70. ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)

மக்கீ, வசனங்கள்: 44

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
سَاَلَ سَآىِٕلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍ ۟ۙ
سَاَلَகேட்டார்سَآٮِٕلٌ ۢகேட்பவர்بِعَذَابٍவேதனையைப் பற்றிوَّاقِعٍۙ‏நிகழக்கூடிய
ஸ'அல ஸா'இலுன் Bபி 'அதாBபி(ன்)வ் வாகி'
(நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.
لِّلْكٰفِرِیْنَ لَیْسَ لَهٗ دَافِعٌ ۟ۙ
لِّلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குلَيْسَஇல்லைلَهٗஅதைدَافِعٌ ۙ‏தடுப்பவர் ஒருவரும்
லில் காFபிரீன லய்ஸ லஹூ தாFபி'
காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
مِّنَ اللّٰهِ ذِی الْمَعَارِجِ ۟ؕ
مِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துذِى الْمَعَارِجِؕ‏உயர்வுகளும் மேன்மைகளும் உடைய
மினல் லாஹி தில் ம'ஆரிஜ்
(அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).
تَعْرُجُ الْمَلٰٓىِٕكَةُ وَالرُّوْحُ اِلَیْهِ فِیْ یَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِیْنَ اَلْفَ سَنَةٍ ۟ۚ
تَعْرُجُஏறுகின்றனர்الْمَلٰٓٮِٕكَةُவானவர்களும்وَ الرُّوْحُஜிப்ரீலும்اِلَيْهِஅவன் பக்கம்فِىْ يَوْمٍ كَانَஒருநாளில்/இருக்கிறதுمِقْدَارُهٗஅதன் அளவுخَمْسِيْنَ اَلْفَஐம்பதினாயிரம்سَنَةٍ‌ۚ‏ஆண்டுகளாக
தஃருஜுல் மலா'இகது வர் ரூஹு இலய்ஹி Fபீ யவ்மின் கான மிக்தாருஹூ கம்ஸீன அல்Fப ஸனஹ்
ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.
فَاصْبِرْ صَبْرًا جَمِیْلًا ۟
فَاصْبِرْஆகவே நீர் பொறுப்பீராக!صَبْرًاபொறுமையாகجَمِيْلًا‏அழகிய
Fபஸ்Bபிர் ஸBப்ரன் ஜமீலா
எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
اِنَّهُمْ یَرَوْنَهٗ بَعِیْدًا ۟ۙ
اِنَّهُمْநிச்சயமாக இவர்கள்يَرَوْنَهٗஅதை பார்க்கின்றனர்بَعِيْدًا ۙ‏தூரமாக
இனாஹும் யரவ்னஹூ Bப'ஈதா
நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.
وَّنَرٰىهُ قَرِیْبًا ۟ؕ
وَّنَرٰٮهُநாம் அதை பார்க்கிறோம்قَرِيْبًا ؕ‏சமீபமாக
வ னராஹு கரீBபா
ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
یَوْمَ تَكُوْنُ السَّمَآءُ كَالْمُهْلِ ۟ۙ
يَوْمَநாளில்تَكُوْنُஆகிவிடும்السَّمَآءُவானம்كَالْمُهْلِۙ‏எண்ணையின் அடி மண்டியைப் போல்
யவ்ம தகூனுஸ் ஸமா'உ கல்முஹ்ல்
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ ۟ۙ
وَتَكُوْنُஇன்னும் ஆகிவிடும்الْجِبَالُமலைகள்كَالْعِهْنِۙ‏முடிகளைப் போல்
வ தகூனுல் ஜிBபாலு கல்'இஹ்ன்
இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-
وَلَا یَسْـَٔلُ حَمِیْمٌ حَمِیْمًا ۟ۚۖ
وَلَا يَسْأَلُவிசாரிக்க மாட்டான்حَمِيْمٌஒரு நண்பன்حَمِيْمًا ۖۚ‏நண்பனைப் பற்றி
வ லா யஸ்'அலு ஹமீமுன் ஹமீமா
(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.
یُّبَصَّرُوْنَهُمْ ؕ یَوَدُّ الْمُجْرِمُ لَوْ یَفْتَدِیْ مِنْ عَذَابِ یَوْمِىِٕذٍ بِبَنِیْهِ ۟ۙ
يُّبَصَّرُوْنَهُمْ‌ؕஅவர்கள் அவர்களை காண்பிக்கப்படுவார்கள்يَوَدُّஆசைப்படுவான்الْمُجْرِمُகுற்றவாளிلَوْ يَفْتَدِىْஈடாக கொடுக்க வேண்டுமேمِنْ عَذَابِதண்டனையிலிருந்துيَوْمِٮِٕذٍۢஅந்நாளின்بِبَنِيْهِۙ‏தன் பிள்ளைகளை
யுBபஸ்ஸரூனஹும்; ய வத்துல் முஜ்ரிமு லவ் யFப்ததீ மின் 'அதாBபி யவ்ம'இதிம் BபிBபனீஹ்
அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்; தன் மக்களையும்-
وَصَاحِبَتِهٖ وَاَخِیْهِ ۟ۙ
وَ صَاحِبَتِهٖஇன்னும் தன் மனைவியையும்وَاَخِيْهِۙ‏இன்னும் தன் சகோதரனையும்
வ ஸாஹிBபதிஹீ வ அகீஹ்
தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
وَفَصِیْلَتِهِ الَّتِیْ تُـْٔوِیْهِ ۟ۙ
وَفَصِيْلَتِهِதன் குடும்பத்தையும்الَّتِىْஎதுتُــْٔوِيْهِۙ‏தன்னை அரவணைக்கின்றது
வ Fபஸீலத்ஹில் லதீ து'வீஹ்
அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ۙ ثُمَّ یُنْجِیْهِ ۟ۙ
وَمَنْ فِى الْاَرْضِபூமியில் உள்ளவர்களையும்جَمِيْعًا ۙஅனைவரையும்ثُمَّபிறகுيُنْجِيْهِۙ‏அது அவனை பாதுகாக்க வேண்டும்
வ மன் Fபில் அர்ளி ஜமீ'அன் தும்ம யுன்ஜீஹ்
இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).
كَلَّا ؕ اِنَّهَا لَظٰی ۟ۙ
كَلَّا ؕஅவ்வாறல்லاِنَّهَا لَظٰىۙ‏நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும் நெருப்பாகும்
கல்லா இன்னஹா லளா
அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
نَزَّاعَةً لِّلشَّوٰی ۟ۚۖ
نَزَّاعَةًகழட்டிவிடக்கூடியதுلِّلشَّوٰى‌ ۖ‌ۚ‏தோலை
னZஜ்Zஜா'அதல் லிஷ்ஷவா
அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.
تَدْعُوْا مَنْ اَدْبَرَ وَتَوَلّٰی ۟ۙ
تَدْعُوْاஅது அழைக்கும்مَنْஎவர்கள்اَدْبَرَபுறக்கணித்தார்(கள்)وَتَوَلّٰىۙ‏இன்னும் விலகி சென்றார்(கள்)
தத்'ஊ மன் அத்Bபர வ தவல்லா
(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.
وَجَمَعَ فَاَوْعٰی ۟
وَجَمَعَஇன்னும் சேகரித்தார்(கள்)فَاَوْعٰى‏இன்னும் பாதுகாத்தார்(கள் )
வ ஜம'அ Fப அவ்'ஆ
அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)
اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۟ۙ
اِنَّநிச்சயமாகالْاِنْسَانَமனிதன்خُلِقَபடைக்கப்பட்டான்هَلُوْعًا ۙ‏பேராசைக்காரனாக
இன்னல் இன்ஸான குலிக ஹலூ'ஆ
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۟ۙ
اِذَا مَسَّهُஅவனுக்கு ஏற்பட்டால்الشَّرُّதீங்குجَزُوْعًا ۙ‏மிக பதட்டக்காரனாக
இதா மஸ்ஸஹுஷ் ஷர்ரு ஜZஜூ'ஆ
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்;
وَّاِذَا مَسَّهُ الْخَیْرُ مَنُوْعًا ۟ۙ
وَاِذَا مَسَّهُஇன்னும் அவனுக்கு ஏற்பட்டால்الْخَيْرُவசதிمَنُوْعًا ۙ‏முற்றிலும் தடுப்பவனாக
வ இதா மஸ்ஸஹுல் கய்ரு மனூ'ஆ
ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.
الَّذِیْنَ هُمْ عَلٰی صَلَاتِهِمْ دَآىِٕمُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்هُمْஅவர்கள்عَلٰى صَلَاتِهِمْதங்கள் தொழுகையில்دَآٮِٕمُوْنَۙ‏நிரந்தரமாக இருக்கின்றார்களோ
அல்லதீன ஹும் 'அலா ஸலாதிஹிம் தா'இமூன்
(அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.
وَالَّذِیْنَ فِیْۤ اَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُوْمٌ ۟
وَالَّذِيْنَ فِىْۤ اَمْوَالِهِمْஇன்னும் எவர்கள்/அவர்களுடைய செல்வங்களில்حَقٌّஉரிமைمَّعْلُوْمٌۙ‏குறிப்பிட்ட
வல்லதீன Fபீ அம்வாலிஹிம் ஹக்குன் மஃலூம்
அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.
لِّلسَّآىِٕلِ وَالْمَحْرُوْمِ ۟
لِّلسَّآٮِٕلِயாசிப்பவருக்கு(ம்)وَالْمَحْرُوْمِۙ‏இல்லாதவருக்கும்
லிஸ்ஸா 'இலி வல்மஹ்ரூம்
யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).
وَالَّذِیْنَ یُصَدِّقُوْنَ بِیَوْمِ الدِّیْنِ ۟
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்يُصَدِّقُوْنَஉண்மைப்படுத்துவார்களோبِيَوْمِ الدِّيْنِۙ‏கூலி நாளை
வல்லதீன யுஸத்திகூன Bபி யவ்மித் தீன்
அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.
وَالَّذِیْنَ هُمْ مِّنْ عَذَابِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَ ۟ۚ
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்هُمْஅவர்கள்مِّنْ عَذَابِதண்டனையைرَبِّهِمْதங்கள் இறைவனின்مُّشْفِقُوْنَ‌ۚ‏பயப்படுகின்றார்களோ
வல்லதீன ஹும் மின் 'அதாBபி ரBப்Bபிஹிம் முஷ்Fபிகூன்
இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.
اِنَّ عَذَابَ رَبِّهِمْ غَیْرُ مَاْمُوْنٍ ۟
اِنَّ عَذَابَநிச்சயமாக தண்டனைرَبِّهِمْஅவர்களுடைய இறைவனின்غَيْرُ مَاْمُوْنٍ‏பயமற்று இருக்கக்கூடியது அல்ல
இன்ன 'அதாBப ரBப்Bபிஹிம் கய்ரு ம' மூன்
நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.
وَالَّذِیْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَ ۟ۙ
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்هُمْஅவர்கள்لِفُرُوْجِهِمْதங்கள் மர்மஸ்தானங்களைحٰفِظُوْنَۙ‏பாதுகாப்பார்களோ
வல்லதீன ஹும் லி Fபுரூஜிஹிம் ஹாFபிளூன்
அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-
اِلَّا عَلٰۤی اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُمْ فَاِنَّهُمْ غَیْرُ مَلُوْمِیْنَ ۟ۚ
اِلَّاதவிரعَلٰٓى اَزْوَاجِهِمْதங்கள் மனைவிகள்اَوْ مَا مَلَـكَتْஅல்லது/சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம்اَيْمَانُهُمْதங்கள் வலக்கரங்கள்فَاِنَّهُمْநிச்சயமாக இவர்கள்غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏பழிக்கப்பட மாட்டார்கள்
இல்லா 'அலா அZஜ்வாஜிஹிம் அவ் மா மலகத் அய்மானுஹும் Fப இன்னஹும் கய்ரு மலூமீன்
தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
فَمَنِ ابْتَغٰی وَرَآءَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْعٰدُوْنَ ۟ۚ
فَمَنِ ابْتَغٰىயார் தேடுவார்களோوَرَآءَ ذٰلِكَஇதற்குப் பின்فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْعٰدُوْنَ‌ۚ‏வரம்பு மீறிகள்
FபமனிBப் தகா வரா'அ தாலிக Fப உலா'இக ஹுமுல் 'ஆதூன்
எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.
وَالَّذِیْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رٰعُوْنَ ۟
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்هُمْஅவர்கள்لِاَمٰنٰتِهِمْதங்கள் அமானிதங்களை(யும்)وَعَهْدِهِمْதங்கள் ஒப்பந்தங்களையும்رٰعُوْنَ ۙ‏பேணுகின்றார்களோ
வல்லதீன ஹும் லி அமானாதிஹிம் வ 'அஹ்திஹிம் ரா'ஊன்
இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
وَالَّذِیْنَ هُمْ بِشَهٰدٰتِهِمْ قَآىِٕمُوْنَ ۟
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்هُمْஅவர்கள்بِشَهٰدٰتِهِمْதங்கள் சாட்சிகளைقَآٮِٕمُوْنَ ۙ‏நிறைவேற்றுவார்களோ
வல்லதீன ஹும் Bபி ஷஹாதாதிஹிம் கா'இமூன்
இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.
وَالَّذِیْنَ هُمْ عَلٰی صَلَاتِهِمْ یُحَافِظُوْنَ ۟ؕ
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்هُمْஅவர்கள்عَلٰى صَلَاتِهِمْதங்கள் தொழுகையைيُحَافِظُوْنَؕ‏பேணுவார்களோ
வல்லதீன ஹும் 'அலா ஸலாதிஹிம் யுஹாFபிளூன்
எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
اُولٰٓىِٕكَ فِیْ جَنّٰتٍ مُّكْرَمُوْنَ ۟ؕ۠
اُولٰٓٮِٕكَஅ(த்தகைய)வர்கள்فِىْ جَنّٰتٍசொர்க்கங்களில்مُّكْرَمُوْنَؕ‏கண்ணியப்படுத்தப்படுவார்கள்
உலா'இக Fபீ ஜன்னாதிம் முக்ரமூன்
(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.
فَمَالِ الَّذِیْنَ كَفَرُوْا قِبَلَكَ مُهْطِعِیْنَ ۟ۙ
فَمَالِ الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது?قِبَلَكَஉம் பக்கம்مُهْطِعِيْنَۙ‏விரைந்து வருகின்றனர்
Fபமா லில் லதீன கFபரூ கிBபலக முஹ்தி'ஈன்
நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.
عَنِ الْیَمِیْنِ وَعَنِ الشِّمَالِ عِزِیْنَ ۟
عَنِ الْيَمِيْنِவலது புறத்தில் இருந்து(ம்)وَعَنِ الشِّمَالِஇடது புறத்தில் இருந்தும்عِزِيْنَ‏பல கூட்டங்களாக
அனில் யமீனி வ 'அனிஷ் ஷிமாலி 'இZஜீன்
வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக.
اَیَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ یُّدْخَلَ جَنَّةَ نَعِیْمٍ ۟ۙ
اَيَطْمَعُஆசைப்படுகின்றானா?كُلُّஒவ்வொருامْرِىءٍமனிதனும்مِّنْهُمْஅவர்களில்اَنْ يُّدْخَلَநுழைக்கப்பட வேண்டும் என்றுجَنَّةَசொர்க்கத்தில்نَعِيْمٍۙ‏இன்பம் நிறைந்த
அயத்ம'உ குல்லும் ரி'இம் மின்ஹும் அ(ன்)ய்யுத்கல ஜன்னத ன'ஈம்
அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா?
كَلَّا ؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّمَّا یَعْلَمُوْنَ ۟
كَلَّا ؕஅவ்வாறல்லاِنَّاநிச்சயமாக நாம்خَلَقْنٰهُمْஅவர்களை படைத்தோம்مِّمَّا يَعْلَمُوْنَ‏அவர்கள் அறிந்திருக்கின்ற ஒன்றிலிருந்துதான்
கல்லா இன்னா கலக் னஹும் மிம்மா யஃலமூன்
அவ்வாறு (ஆகப் போவது) இல்லை. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம்.
فَلَاۤ اُقْسِمُ بِرَبِّ الْمَشٰرِقِ وَالْمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوْنَ ۟ۙ
فَلَاۤ اُقْسِمُசத்தியம் செய்கிறேன்!بِرَبِّஇறைவன் மீதுالْمَشٰرِقِகிழக்குகள்وَالْمَغٰرِبِஇன்னும் மேற்குகளின்اِنَّاநிச்சயமாக நாம்لَقٰدِرُوْنَۙ‏ஆற்றல் உள்ளவர்கள்
Fபலா உக்ஸிமு Bபி ரBப்Bபில் மஷாரிகி வல் மகாரிBபி இன்னா லகாதிரூன்
எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
عَلٰۤی اَنْ نُّبَدِّلَ خَیْرًا مِّنْهُمْ ۙ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِیْنَ ۟
عَلٰٓى اَنْ نُّبَدِّلَநாம் மாற்றிக் கொண்டுவருவதற்குخَيْرًاசிறந்தவர்களைمِّنْهُمْۙஇவர்களை விடوَمَا نَحْنُநாம் அல்லبِمَسْبُوْقِيْنَ‏பலவீனமானவர்கள்
'அலா அன் னுBபத்தில கய்ரன் மின்ஹும் வமா னஹ்னு Bபி மஸ்Bபூகீன்
(அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்); ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது.
فَذَرْهُمْ یَخُوْضُوْا وَیَلْعَبُوْا حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟ۙ
فَذَرْهُمْஆகவே அவர்களை விட்டுவிடுவீராக!يَخُوْضُوْاஅவர்கள் ஈடுபடட்டும்!وَيَلْعَبُوْاஇன்னும் விளையாடட்டும்!حَتّٰىஇறுதியாகيُلٰقُوْاஅவர்கள் சந்திப்பார்கள் !يَوْمَهُمُஅவர்களது நாளைالَّذِىْஎதுيُوْعَدُوْنَۙ‏எச்சரிக்கப்பட்டார்கள்
Fபதர்ஹும் யகூளூ வ யல்'அBபூ ஹத்தா யுலாகூ யவ்ம ஹுமுல் லதீ யூ'அதூன்
ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.
یَوْمَ یَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ سِرَاعًا كَاَنَّهُمْ اِلٰی نُصُبٍ یُّوْفِضُوْنَ ۟ۙ
يَوْمَநாளில்يَخْرُجُوْنَஅவர்கள் வெளியேறுகின்றمِنَ الْاَجْدَاثِபுதைக் குழிகளில் இருந்துسِرَاعًاவிரைவாகكَاَنَّهُمْபோல்/அவர்களோاِلٰى نُصُبٍகம்பத்தின் பக்கம்يُّوْفِضُوْنَۙ‏விரைந்து ஓடுகின்றவர்கள்
யவ்ம யக்ருஜூன மினல் அஜ்தாதி ஸிரா'அன் க அன்ன ஹும் இலா னுஸுBபி(ன்)ய் யூFபிளூன்
நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) மண்ணறைகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.
خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ ذٰلِكَ الْیَوْمُ الَّذِیْ كَانُوْا یُوْعَدُوْنَ ۟۠
خَاشِعَةًகீழ்நோக்கி இருக்கும்اَبْصَارُهُمْஅவர்களின் பார்வைகள்تَرْهَقُهُمْஅவர்களை சூழ்ந்து கொள்ளும்ذِلَّةٌ ؕஇழிவுذٰلِكَஇதுதான்الْيَوْمُநாளாகும்الَّذِىْ كَانُوْا يُوْعَدُوْنَ‏எது/வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
காஷி'அதன் அBப்ஸாருஹும் தர்ஹகுஹும் தில்லஹ்; தாலிகல் யவ்முல் லதீ கானூ யூ'அதூன்
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும்; இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும்; அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான்.