48. ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி)

மதனீ, வசனங்கள்: 29

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِیْنًا ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்فَتَحْنَاஅளித்தோம்لَكَஉமக்குفَتْحًاவெற்றியைمُّبِیْنًاۙதெளிவான
இன்னா Fபதஹ்னா லக Fபத்ஹம் முBபீனா
(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்
لِّیَغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَمَا تَاَخَّرَ وَیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَیَهْدِیَكَ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ۙ
لِّیَغْفِرَமன்னிப்பதற்காகلَكَஉமக்குاللّٰهُஅல்லாஹ்مَاஎவைتَقَدَّمَமுந்தியதோمِنْஇருந்துذَنْۢبِكَஉமது பாவங்களில்وَ مَاமேலும் எவைتَاَخَّرَபிந்தியதோوَ یُتِمَّமேலும் அவன் முழுமையாக்கنِعْمَتَهٗதனது அருட்கொடையைعَلَیْكَஉம்மீதுوَ یَهْدِیَكَமேலும் உமக்கு வழிகாட்டصِرَاطًاவழியில்مُّسْتَقِیْمًاۙநேரான
லியக்Fபிர லகல் லாஹு மா தகத்தம மின் தன்Bபிக வமா த அக்கர வ யுதிம்ம னிஃமதஹூ 'அலய்க வ யஹ்தியக ஸிராதன் முஸ்தகீமா
உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.
وَّیَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِیْزًا ۟
وَّ یَنْصُرَكَமேலும் உமக்கு உதவி செய்வான்اللّٰهُஅல்லாஹ்نَصْرًاஉதவியைعَزِیْزًاமகத்தான
வ யன்ஸுரகல் லாஹு னஸ்ரன் 'அZஜீZஜா
மேலும், அல்லாஹ் ஒரு வலிமை மிக்க உதவியாக உமக்கு உதவி செய்வதற்காகவும் (தெளிவான இவ்வெற்றியை அவன் அளித்தான்).
هُوَ الَّذِیْۤ اَنْزَلَ السَّكِیْنَةَ فِیْ قُلُوْبِ الْمُؤْمِنِیْنَ لِیَزْدَادُوْۤا اِیْمَانًا مَّعَ اِیْمَانِهِمْ ؕ وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟ۙ
هُوَஅவன்الَّذِیْۤஎவன்اَنْزَلَஇறக்கியருளினானோالسَّكِیْنَةَஅமைதியைفِیْஉள்ளேقُلُوْبِஉள்ளங்களின்الْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களின்لِیَزْدَادُوْۤاஅவர்கள் அதிகரித்துக் கொள்வதற்காகاِیْمَانًاநம்பிக்கையைمَّعَஉடன்اِیْمَانِهِمْ ؕஅவர்களுடைய நம்பிக்கைوَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேجُنُوْدُபடைகள்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமேலும் பூமியின்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلِیْمًاநன்கறிந்தவனாகحَكِیْمًاۙஞானமிக்கவனாக
ஹுவல் லதீ அன்Zஜலஸ் ஸகீனத Fபீ குலூBபில் மு'மினீன லியZஜ்தாதூ ஈமானம்ம'அ ஈமானிஹிம்; வ லில்லாஹி ஜுனூதுஸ் ஸமவாதி வல் அர்ள்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின் இதயங்களில், அவன் தாம் அமைதியும் (ஆறுதலும்) அளித்தான்; அன்றியும் வானங்களிலும் பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கோன்.
لِّیُدْخِلَ الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَیُكَفِّرَ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ ؕ وَكَانَ ذٰلِكَ عِنْدَ اللّٰهِ فَوْزًا عَظِیْمًا ۟ۙ
لِّیُدْخِلَபுகுத்துவதற்காகالْمُؤْمِنِیْنَநம்பிக்கை கொண்ட ஆண்களைوَ الْمُؤْمِنٰتِமேலும் நம்பிக்கை கொண்ட பெண்களைجَنّٰتٍசுவனச் சோலைகளில்تَجْرِیْஓடிக்கொண்டிருக்கும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَஎன்றென்றும் தங்கியிருப்பவர்களாகفِیْهَاஅவற்றில்وَ یُكَفِّرَமேலும் அவன் நீக்கிவிடுவதற்காகعَنْهُمْஅவர்களிடமிருந்துسَیِّاٰتِهِمْ ؕஅவர்களின் தீமைகளைوَ كَانَமேலும் இருக்கிறதுذٰلِكَஅதுعِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்فَوْزًاவெற்றியாகعَظِیْمًاۙமகத்தான
லியுத்கிலல் மு'மினீன வல்மு'மினாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா வ யுகFப்Fபிர 'அன்ஹும் ஸய்யி ஆதிஹிம்; வ கான தாலிக 'இன்தல் லாஹி Fபவ்Zஜன் 'அளீமா
முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வதற்காக (இவ்வாறு அருளினான்); அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்கள் அவற்றில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்களின் பாவங்களையும் அவர்களை விட்டு நீக்கி விடுவான் - இதுவே அல்லாஹ்விடத்தில் மகத்தான வெற்றியாகும்.
وَّیُعَذِّبَ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِیْنَ وَالْمُشْرِكٰتِ الظَّآنِّیْنَ بِاللّٰهِ ظَنَّ السَّوْءِ ؕ عَلَیْهِمْ دَآىِٕرَةُ السَّوْءِ ۚ وَغَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ وَلَعَنَهُمْ وَاَعَدَّ لَهُمْ جَهَنَّمَ ؕ وَسَآءَتْ مَصِیْرًا ۟
وَّ یُعَذِّبَமேலும் அவன் தண்டிக்கالْمُنٰفِقِیْنَநயவஞ்சகர்களைوَ الْمُنٰفِقٰتِமேலும் நயவஞ்சகப் பெண்களைوَ الْمُشْرِكِیْنَமேலும் இணைவைப்பவர்களைوَ الْمُشْرِكٰتِமேலும் இணைவைக்கும் பெண்களைالظَّآنِّیْنَஎண்ணுபவர்களைبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுظَنَّஎண்ணத்தைالسَّوْءِ ؕதீயعَلَیْهِمْஅவர்கள் மீதுدَآىِٕرَةُசுழற்சிالسَّوْءِ ۚதீமையின்وَ غَضِبَமேலும் கோபம் கொண்டான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ لَعَنَهُمْமேலும் அவர்களைச் சபித்தான்وَ اَعَدَّமேலும் அவன் தயார் செய்துள்ளான்لَهُمْஅவர்களுக்குجَهَنَّمَ ؕநரகத்தைوَ سَآءَتْமேலும் அது மிகவும் கெட்டதுمَصِیْرًاசேருமிடம்
வ யு'அத்திBபல் முனாFபிகீன வல்முனாFபிகாதி வல் முஷ்ரிகீன வல்முஷ்ரிகாதிள் ளான்னீன Bபில்லாஹி ளன்னஸ் ஸவ்'; 'அலய்ஹிம் தா'இரதுஸ் ஸவ்'இ வ களிBபல் லாஹு 'அலய்ஹிம் வ ல'அனஹும் வ அ'அத்த லஹும் ஜஹன்னம வ ஸா' அத் மஸீரா
அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும் முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும், இணைவைத்து வணங்கும் பெண்களையும், (அல்லாஹ்) வேதனை செய்வான். (அவ்வேதணையின்) கேடு அவர்கள் மேல் சூழந்து கொண்டு இருக்கிறது; இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்; அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றான் - (அதுதான்) செல்லுமிடங்களில் மிகவும் கெட்டது.
وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கே உரியனجُنُوْدُபடைகள்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَزِیْزًاமிகைத்தவனாகحَكِیْمًاஞானமிக்கவனாக
வ லில்லாஹி ஜுனூதுஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ கானல் லாஹு 'அZஜீZஜன் ஹகீமா
அன்றியும் வானங்களிலும், பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கு சொந்தம்; மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِیْرًا ۟ۙ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنٰكَஉம்மை அனுப்பினோம்شَاهِدًاசாட்சியாகوَّ مُبَشِّرًاநற்செய்தி கூறுபவராகவும்وَّ نَذِیْرًاۙஅச்சமூட்டி எச்சரிப்பவராகவும்
இன்னா அர்ஸல்னாக ஷாஹி த(ன்)வ் வ முBபஷ்ஷிர(ன்)வ் வ னதீரா
நிச்சயமாக நாம் உம்மை சாட்சி சொல்பவராகவும், நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அனுப்பியிருக்கிறோம்.
لِّتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُعَزِّرُوْهُ وَتُوَقِّرُوْهُ ؕ وَتُسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِیْلًا ۟
لِّتُؤْمِنُوْاநீங்கள் நம்பிக்கை கொள்வதற்காகبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رَسُوْلِهٖஅவனுடைய தூதர் மீதும்وَ تُعَزِّرُوْهُஅவருக்கு நீங்கள் உதவி செய்யவும்وَ تُوَقِّرُوْهُ ؕஅவரை நீங்கள் கண்ணியப்படுத்தவும்وَ تُسَبِّحُوْهُஅவனை நீங்கள் துதிக்கவும்بُكْرَةًகாலையிலும்وَّ اَصِیْلًاமாலையிலும்
லிது மினூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வ து'அZஜ்Zஜிரூஹு வதுவக்கிரூஹு வதுஸBப்Bபி ஹூஹு Bபுக்ரத(ன்)வ் வ அஸீலா
(ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு, (தூதராகிய) அவருக்கு (சன்மார்க்கத்தில்) உதவிபுரிந்தும், அவரை கண்ணியபடுத்தியும், காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வாகிய) அவனை துதி செய்து வருவதற்காக(வே தூதரை அனுப்பினோம்!.
اِنَّ الَّذِیْنَ یُبَایِعُوْنَكَ اِنَّمَا یُبَایِعُوْنَ اللّٰهَ ؕ یَدُ اللّٰهِ فَوْقَ اَیْدِیْهِمْ ۚ فَمَنْ نَّكَثَ فَاِنَّمَا یَنْكُثُ عَلٰی نَفْسِهٖ ۚ وَمَنْ اَوْفٰی بِمَا عٰهَدَ عَلَیْهُ اللّٰهَ فَسَیُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یُبَایِعُوْنَكَஉம்மிடம் உறுதிப்பிரமாணம் செய்கிறார்களோاِنَّمَاநிச்சயமாக அவர்கள்یُبَایِعُوْنَஉறுதிப்பிரமாணம் செய்கிறார்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்விடமேیَدُகைاللّٰهِஅல்லாஹ்வுடையفَوْقَமேல்اَیْدِیْهِمْ ۚஅவர்களுடைய கைகளின்فَمَنْஎனவே எவர்نَّكَثَமுறிக்கிறாரோفَاِنَّمَاநிச்சயமாக அவர்یَنْكُثُமுறிக்கிறார்عَلٰیஎதிராகنَفْسِهٖ ۚதனக்கேوَ مَنْமேலும் எவர்اَوْفٰیநிறைவேற்றுகிறாரோبِمَاஎதைعٰهَدَஉடன்படிக்கை செய்தாரோعَلَیْهُஅதன் மீதுاللّٰهَஅல்லாஹ்விடம்فَسَیُؤْتِیْهِஅவனுக்கு விரைவில் வழங்குவான்اَجْرًاநற்கூலியைعَظِیْمًا۠மகத்தான
இன்னல் லதீன யுBபாயி'ஊனக இன்னமா யுBபாயி'ஊனல் லாஹ யதுல் லாஹி Fபவ்க அய்தீஹிம்; Fபமன் னகத Fப-இன்னமா யன்குது 'அலா னFப்ஸிஹீ வ மன் அவ்Fபா Bபிமா 'ஆஹத 'அலய்ஹுல்லாஹ Fபஸ யு'தீஹி அஜ்ரன் 'அளீமா
நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி) செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான்.
سَیَقُوْلُ لَكَ الْمُخَلَّفُوْنَ مِنَ الْاَعْرَابِ شَغَلَتْنَاۤ اَمْوَالُنَا وَاَهْلُوْنَا فَاسْتَغْفِرْ لَنَا ۚ یَقُوْلُوْنَ بِاَلْسِنَتِهِمْ مَّا لَیْسَ فِیْ قُلُوْبِهِمْ ؕ قُلْ فَمَنْ یَّمْلِكُ لَكُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا اِنْ اَرَادَ بِكُمْ ضَرًّا اَوْ اَرَادَ بِكُمْ نَفْعًا ؕ بَلْ كَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
سَیَقُوْلُகூறுவார்கள்لَكَஉம்மிடம்الْمُخَلَّفُوْنَபின்தங்கிவிட்டவர்கள்مِنَஉள்ளالْاَعْرَابِகிராமத்து அரபிகளில்شَغَلَتْنَاۤஎங்களை ஈடுபடுத்திவிட்டனاَمْوَالُنَاஎங்களது செல்வங்கள்وَ اَهْلُوْنَاமற்றும் எங்களது குடும்பத்தினர்فَاسْتَغْفِرْஎனவே மன்னிப்புத் தேடுவீராகلَنَا ۚஎங்களுக்காகیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்بِاَلْسِنَتِهِمْதங்களது நாவுகளால்مَّاஎவைلَیْسَஇல்லையோفِیْஇல்قُلُوْبِهِمْ ؕஅவர்களது உள்ளங்களில்قُلْநீர் கூறுவீராகفَمَنْஅப்படியானால் யார்یَّمْلِكُஅதிகாரம் பெறுவார்لَكُمْஉங்களுக்காகمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்شَیْـًٔاஎதனையும்اِنْஒருவேளைاَرَادَஅவன் நாடினால்بِكُمْஉங்களுக்குضَرًّاஒரு தீங்கைاَوْஅல்லதுاَرَادَஅவன் நாடினால்بِكُمْஉங்களுக்குنَفْعًا ؕஒரு நன்மையைبَلْமாறாகكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோخَبِیْرًاநன்கு அறிந்தவனாக
ஸ யகூலு லகல் முகல் லFபூன மினல்-அஃராBபி ஷய்கலத்னா அம்வாலுனா வ அஹ்லூனா Fபஸ்தக்Fபிர் லனா; யகூலூன Bபி அல்ஸினதிஹிம் மா லய்ஸ Fபீ குலூBபிஹிம்; குல் Fபம(ன்)ய் யம்லிகு லகும் மினல் லாஹி ஷய்'அன் இன் அராத Bபிகும் ளர்ரன் அவ் அராத Bபிகும் னFப்'ஆ; Bபல் கானல் லாஹு Bபிமா தஃமலூன கBபீரா
(நபியே!) போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின்தங்கி விட்ட நாட்டுப் புறத்து அரபிகள்: “எங்களுடைய சொத்துகளும், எங்கள் குடும்பங்களும் (உங்களுடன் வராது) எங்களை அலுவல்கள் உள்ளவர்களாக்கி விட்டன; எனவே, நீங்கள் எங்களுக்காக மன்னிப்புக் கோருவீர்களாக!” எனக் கூறுவர். அவர்கள் தங்கள் இதயங்களில் இல்லாததைத் தம் நாவுகளினால் கூறுகிறார்கள்; “அல்லாஹ் உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும், அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்கு(த் தடுக்கக் கூடிய) அதிகாரம் பெற்றவர் யார்! அப்படியல்ல! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்குணர்ந்தவனாக இருக்கிறான்” எனக் கூறும்.
بَلْ ظَنَنْتُمْ اَنْ لَّنْ یَّنْقَلِبَ الرَّسُوْلُ وَالْمُؤْمِنُوْنَ اِلٰۤی اَهْلِیْهِمْ اَبَدًا وَّزُیِّنَ ذٰلِكَ فِیْ قُلُوْبِكُمْ وَظَنَنْتُمْ ظَنَّ السَّوْءِ ۖۚ وَكُنْتُمْ قَوْمًا بُوْرًا ۟
بَلْமாறாகظَنَنْتُمْநீங்கள் எண்ணினீர்கள்اَنْஎன்றுلَّنْஒருபோதும்یَّنْقَلِبَதிரும்ப மாட்டார்கள்الرَّسُوْلُஇத்தூதர்وَ الْمُؤْمِنُوْنَஇன்னும் நம்பிக்கையாளர்களும்اِلٰۤیபக்கம்اَهْلِیْهِمْஅவர்களின் குடும்பத்தினர்اَبَدًاஎன்றென்றும்وَّ زُیِّنَமேலும் அழகாக்கப்பட்டதுذٰلِكَஅதுفِیْஇல்قُلُوْبِكُمْஉங்கள் இதயங்களில்وَ ظَنَنْتُمْஇன்னும் நீங்கள் எண்ணினீர்கள்ظَنَّஎண்ணம்السَّوْءِ ۖۚதீயوَ كُنْتُمْஇன்னும் நீங்கள் இருந்தீர்கள்قَوْمًۢاஒரு சமூகமாகبُوْرًاஅழிவுக்குரிய
Bபல் ளனன்தும் அல் ல(ன்)ய் யன்கலிBபர் ரஸூலு வல்மு'மினூன இலா அஹ்லீஹிம் அBபத(ன்)வ் வ Zஜுய்யின தாலிக Fபீ குலூBபிகும் வ ளனன்தும் ளன்ன்னஸ் ஸவ்'இ வ குன்தும் கவ்மம் Bபூரா
“(நீங்கள் கூறுவது போல்) அல்ல; (அல்லாஹ்வின்) தூதரும், முஃமின்களும், தங்கள் குடும்பத்தாரிடம் ஒரு போதும் திரும்ப மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; இதுவே உங்கள் இதயங்களில் அழகாக்கப்பட்டது; ஆதலால் நீங்கள் ஒரு கெட்ட எண்ணத்தை எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; அதனால் நீங்கள் நாசமடையும் சமூகத்தினர்களாகி விட்டீர்கள்.”
وَمَنْ لَّمْ یُؤْمِنْ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ فَاِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ سَعِیْرًا ۟
وَ مَنْமேலும் எவர்لَّمْஇல்லையோیُؤْمِنْۢநம்பிக்கை கொள்ளبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رَسُوْلِهٖமேலும் அவனுடைய தூதர் மீதும்فَاِنَّاۤஆகவே நிச்சயமாக நாம்اَعْتَدْنَاதயார் செய்துள்ளோம்لِلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குسَعِیْرًاகொழுந்துவிட்டு எரியும் நெருப்பை
வ மல் லம் யு'மிம் Bபில்லாஹி வ ரஸூலிஹீ Fப-இன்னா அஃதத்னா லில்காFபிரீன ஸ'ஈரா
அன்றியும் எவர் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொள்ளவில்லையோ - நிச்சயமாக அக்காஃபிர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ یَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்یَغْفِرُஅவன் மன்னிக்கிறான்لِمَنْஎவருக்குیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یُعَذِّبُமேலும் அவன் தண்டிக்கிறான்مَنْஎவரைیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமிக்க மன்னிப்பவனாகرَّحِیْمًاநிகரற்ற அன்புடையவனாக
வ லில்லாஹிஇ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; யக்Fபிரு லிம(ன்)ய் யஷா'உ வ யு'அத்திBபு ம(ன்)ய் யஷா'; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
மேலும் வானங்களிடையவும், பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே! தான் விரும்பியவர்களை அவன் மன்னிக்கிறான்; தான் விரும்பியவர்களை அவன் வேதனை செய்கிறான் - அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
سَیَقُوْلُ الْمُخَلَّفُوْنَ اِذَا انْطَلَقْتُمْ اِلٰی مَغَانِمَ لِتَاْخُذُوْهَا ذَرُوْنَا نَتَّبِعْكُمْ ۚ یُرِیْدُوْنَ اَنْ یُّبَدِّلُوْا كَلٰمَ اللّٰهِ ؕ قُلْ لَّنْ تَتَّبِعُوْنَا كَذٰلِكُمْ قَالَ اللّٰهُ مِنْ قَبْلُ ۚ فَسَیَقُوْلُوْنَ بَلْ تَحْسُدُوْنَنَا ؕ بَلْ كَانُوْا لَا یَفْقَهُوْنَ اِلَّا قَلِیْلًا ۟
سَیَقُوْلُவிரைவில் கூறுவார்கள்الْمُخَلَّفُوْنَபின்தங்கியவர்கள்اِذَاபொழுதுانْطَلَقْتُمْநீங்கள் புறப்பட்டاِلٰیநோக்கிمَغَانِمَபோர்ச் செல்வங்களைلِتَاْخُذُوْهَاஅவற்றை நீங்கள் எடுப்பதற்காகذَرُوْنَاஎங்களை விடுங்கள்نَتَّبِعْكُمْ ۚநாங்கள் உங்களைப் பின்பற்றுவோம்یُرِیْدُوْنَஅவர்கள் நாடுகிறார்கள்اَنْஎன்றுیُّبَدِّلُوْاஅவர்கள் மாற்றكَلٰمَவார்த்தையைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்قُلْநீர் கூறுவீராகلَّنْஒருபோதும்تَتَّبِعُوْنَاநீங்கள் எங்களைப் பின்பற்றமாட்டீர்கள்كَذٰلِكُمْஇவ்வாறுதான்قَالَகூறியுள்ளான்اللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துقَبْلُ ۚமுன்னரேفَسَیَقُوْلُوْنَபின்னர் அவர்கள் கூறுவார்கள்بَلْமாறாகتَحْسُدُوْنَنَا ؕநீங்கள் எங்கள் மீது பொறாமைப்படுகிறீர்கள்بَلْமாறாகكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்لَاஇல்லைیَفْقَهُوْنَஅவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள்اِلَّاதவிரقَلِیْلًاமிகக் குறைவாக
ஸ யகூலுல் முகல்ல Fபூன இதன் தலக்தும் இலா மகானிம லிதா'குதூஹா தரூனா னத்தBபிஃகும் யுரீதூன அ(ன்)ய் யுBபத்திலூ கலாமல்லாஹ்; குல் லன் தத்தBபி'ஊனா கதாலிகும் காலல் லாஹு மின் கBப்லு Fபஸ யகூலூன Bபல் தஹ்ஸுதூனன; Bபல் கானூ லா யFப்கஹூன இல்லா கலீலா
போர்க்களப் பொருட்களை எடுத்துக் கொள்வதற்காக நீங்கள் சென்றீர்களாயின், (போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின் தங்கி விட்டவர்கள், “நாங்களும் உங்களைப் பின்பற்றி வர அனுமதி கொடுங்கள்” என்று கூறுவார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மாற்றிவிட நாடுகிறார்கள்; “நீங்கள் எங்களைப் பின்பற்றி வரவே வேண்டாம்; இவ்வாறே அல்லாஹ் முன்னர் கூறியிருக்கின்றான்” என்று (நபியே! அவர்களிடம்) நீர் சொல்லி விடுவீராக; ஆனால், அவர்கள்: “அல்ல! நீங்கள் எங்கள் மீது பொறாமை கொண்டுள்ளீர்கள்” எனக் கூறுவார்கள்; அப்படியல்ல! அவர்கள் மிக சொற்பமாகவே அன்றி (பெரும்பாலானதை) அறிந்துணராமலே இருக்கிறார்கள்.
قُلْ لِّلْمُخَلَّفِیْنَ مِنَ الْاَعْرَابِ سَتُدْعَوْنَ اِلٰی قَوْمٍ اُولِیْ بَاْسٍ شَدِیْدٍ تُقَاتِلُوْنَهُمْ اَوْ یُسْلِمُوْنَ ۚ فَاِنْ تُطِیْعُوْا یُؤْتِكُمُ اللّٰهُ اَجْرًا حَسَنًا ۚ وَاِنْ تَتَوَلَّوْا كَمَا تَوَلَّیْتُمْ مِّنْ قَبْلُ یُعَذِّبْكُمْ عَذَابًا اَلِیْمًا ۟
قُلْகூறுவீராகلِّلْمُخَلَّفِیْنَபின்தங்கிவிட்டவர்களிடம்مِنَஇருந்துالْاَعْرَابِகிராமவாசிகளில்سَتُدْعَوْنَநீங்கள் அழைக்கப்படுவீர்கள்اِلٰیபால்قَوْمٍஒரு சமூகத்தின்اُولِیْஉடையبَاْسٍபோர் வலிமைشَدِیْدٍகடுமையானتُقَاتِلُوْنَهُمْநீங்கள் அவர்களுடன் போரிடுவீர்கள்اَوْஅல்லதுیُسْلِمُوْنَ ۚஅவர்கள் அடிபணிவார்கள்فَاِنْஎனவே நீங்கள்تُطِیْعُوْاகீழ்ப்படிந்தால்یُؤْتِكُمُஉங்களுக்கு வழங்குவான்اللّٰهُஅல்லாஹ்اَجْرًاநற்கூலியைحَسَنًا ۚஅழகானوَ اِنْஇன்னும் நீங்கள்تَتَوَلَّوْاபுறக்கணித்தால்كَمَاபோன்றுتَوَلَّیْتُمْநீங்கள் புறக்கணித்ததைப்مِّنْஇருந்துقَبْلُமுன்னரேیُعَذِّبْكُمْஅவன் உங்களை வேதனை செய்வான்عَذَابًاவேதனையைاَلِیْمًاநோவினை தரும்
குல் லில்முகல்லFபீன மினல் அஃராBபி ஸதுத்'அவ்ன இலா கவ்மின் உலீ Bபாஸின் ஷதீதின் துகாதி லூனஹும் அவ் யுஸ்லிமூன Fப இன் துதீ'ஊ யு'திகுமுல் லாஹு அஜ்ரன் ஹஸன(ன்)வ் வ இன் ததவல்லவ் கமா தவல்லய்தும் மின் கBப்லு யு'அத்திBப்கும் 'அதாBபன் அலீமா
பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்: “நீங்கள் சீக்கிரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும், அப்போது நீங்கள் வழிப்பட்டு நடப்பீர்களானால், அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான்; ஆனால் இதற்கு முன் நீங்கள் (போரிடாமல்) பின்னடைந்தது போல் (இப்பொழுதும்) நீங்கள் பின்வாங்குவீர்களாயின், அவன் உங்களை நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்” என்று (நபியே!) நீர் கூறும்.
لَیْسَ عَلَی الْاَعْمٰی حَرَجٌ وَّلَا عَلَی الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَی الْمَرِیْضِ حَرَجٌ ؕ وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ یُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ وَمَنْ یَّتَوَلَّ یُعَذِّبْهُ عَذَابًا اَلِیْمًا ۟۠
لَیْسَஇல்லைعَلَیமீதுالْاَعْمٰیபார்வையற்றவர்حَرَجٌகுற்றம்وَّ لَاமேலும் இல்லைعَلَیமீதுالْاَعْرَجِமுடவர்حَرَجٌகுற்றம்وَّ لَاமேலும் இல்லைعَلَیமீதுالْمَرِیْضِநோயாளிحَرَجٌ ؕகுற்றம்وَ مَنْமேலும் எவர்یُّطِعِகீழ்ப்படிகிறாரோاللّٰهَஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلَهٗமேலும் அவனுடைய தூதருக்குیُدْخِلْهُஅவனை அவன் புகுத்துவான்جَنّٰتٍசுவனச் சோலைகளில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُ ۚஆறுகள்وَ مَنْமேலும் எவர்یَّتَوَلَّபுறக்கணிக்கிறாரோیُعَذِّبْهُஅவனை அவன் தண்டிப்பான்عَذَابًاவேதனையால்اَلِیْمًا۠நோவினை தரும்
லய்ஸ 'அலல் அஃமா ஹரஜு(ன்)வ் வலா 'அலல் அஃரஜி ஹரஜு(ன்)வ் வலா 'அலல் மரீளி ஹரஜ்' வ ம(ன்)ய் யுதில்'இல் லாஹ வ ரஸூலஹூ யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வ ம(ன்)ய் யதவல்ல யு'அத்திBப்ஹு 'அதாBபன் அலீமா
(ஆயினும் போருக்குச் செல்லாதது பற்றி) குருடர் மீதும் குற்றம் இல்லை; முடவர் மீதும் குற்றம் இல்லை; நோயாளி மீதும் குற்றம் இல்லை; அன்றியும், எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ, அவரை (அல்லாஹ்) சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்.  
لَقَدْ رَضِیَ اللّٰهُ عَنِ الْمُؤْمِنِیْنَ اِذْ یُبَایِعُوْنَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِیْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِیْنَةَ عَلَیْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِیْبًا ۟ۙ
لَقَدْநிச்சயமாகرَضِیَபொருந்திக் கொண்டான்اللّٰهُஅல்லாஹ்عَنِமீதுالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்கள்اِذْபோதுیُبَایِعُوْنَكَஅவர்கள் உன்னிடம் உறுதிப்பிரமாணம் செய்தتَحْتَஅடியில்الشَّجَرَةِமரத்தின்فَعَلِمَஆகவே அவன் அறிந்தான்مَاஇருப்பதைفِیْஇல்قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்கள்فَاَنْزَلَஆகவே அவன் இறக்கியருளினான்السَّكِیْنَةَஅமைதியைعَلَیْهِمْஅவர்கள் மீதுوَ اَثَابَهُمْமேலும் அவர்களுக்கு நற்கூலியாக அளித்தான்فَتْحًاஒரு வெற்றியைقَرِیْبًاۙநெருங்கிய
லகத் ரளியல் லாஹு 'அனில் மு'மினீன இத் யுBபாயி 'ஊனக தஹ்தஷ் ஷஜரதி Fப'அலிம மா Fபீ குலூBபிஹிம் Fப அன்Zஜலஸ் ஸகீனத 'அலய்ஹிம் வ அதா Bபஹும் Fபத் ஹன் கரீBபா
முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.
وَّمَغَانِمَ كَثِیْرَةً یَّاْخُذُوْنَهَا ؕ وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
وَّ مَغَانِمَமேலும் போர்ப்பொருட்களையும்كَثِیْرَةًஏராளமானیَّاْخُذُوْنَهَا ؕஅவற்றை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்وَ كَانَமேலும் இருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்عَزِیْزًاமிகைத்தவனாகவும்حَكِیْمًاஞானமுடையவனாகவும்
வ மகானிம கதீர த(ன்)ய் யாகுதூனஹா; வ கானல் லாஹு 'அZஜீZஜன் ஹகீமா
இன்னும் ஏராளமான போர்ப்பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படிச் செய்தான்; அல்லாஹ் யாவரையும் மிகைப்பனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
وَعَدَكُمُ اللّٰهُ مَغَانِمَ كَثِیْرَةً تَاْخُذُوْنَهَا فَعَجَّلَ لَكُمْ هٰذِهٖ وَكَفَّ اَیْدِیَ النَّاسِ عَنْكُمْ ۚ وَلِتَكُوْنَ اٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ وَیَهْدِیَكُمْ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ۙ
وَعَدَكُمُஉங்களுக்கு வாக்களித்தான்اللّٰهُஅல்லாஹ்مَغَانِمَபோர்ச் செல்வங்களைكَثِیْرَةًஏராளமானتَاْخُذُوْنَهَاஅவற்றை நீங்கள் அடைவீர்கள்فَعَجَّلَஎனவே அவன் விரைவுபடுத்தினான்لَكُمْஉங்களுக்குهٰذِهٖஇதனைوَ كَفَّமேலும் அவன் தடுத்தான்اَیْدِیَகைகளைالنَّاسِமக்களின்عَنْكُمْ ۚஉங்களை விட்டும்وَ لِتَكُوْنَமேலும் அது ஆவதற்காகاٰیَةًஓர் அத்தாட்சியாகلِّلْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்குوَ یَهْدِیَكُمْமேலும் உங்களை அவன் வழிகாட்டصِرَاطًاபாதையில்مُّسْتَقِیْمًاۙநேரான
வ'அதகுமுல் லாஹு ம கானிம கதீரதன் தா'குதூ னஹா Fப'அஜ்ஜல லகும் ஹாதிஹீ வ கFப்Fப அய்தியன் னாஸி 'அன்கும் வ லிதகூன ஆயதல் லில்மு'மினீன வ யஹ்தியகும் ஸிராதம் முஸ்தகீமா
ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான்; அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள்; இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும் தடுத்துக் கொண்டான். (இதை) முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் (இவ்வாறு அருள் புரிந்தான்).
وَّاُخْرٰی لَمْ تَقْدِرُوْا عَلَیْهَا قَدْ اَحَاطَ اللّٰهُ بِهَا ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرًا ۟
وَّ اُخْرٰیஇன்னும் மற்றொன்றுلَمْஇல்லைتَقْدِرُوْاநீங்கள் ஆற்றல் பெறعَلَیْهَاஅதன் மீதுقَدْநிச்சயமாகاَحَاطَசூழ்ந்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்بِهَا ؕஅதைوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرًاபேராற்றலுடையவனாக
வ உக்ரா லம் தக்திரூ 'அலய்ஹா கத் அஹாதல் லாஹு Bபிஹா; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீரா
மற்றொரு - (வெற்றியும்) இருக்கிறது; அவற்றுக்கு நீங்கள் (இன்னும்) சக்தி பெறவில்லை; ஆயினும் அல்லாஹ் அவற்றை திட்டமாக சூழ்ந்தறிந்திருக்கின்றான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கிறான்.
وَلَوْ قٰتَلَكُمُ الَّذِیْنَ كَفَرُوْا لَوَلَّوُا الْاَدْبَارَ ثُمَّ لَا یَجِدُوْنَ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
وَ لَوْமேலும் ஒருவேளைقٰتَلَكُمُஉங்களுடன் போர் புரிந்தால்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَوَلَّوُاஅவர்கள் திருப்பியிருப்பார்கள்الْاَدْبَارَமுதுகுகளைثُمَّபின்னர்لَاமாட்டார்கள்یَجِدُوْنَஅவர்கள் காணوَلِیًّاஒரு பாதுகாவலனைوَّ لَاமேலும் இல்லைنَصِیْرًاஒரு உதவியாளனை
வ லவ் காதலகுமுல் லதீன கFபரூ ல வல்லவுல் அத்Bபார தும்ம லா யஜிதூன வலிய(ன்)வ்-வ லா னஸீரா
நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர் செய்திருப்பார்களாயின், அவர்கள் புறங்காட்டிப் பின்வாங்கியிருப்பார்கள்; அதன் பின் அவர்கள் தங்களுக்குப் பாது காவலரையோ, உதவி செய்வோரையோ காண மாட்டார்கள்.
سُنَّةَ اللّٰهِ الَّتِیْ قَدْ خَلَتْ مِنْ قَبْلُ ۖۚ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِیْلًا ۟
سُنَّةَவழிமுறைاللّٰهِஅல்லாஹ்வின்الَّتِیْஎதுقَدْஏற்கனவேخَلَتْகடந்து சென்றதோمِنْஇருந்துقَبْلُ ۖۚமுன்னரேوَ لَنْமேலும் ஒருபோதும்تَجِدَநீர் காணமாட்டீர்لِسُنَّةِவழிமுறைக்குاللّٰهِஅல்லாஹ்வின்تَبْدِیْلًاஎவ்வித மாற்றத்தையும்
ஸுன்னதல் லாஹில் லதீ கத் கலத் மின் கBப்லு வ லன் தஜித லிஸுன்னதில் லாஹி தBப்தீலா
இவ்வாறு செய்வதே அல்லாஹ்வுடைய ஸுன்னத்து (நடைமுறை) ஆகும், இதற்கு முன்பும் (இவ்வாறு) நடந்திருக்கிறது - ஆகவே அல்லாஹ்வுடைய ஸுன்னத்தில் - (நடைமுறையில்) நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்.
وَهُوَ الَّذِیْ كَفَّ اَیْدِیَهُمْ عَنْكُمْ وَاَیْدِیَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْ بَعْدِ اَنْ اَظْفَرَكُمْ عَلَیْهِمْ ؕ وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرًا ۟
وَ هُوَமேலும் அவன்தான்الَّذِیْஎத்தகையவன் என்றால்كَفَّதடுத்தான்اَیْدِیَهُمْஅவர்களின் கைகளைعَنْكُمْஉங்களை விட்டும்وَ اَیْدِیَكُمْமேலும் உங்கள் கைகளைعَنْهُمْஅவர்களை விட்டும்بِبَطْنِபள்ளத்தாக்கில்مَكَّةَமக்காவின்مِنْۢஇருந்துبَعْدِபிறகுاَنْ(என்பதற்கு)اَظْفَرَكُمْஉங்களுக்கு வெற்றியை அளித்தான்عَلَیْهِمْ ؕஅவர்கள் மீதுوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِمَاஎதைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ (அதை)بَصِیْرًاஉற்று நோக்குபவனாக
வ ஹுவல் லதீ கFப்Fப அய்தியஹும் 'அன்கும் வ அய்தியகும் 'அன்ஹும் BபிBபத்னி மக்கத மிம் Bபஃதி அன் அள்Fபரகும் 'அலய்ஹிம்; வ கானல் லாஹு Bபிமா தஃமலூன Bபஸீரா
இன்னும், அவன்தான் உங்களுக்கு அவர்கள் மீது வெற்றி அளித்த பிறகு, மக்காவினுள் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்துக் கொண்டான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்.
هُمُ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَالْهَدْیَ مَعْكُوْفًا اَنْ یَّبْلُغَ مَحِلَّهٗ ؕ وَلَوْلَا رِجَالٌ مُّؤْمِنُوْنَ وَنِسَآءٌ مُّؤْمِنٰتٌ لَّمْ تَعْلَمُوْهُمْ اَنْ تَطَـُٔوْهُمْ فَتُصِیْبَكُمْ مِّنْهُمْ مَّعَرَّةٌ بِغَیْرِ عِلْمٍ ۚ لِیُدْخِلَ اللّٰهُ فِیْ رَحْمَتِهٖ مَنْ یَّشَآءُ ۚ لَوْ تَزَیَّلُوْا لَعَذَّبْنَا الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابًا اَلِیْمًا ۟
هُمُஅவர்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ صَدُّوْكُمْமேலும் உங்களைத் தடுத்தார்களோعَنِவிட்டும்الْمَسْجِدِமஸ்ஜிதுல்الْحَرَامِஹராமைوَ الْهَدْیَமேலும் குர்பானி பிராணிகளையும்مَعْكُوْفًاதடுத்து நிறுத்தப்பட்டவையாகاَنْதடுத்துیَّبْلُغَசென்றடைவதைمَحِلَّهٗ ؕஅவற்றின் இடத்தைوَ لَوْ لَاஇன்னும் இல்லையென்றால்رِجَالٌஆண்கள்مُّؤْمِنُوْنَநம்பிக்கையாளர்களானوَ نِسَآءٌமேலும் பெண்கள்مُّؤْمِنٰتٌநம்பிக்கையாளர்களானلَّمْஇல்லைتَعْلَمُوْهُمْநீங்கள் அவர்களை அறிந்திருக்கاَنْஎன்றுتَطَـُٔوْهُمْநீங்கள் அவர்களை மிதித்துவிடفَتُصِیْبَكُمْஅதனால் உங்களுக்கு ஏற்படும்مِّنْهُمْஅவர்களால்مَّعَرَّةٌۢஒரு துன்பம்بِغَیْرِஇல்லாமல்عِلْمٍ ۚஅறிவுلِیُدْخِلَநுழைப்பதற்காகاللّٰهُஅல்லாஹ்فِیْஇல்رَحْمَتِهٖதனது அருளில்مَنْயாரைیَّشَآءُ ۚஅவன் நாடுகிறானோلَوْஒருவேளைتَزَیَّلُوْاஅவர்கள் பிரிந்திருந்தால்لَعَذَّبْنَاநாம் வேதனை செய்திருப்போம்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْهُمْஅவர்களில்عَذَابًاவேதனையைاَلِیْمًاநோவினை தரும்
ஹுமுல் லதீன கFபரூ வ ஸத்தூகும் 'அனில்-மஸ்ஜிதில்-ஹராமி வல்ஹத்ய மஃகூFபன் அ(ன்)ய் யBப்லுக மஹில்லஹ்; வ லவ் லா ரிஜாலும் மு'மினூன வ னிஸா'உம் மு'மினாதுல் லம் தஃலமூஹும் அன் தத'ஊஹும் FபதுஸீBபகும் மின்ஹும் ம'அர்ரதும் Bபிகய்ரி 'இல்மின் லியுத் கிலல் லாஹு Fபீ ரஹ்மதிஹீ ம(ன்)ய் யஷா'; லவ் தZஜய்யலூ ல'அத்தBப்னல் லதீன கFபரூ மின்ஹும் 'அதாBபன் அலீமா
“மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களையும் (தடுத்து,) குர்பானி பிராணியை அதற்குரிய இடத்திற்கு செல்லமுடியாத படியும் தடுத்த காஃபிர்கள் அவர்கள்தான். (மக்காவில் ஈமானை மறைத்துக் கொண்ட) முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் இல்லாதிருந்தால் அவர்களை நீங்கள் அறிந்து கொள்ளாமலேயே (உங்கள் கால்களால்) அவர்களை மிதித்திருப்பீர்கள்; (அவ்வாறே) அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மூலம் உங்களுக்கு தீங்கு ஏற்பட்டிருக்கும். தான் நாடியவர்களை தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வதற்காகவே (அவன் மக்காவில் பிரவேசிக்க உங்களை அனுமதிக்கவில்லை; அங்கு இருக்கும்) முஃமின்கள் (காஃபிர்களை விட்டும்) விலகியிருந்தால் அவர்களில் காஃபிர்களை (மட்டும்) கடும் வேதனையாக வேதனை செய்திருப்போம்.
اِذْ جَعَلَ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ قُلُوْبِهِمُ الْحَمِیَّةَ حَمِیَّةَ الْجَاهِلِیَّةِ فَاَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلٰی رَسُوْلِهٖ وَعَلَی الْمُؤْمِنِیْنَ وَاَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوٰی وَكَانُوْۤا اَحَقَّ بِهَا وَاَهْلَهَا ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟۠
اِذْபோதுجَعَلَஏற்படுத்தியالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفِیْஇல்قُلُوْبِهِمُதங்கள் இதயங்கள்الْحَمِیَّةَவைராக்கியத்தைحَمِیَّةَவைராக்கியம்الْجَاهِلِیَّةِஅறியாமைக் காலத்துفَاَنْزَلَஆகவே இறக்கியருளினான்اللّٰهُஅல்லாஹ்سَكِیْنَتَهٗதனது அமைதியைعَلٰیமீதுرَسُوْلِهٖதனது தூதர்وَ عَلَیமேலும் மீதுالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்கள்وَ اَلْزَمَهُمْமேலும் அவர்களை நிலைத்திருக்கச் செய்தான்كَلِمَةَவார்த்தையைالتَّقْوٰیஇறையச்சம்وَ كَانُوْۤاமேலும் அவர்கள் இருந்தார்கள்اَحَقَّமிகவும் தகுதியுடையவர்கள்بِهَاஅதற்குوَ اَهْلَهَا ؕமேலும் அதற்கு உரியவர்கள்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمًا۠நன்கறிந்தவனாக
இத் ஜ'அலல் லதீன கFபரூ Fபீ குலூBபிஹிமுல் ஹமிய்யத ஹமிய்யதல் ஜாஹிலிய்யதி Fப அன்Zஜலல் லாஹு ஸகீனதஹூ 'அலா ரஸூலிஹீ வ 'அலல் மூமினீன வ அல்Zஜமஹும் கலிமதத் தக்வா வ கானூ அஹக்க Bபிஹா வ அஹ்லஹா; வ கானல் லாஹு Bபிகுல்லி ஷய்'இன் அலீம
(காஃபிராக) நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்கள் வைராக்கியத்தை - முட்டாள்தனமான வைராக்கியத்தை - தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருள் செய்து, அவர்களுக்கு (பயபக்தியூட்டும்) தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை பெறச் செய்தான்; அவர்களோ அதற்கு மிகவும் தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள் - அல்லாஹ் சகல பொருள்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
لَقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْیَا بِالْحَقِّ ۚ لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِیْنَ ۙ مُحَلِّقِیْنَ رُءُوْسَكُمْ وَمُقَصِّرِیْنَ ۙ لَا تَخَافُوْنَ ؕ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِیْبًا ۟
لَقَدْநிச்சயமாகصَدَقَமெய்ப்படுத்தினான்اللّٰهُஅல்லாஹ்رَسُوْلَهُதன் தூதருக்குالرُّءْیَاஅக்கனவைبِالْحَقِّ ۚஉண்மையாகவேلَتَدْخُلُنَّநீங்கள் நிச்சயமாக நுழைவீர்கள்الْمَسْجِدَமஸ்ஜிதுல்الْحَرَامَஹராமுக்குள்اِنْஎனில்شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்اٰمِنِیْنَ ۙஅச்சமற்றவர்களாகمُحَلِّقِیْنَமழித்தவர்களாகرُءُوْسَكُمْஉங்கள் தலைகளைوَ مُقَصِّرِیْنَ ۙமேலும் கத்தரித்தவர்களாகلَاஇல்லைتَخَافُوْنَ ؕநீங்கள் பயப்படுவீர்கள்فَعَلِمَஆகவே அவன் அறிந்தான்مَاஎதனைلَمْஇல்லைتَعْلَمُوْاநீங்கள் அறிந்தீர்கள்فَجَعَلَஎனவே அவன் ஆக்கினான்مِنْஇருந்துدُوْنِமுன்னதாகذٰلِكَஅதற்குفَتْحًاஒரு வெற்றியைقَرِیْبًاநெருங்கிய
லகத் ஸதகல் லாஹு ரஸூலஹுர் ரு'யா Bபில்ஹக்க், லதத்குலுன்னல் மஸ்ஜிதல்-ஹராம இன் ஷா'அல் லாஹு ஆமினீன முஹல்லிகீன ரு'ஊஸகும் வ முகஸ்ஸிரீன லா தகாFபூன Fப'அலிம மா லம் தஃலமூ Fபஜ'அல மின் தூனி தாலிக Fபத்ஹன் கரீBபா
நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்; அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சந்தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும்;, (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அப்போதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான் - (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கிக் கொடுத்தான்,
هُوَ الَّذِیْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰی وَدِیْنِ الْحَقِّ لِیُظْهِرَهٗ عَلَی الدِّیْنِ كُلِّهٖ ؕ وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟ؕ
هُوَஅவன்الَّذِیْۤஎத்தகையவன் என்றால்اَرْسَلَஅனுப்பினான்رَسُوْلَهٗதனது தூதரைبِالْهُدٰیநேர்வழியுடன்وَ دِیْنِமேலும் மார்க்கத்துடன்الْحَقِّசத்தியلِیُظْهِرَهٗஅதனை மேலோங்கச் செய்வதற்காகعَلَیமீதுالدِّیْنِமார்க்கங்கள்كُلِّهٖ ؕஅனைத்தின்وَ كَفٰیமேலும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேشَهِیْدًاؕசாட்சியாக
ஹுவல் லதீ அர்ஸல ரஸூலஹூ Bபில்ஹுதா வ தீனில் ஹக்கி லியுள்ஹிரஹூ 'அலத் தீனி குல்லிஹ்; வ கFபா Bபில்லாஹி ஷஹீதா
அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும், அனுப்பியருளினான்; சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது.
مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ ؕ وَالَّذِیْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَی الْكُفَّارِ رُحَمَآءُ بَیْنَهُمْ تَرٰىهُمْ رُكَّعًا سُجَّدًا یَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا ؗ سِیْمَاهُمْ فِیْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ ؕ ذٰلِكَ مَثَلُهُمْ فِی التَّوْرٰىةِ ۛۖۚ وَمَثَلُهُمْ فِی الْاِنْجِیْلِ ۛ۫ۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْـَٔهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰی عَلٰی سُوْقِهٖ یُعْجِبُ الزُّرَّاعَ لِیَغِیْظَ بِهِمُ الْكُفَّارَ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِیْمًا ۟۠
مُحَمَّدٌமுஹம்மதுرَّسُوْلُதூதர்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்مَعَهٗۤஅவருடன் இருக்கிறார்களோاَشِدَّآءُகடுமையானவர்கள்عَلَیமீதுالْكُفَّارِநிராகரிப்பாளர்கள்رُحَمَآءُகருணையுடையவர்கள்بَیْنَهُمْதங்களுக்குள்تَرٰىهُمْநீர் அவர்களைக் காண்பீர்رُكَّعًاருகூஃ செய்பவர்களாகسُجَّدًاஸுஜூது செய்பவர்களாகیَّبْتَغُوْنَஅவர்கள் தேடுகிறார்கள்فَضْلًاஅருளைمِّنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்وَ رِضْوَانًا ؗமேலும் பொருத்தத்தைسِیْمَاهُمْஅவர்களின் அடையாளம்فِیْஇல்وُجُوْهِهِمْஅவர்களின் முகங்கள்مِّنْஇருந்துاَثَرِஅடையாளத்தால்السُّجُوْدِ ؕஸுஜூதுடையذٰلِكَஇதுவேمَثَلُهُمْஅவர்களின் உதாரணம்فِیஇல்التَّوْرٰىةِ ۛۖۚதவ்ராத்وَ مَثَلُهُمْமேலும் அவர்களின் உதாரணம்فِیஇல்الْاِنْجِیْلِ ۛ۫ۚஇன்ஜீல்كَزَرْعٍஒரு பயிரைப் போன்றதாகும்اَخْرَجَஅது வெளிப்படுத்தியதுشَطْـَٔهٗஅதன் முளையைفَاٰزَرَهٗபின்னர் அதனைப் பலப்படுத்தியதுفَاسْتَغْلَظَபின்னர் அது தடித்ததுفَاسْتَوٰیபின்னர் அது நிமிர்ந்து நின்றதுعَلٰیமீதுسُوْقِهٖஅதன் தண்டுیُعْجِبُஅது மகிழ்விக்கிறதுالزُّرَّاعَவிவசாயிகளைلِیَغِیْظَகோபமூட்டுவதற்காகبِهِمُஅவர்களைக் கொண்டுالْكُفَّارَ ؕநிராகரிப்பாளர்களைوَعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைمِنْهُمْஅவர்களில்مَّغْفِرَةًமன்னிப்பையும்وَّ اَجْرًاமேலும் கூலியையும்عَظِیْمًا۠மகத்தான
முஹம்மதுர் ரஸூலுல் லாஹ்; வல்லதீன ம'அஹூ அஷித்தா'உ 'அலல் குFப்Fபாரி ருஹமா'உ Bபய்னஹும் தராஹும் ருக்க'அன் ஸுஜ்ஜத(ன்)ய் யBப்தகூன Fபள்லம் மினல் லாஹி வ ரிள்வான ஸீமாஹும் Fபீ வுஜூஹிஹிம் மின் அதரிஸ் ஸுஜூத்; தாலிக மதலுஹும் Fபித் தவ்ராஹ்; வ மதலுஹும் Fபில் இன்ஜீலி கZஜர்'இன் அக்ரஜ ஷத் 'அஹூ Fப 'ஆZஜரஹூ Fபஸ்தக்லள Fபஸ்தவா 'அலா ஸூகிஹீ யுஃஜிBபுத் Zஜுர்ரா'அ லியகீள Bபிஹிமுல் குFப்Fபார்; வ'அதல் லாஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி மின்ஹும் மக்Fபிரத(ன்)வ் வ அஜ்ரன் 'அளீமா
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.