90. ஸூரத்துல் பலத்(நகரம்)

மக்கீ, வசனங்கள்: 20

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
لَاۤ اُقْسِمُசத்தியம் செய்கிறேன்!بِهٰذَا الْبَلَدِۙ‏இந்த நகரத்தின் மீது
லா உக்ஸிமு Bபிஹாதல் Bபலத்
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
وَاَنْتَநீர்حِلٌّ ۢஅனுமதிக்கப்பட்டவர்بِهٰذَا الْبَلَدِۙ‏இந்நகரத்தில்
வ அன்த ஹில்லும் Bபிஹாதல் Bபலத்
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۟ۙ
وَوَالِدٍதந்தையின் மீது சத்தியமாகوَّمَا وَلَدَ ۙ‏அவர் பெற்றெடுத்ததின் மீது சத்தியமாக
வ வாலிதி(ன்)வ் வமா வலத்
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْ كَبَدٍ ۟ؕ
لَقَدْதிட்டவட்டமாகخَلَقْنَاபடைத்தோம்الْاِنْسَانَமனிதனைفِىْ كَبَدٍؕ‏சிரமத்தில்
லகத் கலக்னல் இன்ஸான Fபீ கBபத்
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
اَیَحْسَبُ اَنْ لَّنْ یَّقْدِرَ عَلَیْهِ اَحَدٌ ۟ۘ
اَيَحْسَبُஎண்ணுகின்றானாاَنْ لَّنْ يَّقْدِرَஆற்றல் பெறவே மாட்டான்عَلَيْهِ اَحَدٌ ۘ‏தன்மீது/ஒருவனும்
அயஹ்ஸBபு அல்-லய் யக்திர 'அலய்ஹி அஹத்
“ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்” என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
یَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ۟ؕ
يَقُوْلُகூறுகிறான்اَهْلَكْتُநான் அழித்தேன்مَالًاசெல்வத்தைلُّبَدًا ؕ‏அதிகமான
யகூலு அஹ்லக்து மாலல் லுBபதா
“ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.
اَیَحْسَبُ اَنْ لَّمْ یَرَهٗۤ اَحَدٌ ۟ؕ
اَيَحْسَبُஎண்ணுகின்றானாاَنْ لَّمْ يَرَهٗۤஅவனைப் பார்க்கவில்லைاَحَدٌ ؕ‏ஒருவனும்
அயஹ்ஸBபு அல் லம் யரஹூ அஹத்
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَیْنَیْنِ ۟ۙ
اَلَمْ نَجْعَلْநாம் ஆக்கவில்லையா?لَّهٗஅவனுக்குعَيْنَيْنِۙ‏இரு கண்களை
அலம் னஜ்'அல் லஹூ 'அய்னய்ன்
அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
وَلِسَانًا وَّشَفَتَیْنِ ۟ۙ
وَلِسَانًاஇன்னும் ஒரு நாவைوَّشَفَتَيْنِۙ‏இன்னும் இரு உதடுகளை
வ லிஸான(ன்)வ் வ ஷFபதய்ன்
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
وَهَدَیْنٰهُ النَّجْدَیْنِ ۟ۚ
وَهَدَيْنٰهُஇன்னும் அவனுக்கு வழி காட்டினோம்النَّجْدَيْنِ‌ۚ‏இரு பாதைகளை
வ ஹதய்னாஹுன் னஜ்தய்ன்
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۟ؗۖ
فَلَا اقْتَحَمَஅவன் கடக்கவில்லைالْعَقَبَةَ ۖ‏அகபா (மலை)
Fபலக் தஹமல்-'அகBபஹ்
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْعَقَبَةُ ۟ؕ
وَمَاۤஎது?اَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்ன?الْعَقَبَةُ ؕ‏அகபா
வ மா அத்ராக மல்'அகBபஹ்
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
اَوْ اِطْعٰمٌ فِیْ یَوْمٍ ذِیْ مَسْغَبَةٍ ۟ۙ
اَوْஅல்லதுاِطْعٰمٌஉணவளித்தல்فِىْ يَوْمٍநாளில்ذِىْ مَسْغَبَةٍ ۙ‏கடும் பசியுடைய
அவ் இத்'ஆமுன் Fபீ யவ்மின் தீ மஸ்கBபஹ்
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
اَوْ مِسْكِیْنًا ذَا مَتْرَبَةٍ ۟ؕ
اَوْஅல்லதுمِسْكِيْنًاஓர் ஏழைக்குذَا مَتْرَبَةٍ ؕ‏வறியவரான
அவ் மிஸ்கீனன் தா மத்ரBபஹ்
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
ثُمَّ كَانَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ۟ؕ
ثُمَّபிறகுكَانَஅவர் ஆகிவிடவேண்டும்مِنَ الَّذِيْنَ اٰمَنُوْاஎவர்களில்/நம்பிக்கை கொண்டார்கள்وَتَوَاصَوْاஇன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்بِالصَّبْرِபொறுமையை கொண்டும்وَتَوَاصَوْاஇன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்بِالْمَرْحَمَةِ ؕ‏கருணையை கொண்டும்
தும்ம கான மினல் லதீன ஆமனூ வ தவாஸவ் Bபிஸ்ஸBப்ரி வ தவாஸவ் Bபில்மர்ஹமஹ்
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ
اُولٰٓٮِٕكَஇவர்கள்اَصْحٰبُ الْمَيْمَنَةِ ؕ‏வலப்பக்கமுடையவர்கள்
உலா'இக அஸ்-ஹாBபுல் மய்மனஹ்
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ
وَالَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்தான்بِاٰيٰتِنَاநம் வசனங்களைهُمْஅவர்கள்اَصْحٰبُ الْمَشْــٴَــمَةِ ؕ‏இடபக்கமுடையவர்கள்
வல்லதீன கFபரூ Bபி ஆயாதினா ஹும் அஸ்-ஹாBபுல் மஷ்'அமஹ்
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
عَلَیْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ۟۠
عَلَيْهِمْஅவர்கள் மீதுنَارٌநரகம்مُّؤْصَدَةٌ‏மூடப்படும்
அலய்ஹிம் னாரும் மு'ஸதஹ்
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.