84. ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)

மக்கீ, வசனங்கள்: 25

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِذَا السَّمَآءُ انْشَقَّتْ ۟ۙ
اِذَاஎப்பொழுதுالسَّمَآءُவானம்انْشَقَّتْۙபிளந்துவிடும்
இதஸ் ஸமா'உன் ஷக்கத்
வானம் பிளந்துவிடும் போது-
وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ۙ
وَ اَذِنَتْமேலும் அது செவிசாய்க்கும்لِرَبِّهَاதன் இறைவனுக்குوَ حُقَّتْۙமேலும் அது உரித்தானது
வ அதினத் லி ரBப்Bபிஹா வ ஹுக்கத்
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது-
وَاِذَا الْاَرْضُ مُدَّتْ ۟ؕ
وَ اِذَاமேலும், எப்பொழுதுالْاَرْضُபூமிمُدَّتْۙவிரிக்கப்படும்
வ இதல் அர்ளு முத்தத்
இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
وَاَلْقَتْ مَا فِیْهَا وَتَخَلَّتْ ۟ۙ
وَ اَلْقَتْமேலும் வெளியே எறிந்துவிடும்مَاஎவற்றைفِیْهَاஅதனுள்وَ تَخَلَّتْۙமேலும் வெறுமையாகிவிடும்
வ அல்கத் மா Fபீஹா வ தகல்லத்
அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ؕ
وَ اَذِنَتْமேலும் அது செவிசாய்க்கும்لِرَبِّهَاதன் இறைவனுக்குوَ حُقَّتْؕமேலும் அது அதற்கு உரித்தானதே
வ அதினத் லி ரBப்Bபிஹா வ ஹுக்கத்
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
یٰۤاَیُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰی رَبِّكَ كَدْحًا فَمُلٰقِیْهِ ۟ۚ
یٰۤاَیُّهَاالْاِنْسَانُமனிதனேاِنَّكَநிச்சயமாக நீكَادِحٌபாடுபடுபவன்اِلٰیநோக்கிرَبِّكَஉன் இறைவனைكَدْحًاகடுமையாகفَمُلٰقِیْهِۚபின்னர் அவனைச் சந்திப்பாய்
யா அய்யுஹல் இன்ஸானு இன்னக காதிஹுன் இலா ரBப்Bபிக கத் ஹன் Fபமுலாகீஹ்
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ ۟ۙ
فَاَمَّاஆனால்مَنْஎவர்اُوْتِیَகொடுக்கப்படுகிறாரோكِتٰبَهٗதனது குறிப்பேட்டைبِیَمِیْنِهٖۙதனது வலது கையில்
Fப அம்மா மன் ஊதிய கிதாBபஹூ Bபியமீனிஹ்
ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
فَسَوْفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیْرًا ۟ۙ
فَسَوْفَவிரைவில்یُحَاسَبُவிசாரிக்கப்படுவார்حِسَابًاவிசாரணையாகیَّسِیْرًاۙஎளிதான
Fபஸவ்Fப யுஹாஸBப் ஹிஸாBப(ன்)ய் யஸீரா
அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
وَّیَنْقَلِبُ اِلٰۤی اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ
وَّ یَنْقَلِبُமேலும் அவர் திரும்புவார்اِلٰۤیபால்اَهْلِهٖதன் குடும்பத்தார்مَسْرُوْرًاؕமகிழ்ச்சியுடன்
வ யன்கலிBபு இலா அஹ்லிஹீ மஸ்ரூரா
இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖ ۟ۙ
وَ اَمَّاஆனால்مَنْஎவர்اُوْتِیَகொடுக்கப்படுகிறாரோكِتٰبَهٗஅவருடைய குறிப்பேடுوَرَآءَபின்னால்ظَهْرِهٖۙஅவருடைய முதுகிற்கு
வ அம்மா மன் ஊதிய கிதாBபஹூ வரா'அ ளஹ்ரிஹ்
ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
فَسَوْفَ یَدْعُوْا ثُبُوْرًا ۟ۙ
فَسَوْفَவிரைவில்یَدْعُوْاஅழைப்பான்ثُبُوْرًاۙஅழிவை
Fபஸவ்Fப யத்'ஊ துBபூரா
அவன் (தனக்குக்) “கேடு” தான் எனக் கூவியவனாக-
وَّیَصْلٰی سَعِیْرًا ۟ؕ
وَّ یَصْلٰیமேலும் அவன் நுழைவான்سَعِیْرًاؕகொழுந்துவிட்டு எரியும் நெருப்பில்
வ யஸ்லா ஸ'ஈரா
அவன் நரகத்தில் புகுவான்.
اِنَّهٗ كَانَ فِیْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ
اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருந்தான்فِیْۤமத்தியில்اَهْلِهٖதனது குடும்பத்தினரின்مَسْرُوْرًاؕமகிழ்ச்சியாக
இன்னஹூ கான Fபீ அஹ்லிஹீ மஸ்ரூரா
நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ یَّحُوْرَ ۟ۚۛ
اِنَّهٗநிச்சயமாக அவன்ظَنَّஎண்ணினான்اَنْஎன்றுلَّنْஒருபோதும்یَّحُوْرَۚۛமீளமாட்டான்
இன்னஹூ ளன்ன அன் ல(ன்)ய் யஹூர்
நிச்சயமாக, தான் (இறைவன் பால்) “மீளவே மாட்டேன்” என்று எண்ணியிருந்தான்.
بَلٰۤی ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِیْرًا ۟ؕ
بَلٰۤی ۛۚஅவ்வாறல்லاِنَّநிச்சயமாகرَبَّهٗஅவனுடைய இறைவன்كَانَஇருக்கின்றான்بِهٖஅவனைبَصِیْرًاؕபார்ப்பவனாக
Bபலா இன்ன ரBப்Bபஹூ கான Bபிஹீ Bபஸீரா
அப்படியல்ல; நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِ ۟ۙ
فَلَاۤஎனவேاُقْسِمُநான் சத்தியம் செய்கிறேன்بِالشَّفَقِۙசெவ்வானத்தின் மீது
Fபலா உக்ஸிமு Bபிஷ்ஷFபக்
இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَالَّیْلِ وَمَا وَسَقَ ۟ۙ
وَ الَّیْلِஇரவின் மீதும்وَ مَاஇன்னும் எவற்றைوَسَقَۙஅது ஒன்று சேர்த்ததோ
வல்லய்லி வமா வஸக்
மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
وَالْقَمَرِ اِذَا اتَّسَقَ ۟ۙ
وَ الْقَمَرِசந்திரனின் மீது சத்தியமாகاِذَاஅது முழுமையடையும்اتَّسَقَۙபொழுது
வல்கமரி இதத் தஸக்
பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ ۟ؕ
لَتَرْكَبُنَّநீங்கள் நிச்சயமாகக் கடப்பீர்கள்طَبَقًاமற்றொரு நிலைக்குعَنْஇருந்துطَبَقٍؕஒரு நிலையில்
லதர்கBபுன்ன தBபகன் 'அன் தBபக்
நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
فَمَا لَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ
فَمَاஎனவே என்னلَهُمْஅவர்களுக்குلَاஇல்லைیُؤْمِنُوْنَۙஅவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்
Fபமா லஹும் லா யு'மினூன்
எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்ளவதில்லை.
وَاِذَا قُرِئَ عَلَیْهِمُ الْقُرْاٰنُ لَا یَسْجُدُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுقُرِئَஓதப்படுகிறதோعَلَیْهِمُஅவர்களுக்குالْقُرْاٰنُகுர்ஆன்لَاஇல்லைیَسْجُدُوْنَؕ۩ஸஜ்தா செய்கிறார்கள்
வ இதா குரி'அ 'அலய்ஹிமுல் குர்'ஆனு லா யஸ்ஜுதூன்
மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
بَلِ الَّذِیْنَ كَفَرُوْا یُكَذِّبُوْنَ ۟ؗۖ
بَلِமாறாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோیُكَذِّبُوْنَؗۖபொய்ப்பிக்கிறார்கள்
Bபலில் லதீன கFபரூ யுகத்திBபூன்
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
وَاللّٰهُ اَعْلَمُ بِمَا یُوْعُوْنَ ۟ؗۖ
وَ اللّٰهُமேலும் அல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَاஎவற்றைیُوْعُوْنَؗۖஅவர்கள் சேகரித்து வைக்கிறார்களோ
வல்லாஹு அஃலமு Bபிமா யூ'ஊன்
ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ
فَبَشِّرْهُمْஎனவே அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராகبِعَذَابٍவேதனையைக் கொண்டுاَلِیْمٍۙதுன்புறுத்தும்
FபBபஷ்ஷிர்ஹும் Bபி'அதாBபின் அலீம்
(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குاَجْرٌநற்கூலிغَیْرُஇல்லாதمَمْنُوْنٍ۠முடிவு
இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.