44. ஸூரத்துத் துகான் (புகை)

மக்கீ, வசனங்கள்: 59

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالْكِتٰبِ الْمُبِیْنِ ۟ۙۛ
وَ الْكِتٰبِவேதத்தின் மீது சத்தியமாகالْمُبِیْنِۙۛதெளிவான
வல் கிதாBபில் முBபீன்
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةٍ مُّبٰرَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِیْنَ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنٰهُஅதனை இறக்கியருளினோம்فِیْஓர்لَیْلَةٍஇரவில்مُّبٰرَكَةٍபாக்கியம் மிக்கاِنَّاநிச்சயமாக நாம்كُنَّاஇருக்கிறோம்مُنْذِرِیْنَஎச்சரிக்கை செய்பவர்களாக
இன்னா அன்Zஜல்னாஹு Fபீ லய்லதிம் முBபாரகஹ்; இன்னா குன்னா முன்திரீன்
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
فِیْهَا یُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِیْمٍ ۟ۙ
فِیْهَاஅதில்یُفْرَقُதீர்மானிக்கப்படுகிறதுكُلُّஒவ்வொருاَمْرٍகாரியமும்حَكِیْمٍۙஞானமிக்க
Fபீஹா யுFப்ரகு குல்லு அம்ரின் ஹகீம்
அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
اَمْرًا مِّنْ عِنْدِنَا ؕ اِنَّا كُنَّا مُرْسِلِیْنَ ۟ۚ
اَمْرًاஒரு கட்டளையாகمِّنْஇருந்துعِنْدِنَا ؕநம்மிடம்اِنَّاநிச்சயமாக நாம்كُنَّاஇருக்கின்றோம்مُرْسِلِیْنَۚதூதர்களை அனுப்புபவர்களாக
அம்ரம் மின் 'இன்தினா; இன்னா குன்னா முர்ஸிலீன்
அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.
رَحْمَةً مِّنْ رَّبِّكَ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟ۙ
رَحْمَةًஅருளாகمِّنْஇருந்துرَّبِّكَ ؕஉமது இறைவனிடம்اِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالسَّمِیْعُசெவியுறுபவன்الْعَلِیْمُۙநன்கறிபவன்
ரஹ்மதம் மிர் ரBப்Bபிக்; இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
(அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۘ اِنْ كُنْتُمْ مُّوْقِنِیْنَ ۟
رَبِّஇறைவன்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِமற்றும் பூமிوَ مَاஇன்னும் எவைبَیْنَهُمَا ۘஅவற்றுக்கிடையேاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّوْقِنِیْنَஉறுதியுடையவர்களாக
ரBப்Bபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா; இன் குன்தும் மூகினீன்
நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).
لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ یُحْیٖ وَیُمِیْتُ ؕ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவனைیُحْیٖஉயிர்ப்பிக்கிறான்وَ یُمِیْتُ ؕமேலும் மரணிக்கச் செய்கிறான்رَبُّكُمْஉங்கள் இறைவன்وَ رَبُّமேலும் இறைவன்اٰبَآىِٕكُمُஉங்கள் முன்னோர்களின்الْاَوَّلِیْنَமுந்தையவர்களின்
லா இலாஹ இல்லா ஹுவ யுஹ்யீ வ யுமீது ரBப்Bபுகும் வ ரBப்Bபு ஆBபா'இகுமுல் அவ்வலீன்
அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
بَلْ هُمْ فِیْ شَكٍّ یَّلْعَبُوْنَ ۟
بَلْமாறாகهُمْஅவர்கள்فِیْஇல்شَكٍّசந்தேகம்یَّلْعَبُوْنَவிளையாடுகிறார்கள்
Bபல் ஹும் Fபீ ஷக்கி(ன்)ய் யல்'அBபூன்
ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
فَارْتَقِبْ یَوْمَ تَاْتِی السَّمَآءُ بِدُخَانٍ مُّبِیْنٍ ۟ۙ
فَارْتَقِبْஆகவே, நீர் எதிர்பார்த்திருப்பீராகیَوْمَநாளைتَاْتِیகொண்டுவரும்السَّمَآءُவானம்بِدُخَانٍபுகையைمُّبِیْنٍۙதெளிவான
Fபர்தகிBப் யவ்ம த'திஸ் ஸமா'உ Bபி துகானின் முBபீன்
ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
یَّغْشَی النَّاسَ ؕ هٰذَا عَذَابٌ اَلِیْمٌ ۟
یَّغْشَیசூழ்ந்துகொள்ளும்النَّاسَ ؕமக்களைهٰذَاஇதுعَذَابٌவேதனைاَلِیْمٌதுன்பம் தரும்
யக்ஷன் னாஸ ஹாதா 'அதாBபுன் அலீம்
(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; “இது நோவினை செய்யும் வேதனையாகும்.”
رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ اِنَّا مُؤْمِنُوْنَ ۟
رَبَّنَاஎங்கள் இறைவனேاكْشِفْநீக்குவாயாகعَنَّاஎங்களை விட்டும்الْعَذَابَவேதனையைاِنَّاநிச்சயமாக நாங்கள்مُؤْمِنُوْنَநம்பிக்கை கொண்டவர்கள்
ரBப்Bபனக் ஷிFப் 'அன்னல் 'அதாBப இன்னா மு'மினூன்
“எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்” (எனக் கூறுவர்).
اَنّٰی لَهُمُ الذِّكْرٰی وَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مُّبِیْنٌ ۟ۙ
اَنّٰیஎவ்வாறுلَهُمُஅவர்களுக்குالذِّكْرٰیபடிப்பினைوَ قَدْதிண்ணமாகجَآءَهُمْஅவர்களிடம் வந்துள்ளார்رَسُوْلٌஒரு தூதர்مُّبِیْنٌۙதெளிவான
அன்னா லஹுமுத் திக்ரா வ கத் ஜா'அஹும் ரஸூலும் முBபீன்
நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.
ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوْا مُعَلَّمٌ مَّجْنُوْنٌ ۟ۘ
ثُمَّபின்னர்تَوَلَّوْاஅவர்கள் விலகிக் கொண்டார்கள்عَنْهُஅவரை விட்டுوَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்مُعَلَّمٌகற்பிக்கப்பட்டவர்مَّجْنُوْنٌۘபைத்தியக்காரர்
தும்மா தவல்லவ் 'அன்ஹு வ காலூ மு'அல்லமும் மஜ்னூன்
அவர்கள் அவரை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) “கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்” எனக் கூறினர்.
اِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِیْلًا اِنَّكُمْ عَآىِٕدُوْنَ ۟ۘ
اِنَّاநிச்சயமாக நாம்كَاشِفُواநீக்குபவர்கள்الْعَذَابِவேதனையைقَلِیْلًاசிறிதுاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்عَآىِٕدُوْنَۘமீளுபவர்கள்
இன்னா காஷிFபுல் 'அதாBபி கலீலா; இன்னகும் 'ஆ'இதூன்
நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.
یَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرٰی ۚ اِنَّا مُنْتَقِمُوْنَ ۟
یَوْمَஅந்நாளில்نَبْطِشُநாம் பிடிப்போம்الْبَطْشَةَபிடியைالْكُبْرٰی ۚமிகப்பெரியاِنَّاநிச்சயமாக நாம்مُنْتَقِمُوْنَபழிவாங்குபவர்கள்
யவ்ம னBப்திஷுல் Bபத்ஷ தல் குBப்ரா இன்னா முன்தகிமூன்
ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.
وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَآءَهُمْ رَسُوْلٌ كَرِیْمٌ ۟ۙ
وَ لَقَدْநிச்சயமாகவேفَتَنَّاநாம் சோதித்தோம்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்னர்قَوْمَசமூகத்தைفِرْعَوْنَஃபிர்அவ்னின்وَ جَآءَهُمْமேலும் அவர்களிடம் வந்தார்رَسُوْلٌஒரு தூதர்كَرِیْمٌۙகண்ணியமிக்க
வ லகத் Fபதன்னா கBப்லஹும் கவ்ம Fபிர்'அவ்ன வ ஜா'அஹும் ரஸூலுன் கரீம்
அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.
اَنْ اَدُّوْۤا اِلَیَّ عِبَادَ اللّٰهِ ؕ اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اَنْஎன்றுاَدُّوْۤاஒப்படையுங்கள்اِلَیَّஎன்னிடம்عِبَادَஅடியார்களைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنِّیْநிச்சயமாக நான்لَكُمْஉங்களுக்குرَسُوْلٌதூதர்اَمِیْنٌۙநம்பிக்கைக்குரியவர்
அன் அத்தூ இலய்ய 'இBபாதல் லாஹி இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
அவர் (கூறினார்:) “என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
وَّاَنْ لَّا تَعْلُوْا عَلَی اللّٰهِ ؕ اِنِّیْۤ اٰتِیْكُمْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۚ
وَّ اَنْமேலும்لَّاவேண்டாம்تَعْلُوْاநீங்கள் மேட்டிமை கொள்ளعَلَیமீதுاللّٰهِ ۚஅல்லாஹ்வின்اِنِّیْۤநிச்சயமாக நான்اٰتِیْكُمْஉங்களிடம் வந்துள்ளேன்بِسُلْطٰنٍஓர் ஆதாரத்துடன்مُّبِیْنٍۚதெளிவான
வ அல் லா தஃலூ 'அலல் லாஹி இன்னீ ஆதீகும் Bபிஸுல்தானிம் முBபீன்
அன்றியும், “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.
وَاِنِّیْ عُذْتُ بِرَبِّیْ وَرَبِّكُمْ اَنْ تَرْجُمُوْنِ ۟ؗ
وَ اِنِّیْமேலும் நிச்சயமாக நான்عُذْتُபாதுகாப்புத் தேடுகிறேன்بِرَبِّیْஎன் இறைவனிடம்وَ رَبِّكُمْஉங்கள் இறைவனிடமும்اَنْநீங்கள்تَرْجُمُوْنِؗஎன்னைக் கல்லெறிவதிலிருந்து
வ இன்னீ 'உத்து Bபி ரBப்Bபீ வ ரBப்Bபிகும் அன் தர்ஜுமூன்
அன்றியும், “என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.
وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِیْ فَاعْتَزِلُوْنِ ۟
وَ اِنْமேலும்لَّمْஇல்லை என்றால்تُؤْمِنُوْاநீங்கள் நம்பிக்கை கொள்ளلِیْஎன் மீதுفَاعْتَزِلُوْنِஎனவே என்னை விட்டு விலகிவிடுங்கள்
வ இல் லம் து'மினூ லீ FபஃதZஜிலூன்
“மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளுங்கள்” (என்று மூஸா கூறினார்).
فَدَعَا رَبَّهٗۤ اَنَّ هٰۤؤُلَآءِ قَوْمٌ مُّجْرِمُوْنَ ۟
فَدَعَاஎனவே அவர் பிரார்த்தித்தார்رَبَّهٗۤதன் இறைவனிடம்اَنَّநிச்சயமாகهٰۤؤُلَآءِஇவர்கள்قَوْمٌஒரு கூட்டத்தினர்مُّجْرِمُوْنَகுற்றவாளிகள்
Fபத'ஆ ரBப்Bபஹூ அன்ன ஹா'உலா'இ கவ்மும் முஜ்ரிமூன்
(அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). “நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்” என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.
فَاَسْرِ بِعِبَادِیْ لَیْلًا اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ ۟ۙ
فَاَسْرِஆகவே அழைத்துச் செல்بِعِبَادِیْஎன் அடியார்களைلَیْلًاஇரவில்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்مُّتَّبَعُوْنَۙபின்தொடரப்படுவீர்கள்
Fப அஸ்ரி Bபி'இBபாதீ லய்லன் இன்னகும் முத்தBப'ஊன்
“என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” (என்று இறைவன் கூறினான்.)
وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا ؕ اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ ۟
وَ اتْرُكِமேலும் விட்டுவிடுவீராகالْبَحْرَகடலைرَهْوًا ؕபிளந்தவாறேاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்جُنْدٌஒரு படைمُّغْرَقُوْنَமூழ்கடிக்கப்படுபவர்கள்
வத்ருகில் Bபஹ்ர ரஹ்வன் இன்னஹும் ஜுன்தும் முக்ரகூன்
“அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி” இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).
كَمْ تَرَكُوْا مِنْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
كَمْஎத்தனையோتَرَكُوْاஅவர்கள் விட்டுச் சென்றார்கள்مِنْஇருந்துجَنّٰتٍசோலைகளைوَّ عُیُوْنٍۙமேலும் நீரூற்றுகளை
கம் தரகூ மின் ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்?
وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِیْمٍ ۟ۙ
وَّ زُرُوْعٍவிளைநிலங்களும்وَّ مَقَامٍஇருப்பிடங்களும்كَرِیْمٍۙகண்ணியமான
வ Zஜுரூ'இ(ன்)வ் வ மகா மின் கரீம்
இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).
وَّنَعْمَةٍ كَانُوْا فِیْهَا فٰكِهِیْنَ ۟ۙ
وَّ نَعْمَةٍமற்றும் இன்பம்كَانُوْاஅவர்கள் இருந்தார்கள்فِیْهَاஅதில்فٰكِهِیْنَۙமகிழ்ச்சியுடையவர்களாக
வ னஃமதின் கானூ Fபீஹா Fபாகிஹீன்
இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).
كَذٰلِكَ ۫ وَاَوْرَثْنٰهَا قَوْمًا اٰخَرِیْنَ ۟
كَذٰلِكَ ۫அவ்வாறேوَ اَوْرَثْنٰهَاமேலும் அவற்றை நாம் வாரிசாக்கினோம்قَوْمًاஒரு சமூகத்திற்குاٰخَرِیْنَமற்றொரு
கதாலிக வ அவ்ரத்னாஹா கவ்மன் ஆகரீன்
அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.
فَمَا بَكَتْ عَلَیْهِمُ السَّمَآءُ وَالْاَرْضُ وَمَا كَانُوْا مُنْظَرِیْنَ ۟۠
فَمَاஆகவே இல்லைبَكَتْஅழுததுعَلَیْهِمُஅவர்கள் மீதுالسَّمَآءُவானம்وَ الْاَرْضُமற்றும் பூமிوَ مَاமேலும் இல்லைكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்مُنْظَرِیْنَ۠அவகாசம் அளிக்கப்பட்டவர்களாக
Fபமா Bபகத் 'அலய்ஹிமுஸ் ஸமா'உ வல் அர்ளு வமா கானூ முன்ளரீன்
ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை; (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.  
وَلَقَدْ نَجَّیْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ مِنَ الْعَذَابِ الْمُهِیْنِ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகنَجَّیْنَاநாம் காப்பாற்றினோம்بَنِیْۤசந்ததியினரைاِسْرَآءِیْلَஇஸ்ராயீல்مِنَஇருந்துالْعَذَابِவேதனைالْمُهِیْنِۙஇழிவான
வ லகத் னஜ்ஜய்னா Bபனீ இஸ்ரா'ஈல மினல்'அதாBபில் முஹீன்
நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;
مِنْ فِرْعَوْنَ ؕ اِنَّهٗ كَانَ عَالِیًا مِّنَ الْمُسْرِفِیْنَ ۟
مِنْஇருந்துفِرْعَوْنَ ؕஃபிர்அவ்ன்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருந்தான்عَالِیًاஆணவம் கொண்டவனாகمِّنَஇருந்துالْمُسْرِفِیْنَவரம்பு மீறியவர்களில்
மின் Fபிர்'அவ்ன்; இன்னஹூ கான 'ஆலியம் மினல் முஸ்ரிFபீன்
ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்); நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக, வரம்பு மீறியவனாக இருந்தான்.
وَلَقَدِ اخْتَرْنٰهُمْ عَلٰی عِلْمٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۚ
وَ لَقَدِமேலும் நிச்சயமாகاخْتَرْنٰهُمْஅவர்களை நாம் தேர்ந்தெடுத்தோம்عَلٰیஅடிப்படையில்عِلْمٍஅறிவின்عَلَیமேலாகالْعٰلَمِیْنَۚஅகிலத்தாரை
வ லகதிக் தர்னாஹும் 'அலா 'இல்மின் 'அலல் 'ஆலமீன்
நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம்.
وَاٰتَیْنٰهُمْ مِّنَ الْاٰیٰتِ مَا فِیْهِ بَلٰٓؤٌا مُّبِیْنٌ ۟
وَ اٰتَیْنٰهُمْமேலும் அவர்களுக்கு நாம் வழங்கினோம்مِّنَஇருந்துالْاٰیٰتِஅத்தாட்சிகளைمَاஎவைفِیْهِஅதில்بَلٰٓؤٌاஒரு சோதனைمُّبِیْنٌதெளிவான
வ ஆதய்னாஹும் மினல் ஆயாதி மா Fபீஹி Bபலா'உம் முBபீன்
அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது.
اِنَّ هٰۤؤُلَآءِ لَیَقُوْلُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகهٰۤؤُلَآءِஇவர்கள்لَیَقُوْلُوْنَۙநிச்சயமாகக் கூறுகிறார்கள்
இன்ன ஹா'உலா'இ ல யகூலூன்
நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்:
اِنْ هِیَ اِلَّا مَوْتَتُنَا الْاُوْلٰی وَمَا نَحْنُ بِمُنْشَرِیْنَ ۟
اِنْஇல்லைهِیَஇதுاِلَّاதவிரمَوْتَتُنَاஎங்கள் மரணம்الْاُوْلٰیமுதலாவதுوَ مَاமேலும் இல்லைنَحْنُநாங்கள்بِمُنْشَرِیْنَமீண்டும் எழுப்பப்படுபவர்கள்
இன் ஹிய இல்லா மவ்ததுனல் ஊலா வமா னஹ்னு Bபிமுன் ஷரீன்
“எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை; நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்.”
فَاْتُوْا بِاٰبَآىِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
فَاْتُوْاகொண்டு வாருங்கள்بِاٰبَآىِٕنَاۤஎங்கள் முன்னோர்களைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
Fப'தூ Bபி ஆBபா'இனா இன்குன்தும் ஸாதிகீன்
“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்.”
اَهُمْ خَیْرٌ اَمْ قَوْمُ تُبَّعٍ ۙ وَّالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ اَهْلَكْنٰهُمْ ؗ اِنَّهُمْ كَانُوْا مُجْرِمِیْنَ ۟
اَهُمْஅவர்களாخَیْرٌசிறந்தவர்கள்اَمْஅல்லதுقَوْمُகூட்டத்தார்تُبَّعٍ ۙதுப்பஃوَّ الَّذِیْنَமேலும் எவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْ ؕஅவர்களுக்கு முன்னால்اَهْلَكْنٰهُمْ ؗஅவர்களை நாம் அழித்தோம்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்مُجْرِمِیْنَகுற்றவாளிகளாக
அஹும் கய்ருன் அம் கவ்மு துBப்Bப'இ(ன்)வ் வல்லதீன மின் கBப்லிஹிம்; அஹ்லக்னாஹும் இன்னஹும் கானூ முஜ்ரிமீன்
இவர்கள் மேலா? அல்லது “துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.
وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ ۟
وَ مَاமேலும் இல்லைخَلَقْنَاநாம் படைத்தோம்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَமற்றும் பூமியைوَ مَاமற்றும் எவற்றைبَیْنَهُمَاஅவ்விரண்டிற்கும் இடையில்لٰعِبِیْنَவிளையாடுபவர்களாக
வமா கலக்னஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்ன ஹுமா லா'இBபீன்
மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.
مَا خَلَقْنٰهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
مَاஇல்லைخَلَقْنٰهُمَاۤஅவ்விரண்டையும் நாம் படைத்தோம்اِلَّاதவிரبِالْحَقِّசத்தியத்தைக் கொண்டேوَ لٰكِنَّஎனினும்اَكْثَرَهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஇல்லைیَعْلَمُوْنَஅறிகிறார்கள்
மா கலக்னாஹுமா இல்லா Bபில்ஹக்கி வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
اِنَّ یَوْمَ الْفَصْلِ مِیْقَاتُهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகیَوْمَநாள்الْفَصْلِதீர்ப்புمِیْقَاتُهُمْஅவர்களுக்குக் குறிக்கப்பட்ட நேரம்اَجْمَعِیْنَۙஅனைவருக்கும்
இன்ன யவ்மல் Fபஸ்லி மீகாதுஹும் அஜ்ம'ஈன்
நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
یَوْمَ لَا یُغْنِیْ مَوْلًی عَنْ مَّوْلًی شَیْـًٔا وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟ۙ
یَوْمَஅந்நாளில்لَاஇல்லைیُغْنِیْபயனளிப்பான்مَوْلًیஒரு நண்பன்عَنْசார்பாகمَّوْلًیஒரு நண்பனுக்குشَیْـًٔاசிறிதளவும்وَّ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یُنْصَرُوْنَۙஉதவி செய்யப்படுவார்கள்
யவ்ம லா யுக்னீ மவ்லன் 'அம் மவ்லன் ஷய்'அ(ன்)வ் வலா ஹும் யுன்ஸரூன்
ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
اِلَّا مَنْ رَّحِمَ اللّٰهُ ؕ اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
اِلَّاதவிரمَنْஎவருக்குرَّحِمَஅருள் புரிந்தானோاللّٰهُ ؕஅல்லாஹ்اِنَّهُநிச்சயமாக அவன்هُوَஅவனேالْعَزِیْزُயாவரையும் மிகைத்தவன்الرَّحِیْمُ۠மிக்க கிருபையுடையவன்
இல்லா மர் ரஹிமல் லாஹ்' இன்னஹூ ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
(எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.  
اِنَّ شَجَرَتَ الزَّقُّوْمِ ۟ۙ
اِنَّநிச்சயமாகشَجَرَتَமரம்الزَّقُّوْمِۙஜக்கூம்
இன்ன ஷஜரதZஜ் Zஜக்கூம்
நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).
كَالْمُهْلِ ۛۚ یَغْلِیْ فِی الْبُطُوْنِ ۟ۙ
كَالْمُهْلِ ۛۚஉருக்கிய செம்பு போல்یَغْلِیْகொதிக்கும்فِیஉள்ளேالْبُطُوْنِۙவயிறுகளில்
கல்முஹ்லி யக்லீ Fபில்Bபுதூன்
அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.
خُذُوْهُ فَاعْتِلُوْهُ اِلٰی سَوَآءِ الْجَحِیْمِ ۟ۗۖ
خُذُوْهُஅவனைப் பிடியுங்கள்فَاعْتِلُوْهُஅவனை இழுத்துச் செல்லுங்கள்اِلٰیநோக்கிسَوَآءِமையப்பகுதிالْجَحِیْمِۗۖநரகத்தின்
குதூஹு Fபஃதிலூஹு இலா ஸவா'இல் ஜஹீம்
“அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
ثُمَّ صُبُّوْا فَوْقَ رَاْسِهٖ مِنْ عَذَابِ الْحَمِیْمِ ۟ؕ
ثُمَّபின்னர்صُبُّوْاஊற்றுங்கள்فَوْقَமேல்رَاْسِهٖஅவனது தலையின்مِنْஇருந்துعَذَابِவேதனையைالْحَمِیْمِؕகொதிக்கும் நீரின்
தும்ம ஸுBப்Bபூ Fபவ்க ர'ஸிஹீ மின் 'அதாBபில் ஹமீம்
“பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.
ذُقْ ۙۚ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْكَرِیْمُ ۟
ذُقْ ۙۚசுவைப்பாயாகاِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالْعَزِیْزُவல்லமையுடையவன்الْكَرِیْمُகண்ணியமிக்கவன்
துக் இன்னக அன்தல் 'அZஜீZஜுல் கரீம்
“நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்!
اِنَّ هٰذَا مَا كُنْتُمْ بِهٖ تَمْتَرُوْنَ ۟
اِنَّநிச்சயமாகهٰذَاஇதுதான்مَاஎதைكُنْتُمْநீங்கள்بِهٖஅதைப் பற்றிتَمْتَرُوْنَசந்தேகித்துக் கொண்டிருந்தீர்களோ
இன்ன ஹாதா மா குன்தும் Bபிஹீ தம்தரூன்
“நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்” (என்று அவர்களிடம் சொல்லப்படும்).
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ مَقَامٍ اَمِیْنٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்கள்فِیْஇல்مَقَامٍஇடத்தில்اَمِیْنٍۙபாதுகாப்பான
இன்னல் முத்தகீன Fபீ மகாமின் அமீன்
பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.
فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۚۙ
فِیْஇல்جَنّٰتٍசுவனச் சோலைகளில்وَّ عُیُوْنٍۚۙமேலும் நீரூற்றுகளில்
Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).
یَّلْبَسُوْنَ مِنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَقٰبِلِیْنَ ۟ۚۙ
یَّلْبَسُوْنَஅவர்கள் அணிவார்கள்مِنْஇருந்துسُنْدُسٍமெல்லிய பட்டுوَّ اِسْتَبْرَقٍமற்றும் தடிமனான பட்டுمُّتَقٰبِلِیْنَۚۙஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக
யல்Bபஸூன மின் ஸுன்துஸி(ன்)வ் வ இஸ்தBப்ரகிம் முதகாBபிலீன்
ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.
كَذٰلِكَ ۫ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟ؕ
كَذٰلِكَ ۫அவ்வாறேوَ زَوَّجْنٰهُمْமேலும் அவர்களுக்கு நாம் மணம் முடித்து வைப்போம்بِحُوْرٍஹூர்களைعِیْنٍؕஅகன்ற கண்களையுடைய
கதாலிக வ Zஜவ்வஜ்னாஹும் Bபிஹூரின் 'ஈன்
இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
یَدْعُوْنَ فِیْهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِیْنَ ۟ۙ
یَدْعُوْنَஅவர்கள் கேட்பார்கள்فِیْهَاஅதில்بِكُلِّஒவ்வொருفَاكِهَةٍகனியையும்اٰمِنِیْنَۙஅச்சமற்றவர்களாக
யத்'ஊன Fபீஹா Bபிகுல்லி Fபாகிஹதின் ஆமினீன்
அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.
لَا یَذُوْقُوْنَ فِیْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰی ۚ وَوَقٰىهُمْ عَذَابَ الْجَحِیْمِ ۟ۙ
لَاமாட்டார்கள்یَذُوْقُوْنَஅவர்கள் சுவைக்கفِیْهَاஅதில்الْمَوْتَமரணத்தைاِلَّاதவிரالْمَوْتَةَமரணத்தைالْاُوْلٰی ۚமுதல்وَ وَقٰىهُمْமேலும் அவர்களைக் காத்தான்عَذَابَவேதனையிலிருந்துالْجَحِیْمِۙநரகத்தின்
லா யதூகூன Fபீஹல் மவ்தா இல்லல் மவ்ததல் ஊலா வ வகாஹும் 'அதாBபல் ஜஹீம்
முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.
فَضْلًا مِّنْ رَّبِّكَ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
فَضْلًاஅருளாகمِّنْஇருந்துرَّبِّكَ ؕஉமது இறைவனிடம்ذٰلِكَஅதுهُوَதான்الْفَوْزُவெற்றிالْعَظِیْمُமகத்தானது
Fபள்லம் மிர் ரBப்Bபிக்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
(இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும்.
فَاِنَّمَا یَسَّرْنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
فَاِنَّمَاஆகவே, நிச்சயமாகیَسَّرْنٰهُஇதனை நாம் எளிதாக்கினோம்بِلِسَانِكَஉமது மொழியில்لَعَلَّهُمْஅவர்கள்یَتَذَكَّرُوْنَநல்லுபதேசம் பெறுவதற்காக
Fப இன்னமா யஸ்ஸர்னாஹு Bபிலிஸானிக ல'அல்லஹும் யததக்கரூன்
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ ۟۠
فَارْتَقِبْஎனவே, நீர் காத்திருப்பீராகاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مُّرْتَقِبُوْنَ۠காத்திருப்பவர்களே
Fபர்தகிBப் இன்னஹும் முர்த கிBபூன்
ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.