰلِكَஇதில் இருக்கிறதுلَذِكْرٰىநல்லறிவுரைلِمَنْஎவருக்குكَانَஇருக்கின்றதுلَهٗஅவருக்குقَلْبٌஉள்ளம்اَوْஇன்னும்اَلْقَى السَّمْعَசெவி சாய்த்தான்وَهُوَஅவர்شَهِيْدٌ‏பிரசன்னமாக இருந்து
இன்ன Fபீ தாலிக லதிக்ரா லிமன் கான லஹூ கல்Bபுன் அவ் அல்கஸ் ஸம்'அ வ ஹுவ ஷஹீத்
எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.
وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ۖۗ وَّمَا مَسَّنَا مِنْ لُّغُوْبٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகخَلَقْنَاநாம் படைத்தோம்السَّمٰوٰتِவானங்களை(யும்)وَالْاَرْضَபூமியையும்وَمَا بَيْنَهُمَاஅவை இரண்டுக்கும் மத்தியில் உள்ளவற்றையும்فِىْ سِتَّةِஆறுاَيَّامٍ‌ۖநாள்களில்وَّمَا مَسَّنَاநமக்கு ஏற்படவில்லைمِنْ لُّغُوْبٍ‏சோர்வும்
வ லகத் கலக்னஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா Fபீ ஸித்ததி அய்யாமின் வமா மஸ்ஸனா மில் லுகூBப்
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
فَاصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوْبِ ۟ۚ
فَاصْبِرْஆகவே, பொறுமையாக இருப்பீராக!عَلٰى مَا يَقُوْلُوْنَஅவர்கள் பேசுகின்றவற்றின் மீதுوَسَبِّحْஇன்னும் துதிப்பீராக!بِحَمْدِபுகழ்ந்துرَبِّكَஉமது இறைவனைقَبْلَமுன்னரும்طُلُوْعِஉதிப்பதற்குالشَّمْسِசூரியன்وَقَبْلَமுன்னரும்الْغُرُوْبِ‌ۚ‏மறைவதற்கு
Fபஸ்Bபிர் 'அலா மா யகூலூன வ ஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக கBப்ல துலூ'இஷ் ஷம்ஸி வ கBப்லல் குரூBப்
எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக; இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.
وَمِنَ الَّیْلِ فَسَبِّحْهُ وَاَدْبَارَ السُّجُوْدِ ۟
وَمِنَ الَّيْلِஇரவிலும்فَسَبِّحْهُஅவனை துதிப்பீராக!وَاَدْبَارَபிறகும்السُّجُوْدِ‏தொழுகைகளுக்கு
வ மினல் லய்லி FபஸBப்Bபிஹ் ஹு வ அத்Bபாரஸ் ஸுஜூத்
இன்னும் இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக.
وَاسْتَمِعْ یَوْمَ یُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِیْبٍ ۟ۙ
وَاسْتَمِعْநீர் செவியுறுவீராக!يَوْمَநாளில்يُنَادِஅழைக்கின்றالْمُنَادِஅழைப்பவர்مِنْ مَّكَانٍஓர் இடத்தில் இருந்துقَرِيْبٍۙ‏சமீபமான(து)
வஸ்தமிஃ யவ்ம யுனா தில் முனாதி மிம் மகானின் கரீBப்
மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.
یَّوْمَ یَسْمَعُوْنَ الصَّیْحَةَ بِالْحَقِّ ؕ ذٰلِكَ یَوْمُ الْخُرُوْجِ ۟
يَوْمَநாளில்يَسْمَعُوْنَஅவர்கள் செவியுறுகின்றالصَّيْحَةَஅந்த சப்தத்தைبِالْحَـقِّ‌ ؕஉண்மையில்ذٰ لِكَஅதுதான்يَوْمُநாளாகும்الْخُـرُوْجِ‏வெளியேறுகின்ற
யவ்ம யஸ்மஊனஸ் ஸய் ஹத Bபில்ஹக்க் தாலிக யவ்முல் குரூஜ்
அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும்.
اِنَّا نَحْنُ نُحْیٖ وَنُمِیْتُ وَاِلَیْنَا الْمَصِیْرُ ۟ۙ
اِنَّا نَحْنُநிச்சயமாக நாம்தான்نُحْىٖஉயிர்ப்பிக்கின்றோம்وَنُمِيْتُஇன்னும் மரணிக்க வைக்கின்றோம்وَاِلَيْنَاஇன்னும் நம் பக்கமே இருக்கின்றதுالْمَصِيْرُۙ‏மீளுமிடம்
இன்னா னஹ்னு னுஹ்யீ வ னுமீது வ இலய்னல் மஸீர்
நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கும்படிச் செய்கிறோம் - அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது.
یَوْمَ تَشَقَّقُ الْاَرْضُ عَنْهُمْ سِرَاعًا ؕ ذٰلِكَ حَشْرٌ عَلَیْنَا یَسِیْرٌ ۟
يَوْمَநாளில்تَشَقَّقُ الْاَرْضُபூமி பிளந்துவிடும்عَنْهُمْஅவர்களை விட்டும்سِرَاعًا‌ ؕஅதிவிரைவாக வெளியேறுகின்றذٰ لِكَஇதுحَشْرٌஒன்றுதிரட்டல்தான்عَلَيْنَاநமக்குيَسِيْرٌ‏இலகுவான
யவ்ம தஷக்ககுல் அர்ளு 'அன்ஹும் ஸிரா'ஆ; தாலிக ஹஷ்ருன் 'அலய்னா யஸீர்
பூமி பிளந்து, அவர்கள் வேகமாக (வெளியே) வரும் நாள்; இவ்வாறு (அவர்களை) ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும்.
نَحْنُ اَعْلَمُ بِمَا یَقُوْلُوْنَ وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِجَبَّارٍ ۫ فَذَكِّرْ بِالْقُرْاٰنِ مَنْ یَّخَافُ وَعِیْدِ ۟۠
نَحْنُ اَعْلَمُநாம் அதிகம் அறிந்தவர்கள்بِمَا يَقُوْلُوْنَ‌அவர்கள் கூறுகின்றவற்றைوَمَاۤ اَنْتَநீ இல்லைعَلَيْهِمْஅவர்களைبِجَـبَّارٍ‌அடக்கக்கூடியவராகفَذَكِّرْஆகவே, அறிவுரை வழங்குவீராக!بِالْقُرْاٰنِஇந்த குர்ஆன் மூலமாகمَنْ يَّخَافُபயப்படுகின்றவருக்குوَعِيْدِ‏எனது எச்சரிக்கையை
னஹ்னு அஃலமு Bபிமா யகூலூன வ மா அன்த 'அலய்ஹிம் BபிஜBப்Bபாரின் Fபதக்கிர் Bபில் குர்'ஆனி ம(ன்)ய் யகாFபு வ'ஈத்
அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லுபதேசம் செய்வீராக.