41. ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா

மக்கீ, வசனங்கள்: 54

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَنْزِیْلٌ مِّنَ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۚ
تَنْزِيْلٌஇறக்கப்பட்ட வேதமாகும்مِّنَ الرَّحْمٰنِபேரன்பாளனிடமிருந்துالرَّحِيْمِ‌ۚ‏பேரருளாளன்
தன்Zஜீலும் மினர்-ரஹ்மானிர்-ரஹீம்
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது;
كِتٰبٌ فُصِّلَتْ اٰیٰتُهٗ قُرْاٰنًا عَرَبِیًّا لِّقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟ۙ
كِتٰبٌவேதமாகும்فُصِّلَتْவிவரிக்கப்பட்டனاٰيٰتُهٗஇதன் வசனங்கள்قُرْاٰنًاகுர்ஆன்عَرَبِيًّاஅரபி மொழியிலானلِّقَوْمٍமக்களுக்காகيَّعْلَمُوْنَۙ‏அறிகின்றார்கள்
கிதாBபுன் Fபுஸ்ஸிலத் ஆயாதுஹூ குர்ஆனன் 'அரBபிய்யல் லிகவ்மி(ன்)ய் யஃலமூன்
அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது.
بَشِیْرًا وَّنَذِیْرًا ۚ فَاَعْرَضَ اَكْثَرُهُمْ فَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟
بَشِيْرًاநற்செய்தி கூறக்கூடியதுوَّنَذِيْرًا‌ ۚஅச்சமூட்டி எச்சரிக்கக் கூடியதுفَاَعْرَضَபுறக்கணித்தனர்اَكْثَرُஅதிகமானோர்هُمْஅவர்களில்فَهُمْஇன்னும் அவர்கள்لَا يَسْمَعُوْنَ‏செவியேற்பதில்லை
Bபஷீர(ன்)வ் வ னதீரன் Fப-அஃரள அக்தருஹும் Fபஹும் லா யஸ்ம'ஊன்
நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை.
وَقَالُوْا قُلُوْبُنَا فِیْۤ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَیْهِ وَفِیْۤ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْ بَیْنِنَا وَبَیْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ ۟
وَقَالُوْاஅவர்கள் கூறினார்கள்قُلُوْبُنَاஎங்கள் உள்ளங்கள்فِىْۤ اَكِنَّةٍதிரைகளில்தான்مِّمَّاஎதில்تَدْعُوْنَاۤநீர் எங்களை அழைக்கின்றீர்களோاِلَيْهِஅதன் பக்கம்وَفِىْۤ اٰذَانِنَاஇன்னும் எங்கள்செவிகளில்وَقْرٌசெவிட்டுத்தனம்وَّمِنْۢ بَيْنِنَاஇன்னும் எங்களுக்கு மத்தியிலும்وَبَيْنِكَஉமக்கு மத்தியிலும்حِجَابٌஒரு திரைفَاعْمَلْஆகவே நீர் செய்வீராக!اِنَّنَاநிச்சயமாக நாங்கள்عٰمِلُوْنَ‏செய்வோம்
வ காலூ குலூBபுனா Fபீ அகின்னதிம் மிம்மா தத்'ஊனா இலய்ஹி வ Fபீ ஆதானினா வக்ரு(ன்)வ் வ மிம் Bபய்னினா வ Bபய்னிக ஹிஜாBபுன் Fபஃமல் இன்னனா 'ஆமிலூன்
மேலும் அவர்கள்: “நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள் மூடப்பட்டுள்ளன; எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது; எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது; ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருப்பவர்கள்” என்று கூறினர்.
قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَاسْتَقِیْمُوْۤا اِلَیْهِ وَاسْتَغْفِرُوْهُ ؕ وَوَیْلٌ لِّلْمُشْرِكِیْنَ ۟ۙ
قُلْகூறுவீராக!اِنَّمَاۤ اَنَاநான் எல்லாம்بَشَرٌஒரு மனிதர்தான்مِّثْلُكُمْஉங்களைப் போன்றيُوْحٰٓىவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَىَّஎனக்குاَنَّمَاۤ اِلٰهُكُمْஉங்கள் கடவுள் எல்லாம்اِلٰـهٌ وَّاحِدٌஒரே ஒருகடவுள்தான்فَاسْتَقِيْمُوْۤاஆகவே, நீங்கள் நேர்வழி நடங்கள்!اِلَيْهِஅவன் பக்கமேوَاسْتَغْفِرُوْهُ‌ ؕஇன்னும் அவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்!وَوَيْلٌ لِّلْمُشْرِكِيْنَ ۙ‏நாசம்தான்/இணைவைப்பவர்களுக்கு
குல் இன்னமா அன Bபஷரும் மித்லுகும் யூஹா இலய்ய அன்னமா இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹிதுன் Fபஸ்தகீமூ இலய்ஹி வஸ்தக்Fபிரூஹ்; வ வய்லுல் லில் முஷ்ரிகீன்
“நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது; நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்” என்று (நபியே!) நீர் கூறும்.
الَّذِیْنَ لَا یُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟
الَّذِيْنَ لَا يُؤْتُوْنَஎவர்கள்/அவர்கள் கொடுப்பதில்லைالزَّكٰوةَஸகாத்தைوَهُمْஇன்னும் அவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைهُمْஅவர்கள்كٰفِرُوْنَ‏நிராகரிக்கின்றனர்
அல்லதீன லா யு'தூனZஜ் Zஜகாத வ ஹும் Bபில்ஆகிரதிஹும் காFபிரூன்
அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள்; மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைلَهُمْஅவர்களுக்கு உண்டுاَجْرٌநற்கூலிغَيْرُ مَمْنُوْنٍ‏முடிவற்ற(து)
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
“நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு முடிவேயில்லாத (நிலையான) கூலியுண்டு.”  
قُلْ اَىِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَ بِالَّذِیْ خَلَقَ الْاَرْضَ فِیْ یَوْمَیْنِ وَتَجْعَلُوْنَ لَهٗۤ اَنْدَادًا ؕ ذٰلِكَ رَبُّ الْعٰلَمِیْنَ ۟ۚ
قُلْகூறுவீராக!اَٮِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَநீங்கள் நிராகரிக்கின்றீர்களா?بِالَّذِىْ خَلَقَபடைத்தவனைالْاَرْضَபூமியைفِىْ يَوْمَيْنِஇரண்டு நாள்களில்وَتَجْعَلُوْنَஇன்னும் ஏற்படுத்துகின்றீர்களா?لَهٗۤஅவனுக்குاَنْدَادًا‌ؕஇணைகளைذٰلِكَஅவன்தான்رَبُّஇறைவன்الْعٰلَمِيْنَ‌ۚ‏அகிலங்களின்
குல் அ'இன்னகும் லதக்Fபுரூன Bபில்லதீ கலகல் அர்ள Fபீ யவ்மய்னி வ தஜ்'அலூன லஹூ அன்தாதா; தாலிக ரBப்Bபுல் 'ஆலமீன்
“பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.
وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ مِنْ فَوْقِهَا وَبٰرَكَ فِیْهَا وَقَدَّرَ فِیْهَاۤ اَقْوَاتَهَا فِیْۤ اَرْبَعَةِ اَیَّامٍ ؕ سَوَآءً لِّلسَّآىِٕلِیْنَ ۟
وَجَعَلَஇன்னும் ஏற்படுத்தினான்فِيْهَاஅதில்رَوَاسِىَமலைகளைمِنْ فَوْقِهَاஅதற்கு மேலாகوَبٰرَكَஇன்னும் அருள்வளம் புரிந்தான்فِيْهَاஅதில்وَقَدَّرَஇன்னும் திட்டமிட்டு நிர்ணயித்தான்فِيْهَاۤஅதில்اَقْوَاتَهَاஅதன் உணவுகளைفِىْۤ اَرْبَعَةِநான்குاَيَّامٍؕநாள்களில்سَوَآءًசரியான பதிலாகلِّلسَّآٮِٕلِيْنَ‏விசாரிப்பவர்களுக்கு
வ ஜ'அல Fபீஹா ரவா ஸிய மின் Fபவ்கிஹா வ Bபாரக Fபீஹா வ கத்தர Fபீஹா அக்வாதஹா Fபீ அர்Bப'அதி அய்யாமின் ஸவா'அல் லிஸ்ஸா'இலீன்
அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).
ثُمَّ اسْتَوٰۤی اِلَی السَّمَآءِ وَهِیَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْاَرْضِ ائْتِیَا طَوْعًا اَوْ كَرْهًا ؕ قَالَتَاۤ اَتَیْنَا طَآىِٕعِیْنَ ۟
ثُمَّபிறகுاسْتَـوٰۤىஅவன் உயர்ந்தான்اِلَى السَّمَآءِவானத்திற்கு மேல்وَهِىَஅது (இருந்தது)دُخَانٌஓர் ஆவியாகفَقَالَஅவன் கூறினான்لَهَاஅதற்கு(ம்)وَلِلْاَرْضِபூமிக்கும்ائْتِيَاநீங்கள் இருவரும் வாருங்கள்طَوْعًاவிருப்பத்துடன்اَوْஅல்லதுكَرْهًا ؕவெறுப்புடன்قَالَتَاۤஅவை இரண்டும்اَتَيْنَاநாங்கள் வந்தோம்طَآٮِٕعِيْنَ‏விருப்பமுள்ளவர்களாகவே
தும்மஸ் தவா இலஸ்-ஸமா'இ வ ஹிய துகானுன் Fபகால லஹா வ லில் அர்ளி'தியா தவ்'அன் அவ் கர்ஹன் காலதா அதய்னா தா'இ'ஈன்
பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
فَقَضٰىهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِیْ یَوْمَیْنِ وَاَوْحٰی فِیْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا ؕ وَزَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِمَصَابِیْحَ ۖۗ وَحِفْظًا ؕ ذٰلِكَ تَقْدِیْرُ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟
فَقَضٰٮهُنَّஆக, முடித்தான்/அவற்றைسَبْعَஏழுسَمٰوَاتٍவானங்களாகفِىْ يَوْمَيْنِஇரண்டு நாள்களில்وَاَوْحٰىஇன்னும் அறிவித்தான்فِىْ كُلِّஒவ்வொருسَمَآءٍவானத்திலும்اَمْرَهَا‌ ؕஅதன் காரியத்தைوَزَ يَّـنَّـاஇன்னும் அலங்கரித்தோம்السَّمَآءَவானத்தைالدُّنْيَاசமீபமான(து)بِمَصَابِيْحَநட்சத்திரங்களால்ۖ  وَحِفْظًا ؕஇன்னும் பாதுகாப்பதற்காகذٰ لِكَ تَقْدِيْرُஇது/ஏற்பாடாகும்الْعَزِيْزِமிகைத்தவன்الْعَلِيْمِ‏நன்கறிந்தவன்
Fபகளாஹுன்ன ஸBப்'அ ஸமாவாதின் Fபீ யவ்மய்னி வ அவ்ஹா Fபீ குல்லி ஸமா'இன் அமரஹா; வ Zஜய்யன்னஸ்ஸ மா'அத் துன்யா BபிமஸாBபீஹ வ ஹிFப்ளா; தாலிக தக்தீருல் 'அZஜீZஜில் 'அலீம்
ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
فَاِنْ اَعْرَضُوْا فَقُلْ اَنْذَرْتُكُمْ صٰعِقَةً مِّثْلَ صٰعِقَةِ عَادٍ وَّثَمُوْدَ ۟ؕ
فَاِنْ اَعْرَضُوْاஅவர்கள் புறக்கணித்தால்فَقُلْகூறுவீராக!اَنْذَرْتُكُمْஉங்களுக்கு எச்சரிக்கிறேன்صٰعِقَةًஒரு பேரழிவைمِّثْلَபோன்றصٰعِقَةِ(ஏற்பட்ட) பேரழிவைعَادٍஆது உடையوَّثَمُوْدَ ؕ‏இன்னும் ஸமூது
Fப-இன் அஃரளூ Fபகுல் அன்தர்துகும் ஸா'இகதம் மித்ல ஸா'இகதி 'ஆதி(ன்)வ் வ தமூத்
ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், “ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) போன்ற வேதனையைப் போல் (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!.
اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُ مِنْ بَیْنِ اَیْدِیْهِمْ وَمِنْ خَلْفِهِمْ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ قَالُوْا لَوْ شَآءَ رَبُّنَا لَاَنْزَلَ مَلٰٓىِٕكَةً فَاِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُஅவர்களிடம் வந்தபோது/தூதர்கள்مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன்னிருந்து(ம்)وَمِنْ خَلْفِهِمْஇன்னும் அவர்களுக்குப் பின்னிருந்துاَلَّا تَعْبُدُوْۤاவணங்காதீர்கள்اِلَّاதவிரاللّٰهَ‌ؕஅல்லாஹ்வைقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَوْ شَآءَநாடியிருந்தால்رَبُّنَاஎங்கள் இறைவன்لَاَنْزَلَஇறக்கி இருப்பான்مَلٰٓٮِٕكَةًவானவர்களைفَاِنَّاநிச்சயமாக நாங்கள்بِمَاۤ اُرْسِلْتُمْஎதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோبِهٖஅதைكٰفِرُوْنَ‏நிராகரிப்பவர்கள்தான்
இத் ஜா'அத் ஹுமுர் ருஸுலு மிம் Bபய்னி அய்தீஹிம் வ மின் கல்Fபிஹிம் அல்லா தஃBபுதூ இல்லல் லாஹ காலூ லவ் ஷா'அ ரBபுனா ல அன்Zஜல மலா 'இகதன் Fப இன்னா Bபிமா உர்ஸில்தும் Bபிஹீ காFபிரூன்
“அல்லாஹ்வையன்றி (வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்” என்று அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர்களிடம் தூதர்கள் வந்த போது: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான், நீங்கள் எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்” என்று சொன்னார்கள்.
فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً ؕ اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً ؕ وَكَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
فَاَمَّا عَادٌஆக, ஆது சமுதாயம்فَاسْتَكْبَرُوْاபெருமை அடித்தனர்فِى الْاَرْضِபூமியில்بِغَيْرِ الْحَقِّஅநியாயமாகوَقَالُوْاஇன்னும் கூறினார்கள்مَنْயார்اَشَدُّமிக பலசாலி(கள்)مِنَّاஎங்களை விடقُوَّةً  ؕவலிமையால்اَوَلَمْ يَرَوْاஇவர்கள் கவனிக்கவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்الَّذِىْ خَلَقَهُمْஎவன்/படைத்தான்/அவர்களைهُوَஅவன்اَشَدُّமிக பலசாலிمِنْهُمْஅவர்களை விடقُوَّةً  ؕவலிமையால்وَكَانُوْاஅவர்கள் இருந்தனர்بِاٰيٰتِنَاநமது வசனங்களைيَجْحَدُوْنَ‏மறுப்பவர்களாக
Fப அம்மா 'ஆதுன் Fபஸ்தக் Bபரூ Fபில் அர்ளி Bபிகய்ருல் ஹக்கி வ காலூ மன் அஷத்து மின்னா குவ்வதன் அவலம் யரவ் அன்னல் லாஹல் லதீ கலகஹும் ஹுவ அஷத்து மின்ஹும் குவ்வத(ன்)வ் வ கானூ Bபி ஆயாதினா யஜ்ஹதூன்
அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.
فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا صَرْصَرًا فِیْۤ اَیَّامٍ نَّحِسَاتٍ لِّنُذِیْقَهُمْ عَذَابَ الْخِزْیِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَخْزٰی وَهُمْ لَا یُنْصَرُوْنَ ۟
فَاَرْسَلْنَاஆகவே அனுப்பினோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுرِيْحًاகாற்றைصَرْصَرًاகடும் குளிர்(ந்தது)فِىْۤ اَيَّامٍநாள்களில்نَّحِسَاتٍதுரதிர்ஷ்டமானلِّـنُذِيْقَهُمْநாம் அவர்களுக்கு சுவைக்க வைப்பதற்காகعَذَابَவேதனையைالْخِزْىِகேவலமானفِى الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕஇவ்வுலகில்وَلَعَذَابُவேதனையோالْاٰخِرَةِமறுமையின்اَخْزٰى‌மிக கேவலமானதுوَهُمْ لَا يُنْصَرُوْنَ‏இன்னும் அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்
Fப அர்ஸல்னா 'அலய்ஹிம் ரீஹன் ஸர்ஸரன் Fபீ அய்யாமின் னஹிஸாதில் லினுதீகஹும் 'அதாBபல் கிZஜ்யி Fபில் ஹயாதித் துன்யா வ ல'அதாBபுல் ஆகிரதி அக்Zஜா வ ஹும் லா யுன்ஸரூன்
ஆதலினால், இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய, கெட்ட நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம்; மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும்; அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
وَاَمَّا ثَمُوْدُ فَهَدَیْنٰهُمْ فَاسْتَحَبُّوا الْعَمٰی عَلَی الْهُدٰی فَاَخَذَتْهُمْ صٰعِقَةُ الْعَذَابِ الْهُوْنِ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟ۚ
وَاَمَّا ثَمُوْدُஆக, ஸமூது சமுதாயம்فَهَدَيْنٰهُمْஅவர்களுக்கு நேர்வழிகாட்டினோம்فَاسْتَحَبُّوا(ஆனால்) அதிகம் விரும்பினார்கள்الْعَمٰىகுருட்டுத் தனத்தைத்தான்عَلَى الْهُدٰىநேர்வழியை விடفَاَخَذَتْهُمْஆகவே, அவர்களைப் பிடித்ததுصٰعِقَةُபேரழிவுالْعَذَابِவேதனையின்الْهُوْنِஇழிவானبِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‌ۚ‏அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக
வ அம்மா தமூது Fபஹதினாஹும் Fபஸ்தஹBப்Bபுல் 'அம 'அலல் ஹுத Fப அகதத்ஹும் ஸா'இகதுல் 'அதாBபில் ஹூனி Bபிமா கானூ யக்ஸிBபூன்
ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
وَنَجَّیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟۠
وَ نَجَّيْنَاநாம் பாதுகாத்தோம்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கைகொண்டனர்وَكَانُوْاஇன்னும் இருந்தார்கள்يَتَّقُوْنَ‏அஞ்சுபவர்களாக
வ னஜ்ஜய்னல் லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
ஆனால், ஈமான் கொண்டு பயபக்தியுடன் இருந்தவர்களை நாம் ஈடேற்றினோம்.  
وَیَوْمَ یُحْشَرُ اَعْدَآءُ اللّٰهِ اِلَی النَّارِ فَهُمْ یُوْزَعُوْنَ ۟
وَيَوْمَநாளில்يُحْشَرُஒன்று திரட்டப்படுகின்றார்(கள்)اَعْدَآءُஎதிரிகள்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَى النَّارِநரகத்தின் பக்கம்فَهُمْஆகவே, அவர்கள்يُوْزَعُوْنَ‏நிறுத்தி வைக்கப்படுவார்கள்
வ யவ்ம யுஹ்ஷரு அஃதா'உல் லாஹி இலன் னாரி Fபஹும் யூZஜ'ஊன்
மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.
حَتّٰۤی اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَیْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
حَتّٰٓىஇறுதியாகاِذَا مَا جَآءُوْهَاஅவர்கள் அதனிடம் வரும் போதுشَهِدَசாட்சி கூறும்عَلَيْهِمْஅவர்களுக்கு எதிராகவேسَمْعُهُمْஅவர்களுடைய செவி(யும்)وَاَبْصَارُهُمْஅவர்களுடைய பார்வைகளும்وَجُلُوْدُهُمْஅவர்களுடைய தோல்களும்بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி
ஹத்தா இதா மா ஜா'ஊஹா ஷஹித 'அலய்ஹிம் ஸமு'உஹும் வ அBப்ஸாருஹும் வ ஜுலூதுஹும் Bபிமா கானூ யஃமலூன்
இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَیْنَا ؕ قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِیْۤ اَنْطَقَ كُلَّ شَیْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
وَقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்لِجُلُوْدِهِمْதங்களுடைய தோல்களிடம்لِمَ شَهِدْتُّمْஏன் சாட்சிகூறினீர்கள்عَلَيْنَا‌ ؕஎங்களுக்கு எதிராகقَالُوْۤاஅவை கூறும்اَنْطَقَنَاஎங்களை(யும்) பேச வைத்தான்اللّٰهُஅல்லாஹ்الَّذِىْۤஎவன்اَنْطَقَபேசவைத்தான்كُلَّ شَىْءٍஎல்லாவற்றையும்وَّهُوَஅவன்தான்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்اَوَّلَ مَرَّةٍமுதல் முறையாகوَّاِلَيْهِஇன்னும் அவன் பக்கம்தான்تُرْجَعُوْنَ‏நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
வ காலூ லிஜுலூதிஹிம் லிம ஷஹித்தும் 'அலய்னா காலூ அன்தகனல் லாஹுல் லதீ அன்தக குல்ல ஷய்'இ(ன்)வ் வ ஹுவ கலககும் அவ்வல மர்ரதி(ன்)வ் வ இலய்ஹி துர்ஜ'ஊன்
அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.
وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ یَّشْهَدَ عَلَیْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا یَعْلَمُ كَثِیْرًا مِّمَّا تَعْمَلُوْنَ ۟
وَمَا كُنْتُمْநீங்கள் இருக்கவில்லைتَسْتَتِرُوْنَமறைப்பவர்களாகاَنْ يَّشْهَدَசாட்சி கூறிவிடும் என்பதற்காகعَلَيْكُمْஉங்களுக்கு எதிராகسَمْعُكُمْஉங்கள் செவியும்وَلَاۤ اَبْصَارُكُمْஉங்கள் பார்வைகளும்وَلَا جُلُوْدُكُمْஉங்கள் தோல்களும்وَلٰكِنْஎன்றாலும்ظَنَنْتُمْநீங்கள் எண்ணினீர்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يَعْلَمُஅறியமாட்டான்كَثِيْرًاஅதிகமானதைمِّمَّا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்வதில்
வமா குன்தும் தஸ்ததிரூன அய்-யஷ்ஹத 'அலய்கும் ஸம்'உகும் வ லா அBப்ஸாருகும் வலா ஜுலூதுகும் வ லாகின் ளனன்தும் அன்னல் லாஹ லா யஃலமு கதீரம் மிம்மா தஃமலூன்
“உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِیْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدٰىكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟
وَذٰلِكُمْஅந்தظَنُّكُمُஉங்கள் எண்ணம்தான்الَّذِىْஎதுظَنَنْتُمْஎண்ணினீர்கள்بِرَبِّكُمْஉங்கள் இறைவனைப் பற்றிاَرْدٰٮكُمْஉங்களை நாசமாக்கியதுفَاَصْبَحْتُمْஆகவே, நீங்கள் ஆகிவிட்டீர்கள்مِّنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
வ தாலிகும் ளன்னுகுமுல் லதீ ளனன்தும் Bபி-ரBப்Bபிகும் அர்தாகும் Fப அஸ்Bபஹ்தும் மினல் காஸிரீன்
ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).
فَاِنْ یَّصْبِرُوْا فَالنَّارُ مَثْوًی لَّهُمْ ۚ وَاِنْ یَّسْتَعْتِبُوْا فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِیْنَ ۟
فَاِنْ يَّصْبِرُوْاஅவர்கள் பொறுமையாக இருந்தாலும்فَالنَّارُநரகம்தான்مَثْوًىதங்குமிடமாகும்لَّهُمْ‌ؕஅவர்களுக்குரியوَاِنْ يَّسْتَعْتِبُوْاஅவர்கள் தங்களைத் திருப்புமாறு கோரினால்فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِيْنَ‏அப்படி அவர்கள் திருப்பப்பட மாட்டார்கள்
Fப-இ(ன்)ய் யஸ்Bபிரூ Fபன் னாரு மத்வல் லஹும் வ இ(ன்)ய்-யஸ்தஃதிBபூ Fபமா ஹும் மினல் முஃதBபீன்
ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
وَقَیَّضْنَا لَهُمْ قُرَنَآءَ فَزَیَّنُوْا لَهُمْ مَّا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۚ اِنَّهُمْ كَانُوْا خٰسِرِیْنَ ۟۠
وَقَيَّضْنَاநாம் இலகுவாக்கி அமைத்துக் கொடுத்தோம்لَهُمْஅவர்களுக்குقُرَنَآءَசில நண்பர்களைفَزَيَّنُوْاஅலங்கரித்துக் காட்டினார்கள்لَهُمْஅவர்களுக்குمَّا بَيْنَ اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன்னுள்ளதை(யும்)وَمَا خَلْفَهُمْஅவர்களுக்கு பின்னுள்ளதையும்وَحَقَّஇன்னும் உறுதியாகிவிட்டதுعَلَيْهِمُஇவர்கள் மீதும்الْقَوْلُவிதிக்கப்பட்ட அதே விதிفِىْۤ اُمَمٍசமுதாயங்களுக்குقَدْ خَلَتْசென்று விட்டனர்مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னர்مِّنَ الْجِنِّஜின்களில்وَالْاِنْسِ‌ۚமற்றும் மனிதர்களில்اِنَّهُمْநிச்சயமாக இவர்கள்كَانُوْاஇருக்கின்றனர்خٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளாக
வ கய்யள்னா லஹும் குரனா'அ FபZஜய்யனூ லஹும் மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும் வ ஹக்க 'அலய்ஹிமுல் கவ்லு Fபீ உமமின் கத் கலத் மின் கBப்லிஹிம் மினல் ஜின்னி வல் இன்ஸி இன்னஹும் கானூ காஸிரீன்
நாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம்; ஆகவே, (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு, முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள்; அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகிய சமுதாயத்தார் மீது நம்வாக்கு உறுதியாகிவிட்டது - நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினர்.  
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِیْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ ۟
وَقَالَகூறினார்கள்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்لَا تَسْمَعُوْاசெவியுறாதீர்கள்لِهٰذَا الْقُرْاٰنِஇந்த குர்ஆனைوَالْغَوْاகூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துங்கள்!فِيْهِஅதில்لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ‏நீங்கள்வெற்றி பெறுவீர்கள்
வ காலல் லதீன கFபரூ லா தஸ்ம'ஊ லிஹாதல் குர்'ஆனி வல்கவ் Fபீஹி ல'அல்லகும் தக்லிBபூன்
“நீங்கள் இந்த குர்ஆனை செவி ஏற்காதீர்கள். (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள்” என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினர்.
فَلَنُذِیْقَنَّ الَّذِیْنَ كَفَرُوْا عَذَابًا شَدِیْدًا ۙ وَّلَنَجْزِیَنَّهُمْ اَسْوَاَ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟
فَلَـنُذِيْقَنَّஆகவே, நிச்சயமாக சுவைக்க வைப்போம்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களுக்குعَذَابًاவேதனையைشَدِيْدًاۙகடுமையானوَّلَنَجْزِيَنَّهُمْஇன்னும் அவர்களுக்கு நிச்சயமாக கூலி கொடுப்போம்اَسْوَاَமிகக் கெட்ட செயலுக்குالَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில்
Fபலனுதீகன்னல் லதீன கFபரூ 'அதாBபன் ஷதீத(ன்)வ் வ லனஜ்Zஜியன்னஹும் அஸ்வல்லதீ கானூ யஃமலூன்
ஆகவே, காஃபிர்களை நாம் நிச்சயமாக கொடிய வேதனையைச் சுவைக்க செய்வோம் - அன்றியும், நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்ததில் மிகத் தீயதை அவர்களுக்குக் கூலியாக கொடுப்போம்.
ذٰلِكَ جَزَآءُ اَعْدَآءِ اللّٰهِ النَّارُ ۚ لَهُمْ فِیْهَا دَارُ الْخُلْدِ ؕ جَزَآءً بِمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
ذٰ لِكَஇதுதான்جَزَآءُகூலியாகும்اَعْدَآءِஎதிரிகளுக்குரியاللّٰهِஅல்லாஹ்வின்النَّارُ‌ ۚநரகம்தான்لَهُمْஅவர்களுக்குفِيْهَاஅதில்دَارُ الْخُـلْدِ‌ ؕநிரந்தரமாக தங்கும் இல்லம்جَزَآءًۢகூலியாகبِمَا كَانُوْاஅவர்கள் இருந்ததற்குبِاٰيٰتِنَاநமது வசனங்களைيَجْحَدُوْنَ‏மறுப்பவர்களாக
தாலிக ஜZஜா'உ அஃதா'இல் லாஹின் னாரு லஹும் Fபீஹா தாருல் குல்த், ஜZஜா'அம் Bபிமா கானூ Bபி ஆயாதினா யஜ்ஹதூன்
அதுவேதான் அல்லாஹ்வுடைய பகைவர்களுக்குள்ள கூலியாகும் - அதாவது நரகம்; நம் வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் கூலியாக அவர்களுக்கு நிரந்தரமான வீடு அ(ந்நரகத்)தில் உண்டு.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا رَبَّنَاۤ اَرِنَا الَّذَیْنِ اَضَلّٰنَا مِنَ الْجِنِّ وَالْاِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ اَقْدَامِنَا لِیَكُوْنَا مِنَ الْاَسْفَلِیْنَ ۟
وَقَالَகூறுவார்(கள்)الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பவர்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவாاَرِنَاஎங்களுக்குக் காண்பிالَّذَيْنِ اَضَلّٰنَاஎவர்கள்/வழிகெடுத்தனர்/எங்களைمِنَ الْجِنِّ وَالْاِنْسِஜின் மற்றும் மனிதர்களில்نَجْعَلْهُمَاஅ(வ்விரு)வர்களை ஆக்கிக் கொள்கிறோம்تَحْتَ اَقْدَامِنَاஎங்கள் பாதங்களுக்குக் கீழ்لِيَكُوْنَاஆகிவிடுவதற்காகمِنَ الْاَسْفَلِيْنَ‏மிகக் கீழ்த்தரமானவர்களில்
வ காலல் லதீன கFபரூ ரBப்Bபனா அரினல் லதய்னி அளல் லானா மினல் ஜின்னி வல் இன்ஸி னஜ்'அல்ஹுமா தஹ்த அக்தாமினா லியகூனா மினல் அஸ்Fபலீன்
(அந்நாளில்:) காஃபிர்கள்: “எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)” எனக் கூறுவார்கள்.
اِنَّ الَّذِیْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَیْهِمُ الْمَلٰٓىِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَنَّةِ الَّتِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்قَالُوْاகூறினார்கள்رَبُّنَاஎங்கள் இறைவன்اللّٰهُஅல்லாஹ்தான்ثُمَّபிறகுاسْتَقَامُوْاஉறுதியாக இருந்தார்கள்تَتَنَزَّلُஇறங்குவார்கள்عَلَيْهِمُஅவர்கள் மீதுالْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்اَلَّا تَخَافُوْاநீங்கள் பயப்படாதீர்கள்!وَلَا تَحْزَنُوْاஇன்னும் கவலைப்படாதீர்கள்!وَاَبْشِرُوْاநற்செய்தி பெறுங்கள்!بِالْجَـنَّةِசொர்க்கத்தைக் கொண்டுالَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏எது/வாக்களிக்கப்பட்டவர்களாக இருந்தீர்கள்
இன்னல் லதீன காலூ ரBப்Bபுனல் லாஹு தும்மஸ் தகாமூ ததனZஜ்Zஜலு 'அலய்ஹிமுல் மலா 'இகது அல்லா தகாFபூ வலா தஹ்Zஜனூ வ அBப்ஷிரூ Bபில் ஜன்ன்னதில் லதீ குன்தும் தூ'அதூன்
நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
نَحْنُ اَوْلِیٰٓؤُكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ۚ وَلَكُمْ فِیْهَا مَا تَشْتَهِیْۤ اَنْفُسُكُمْ وَلَكُمْ فِیْهَا مَا تَدَّعُوْنَ ۟ؕ
نَحْنُ اَوْلِيٰٓـؤُکُمْநாங்கள் உங்கள் பொறுப்பாளர்கள்فِى الْحَيٰوةِவாழ்க்கையிலும்الدُّنْيَاஇந்த உலகوَفِى الْاٰخِرَةِ ۚமறுமையிலும்وَلَـكُمْஉங்களுக்கு உண்டுفِيْهَاஅதில்مَاஎதைتَشْتَهِىْۤவிரும்புகின்றதுاَنْفُسُكُمْஉங்கள் மனங்கள்وَلَـكُمْஉங்களுக்கு உண்டுفِيْهَاஅதில்مَا تَدَّعُوْنَ ؕ‏எதை/கேட்கின்றீர்கள்
னஹ்னு அவ்லியா'உகும் Fபில் ஹயாதித் துன்யா வ Fபில் ஆகிரதி வ லகும் Fபீஹா மா தஷ்தஹீ அன்Fபுஸுகும் வ லகும் Fபீஹா ம தத்த'ஊன்
“நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِیْمٍ ۟۠
نُزُلًاவிருந்தோம்பலாகمِّنْஇருந்துغَفُوْرٍமகா மன்னிப்பாளன்رَّحِيْمٍ‏மகா கருணையாளன்
னுZஜுலம் மின் கFபூரிர் ரஹீம்
“மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்” (இது என்று கூறுவார்கள்).  
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَی اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
وَمَنْயார்?اَحْسَنُமிக அழகானவர்قَوْلًاபேச்சால்مِّمَّنْஒருவரைவிடدَعَاۤஅழைத்தார்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்وَعَمِلَஇன்னும் செய்தார்صَالِحًاநல்லதைوَّقَالَஇன்னும் கூறுகின்றார்اِنَّنِىْநிச்சயமாக நான்مِنَ الْمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களில் உள்ளவன்
வ மன் அஹ்ஸனு கவ்லம் மிம்மன் த'ஆ இலல் லாஹி வ 'அமில ஸாலிஹ(ன்)வ் வ கால இன்னனீ மினல் முஸ்லிமீன்
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
وَلَا تَسْتَوِی الْحَسَنَةُ وَلَا السَّیِّئَةُ ؕ اِدْفَعْ بِالَّتِیْ هِیَ اَحْسَنُ فَاِذَا الَّذِیْ بَیْنَكَ وَبَیْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِیٌّ حَمِیْمٌ ۟
وَلَا تَسْتَوِىசமமாகாதுالْحَسَنَةُநன்மையும்وَ لَا السَّيِّئَةُ ؕதீமையும்اِدْفَعْதடுப்பீராக!بِالَّتِىْ هِىَ اَحْسَنُமிக அழகியதைக் கொண்டுفَاِذَاஅப்போதுالَّذِىْஎவர்بَيْنَكَஉமக்கு இடையில்وَبَيْنَهٗஒருவருக்கும்عَدَاوَةٌபகைமைكَاَنَّهٗபோல்/அவர்وَلِىٌّஓர் உறவுக்காரரைحَمِيْمٌ‏நெருக்கமான
வ லா தஸ்தவில் ஹஸனது வ லஸ் ஸய்யி'அஹ்; இத்Fபஃ Bபில்லதீ ஹிய அஹ்ஸனு Fப'இதல் லதீ Bபய்னக வ Bபய்னஹூ 'அதாவதுன் க'அன்னஹூ வலியுன் ஹமீம்
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.
وَمَا یُلَقّٰىهَاۤ اِلَّا الَّذِیْنَ صَبَرُوْا ۚ وَمَا یُلَقّٰىهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِیْمٍ ۟
وَمَا يُلَقّٰٮهَاۤஇதை கொடுக்கப்பட மாட்டார்கள்اِلَّاதவிரالَّذِيْنَ صَبَرُوْا‌ۚபொறுமையாளர்கள்وَمَا يُلَقّٰٮهَاۤஇன்னும் இதை கொடுக்கப்பட மாட்டார்கள்اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ‏பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர
வமா யுலக்காஹா இல்லல் லதீன ஸBபரூ வமா யுலக்காஹா இல்லா தூ ஹள்ளின் 'அளீம்
பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.
وَاِمَّا یَنْزَغَنَّكَ مِنَ الشَّیْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَاِمَّا يَنْزَغَنَّكَநிச்சயமாக உம்மைத் தூண்டினால்مِنَ الشَّيْطٰنِஷைத்தானிடமிருந்துنَزْغٌதீய எண்ணம்فَاسْتَعِذْபாதுகாவல் தேடுவீராக!بِاللّٰهِ‌ؕஅல்லாஹ்விடம்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏நன்கறிந்தவன்
வ இம்மா யன்Zஜகன்னக மினஷ் ஷய்தானி னZஜ்குன் Fபஸ்த'இத் Bபில்லாஹி இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
وَمِنْ اٰیٰتِهِ الَّیْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ ؕ لَا تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوْا لِلّٰهِ الَّذِیْ خَلَقَهُنَّ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟
وَمِنْ اٰيٰتِهِஅவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான்الَّيْلُஇரவுوَالنَّهَارُபகல்وَالشَّمْسُசூரியன்وَالْقَمَرُ‌ؕசந்திரன்لَا تَسْجُدُوْاசிரம் பணியாதீர்கள்!لِلشَّمْسِசூரியனுக்கும்وَلَا لِلْقَمَرِசந்திரனுக்கும்وَاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِلّٰهِஅல்லாஹ்விற்குالَّذِىْ خَلَقَهُنَّஇவற்றைப் படைத்தவன்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்اِيَّاهُஅவனைتَعْبُدُوْنَ‏வணங்குபவர்களாக
வ மின் ஆயாதிஹில் லய்லு வன்னஹாரு வஷ்ஷம்ஸு வல்கமர்; லா தஸ்ஜுதூ லிஷ்ஷம்ஸி வலா லில்கமரி வஸ்ஜுதூ லில்லாஹில் லதீ கல கஹுன்ன இன் குன்தும் இய்யாஹு தஃBபுதூன்
இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்.
فَاِنِ اسْتَكْبَرُوْا فَالَّذِیْنَ عِنْدَ رَبِّكَ یُسَبِّحُوْنَ لَهٗ بِالَّیْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا یَسْـَٔمُوْنَ ۟
فَاِنِ اسْتَكْبَرُوْاஅவர்கள் பெருமையடித்து விலகினால்فَالَّذِيْنَ عِنْدَ رَبِّكَஉமது இறைவனிடம் இருக்கின்றவர்கள்يُسَبِّحُوْنَதுதிக்கின்றனர்لَهٗஅவனைبِالَّيْلِஇரவிலும்وَالنَّهَارِபகலிலும்وَهُمْஅவர்கள்لَا يَسْــٴَــمُوْنَ۩‏சோர்வடைய மாட்டார்கள்
Fப இனிஸ்-தக்Bபரூ Fபல்லதீ ன 'இன்த ரBப்Bபிக யுஸBப்Bபிஹூன லஹூ Bபில்லய்லி வன்ன்னஹாரி வ ஹும் லா யஸ்'அமூன்
ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنَّكَ تَرَی الْاَرْضَ خَاشِعَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَیْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ ؕ اِنَّ الَّذِیْۤ اَحْیَاهَا لَمُحْیِ الْمَوْتٰی ؕ اِنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَمِنْ اٰيٰتِهٖۤஇன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்اَنَّكَநிச்சயமாக நீர்تَرَىபார்க்கின்றீர்الْاَرْضَபூமியைخَاشِعَةًகாய்ந்ததாகفَاِذَاۤ اَنْزَلْنَاபிறகு, நாம் இறக்கினால்عَلَيْهَاஅதன் மீதுالْمَآءَநீரைاهْتَزَّتْசெழிப்படைகிறதுوَرَبَتْ‌ؕஇன்னும் அது வளர்கிறதுاِنَّநிச்சயமாகالَّذِىْۤ اَحْيَاهَاஎவன்/உயிர்ப்பித்தான்/அதைلَمُحْىِஉயிர்ப்பிப்பவன்الْمَوْتٰى ؕமரணித்தவர்களை(யும்)اِنَّهٗநிச்சயமாக அவன்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதும்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
வ மின் ஆயாதிஹீ அன்னக தரல் அர்ள காஷி'அதன் Fப இதா அன்Zஜல்ன 'அலய்ஹல் மா'அஹ் தZஜ்Zஜத் வ ரBபத்; இன்னல் லதீ அஹ்யாஹா லமுஹியில் மவ்தா; இன்னஹூ 'அலா குல்லி ஷய்-இன் கதீர்
பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
اِنَّ الَّذِیْنَ یُلْحِدُوْنَ فِیْۤ اٰیٰتِنَا لَا یَخْفَوْنَ عَلَیْنَا ؕ اَفَمَنْ یُّلْقٰی فِی النَّارِ خَیْرٌ اَمْ مَّنْ یَّاْتِیْۤ اٰمِنًا یَّوْمَ الْقِیٰمَةِ ؕ اِعْمَلُوْا مَا شِئْتُمْ ۙ اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ يُلْحِدُوْنَதடம் புரளுபவர்கள்فِىْۤ اٰيٰتِنَاநமது வசனங்களில்لَا يَخْفَوْنَமறைந்துவிட மாட்டார்கள்عَلَيْنَا ؕநம்மீதுاَفَمَنْ يُّلْقٰىபோடப்படுபவர் ?فِى النَّارِநரகத்தில்خَيْرٌசிறந்தவராاَمْஅல்லதுمَّنْ يَّاْتِىْۤவருகின்றவரா?اٰمِنًاநிம்மதி பெற்றவராகيَّوْمَ الْقِيٰمَةِ‌ ؕமறுமை நாளில்اِعْمَلُوْاசெய்துகொள்ளுங்கள்!مَا شِئْتُمْ‌ ۙநீங்கள் நாடியதைاِنَّهٗநிச்சயமாக அவன்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்வதைبَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
இன்னல் லதீன யுல்ஹிதூன Fபீ ஆயாதின லா யக்Fபவ்ன 'அலய்னா' அFபமய் யுல்கா Fபின் னாரி கய்ருன் அம் மய் யாதீ ஆமினய் யவ்மல் கியாமஹ்; இஃமலூ ம ஷி'தும் இன்னஹூ Bபிமா தஃமலூன Bபஸீர்
நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் குறை காண்கிறார்களோ அவர்(களுடைய செயல்)கள் நமக்கு மறைக்கப்படவில்லை - ஆகவே, நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது கியாம நாளன்று அச்சம் தீர்ந்து வருப(வன் நல்ல)வனா? நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள் - நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِالذِّكْرِ لَمَّا جَآءَهُمْ ۚ وَاِنَّهٗ لَكِتٰبٌ عَزِیْزٌ ۟ۙ
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْاநிச்சயமாக நிராகரித்தவர்கள்بِالذِّكْرِஇந்த வேதத்தைلَمَّا جَآءَஅது வந்த போதுهُمْ‌ۚஅவர்களிடம்وَاِنَّهٗநிச்சயமாக இதுلَـكِتٰبٌவேதமாகும்عَزِيْزٌۙ‏மிக கண்ணியமான
இன்னல் லதீன கFபரூ Bபித் திக்ரி லம்மா ஜா'அஹும் வ இன்னஹூ ல கிதாBபுன் 'அZஜீZஜ்
நிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்); ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும்.
لَّا یَاْتِیْهِ الْبَاطِلُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَلَا مِنْ خَلْفِهٖ ؕ تَنْزِیْلٌ مِّنْ حَكِیْمٍ حَمِیْدٍ ۟
لَّا يَاْتِيْهِஅதனிடம் வரமாட்டார்(கள்)الْبَاطِلُபொய்யர்(கள்)مِنْۢ بَيْنِ يَدَيْهِஅதற்கு முன்னிருந்தும்وَلَا مِنْ خَلْفِهٖ‌ؕஅதற்குப் பின்னிருந்தும்تَنْزِيْلٌஇறக்கப்பட்ட வேதம்مِّنْ حَكِيْمٍ حَمِيْدٍ‏மகா ஞானவான், மகா புகழுக்குரியவனிடமிருந்து
லா யாதீஹில் Bபாதிலு மிம் Bபய்னி யதய்ஹி வலா மின் கல்Fபிஹீ தன்Zஜீலும் மின் ஹகீமின் ஹமீத்
அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.
مَا یُقَالُ لَكَ اِلَّا مَا قَدْ قِیْلَ لِلرُّسُلِ مِنْ قَبْلِكَ ؕ اِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ وَّذُوْ عِقَابٍ اَلِیْمٍ ۟
مَا يُقَالُசொல்லப்படாதுلَـكَஉமக்குاِلَّاதவிரمَاஎதுقَدْதிட்டமாகقِيْلَசொல்லப்பட்டதோلِلرُّسُلِதூதர்களுக்குمِنْ قَبْلِكَ ؕஉமக்கு முன்னர்اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَذُوْ مَغْفِرَةٍமன்னிப்புடையவன்وَّذُوْ عِقَابٍஇன்னும் தண்டனைஉடையவன்اَ لِيْمٍ‏வலி தரக்கூடியது
மா யுகாலு லக இல்லா மா கத் கீல லிர் ருஸுலி மின் கBப்லிக்; இன்ன ரBப்Bபக லதூ மக்Fபிரதி(ன்)வ் வ தூ 'இகாBபின் அலீம்
(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை; நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிப்போனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.
وَلَوْ جَعَلْنٰهُ قُرْاٰنًا اَعْجَمِیًّا لَّقَالُوْا لَوْلَا فُصِّلَتْ اٰیٰتُهٗ ؕ ءَؔاَعْجَمِیٌّ وَّعَرَبِیٌّ ؕ قُلْ هُوَ لِلَّذِیْنَ اٰمَنُوْا هُدًی وَّشِفَآءٌ ؕ وَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ فِیْۤ اٰذَانِهِمْ وَقْرٌ وَّهُوَ عَلَیْهِمْ عَمًی ؕ اُولٰٓىِٕكَ یُنَادَوْنَ مِنْ مَّكَانٍ بَعِیْدٍ ۟۠
وَلَوْ جَعَلْنٰهُநாம் இதை ஆக்கி இருந்தால்قُرْاٰنًاகுர்ஆனாகاَعْجَمِيًّاஅரபி அல்லாத மொழிلَّقَالُوْاகூறியிருப்பார்கள்لَوْلَا فُصِّلَتْவிவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா?اٰيٰتُهٗ ؕஇதன் வசனங்கள்ءَؔاَعْجَمِىٌّஅரபி அல்லாத ஒரு மொழியிலா!وَّعَرَبِىٌّ‌  ؕஇன்னும் அரபி ஆயிற்றே !قُلْகூறுவீராக!هُوَஇதுلِلَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களுக்குهُدًىநேர்வழி(யும்)وَشِفَآءٌ‌  ؕநிவாரணமும்وَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَஎவர்கள்/நம்பிக்கை கொள்ளவில்லையோفِىْۤ اٰذَانِهِمْஅவர்களின் காதுகளில்وَقْرٌசெவிட்டுத்தனம்وَّهُوَஅதுعَلَيْهِمْஅவர்கள் மீதுعَمًى‌ ؕமறைந்திருக்கிறதுاُولٰٓٮِٕكَஅவர்கள்يُنَادَوْنَஅழைக்கப்படுவார்கள்مِنْ مَّكَانٍۢஇடத்தில் இருந்துبَعِيْدٍ‏மிக தூரமான
வ லவ் ஜ'அல்னாஹு குர்ஆனன் அஃஜமிய்யல் லகாலூ லவ் லா Fபுஸ்ஸிலத் ஆயாதுஹூ 'அ அஃஜமிய்யு(ன்)வ் வ 'அரBபிய்ய்; குல் ஹுவ லில்லதீன ஆமனூ ஹுத(ன்)வ் வ ஷிFபா'உ(ன்)வ் வல்லதீன ல யு'மினூன Fபீ ஆதானிஹிம் வக்ரு(ன்)வ் வ ஹுவ 'அலய்ஹிம் 'அமா; உலா'இக யுனாதவ்ன மிம் மாகானிம் Bப'ஈத்
நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).  
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَاخْتُلِفَ فِیْهِ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்مُوْسَىமூஸாவிற்குالْكِتٰبَவேதத்தைفَاخْتُلِفَஆனால் முரண்பாடு செய்யப்பட்டதுفِيْهِ‌ؕஅதில்وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْஒரு வாக்கு முந்தியிருக்கவில்லை என்றால்مِنْ رَّبِّكَஉமது இறைவனிடமிருந்துلَـقُضِىَதீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்بَيْنَهُمْ‌ؕஅவர்களுக்கு மத்தியில்وَاِنَّهُمْஇன்னும் நிச்சயமாக அவர்கள்لَفِىْ شَكٍّசந்தேகத்தில்தான்مِّنْهُஇதில்مُرِيْبٍ‏மிக ஆழமான
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப Fபக்துலிFப Fபீ; வ லவ்லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகுளிய Bபய்னஹும்; வ இன்னஹும் லFபீ ஷக்கிம் மின்ஹு முரீBப்
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; ஆனால், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டு விட்டன; அன்றியும் உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே வாக்கு ஏற்படாது போயிருந்தால், அவர்களுக்கிடையே தீர்ப்பு அளிக்கப்பட்டே இருக்கும் - நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؕ وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟
مَنْ عَمِلَயார் செய்வாரோصَالِحًـاநல்லதைفَلِنَفْسِهٖ‌அது அவருக்குத்தான் நன்மையாகும்وَمَنْஇன்னும் யார்اَسَآءَதீயதை செய்வாரோفَعَلَيْهَا‌ؕஅது அவருக்குத்தான் கேடாகும்وَمَاஇல்லைرَبُّكَஉமது இறைவன்بِظَلَّامٍஅநியாயம் செய்பவனாகلِّلْعَبِيْدِ‏அடியார்களுக்கு
மன் 'அமில ஸலிஹன் FபலினFப்ஸிஹீ வ மன் அஸா'அ Fப'அலய்ஹா; வமா ரBப்Bபுக Bபிளல்லாமில் லில் 'அBபீத்
எவர் ஸாலிஹான (நல்ல) அமல் செய்கிறாரோ (அது) அவருக்கே நன்மையாகும், எவர் பாவம் செய்கிறாரோ (அது) அவருக்கே கேடாகும் - அன்றியும் உம்முடைய இறைவன் (தன்) அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவன் அல்லன்.  
اِلَیْهِ یُرَدُّ عِلْمُ السَّاعَةِ ؕ وَمَا تَخْرُجُ مِنْ ثَمَرٰتٍ مِّنْ اَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ اُ وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ ؕ وَیَوْمَ یُنَادِیْهِمْ اَیْنَ شُرَكَآءِیْ ۙ قَالُوْۤا اٰذَنّٰكَ ۙ مَا مِنَّا مِنْ شَهِیْدٍ ۟ۚ
اِلَيْهِஅவன் பக்கமேيُرَدُّதிருப்பப்படுகிறதுعِلْمُஅறிவுالسَّاعَةِ‌ؕமறுமையைப் பற்றியوَمَا تَخْرُجُவெளிவருவதில்லைمِنْ ثَمَرٰتٍபழங்களில் எதுவும்مِّنْ اَكْمَامِهَاஅவற்றின் பாலைகளில் இருந்துوَمَا تَحْمِلُகர்ப்பமடைவதுமில்லைمِنْ اُنْثٰىபெண்களில் எவரும்وَلَا تَضَعُஇன்னும் குழந்தை பெற்றெடுப்பதுமில்லைاِلَّا بِعِلْمِهٖ‌ؕஅவனது ஞானமில்லாமல்وَيَوْمَநாளில்يُنَادِيْهِمْஅவர்களை அவன் அழைக்கின்றاَيْنَஎங்கேشُرَكَآءِىْۙஎனது இணைகள்قَالُـوْۤاஅவர்கள்கூறுவார்கள்اٰذَنّٰكَۙநாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்مَا مِنَّاஎங்களில் இல்லைمِنْ شَهِيْدٍ‌ۚ‏சாட்சி சொல்பவர் யாரும்
இலய்ஹி யுரத்து 'இல்முஸ் ஸா'அஹ்; வமா தக்ருஜு மின் தமராதிம் மின் அக்மாமிஹா வமா தஹ்மிலு மின் உன்ஸா வலா தள'உ இல்லா Bபி'இல்மிஹ்; வ யவ்ம யுனாதீஹிம் அய்ன ஷுரகா'ஈ காலூ ஆதன்னாக மா மின்னா மின் ஷஹீத்
(இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் அவனுக்கு சொந்தமானது; இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை; (அவன் அறியாது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை; பிரசவிப்பதுமில்லை; (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் “எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?” என்று அவர்களிடம் கேட்பான்; அப்போது அவர்கள் “எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை” என்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகிறோம்” என்று கூறுவார்கள்.
وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَدْعُوْنَ مِنْ قَبْلُ وَظَنُّوْا مَا لَهُمْ مِّنْ مَّحِیْصٍ ۟
وَضَلَّஇன்னும் மறைந்துவிடும்عَنْهُمْஅவர்களை விட்டும்مَّا كَانُوْا يَدْعُوْنَஅவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவைمِنْ قَبْلُ‌இதற்கு முன்னர்وَظَنُّوْاஇன்னும் அறிந்து கொள்வார்கள்مَا لَهُمْதங்களுக்கு இல்லைمِّنْ مَّحِيْصٍ‏தப்பிப்பதற்குரிய இடம் எதுவும்
வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யத்'ஊன மின் கBப்லு வ ளன்னூ மா லஹும் மிம் மஹீஸ்
அன்றியும், முன்னால் அவர்கள் (தெய்வங்கள் என) அழைத்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும். எனவே அவர்களுக்குப் புகலிடமில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
لَا یَسْـَٔمُ الْاِنْسَانُ مِنْ دُعَآءِ الْخَیْرِ ؗ وَاِنْ مَّسَّهُ الشَّرُّ فَیَـُٔوْسٌ قَنُوْطٌ ۟
لَا يَسْــٴَــمُசடைவடையமாட்டான்الْاِنْسَانُமனிதன்مِنْ دُعَآءِபிரார்த்திப்பதில்الْخَيْرِநன்மைக்காகوَاِنْ مَّسَّهُஅவனுக்கு நிகழ்ந்தால்الشَّرُّதீமைகள்فَيَــٴُــوْسٌநிராசை அடைந்தவனாகقَنُوْطٌ‏நம்பிக்கை இழந்தவனாக
லா யஸ்'அமுல் இன்ஸானு மின் து'ஆ'இல் கய்ரி வ இம் மஸ்ஸ ஹுஷ் ஷர்ரு Fப ய'ஊஸுன் கனூத்
மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.
وَلَىِٕنْ اَذَقْنٰهُ رَحْمَةً مِّنَّا مِنْ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ هٰذَا لِیْ ۙ وَمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآىِٕمَةً ۙ وَّلَىِٕنْ رُّجِعْتُ اِلٰی رَبِّیْۤ اِنَّ لِیْ عِنْدَهٗ لَلْحُسْنٰی ۚ فَلَنُنَبِّئَنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِمَا عَمِلُوْا ؗ وَلَنُذِیْقَنَّهُمْ مِّنْ عَذَابٍ غَلِیْظٍ ۟
وَلَٮِٕنْ اَذَقْنٰهُநாம் அவனுக்கு சுவைக்க வைத்தால்رَحْمَةًஓர் அருளைمِّنَّاநம் புறத்தில் இருந்துمِنْۢ بَعْدِபின்னர்ضَرَّآءَதீங்குக்குمَسَّتْهُஅவனுக்கு நிகந்தததுلَيَقُوْلَنَّஇன்னும் கூறுகிறான்هٰذَاஇதுلِىْ ۙஎனக்குரியதுوَمَاۤ اَظُنُّநான் எண்ணவில்லைالسَّاعَةَமறுமைقَآٮِٕمَةً  ۙநிகழும்وَّلَٮِٕنْ رُّجِعْتُநான் திரும்பக் கொண்டு வரப்பட்டாலும்اِلٰى رَبِّىْۤஎன் இறைவனிடம்اِنَّ لِىْநிச்சயமாக எனக்குعِنْدَهٗஅவனிடம்لَـلْحُسْنٰى‌ ۚசொர்க்கம் உண்டுفَلَـنُنَـبِّـئَنَّநாம் நிச்சயமாக அறிவிப்போம்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களுக்குبِمَا عَمِلُوْاஅவர்கள் செய்ததைوَلَـنُذِيْقَنَّهُمْஇன்னும் நிச்சயமாக அவர்களுக்கு சுவைக்க வைப்போம்مِّنْ عَذَابٍ غَلِيْظٍ‏கடுமையான வேதனையை
வ ல இன் அதக்னாஹு ரஹ்மதம் மின்னா மிம் Bபஃதி ளர் ரா'அ மஸ்ஸத் ஹு ல யகூலன்ன ஹாதா லீ வ மா அளுன்னுஸ் ஸா'அத கா'இமத(ன்)வ் வ ல'இன் ருஜிஃது இலா ரBப்Bபீ இன்ன லீ 'இன்தஹூ லல்ஹுஸ்னா; Fபலனு னBப்Bபி'அன்னல் லதீன கFபரூ Bபிமா 'அமிலூ வ லனுதீகன் னஹும் மின் 'அதாBபின் கலீள்
எனினும் அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை - கிருபையைச் சுவைக்கச் செய்தால், அவன் “இது எனக்கு உரியதே யாகும்; அன்றியும் (விசாரணைக்குரிய) வேளை ஏற்படுமென நான் நினைக்கவில்லை; நான் என்னுடைய இறைவனிடம் திருப்பி அனுப்பப்பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில் எனக்கு நன்மையே கிடைக்கும்” என்று திடமாகச் சொல்கிறான். ஆகவே காஃபிர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நிச்சயமாக நாம் தெரிவிப்போம்; மேலும் நாம் அவர்களை நிச்சயமாக, கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَی الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ ۚ وَاِذَا مَسَّهُ الشَّرُّ فَذُوْ دُعَآءٍ عَرِیْضٍ ۟
وَاِذَاۤ اَنْعَمْنَاநாம் அருள் புரிந்தால்عَلَى الْاِنْسَانِமனிதன் மீதுاَعْرَضَபுறக்கணித்து செல்கிறான்وَنَاٰ بِجَانِبِهٖ‌ۚதூரமாகி விடுகிறான்وَاِذَا مَسَّهُஇன்னும் அவனுக்குநிகழ்ந்தால்الشَّرُّதீங்குفَذُوْ دُعَآءٍபிரார்த்தனை உடையவனாகعَرِيْضٍ‏மிக அதிகமான
வ இதா அன்'அம்னா 'அலல் இன்ஸானி அஃரள வ னஆ Bபிஜானி Bபிஹீ வ இதா மஸ்ஸஹுஷ் ஷர்ரு Fபதூ து'ஆ'இன் 'அரீள்
அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான்.
قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ ثُمَّ كَفَرْتُمْ بِهٖ مَنْ اَضَلُّ مِمَّنْ هُوَ فِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟
قُلْகூறுவீராக!اَرَءَيْتُمْநீங்கள் அறிவியுங்கள்اِنْ كَانَஇருந்தால்مِنْ عِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துثُمَّபிறகுكَفَرْتُمْநீங்கள் நிராகரித்து விட்டால்بِهٖஅதைمَنْயார்?اَضَلُّமிகப் பெரிய வழிகேடன்مِمَّنْஒருவனைவிடهُوَஅவன்فِىْ شِقَاقٍۢமுரண்பாட்டில்بَعِيْدٍ‏வெகு தூரமான
குல் அராஇதும் இன் கான மின் 'இன்தில் லாஹி தும்ம கFபர் தும் Bபிஹீ மன் அளல்லு மிம்மன் ஹுவ Fபீ ஷிககிம் Bப'ஈத்
“(இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்தும், இதை நீங்கள் நிராகரித்தால், உங்கள் நிலை என்னவாகும்; தூரமான விரோதத்திலுள்ளவர்(களாகிய உங்)களை விட, அதிக வழிகேடன் யார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று (நபியே!) நீர் கேளும்.
سَنُرِیْهِمْ اٰیٰتِنَا فِی الْاٰفَاقِ وَفِیْۤ اَنْفُسِهِمْ حَتّٰی یَتَبَیَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقُّ ؕ اَوَلَمْ یَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
سَنُرِيْهِمْவிரைவில் அவர்களுக்கு நாம் காண்பிப்போம்اٰيٰتِنَاநமது அத்தாட்சிகளைفِى الْاٰفَاقِபல பகுதிகளிலும்وَفِىْۤ اَنْفُسِهِمْஅவர்களிலும்حَتّٰىஇறுதியாகيَتَبَيَّنَதெளிவாகிவிடும்لَهُمْஅவர்களுக்குاَنَّهُநிச்சயமாக இதுதான்الْحَـقُّ‌ ؕஉண்மைاَوَلَمْ يَكْفِபோதாதா?بِرَبِّكَஉமது இறைவனுக்குاَنَّهٗநிச்சயமாக தான்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்شَهِيْدٌ‏நன்கு பார்ப்பவனாக
ஸனுரீஹிம் ஆயாதினா Fபில் ஆFபாகி வ Fபீ அன்Fபுஸிஹிம் ஹத்தா யதBபய்யன லஹும் அன்னஹுல் ஹக்க்; அவ லம் யக்Fபி Bபி ரBப்Bபிக அன்னஹூ 'அலா குல்லி ஷய்-இன் ஷஹீத்
நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?
اَلَاۤ اِنَّهُمْ فِیْ مِرْیَةٍ مِّنْ لِّقَآءِ رَبِّهِمْ ؕ اَلَاۤ اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ مُّحِیْطٌ ۟۠
اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்فِىْ مِرْيَةٍசந்தேகத்தில் இருக்கின்றனர்مِّنْ لِّقَآءِசந்திப்பதில்رَبِّهِمْ‌ؕதங்கள் இறைவனைاَلَاۤஅறிந்து கொள்ளுங்கள்!اِنَّهٗநிச்சயமாக அவன்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்مُّحِيْطٌ‏சூழ்ந்தவன்
அலா இன்னஹும் Fபீ மிர்யதிம் மில் லிகா'இ ரBப்Bபிஹிம்; அலா இன்னஹூ Bபிகுல்லி ஷய்'இம் முஹீத்
அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள்; அறிந்து கொள்க: நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான்.