45. ஸூரத்துல் ஜாஸியா(முழந்தாளிடுதல்)

மக்கீ, வசனங்கள்: 37

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟
تَنْزِيْلُஇறக்கப்பட்டதுالْكِتٰبِஇந்த வேதம்مِنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துالْعَزِيْزِமிகைத்தவன்الْحَكِيْمِ‏மகா ஞானவான்
தன்Zஜீலுல் கிதாBபி மினல் லாஹில் 'அZஜீZஜில் ஹகீம்
இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
اِنَّ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّلْمُؤْمِنِیْنَ ۟ؕ
اِنَّநிச்சயமாகفِى السَّمٰوٰتِவானங்களில்وَالْاَرْضِஇன்னும் பூமியில்لَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّلْمُؤْمِنِيْنَؕ‏நம்பிக்கையாளர்களுக்கு
இன்னா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி ல ஆயாதில் லில்மு'மினீன்
முஃமின்களுக்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَفِیْ خَلْقِكُمْ وَمَا یَبُثُّ مِنْ دَآبَّةٍ اٰیٰتٌ لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟ۙ
وَفِىْ خَلْقِكُمْஉங்களைப் படைத்திருப்பதிலும்وَمَا يَبُثُّபரப்பி இருப்பதிலும்مِنْ دَآبَّةٍஉயிரினங்களைاٰيٰتٌபல அத்தாட்சிகள்لِّقَوْمٍமக்களுக்குيُّوْقِنُوْنَۙ‏உறுதியாக நம்பிக்கை கொள்கின்றனர்
வ Fபீ கல்கிகும் வமா யBபுத்து மின் தாBப்Bபதின் ஆயாதுல் லிகவ்மி(ன்)ய்-யூகினூன்
இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ رِّزْقٍ فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِیْفِ الرِّیٰحِ اٰیٰتٌ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
وَاخْتِلَافِமாறிமாறிவருவதிலும்الَّيْلِ وَالنَّهَارِஇரவு, பகல்وَمَاۤஇன்னும் எதுاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துمِنْ رِّزْقٍமழையைفَاَحْيَاஉயிர்ப்பித்தான்بِهِஅதன் மூலம்الْاَرْضَபூமியைبَعْدَபின்னர்مَوْتِهَاஅது இறந்தوَ تَصْرِيْفِதிருப்புவதிலும்الرِّيٰحِகாற்றுகளைاٰيٰتٌபல அத்தாட்சிகள்لِّقَوْمٍமக்களுக்குيَّعْقِلُوْنَ‏சிந்தித்து புரிகின்றனர்
வக்திலாFபில் லய்லி வன்னஹாரி வ மா அன்Zஜலல் லாஹு மினஸ் ஸமா'இ மிர் ரிZஜ்கின் Fப அஹ்யா Bபிஹில் அர்ள Bபஃத மவ்திஹா வ தஸ் ரீFபிர் ரியாஹி ஆயாதுல் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ۚ فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَ اللّٰهِ وَاٰیٰتِهٖ یُؤْمِنُوْنَ ۟
تِلْكَஇவைاٰيٰتُவசனங்களாகும்اللّٰهِஅல்லாஹ்வின்نَـتْلُوْهَاஇவற்றை ஓதுகிறோம்عَلَيْكَஉம்மீதுبِالْحَقِّ‌ ۚஉண்மையாகவேفَبِاَىِّ حَدِيْثٍۢஎந்த செய்தியைبَعْدَபின்னர்اللّٰهِஅல்லாஹ்وَاٰيٰتِهٖஇன்னும் அவனது அத்தாட்சிகளுக்குيُؤْمِنُوْنَ‏இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
தில்க ஆயதுல் லாஹி னத்லூஹா 'அலய்க Bபில் ஹக்க், FபBபிஅய்யி ஹதீதிம் Bபஃதல் லாஹி வ ஆயாதிஹீ யு'மினூன்
இவை அல்லாஹ்வுடைய வசனங்கள், இவற்றை (நபியே!) உம்மீது உண்மையுடன் ஓதிக் காண்பிக்கிறோம்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எதனைத் தான் நம்பப் போகிறார்கள்.
وَیْلٌ لِّكُلِّ اَفَّاكٍ اَثِیْمٍ ۟ۙ
وَيْلٌநாசம்தான்لِّـكُلِّஎல்லோருக்கும்اَفَّاكٍபாவிகள்اَثِيْمٍۙ‏பொய் பேசுகின்ற
வய்லுல் லிகுல்லி அFப்Fபாகின் அதீம்
(சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான்.
یَّسْمَعُ اٰیٰتِ اللّٰهِ تُتْلٰی عَلَیْهِ ثُمَّ یُصِرُّ مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ یَسْمَعْهَا ۚ فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِیْمٍ ۟
يَّسْمَعُசெவியுறுகின்றான்اٰيٰتِவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்تُتْلٰىஓதப்படுவதைعَلَيْهِதன் மீதுثُمَّபிறகுيُصِرُّபிடிவாதம் காட்டுகின்றான்مُسْتَكْبِرًاபெருமை பிடித்தவனாகكَاَنْ لَّمْ يَسْمَعْهَا‌ ۚஅவனோ அவற்றை செவியுறாதவனைப் போலفَبَشِّرْهُஅவனுக்கு நற்செய்தி கூறுங்கள்!بِعَذَابٍவேதனையைக் கொண்டுاَ لِيْمٍ‏வலி தரக்கூடிய(து)
யஸ்ம'உ ஆயாதில் லாஹி துத்லா 'அலய்ஹி தும்ம யுஸிர்ரு முஸ்தக்Bபிரன் க-அல் லம் யஸ்மஃஹா FபBபஷ்ஷிர்ஹு Bபி'அதாBபின் அலீம்
தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக.
وَاِذَا عَلِمَ مِنْ اٰیٰتِنَا شَیْـَٔا تَّخَذَهَا هُزُوًا ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟ؕ
وَاِذَا عَلِمَஅவன் அறிந்து கொண்டால்مِنْ اٰيٰتِنَاநமது வசனங்களில்شَيْــٴًـــاஎதையும்اۨتَّخَذَهَاஅதை எடுத்துக்கொள்கிறான்هُزُوًا‌ ؕகேலியாகاُولٰٓٮِٕكَ لَهُمْஇவர்களுக்கு உண்டுعَذَابٌவேதனைمُّهِيْنٌ ؕ‏இழிவுதரும்
வ இதா 'அலிம மின் ஆயாதினா ஷய்' 'அனித் தகதஹா ஹுZஜுவா; உலா'இக லஹும் 'அதாBபும் முஹீன்
நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
مِنْ وَّرَآىِٕهِمْ جَهَنَّمُ ۚ وَلَا یُغْنِیْ عَنْهُمْ مَّا كَسَبُوْا شَیْـًٔا وَّلَا مَا اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِیَآءَ ۚ وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ؕ
مِنْ وَّرَآٮِٕهِمْஇவர்களுக்கு முன்னால் இருக்கின்றதுجَهَنَّمُۚநரகம்وَلَا يُغْنِىْஎதையும் தடுக்காதுعَنْهُمْஅவர்களை விட்டும்مَّا كَسَبُوْاஅவர்கள் சம்பாதித்ததுشَيْــٴًـــاஎதையும்وَّلَا مَا اتَّخَذُوْاஇன்னும் எவற்றை/அவர்கள் எடுத்துக் கொண்டார்களோمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاَوْلِيَآءَ‌ ۚபாதுகாவலர்களாகوَلَهُمْஅவர்களுக்கு உண்டுعَذَابٌவேதனைعَظِيْمٌؕ‏பெரிய(து)
மி(ன்)வ் வரா'இஹிம் ஜஹன்னமு வலா யுக்னீ 'அன்ஹும் மா கஸBபூ ஷய்'அ(ன்)வ் வலா மத் தகதூ மின் தூனில் லாஹி அவ்லியா; வ லஹும் 'அதாBபுன் 'அளீம்
அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது; அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது; அல்லாஹ்வையன்றி, எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது); மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு.
هٰذَا هُدًی ۚ وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِیْمٌ ۟۠
هٰذَا هُدًى‌ ۚஇதுதான்/நேர்வழிوَالَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்بِاٰيٰتِஅத்தாட்சிகளைرَبِّهِمْதங்கள் இறைவனின்لَهُمْஅவர்களுக்கு உண்டுعَذَابٌவேதனைمِّنْ رِّجْزٍதண்டனைاَلِيْمٌ‏வலி தரக்கூடிய(து)
ஹாதா ஹுதா; வல் லதீன கFபரூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் லஹும் 'அதாBபும் மிர் ரிஜ்Zஜின் 'அலீம்
இது (குர்ஆன்)தான் நேர்வழிகாட்டியாகும். எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.  
اَللّٰهُ الَّذِیْ سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِیَ الْفُلْكُ فِیْهِ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟ۚ
اَللّٰهُஅல்லாஹ்الَّذِىْஎப்படிப்பட்டவன்سَخَّرَவசப்படுத்தினான்لَـكُمُஉங்களுக்குالْبَحْرَகடலைلِتَجْرِىَசெல்வதற்காகவும்الْفُلْكُகப்பல்கள்فِيْهِஅதில்بِاَمْرِهٖஅவனது கட்டளைப்படிوَلِتَبْتَغُوْاநீங்கள் தேடுவதற்காகவும்مِنْ فَضْلِهٖஅவனுடைய அருளிலிருந்துوَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‌ۚ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும்
அல்லாஹுல் லதீ ஸஹ்கர லகுமுல் Bபஹ்ர லிதஜ்ரியல் Fபுல்கு Fபீஹி Bபி அம்ரிஹீ வ லிதBப்தகூ மின் Fபள்லிஹீ வ ல'அல்லகும் தஷ்குரூன்
கப்பல்கள் அவன் கட்டளையைக் கொண்டு (கடலில்) செல்லும் பொருட்டும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளும் பொருட்டும்; மேலும் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும் உங்களுக்குக் கடலை வசப்படுத்திக் கொடுத்தவன் அல்லாஹ்வே ஆவான்.
وَسَخَّرَ لَكُمْ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ جَمِیْعًا مِّنْهُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
وَسَخَّرَஇன்னும் வசப்படுத்தினான்لَـكُمْஉங்களுக்குمَّا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவற்றை(யும்)وَمَا فِى الْاَرْضِபூமியில் உள்ளவற்றையும்جَمِيْعًاஅனைத்தையும்مِّنْهُ‌ ؕதன் புறத்திலிருந்துاِنَّ فِىْ ذٰ لِكَநிச்சயமாக இதில் உள்ளனلَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّقَوْمٍமக்களுக்குيَّتَفَكَّرُوْنَ‏சிந்திக்கின்ற
வ ஸக்கர லகும் மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி ஜமீ'அம் மின்ஹு; இன்ன Fபீதாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன.
قُلْ لِّلَّذِیْنَ اٰمَنُوْا یَغْفِرُوْا لِلَّذِیْنَ لَا یَرْجُوْنَ اَیَّامَ اللّٰهِ لِیَجْزِیَ قَوْمًا بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
قُلْகூறுவீராக!لِّلَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களுக்குيَغْفِرُوْاஅவர்கள் மன்னித்து விடட்டும்لِلَّذِيْنَ لَا يَرْجُوْنَஆதரவு வைக்காதவர்களைاَيَّامَ اللّٰهِஅல்லாஹ்வின் நடவடிக்கைகளைلِيَجْزِىَஇறுதியாக தண்டனை கொடுப்பான்قَوْمًۢاஒரு கூட்டத்திற்குبِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
குல் லில்லதீன ஆமனூ யக்Fபிரூ லில்லதீன லா யர்ஜூன அய்யாமல் லாஹி லியஜ்Zஜிய கவ்மம் Bபிமா கானூ யக்ஸிBபூன்
ஈமான் கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் கூறிவிடும்: அல்லாஹ்வுடைய (தண்டனைக்கான) நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து (அவர்களைப் பற்றி அல்லாஹ்விடம் பரஞ் சாட்டிவிடட்டும்); ஜனங்களுக்கு அவர்கள் தேடிக் கொண்ட வினைக்குத் தக்கபலனை அவன் கொடுப்பான்.  
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؗ ثُمَّ اِلٰی رَبِّكُمْ تُرْجَعُوْنَ ۟
مَنْ عَمِلَயார் செய்வாரோصَالِحًـاஒரு நன்மையைفَلِنَفْسِهٖ‌ۚஅது அவருக்குத்தான் நல்லதுوَمَنْஎவர்اَسَآءَதீமை செய்வாரோفَعَلَيْهَاஅது அவருக்குத்தான் கேடாகும்ثُمَّபிறகுاِلٰى رَبِّكُمْஉங்கள் இறைவனிடம்تُرْجَعُوْنَ‏நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
மன் 'அமில ஸாலிஹன் FபலினFப்ஸிஹீ வ மன் அஸா'அ Fப'அலய்ஹா தும்ம இலா ரBப்Bபிகும் துர்ஜ'ஊன்
எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
وَلَقَدْ اٰتَیْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۚ
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களுக்குالْكِتٰبَவேதங்களை(யும்)وَالْحُكْمَஞானத்தையும்وَالنُّبُوَّةَநபித்துவத்தையும்وَرَزَقْنٰهُمْஇன்னும் அவர்களுக்கு நாம் வழங்கினோம்مِّنَ الطَّيِّبٰتِநல்ல உணவுகளைوَفَضَّلْنٰهُمْஅவர்களை மேன்மையாக்கினோம்عَلَى الْعٰلَمِيْنَ‌ۚ‏அக்கால மக்களைவிட
வ லகத் ஆதய்னா Bபனீ இஸ்ரா'ஈலல் கிதாBப வல்ஹுக்ம வன் னுBபுவ்வத வ ரZஜக்னாஹும் மினத் தய்யிBபாதி வ Fபள்ளல்னாஹும்;அலல் 'ஆலமீன்
நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு மணமான உணவு (வசதி)களையும் கொடுத்தோம் - அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்.
وَاٰتَیْنٰهُمْ بَیِّنٰتٍ مِّنَ الْاَمْرِ ۚ فَمَا اخْتَلَفُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ ۙ بَغْیًا بَیْنَهُمْ ؕ اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
وَاٰتَيْنٰهُمْநாம் அவர்களுக்குக் கொடுத்தோம்بَيِّنٰتٍதெளிவான சட்டங்களைمِّنَ الْاَمْرِ‌ ۚஇந்த மார்க்கத்தின்فَمَا اخْتَلَفُوْۤاஅவர்கள் கருத்து வேறுபடவில்லைاِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُதவிர/அவர்களிடம் வந்த பின்னர்الْعِلْمُ ۙகல்விبَغْيًاۢபொறாமையினால்بَيْنَهُمْ‌ؕதங்களுக்கு மத்தியில்اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்يَقْضِىْதீர்ப்பளிப்பான்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில்
வ ஆதய்னாஹும் Bபய்யினாதிம் மினல் அம்ரி Fபமக் தலFபூ இல்லா மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் 'இல்மு Bபக்யம் Bபய்னஹும்; இன்ன ரBப்Bபக யக்ளீ Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.
ثُمَّ جَعَلْنٰكَ عَلٰی شَرِیْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟
ثُمَّபிறகுجَعَلْنٰكَஉம்மை அமைத்தோம்عَلٰى شَرِيْعَةٍதெளிவான சட்டங்கள் மீதுمِّنَ الْاَمْرِஇந்த மார்க்கத்தினுடையفَاتَّبِعْهَاஆகவே அதையே பின்பற்றுவீராக!وَلَا تَتَّبِعْபின்பற்றாதீர்اَهْوَآءَமன விருப்பங்களைالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‏அறியாதவர்களின்
தும்ம ஜ'அல்னாக 'அலா ஷரீ'அதிம் மினல் அம்ரி Fபத்தBபிஃஹா வலா தத்தBபிஃ அஹ்வா'அல்-லதீன லா யஃலமூன்
இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
اِنَّهُمْ لَنْ یُّغْنُوْا عَنْكَ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ وَاِنَّ الظّٰلِمِیْنَ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ۚ وَاللّٰهُ وَلِیُّ الْمُتَّقِیْنَ ۟
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَنْ يُّغْنُوْاஅறவே தடுக்க மாட்டார்கள்عَنْكَஉம்மை விட்டுمِنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துشَيْــٴًـــا‌ ؕ وَ اِنَّஎதையும்/நிச்சயமாகالظّٰلِمِيْنَஅநியாயக்காரர்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلِيَآءُ بَعْضٍ‌ ۚநண்பர்கள்/சிலருக்குوَاللّٰهُஅல்லாஹ்وَلِىُّநண்பன்الْمُتَّقِيْنَ‏இறையச்சமுள்ளவர்களின்
இன்னஹும் ல(ன்)ய் யுக்னூ 'அன்க மினல் லாஹி ஷய்'ஆ; வ இன்னள் ளாலிமீன Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃளி(ன்)வ் வல்லாஹு வலிய்யுல் முத்தகீன்
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு யாதோர் உதவியும் செய்து விட முடியாது. இன்னும் நிச்சயமாக அநியாயக்காரர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையவர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன் ஆவான்
هٰذَا بَصَآىِٕرُ لِلنَّاسِ وَهُدًی وَّرَحْمَةٌ لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟
هٰذَاஇதுبَصَاٮِٕرُதெளிவான ஆதாரங்களும்لِلنَّاسِமக்களுக்குوَهُدًىநேர்வழியும்وَّرَحْمَةٌகருணையுமாகும்لِّقَوْمٍமக்களுக்குيُّوْقِنُوْنَ‏உறுதி கொள்கின்றனர்
ஹாதா Bபஸா'இரு லின்னாஸி வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லிகவ்மி(ன்)ய் யூகினூன்
இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
اَمْ حَسِبَ الَّذِیْنَ اجْتَرَحُوا السَّیِّاٰتِ اَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ سَوَآءً مَّحْیَاهُمْ وَمَمَاتُهُمْ ؕ سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟۠
اَمْ حَسِبَஎண்ணுகின்றார்களா?الَّذِيْنَஎவர்கள்اجْتَـرَحُواசெய்தார்கள்السَّيِّاٰتِபாவங்களைاَنْ نَّجْعَلَهُمْஅவர்களை ஆக்குவோம் என்றுكَالَّذِيْنَஎவர்களைப் போன்றுاٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواசெய்தவர்களைالصّٰلِحٰتِ ۙநன்மைகளைسَوَآءًசமமாக்கிவிடுவோம்مَّحْيَاவாழ்க்கையும்هُمْஇவர்களின்وَمَمَاتُهُمْ‌ ؕஇவர்களின் மரணத்தையும்سَآءَஅது மிகக் கெட்டதுمَا يَحْكُمُوْنَ‏எதை தீர்ப்பளிக்கின்றார்களோ
அம் ஹஸிBபல் லதீனஜ் தரஹுஸ் ஸய்யிஆதி அன் னஜ்'அலஹும் கல்லதீன ஆமனூ வ 'அமிலு ஸாலிஹாதி ஸவா'அம் மஹ்யாஹும் வ மமாதுஹும்; ஸா'அ மா யஹ்குமூன்
எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும்.  
وَخَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزٰی كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَ خَلَقَபடைத்தான்اللّٰهُஅல்லாஹ்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضَபூமியையும்بِالْحَقِّஉண்மையான காரணத்திற்காக(வும்)وَلِتُجْزٰىகூலி கொடுக்கப்படுவதற்காகவும்كُلُّ نَفْسٍۢஒவ்வொரு ஆன்மாவும்بِمَا كَسَبَتْஅது எதை செய்ததோوَهُمْ لَا يُظْلَمُوْنَ‏இன்னும் அவர்கள்/அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
வ கலகல் லாஹுஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்கி வ லிதுஜ்Zஜா குல்லு னFப்ஸிம் Bபிமா கஸBபத் வ ஹும் லா யுள்லமூன்
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான்; ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதற்காக; அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
اَفَرَءَیْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰی عِلْمٍ وَّخَتَمَ عَلٰی سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰی بَصَرِهٖ غِشٰوَةً ؕ فَمَنْ یَّهْدِیْهِ مِنْ بَعْدِ اللّٰهِ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
اَفَرَءَيْتَநீர் அறிவிப்பீராக!مَنِ اتَّخَذَஎடுத்துக்கொண்டவனைப் பற்றிاِلٰهَهٗதனது கடவுளாகهَوٰٮهُதனது மனவிருப்பத்தைوَاَضَلَّهُஅவனை வழிகெடுத்தான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى عِلْمٍஅறிவு வந்ததன் பின்னர்وَّخَتَمَஇன்னும் முத்திரையிட்டான்عَلٰى سَمْعِهٖஅவனது செவியிலும்وَقَلْبِهٖஅவனது உள்ளத்திலும்وَجَعَلَஇன்னும் ஆக்கினான்عَلٰى بَصَرِهٖஅவனது பார்வையில்غِشٰوَةً  ؕதிரையைفَمَنْஆகவே, யார்يَّهْدِيْهِஅவனுக்கு நேர்வழி காட்டுவார்مِنْۢ بَعْدِபின்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்விற்குاَفَلَا تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
அFபர'அய்த மனித் தகத இலாஹஹூ ஹவாஹு வ அளல் லஹுல் லாஹு 'அலா 'இல்மி(ன்)வ் வ கதம 'அலா ஸம்'இஹீ வ கல்Bபிஹீ வ ஜ'அல 'அலா Bபஸரிஹீ கிஷாவதன் Fபம(ன்)ய் யஹ்தீஹி மிம் Bபஃதில் லாஹ்; அFபலா ததக்கரூன்
(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
وَقَالُوْا مَا هِیَ اِلَّا حَیَاتُنَا الدُّنْیَا نَمُوْتُ وَنَحْیَا وَمَا یُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ ۚ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۚ اِنْ هُمْ اِلَّا یَظُنُّوْنَ ۟
وَقَالُوْاஇன்னும் கூறினார்கள்مَاவேறு இல்லைهِىَஇதுاِلَّاதவிரحَيَاتُنَاநமது வாழ்க்கையைالدُّنْيَاஉலகنَمُوْتُமரணிக்கின்றோம்وَنَحْيَاஇன்னும் வாழ்கின்றோம்وَمَا يُهْلِكُنَاۤநம்மை அழிக்காதுاِلَّا الدَّهْرُ‌ؕகாலத்தைத் தவிரوَمَا لَهُمْஅவர்களுக்கு இல்லைبِذٰلِكَஇதைப் பற்றிمِنْ عِلْمٍ‌ ۚஅறிவுاِنْ هُمْஅவர்கள் இல்லைاِلَّا يَظُنُّوْنَ‏வீண் எண்ணம் எண்ணுபவர்களே தவிர
வ காலூ மா ஹிய இல்லா ஹயாதுனத் துன்யா னமூது வ னஹ்யா வமா யுஹ்லிகுனா இல்லத் தஹ்ர்; வமா லஹும் Bபிதாலிக மின் 'இல்மின் இன் ஹும் இல்லாயளுன்னூன்
மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ مَّا كَانَ حُجَّتَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتُوْا بِاٰبَآىِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَاِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் மீதுاٰيٰتُنَاநமது வசனங்கள்بَيِّنٰتٍதெளிவான ஆதாரங்களாகمَّا كَانَஇருக்கவில்லைحُجَّتَهُمْஅவர்களின் ஆதாரம்اِلَّاۤதவிரاَنْ قَالُواஅவர்கள் சொல்வதேائْتُوْا بِاٰبَآٮِٕنَاۤஎங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுன Bபய்யினாதிம் மா கான ஹுஜ்ஜதஹும் இல்லா அன் காலு'தூ Bபி ஆBபா'இனா இன் குன்தும் ஸாதிகீன்
அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்” என்பது தவிர வேறில்லை.
قُلِ اللّٰهُ یُحْیِیْكُمْ ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یَجْمَعُكُمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَا رَیْبَ فِیْهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠
قُلِகூறுவீராக!اللّٰهُஅல்லாஹ்தான்يُحْيِيْكُمْஉங்களை உயிர்ப்பிக்கின்றான்ثُمَّபிறகுيُمِيْتُكُمْஉங்களை மரணிக்க வைப்பான்ثُمَّபிறகுيَجْمَعُكُمْஅவன் உங்களை ஒன்று சேர்ப்பான்اِلٰى يَوْمِ الْقِيٰمَةِமறுமை நாளில்لَا رَيْبَஅறவே சந்தேகம் இல்லைفِيْهِஅதில்وَلٰكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானவர்கள்النَّاسِமக்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
குலில் லாஹு யுஹ்யீகும் தும்ம யுமீதுகும் தும்ம யஜ்ம'உகும் இலா யவ்மில் கியாமதி லா ரய்Bப Fபீஹி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
“அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.  
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ یَوْمَىِٕذٍ یَّخْسَرُ الْمُبْطِلُوْنَ ۟
وَلِلّٰهِஅல்லாஹ்விற்கே உரியதுمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமியின்وَيَوْمَநாளில்تَقُوْمُநிகழ்கின்றதுالسَّاعَةُமறுமை நாள்يَوْمَٮِٕذٍஅந்நாளில்يَّخْسَرُநஷ்டமடைவார்கள்الْمُبْطِلُوْنَ‏பொய்யர்கள்
வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ யவ்ம தகூமுஸ் ஸா'அது யவ்ம 'இதி(ன்)ய் யக்ஸருல் முBப்திலூன்
அன்றியும், வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; மேலும், இறுதித் தீர்ப்புக்கான வேளை வந்து வாய்க்கும் நாளில், பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.
وَتَرٰی كُلَّ اُمَّةٍ جَاثِیَةً ۫ كُلُّ اُمَّةٍ تُدْعٰۤی اِلٰی كِتٰبِهَا ؕ اَلْیَوْمَ تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
وَتَرٰىநீர் பார்ப்பீர்كُلَّஒவ்வொருاُمَّةٍசமுதாயத்தையும்جَاثِيَةً‌முழந்தாளிட்ட வர்களாகكُلُّஒவ்வொருاُمَّةٍசமுதாயமும்تُدْعٰۤىஅழைக்கப்படும்اِلٰى كِتٰبِهَا ؕதமது பதிவு புத்தகத்தின் பக்கம்اَلْيَوْمَஇன்றுتُجْزَوْنَகூலி கொடுக்கப்படுவீர்கள்مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்கு
வ தரா குல்ல உம்மதின் ஜாதியஹ்; குல்லு உம்மதின் துத்'ஆ இலா கிதாBபிஹா அல் யவ்ம துஜ்Zஜவ்ன மா குன்தும் தஃமலூன்
(அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள்.
هٰذَا كِتٰبُنَا یَنْطِقُ عَلَیْكُمْ بِالْحَقِّ ؕ اِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
هٰذَاஇதோكِتٰبُنَاநமது பதிவேடுيَنْطِقُஅது பேசும்عَلَيْكُمْஉங்கள் மீதுبِالْحَقِّ‌ؕஉண்மையாகاِنَّاநிச்சயமாக நாம்كُنَّا نَسْتَنْسِخُஎழுதிக் கொண்டிருந்தோம்مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை
ஹாதா கிதாBபுனா யன்திகு 'அலய்கும் Bபில்ஹக்க்; இன்னா குன்னா னஸ்தன்ஸிகு மா குன்தும் தஃமலூன்
“இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்).
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُدْخِلُهُمْ رَبُّهُمْ فِیْ رَحْمَتِهٖ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِیْنُ ۟
فَاَمَّاஆகவேالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைفَيُدْخِلُهُمْஅவர்களை நுழைவிப்பான்رَبُّهُمْஅவர்களது இறைவன்فِىْ رَحْمَتِهٖ‌ ؕதனது அருளில்ذٰ لِكَ هُوَஇதுதான்الْفَوْزُவெற்றிالْمُبِيْنُ‏மிகத் தெளிவான(து)
Fப அம்மல் லதீன ஆமானூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபயுத்கிலுஹும் ரBப்Bபுஹும் Fபீ ரஹ்மதிஹ்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் முBபீன்
ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ, அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும்.
وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا ۫ اَفَلَمْ تَكُنْ اٰیٰتِیْ تُتْلٰی عَلَیْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
وَاَمَّاஆகالَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரித்தவர்கள்اَفَلَمْ تَكُنْஇருக்கவில்லையா?اٰيٰتِىْஎனது வசனங்கள்تُتْلٰىஓதப்படுகின்றனعَلَيْكُمْஉங்கள் மீதுفَاسْتَكْبَرْتُمْநீங்கள் பெருமை அடித்தீர்கள்وَكُنْتُمْஇன்னும் நீங்கள் இருந்தீர்கள்قَوْمًاமக்களாகمُّجْرِمِيْنَ‏குற்றம் புரிகின்றவர்கள்
வ அம்மல் லதீன கFபரூ அFபலம் தகுன் ஆயாதீ துத்லா 'அலய்கும் Fபஸ்தக்Bபர்தும் வ குன்தும் கவ்மம் முஜ்ரிமீன்
ஆனால், நிராகரித்தவர்களிடம்: “உங்களுக்கு என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா? அப்பொழுது நீங்கள் பெருமையடித்துக் கொண்டு குற்றவாளிகளாக இருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்).
وَاِذَا قِیْلَ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّالسَّاعَةُ لَا رَیْبَ فِیْهَا قُلْتُمْ مَّا نَدْرِیْ مَا السَّاعَةُ ۙ اِنْ نَّظُنُّ اِلَّا ظَنًّا وَّمَا نَحْنُ بِمُسْتَیْقِنِیْنَ ۟
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்اِنَّ وَعْدَநிச்சயமாக வாக்குاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّஉண்மையானதுوَّالسَّاعَةُஇன்னும் மறுமைلَا رَيْبَஅறவே சந்தேகம் இல்லைفِيْهَاஅதில்قُلْتُمْநீங்கள் கூறுவீர்கள்مَّا نَدْرِىْஅறியமாட்டோம்مَا السَّاعَةُ ۙமறுமை என்றால் என்ன?اِنْ نَّـظُنُّநாங்கள் எண்ணவில்லைاِلَّاதவிரظَنًّاஒரு எண்ணமாகவேوَّمَا نَحْنُ بِمُسْتَيْقِنِيْنَ‏நாங்கள் உறுதிசெய்பவர்களாக இல்லை
வ இதா கீல இன்ன வஃதல்லாஹி ஹக்கு(ன்)வ் வஸ் ஸா'அது லா ரய்Bப Fபீஹா குல்தும் மா னத்ரீ மஸ் ஸா'அது இன் னளுன்னு இல்லா ளன்ன(ன்)வ் வமா னஹ்னு Bபிமுஸ்தய்கினீன்
மேலும் “நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; மறுமை நாள் அது பற்றியும் சந்தேகமில்லை” என்று கூறப்பட்ட போது; “(மறுமை) நாள் என்ன என்று நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்” என்று நீங்கள் கூறினீர்கள்.
وَبَدَا لَهُمْ سَیِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
وَبَدَاவெளிப்படும்لَهُمْஅவர்களுக்குسَيِّاٰتُதீமைகள்مَا عَمِلُوْاஅவர்கள் செய்தவற்றின்وَحَاقَஇன்னும் சூழ்ந்துகொள்ளும்بِهِمْஅவர்களைمَّاஎதுكَانُوْاஇருந்தார்களோبِهٖஅதைيَسْتَهْزِءُوْنَ‏பரிகாசம் செய்பவர்களாக
வ Bபதா லஹும் ஸய்யிஆது மா 'அமிலூ வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
அவர்கள் செய்த தீமையெல்லாம் (அந்நாளில்) அவர்களுக்கு வெளியாகும்; எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
وَقِیْلَ الْیَوْمَ نَنْسٰىكُمْ كَمَا نَسِیْتُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا وَمَاْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟
وَقِيْلَகூறப்படும்الْيَوْمَஇன்றுنَنْسٰٮكُمْஉங்களை விட்டுவிடுவோம்كَمَا نَسِيْتُمْநீங்கள் விட்டதுபோன்றுلِقَآءَசந்திப்பைيَوْمِكُمْ هٰذَاஉங்களது இன்றைய தினத்தின்وَمَاْوٰٮكُمُஉங்கள் ஒதுங்குமிடம்النَّارُநரகம்தான்وَمَا لَـكُمْஉங்களுக்கு இல்லைمِّنْ نّٰصِرِيْنَ‏உதவியாளர்கள் யாரும்
வ கீலல் யவ்ம னன்ஸாகும் கமா னஸீதும் லிகா'அ யவ்மிகும் ஹாதா வ மாவாகுமுன் னாரு வமா லகும் மின் னாஸிரீன்
இன்னும், “நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்றே, இன்றைய தினம் நாம் உங்களை மறக்கிறோம்; அன்றியும் நீங்கள் தங்குமிடம் நரகம் தான்; மேலும், உங்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்.
ذٰلِكُمْ بِاَنَّكُمُ اتَّخَذْتُمْ اٰیٰتِ اللّٰهِ هُزُوًا وَّغَرَّتْكُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۚ فَالْیَوْمَ لَا یُخْرَجُوْنَ مِنْهَا وَلَا هُمْ یُسْتَعْتَبُوْنَ ۟
ذٰلِكُمْ بِاَنَّكُمُஇதற்கு காரணம் நிச்சயமாக நீங்கள்اتَّخَذْتُمْஎடுத்துக்கொண்டீர்கள்اٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்هُزُوًاகேலியாகوَّغَرَّتْكُمُஇன்னும் உங்களை மயக்கிவிட்டதுالْحَيٰوةُ الدُّنْيَا‌ ۚஉலக வாழ்க்கைفَالْيَوْمَஆகவே, இன்றுلَا يُخْرَجُوْنَவெளியேற்றப்பட மாட்டார்கள்مِنْهَاஅதிலிருந்துوَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ‏இன்னும் அவர்களிடமிருந்து காரணங்கள் அங்கீகரிக்கப்படாது
தாலிகும் Bபி அன்னகுமுத் தகத்தும் ஆயாதில் லாஹி ஹுZஜுவ(ன்)வ் வ கர்ரத்குமுல் ஹயாதுத் துன்யா; Fபல் யவ்ம லா யுக்ரஜூன மின்ஹா வ லாஹும் யுஸ்தஃதBபூன்
நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக் கொண்டதனாலும் இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி ஏமாற்றி விட்டதினாலுமே இந்த நிலை. இன்றைய தினத்தில் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்; மன்னிப்பளிக்கப்படவும் மாட்டார்கள்.
فَلِلّٰهِ الْحَمْدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الْاَرْضِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
فَلِلّٰهِஅல்லாஹ்விற்கேالْحَمْدُஎல்லாப் புகழும்رَبِّஅதிபதிالسَّمٰوٰتِவானங்களின்وَرَبِّஇன்னும் அதிபதிالْاَرْضِபூமியின்رَبِّஅதிபதிالْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களின்
Fபலில்லாஹில் ஹம்து ரBப்Bபிஸ் ஸமாவாதி வ ரBப்Bபில் அர்ளி ரBப்Bபில்-'ஆலமீன்
ஆகவே வானங்களுக்கும் இறைவனான - பூமிக்கும் இறைவனான - அகிலத்தாருக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
وَلَهُ الْكِبْرِیَآءُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۪ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
وَلَهُஇன்னும் அவனுக்கே உரியதுالْكِبْرِيَآءُபெருமைفِى السَّمٰوٰتِவானங்களிலும்وَالْاَرْضِ‌பூமியிலும்وَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
வ லஹுல் கிBப்ரியா'உ Fபிஸ்ஸமாவாதி வல் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது; மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.