78. ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)

மக்கீ, வசனங்கள்: 40

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
عَمَّ یَتَسَآءَلُوْنَ ۟ۚ
عَمَّஎதைப் பற்றிیَتَسَآءَلُوْنَۚஅவர்கள் ஒருவருக்கொருவர் வினவுகிறார்கள்
'அம்ம யதஸா-அலூன்
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
الَّذِیْ هُمْ فِیْهِ مُخْتَلِفُوْنَ ۟ؕ
الَّذِیْஎதில்هُمْஅவர்கள்فِیْهِஅதில்مُخْتَلِفُوْنَؕமாறுபடுகிறார்களோ
அல்லதி ஹும் Fபீஹி முக் தலிFபூன்
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
كَلَّا سَیَعْلَمُوْنَ ۟ۙ
كَلَّاஅவ்வாறல்லسَیَعْلَمُوْنَۙவிரைவில் அவர்கள் அறிந்து கொள்வார்கள்
கல்லா ஸ யஃலமூன்
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
ثُمَّ كَلَّا سَیَعْلَمُوْنَ ۟
ثُمَّபின்னர்كَلَّاஅவ்வாறல்லسَیَعْلَمُوْنَவிரைவில் அவர்கள் அறிந்துகொள்வார்கள்
தும்ம கல்லா ஸ யஃலமூன்
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۟ۙ
اَلَمْஇல்லையாنَجْعَلِநாம் ஆக்கினோம்الْاَرْضَபூமியைمِهٰدًاۙவிரிப்பாக
அலம் னஜ்'அலில் அர்ள மிஹா தா
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
وَّالْجِبَالَ اَوْتَادًا ۟
وَّ الْجِبَالَமேலும் மலைகளைاَوْتَادًا۪ۙமுளைகளாக
வல் ஜிBபால அவ் தாதா
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا ۟ۙ
وَّ خَلَقْنٰكُمْமேலும் உங்களைப் படைத்தோம்اَزْوَاجًاۙஜோடிகளாக
வ கலக் னாகும் அZஜ்வாஜா
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۟ۙ
وَّ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்نَوْمَكُمْஉங்கள் உறக்கத்தைسُبَاتًاۙஓய்வாக
வஜ'அல்ன னவ்மகும் ஸுBபதா
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
وَّجَعَلْنَا الَّیْلَ لِبَاسًا ۟ۙ
وَّ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்الَّیْلَஇரவைلِبَاسًاۙஓர் ஆடையாக
வஜ'அல்னல் லய்ல லிBபஸா
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا ۪۟
وَّ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்النَّهَارَபகலைمَعَاشًا۪வாழ்வாதாரமாக
வஜ'அல்னன் னஹர ம 'ஆஷா
மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
وَّبَنَیْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ۟ۙ
وَّ بَنَیْنَاமேலும் நாம் அமைத்தோம்فَوْقَكُمْஉங்களுக்கு மேல்سَبْعًاஏழுشِدَادًاۙஉறுதியானவற்றை
வ Bபனய்னா Fபவ்ககும் ஸBப் 'அன் ஷி தாதா
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
وَّجَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًا ۟
وَّ جَعَلْنَاஇன்னும் நாம் ஆக்கினோம்سِرَاجًاஒரு விளக்கைوَّهَّاجًا۪ۙசுடர்விட்டுப் பிரகாசிக்கும்
வஜ'அல்ன ஸிராஜவ் வஹ் ஹாஜா
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَآءً ثَجَّاجًا ۟ۙ
وَّ اَنْزَلْنَاமேலும் நாம் இறக்கினோம்مِنَஇருந்துالْمُعْصِرٰتِகார் மேகங்கள்مَآءًநீரைثَجَّاجًاۙதாரை தாரையாக
வ அன்Zஜல்ன மினல் முஃஸிராதி மா-அன் தஜ்-ஜாஜா
அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
لِّنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۟ۙ
لِّنُخْرِجَநாம் வெளிக்கொணர்வதற்காகبِهٖஅதன் மூலம்حَبًّاதானியங்களைوَّ نَبَاتًاۙதாவரத்தையும்
லினுக் ரிஜ Bபிஹீ ஹBப்Bபவ் வன Bபாதா
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
وَّجَنّٰتٍ اَلْفَافًا ۟ؕ
وَّ جَنّٰتٍஇன்னும் தோட்டங்களையும்اَلْفَافًاؕஅடர்ந்த
வ ஜன் னாதின் அல்FபFபா
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
اِنَّ یَوْمَ الْفَصْلِ كَانَ مِیْقَاتًا ۟ۙ
اِنَّநிச்சயமாகیَوْمَநாள்الْفَصْلِதீர்ப்புكَانَஆக இருக்கிறதுمِیْقَاتًاۙநிர்ணயிக்கப்பட்ட நேரம்
இன்ன யவ்மல்-Fபஸ்லி கான மீகாதா
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
یَّوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ فَتَاْتُوْنَ اَفْوَاجًا ۟ۙ
یَّوْمَஅந்நாளில்یُنْفَخُஊதப்படும்فِیஇல்الصُّوْرِஎக்காளம்فَتَاْتُوْنَஅப்போது நீங்கள் வருவீர்கள்اَفْوَاجًاۙகூட்டம் கூட்டமாக
யவ்ம யுன் Fபகு Fபிஸ்-ஸூரி Fபதா'தூன அFப்வாஜா
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
وَّفُتِحَتِ السَّمَآءُ فَكَانَتْ اَبْوَابًا ۟ۙ
وَّ فُتِحَتِமேலும் திறக்கப்பட்டுالسَّمَآءُவானம்فَكَانَتْஆகிவிடும்اَبْوَابًاۙபல வாசல்களாக
வ Fபுதிஹ திஸ் ஸமா-உ Fபகானத் அBப்வாBபா
இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
وَّسُیِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ۟ؕ
وَّ سُیِّرَتِமேலும் பெயர்க்கப்படும்الْجِبَالُமலைகள்فَكَانَتْஅவை ஆகிவிடும்سَرَابًاؕகானல் நீராக
வ ஸுய்யி ராதில் ஜிBபாலு Fப கானத் ஸராBபா
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ۟
اِنَّநிச்சயமாகجَهَنَّمَநரகம்كَانَتْஇருக்கிறதுمِرْصَادًا۪ۙகாத்திருக்கும் இடமாக
இன்ன ஜஹன் னம கானத் மிர்ஸாதா
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
لِّلطَّاغِیْنَ مَاٰبًا ۟ۙ
لِّلطَّاغِیْنَவரம்பு மீறியவர்களுக்குمَاٰبًاۙதங்குமிடமாக
லித் தா கீன ம ஆBபா
வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக.
لّٰبِثِیْنَ فِیْهَاۤ اَحْقَابًا ۟ۚ
لّٰبِثِیْنَதங்கியிருப்பவர்களாகفِیْهَاۤஅதில்اَحْقَابًاۚபல யுகங்களாக
லா Bபிதீன Fபீஹா அஹ்காBபா
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
لَا یَذُوْقُوْنَ فِیْهَا بَرْدًا وَّلَا شَرَابًا ۟ۙ
لَاஇல்லைیَذُوْقُوْنَஅவர்கள் சுவைப்பார்கள்فِیْهَاஅதில்بَرْدًاகுளிர்ச்சியைوَّ لَاமேலும் இல்லைشَرَابًاۙபானத்தை
லா ய தூகூன Fபீஹா Bபர் தவ் வலா ஷராBபா
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
اِلَّا حَمِیْمًا وَّغَسَّاقًا ۟ۙ
اِلَّاதவிரحَمِیْمًاகொதிக்கும் நீரைوَّ غَسَّاقًاۙசீழையும்
இல்லா ஹமீ மவ்-வ கஸ் ஸாகா
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
اِنَّهُمْ كَانُوْا لَا یَرْجُوْنَ حِسَابًا ۟ۙ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்لَاஇல்லைیَرْجُوْنَஎதிர்பார்ப்பவர்களாகحِسَابًاۙவிசாரணையை
இன்னஹும் கானு லா யர்ஜூன ஹிஸாBபா
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
وَّكَذَّبُوْا بِاٰیٰتِنَا كِذَّابًا ۟ؕ
وَّ كَذَّبُوْاமேலும் அவர்கள் பொய்ப்பித்தார்கள்بِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைكِذَّابًاؕமுற்றிலும் பொய்யாக
வ கத்தBபு Bபி ஆயாதினா கித்தாBபா
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
وَكُلَّ شَیْءٍ اَحْصَیْنٰهُ كِتٰبًا ۟ۙ
وَ كُلَّமேலும் ஒவ்வொருشَیْءٍபொருளையும்اَحْصَیْنٰهُநாம் கணக்கிட்டுள்ளோம்كِتٰبًاۙஎழுதி
வ குல்ல ஷய்-இன் அஹ்ஸய் னாஹு கிதா Bபா
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
فَذُوْقُوْا فَلَنْ نَّزِیْدَكُمْ اِلَّا عَذَابًا ۟۠
فَذُوْقُوْاஎனவே சுவையுங்கள்فَلَنْஇனி ஒருபோதும்نَّزِیْدَكُمْஉங்களுக்கு நாம் அதிகப்படுத்த மாட்டோம்اِلَّاதவிரعَذَابًا۠வேதனையை
Fப தூகூ Fபலன்-னZஜீ தகும் இல்ல்-லா அதாBபா
“ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).  
اِنَّ لِلْمُتَّقِیْنَ مَفَازًا ۟ۙ
اِنَّநிச்சயமாகلِلْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்களுக்குمَفَازًاۙவெற்றி
இன்ன லில் முத்த கீன மFபாZஜா
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
حَدَآىِٕقَ وَاَعْنَابًا ۟ۙ
حَدَآىِٕقَதோட்டங்கள்وَ اَعْنَابًاۙதிராட்சைகளும்
ஹதா-இக வ அஃனா Bபா
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
وَّكَوَاعِبَ اَتْرَابًا ۟ۙ
وَّ كَوَاعِبَஇளமை ததும்பும் கன்னியர்اَتْرَابًاۙசம வயதுடையவர்கள்
வ காவ 'இBப அத் ராBபா
(மனைவிகளாக) சம வயதுள்ள கன்னிகளும்.
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّلَا كِذّٰبًا ۟ۚ
لَاமாட்டார்கள்یَسْمَعُوْنَஅவர்கள் கேட்பார்கள்فِیْهَاஅதில்لَغْوًاவீண்பேச்சைوَّ لَاமேலும் இல்லைكِذّٰبًاۚபொய்யை
லா யஸ்ம'ஊன Fபிஹா லக் வவ் வலா கித்தாBபா
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
جَزَآءً مِّنْ رَّبِّكَ عَطَآءً حِسَابًا ۟ۙ
جَزَآءًநற்கூலியாகمِّنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்عَطَآءًகொடையாகحِسَابًاۙபோதுமானதாக
ஜZஜா-அம் மிர்-ரBப்Bபிக அதா-அன் ஹிஸாBபா
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا الرَّحْمٰنِ لَا یَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًا ۟ۚ
رَّبِّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்وَ مَاமேலும் எவைبَیْنَهُمَاஅவையிரண்டிற்கும் இடையில்الرَّحْمٰنِஅளவற்ற அருளாளன்لَاஇல்லைیَمْلِكُوْنَஅவர்கள் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள்مِنْهُஅவனிடம்خِطَابًاۚபேசுவதற்கு
ரBப்Bபிஸ் ஸமா வாதி வல் அர்ளி வமா Bபய்ன ஹுமர் ரஹ்மானி லா யம் லிகூன மின்ஹு கிதாBபா
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
یَوْمَ یَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓىِٕكَةُ صَفًّا ۙۗؕ لَّا یَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا ۟
یَوْمَஅந்நாளில்یَقُوْمُநிற்பார்கள்الرُّوْحُரூஹ்وَ الْمَلٰٓىِٕكَةُவானவர்களும்صَفًّا ۙۗؕவரிசையாகلَّاமாட்டார்கள்یَتَكَلَّمُوْنَஅவர்கள் பேசுவார்கள்اِلَّاதவிரمَنْஎவருக்குاَذِنَஅனுமதி அளித்தானோلَهُஅவருக்குالرَّحْمٰنُஅளவற்ற அருளாளன்وَ قَالَமேலும் அவர் கூறுவார்صَوَابًاசரியானதை
யவ்ம யகூ முர் ரூஹு வல் மலா-இகது ஸFப்-Fபல் லா யதகல்லமூன இல்ல்-லா மன் அதின லஹுர் ரஹ்மானு வ கால ஸவாBபா
ரூஹு (என்ற ஜிப்ரீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
ذٰلِكَ الْیَوْمُ الْحَقُّ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ مَاٰبًا ۟
ذٰلِكَஅதுالْیَوْمُநாள்الْحَقُّ ۚசத்தியமானதுفَمَنْஎனவே எவர்شَآءَநாடுகிறாரோاتَّخَذَஆக்கிக்கொள்ளட்டும்اِلٰیநோக்கிرَبِّهٖதன் இறைவனைمَاٰبًاமீளுமிடத்தை
தாலிகல் யவ்முல் ஹக்கு Fபமன் ஷா-அத் த காத இலா ரBப்Bபிஹி மஆBபா
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
اِنَّاۤ اَنْذَرْنٰكُمْ عَذَابًا قَرِیْبًا ۖۚ۬ یَّوْمَ یَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ یَدٰهُ وَیَقُوْلُ الْكٰفِرُ یٰلَیْتَنِیْ كُنْتُ تُرٰبًا ۟۠
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْذَرْنٰكُمْஉங்களை எச்சரித்துள்ளோம்عَذَابًاஒரு வேதனையைقَرِیْبًا ۖۚ۬நெருங்கியுள்ளیَّوْمَஅந்நாளில்یَنْظُرُகாண்பான்الْمَرْءُமனிதன்مَاஎதைقَدَّمَتْமுற்படுத்தியதோیَدٰهُஅவனது இரு கைகள்وَ یَقُوْلُமேலும் கூறுவான்الْكٰفِرُநிராகரிப்பவன்یٰلَیْتَنِیْஅந்தோ! நான்كُنْتُஆகியிருக்கக் கூடாதாتُرٰبًا۠மண்ணாக
இன் னா அன்தர் னாகும் அதாBபன் கரீBபய்ய்-யவ்ம யன் ளுருல் மர்ர்-உ மா கத்தமத் யதாஹு வ ய கூலுல்-காFபிரு யா லய் தனீ குன்து துராBபா
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் “அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான்.